Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடாபிக்கு எதிரான போர் வியூகம் எப்படி நகர்கிறது..

Featured Replies

கடாபிக்கு எதிரான போர் வியூகம் எப்படி நகர்கிறது..

கடாபிக்கு எதிரான போர் ஈழத் தமிழ் தலைவர்களின் கடந்தகால மதி நுட்பங்களிலும் கேள்வி எழுப்பப் போகிறது.

கடாபிக்கு எதிரான போர் சர்வதேச கூட்டுப்படையினருக்கு புதியதோர் அனுபவமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளாக நயவஞ்சகமும், சர்வாதிகாரமும் நிறைந்த ஒருவராக வாழ்ந்தவர் கடாபி. தனது அதிகாரத்தை தக்கவைப்பதைத் தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ளாத ஒருவராகவும் இருந்தவர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வந்ததும் தனது நண்பரான சாதாம் உசேனை அப்படியே கைவிட்டு பிரிட்டனோடு உறவாடி தனது அதிகாரத்தை காப்பாற்றியவர். எனவே உலகம் முன்னேறிய வேகம் போலவே தனது அதிகாரத்தை காப்பாற்றும் வேகத்திலும் அவர் முன்னேறியிருக்கிறார். அவருடைய போர் தந்திரங்களை மேலை நாடுகள் கற்றுக் கொள்ள நல்லதோர் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலைநாடுகளின் கூட்டுப்படைகள் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பின்புறமாகவே முதலில் தமது தாக்குதல்களை நடாத்தின. இப்போது கடாபியின் படைகள் மிக வேகமாக ஓடி பொது மக்களுக்குள் நுழைந்துள்ளது. முட்டையின் வெள்ளைக்கரு போன்ற ஒரு வெளி வளையத்திற்குள் கூட்டுப் படைகளின் தாக்குதல் நடைபெற, கடாபியின் படைகள் பொது மக்கள் வாழும் மஞ்சள் கருபோன்ற பகுதிக்குள் கலந்துள்ளன. விமானத் தாக்குதல்களை முறியடிக்க கடாபி வகுத்துள்ள வியூகம் இதுதான்..

அதேநேரம் கூட்டுப்படைகள் கடாபியின் முக்கிய இலக்குகளை நோக்கிய தாக்குதல்களை நடாத்துகின்றன. முதல் கட்டமாக ஜி.பி.எஸ் பொருத்திய ஏவுகணைகள் இலக்குத் தவறாமல் தாங்கிகளை தகர்த்து வருகின்றன. அதேபோல லேசர் குண்டுகள் குறி தவறாமல் பல பக்கங்களிலும் பறக்கின்றன. இதில் முக்கியமான விடயம் தற்போது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் அமெரிக்கக் கண்காணிப்பு விமானங்களே. இவை கொடுக்கும் தகவலை அடியொற்றியே சகல தாக்குதல்களும் கொமாண்ட் பண்ணப்பட்டுள்ளன.

இந்த நேரம் மக்கள் விரைவாக வீதிக்கு இறங்கி தமது போராட்டத்தை ஆரம்பித்து கடாபியின் படைகளை பாலில் இருந்து நீரைப் பிரித்தது போல பிரிக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. கடந்த 40 வருடங்களாக ஒற்றைத் தலைமை வழிபாட்டிலும், இராணுவ அடக்கு முறைகளுக்குள்ளும், உலகம் தெரியாத பேய்க்குஞ்சுகளாகவும் அந்த நாட்டு மக்கள் வாழ்ந்துள்ளார்கள். ஆகவே அவர்கள் தமிழ்த் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் போல ஒரு கதாநாயகன் வருவதற்காக காத்திருக்கும் உலகறியாத மக்கள் போல காத்திருக்கிறார்கள். இதனால் சகல சிலுவைகளையும் சேர்த்து இழுக்க வேண்டிய அவலம் மேலை நாட்டு படைகளுக்கு ஏற்பட்டுள்ளதாக பெங்காஸியில் இருந்து டென்மார்க் தொலைக்காட்சி நிருபர் கூறுகிறார். லிபிய மக்களின் அறியாமை சர்வாதிகார கடாபிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது.

அறியாமை மிக்க மக்களை ஒரு மனநோயாளியிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோணத்தில் போர் நடைபெறுகிறது. ஆனால் உலக இராணுவ வளர்ச்சி தன்னை பரிசோதித்துக் கொள்ளவும், புதிய பாடங்களை கற்றுக் கொள்ளவும் இந்தப் போர் பெரும் உதவியாக அமையும். உண்மையில் இப்போர் ஓர் இராணுவக்கற்கைதான்.

மேலும் தற்போது லிபியாவில் நடைபெறும் போர் சில தினங்களில் வெற்றி வகை சூடப்பட்டுவிடும் என்ற இலக்கோடுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது போடப்பட்டுள்ள தாக்குதல் திட்டம் குறுங்காலத்திற்குரியதுதான். எகிப்துபோல குறுங்காலத்தில் ஒரு மாற்றம், மக்கள் சக்தியிடம் ஆட்சிப்பரிமாற்றம் என்ற கோணத்தில் நடக்கிறது. இந்த ஒளி பாலஸ்தீன விடிவில் உள்ள கருமேகங்களையும் விலத்த வழியுள்ளது. அடுத்துவரும் நாட்கள் இதுவரை பதிலின்றிக் கிடந்த மேலும் சில கேள்விகளுக்கு பதில் தரும் நாட்களாக அமையும். இந்த விடயங்களை ஈழத் தமிழ் தலைவர்கள் இரவு பகலாக அறிந்து மக்களை வழி நடாத்த வேண்டும். மாநகரசபை தேர்தல்களில் மாந்திக்கிடக்கக் கூடாது. 1973 ம் ஆண்டின் ஐ.நா சட்டம்கூட தெரியாமல்தான் தமிழ் தலைவர்கள் பாமரத்தனமாக வழி காட்டினார்கள் என்பதையும் இன்றைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுள்ளன. மேலும் விக்கிலீக்ஸ் என்பது ஓர் இரகசிய தகவல் அல்ல, அதுதான் புதிய பயங்கரவாத பட்டியல். விரைவில் அதில் சம்மந்தப்பட்ட இடங்கள் எல்லாம் இந்த அலை பாயும்.

கடாபிக்கு எதிரான போர் ஈழத் தமிழ் தலைவர்களின் கடந்தகால மதி நுட்பங்களிலும் கேள்வி எழுப்பப் போகிறது. பல அறிஞர்களின், அரசில் தலைவர்களின் தப்பான வழிகாட்டல்களை ஆய்வுக்குக் கொண்டு வரப்போகிறது.

http://www.alaikal.com/news/?p=61726

=======================

தொடர்புபட்ட செய்திகள் :

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81917

சிங்கள பயங்கரவாதிகளின் நண்பனாக இருக்கும் கடாபிக்கும், தமிழினப் படுகொலைகளைப் பார்வையாளராக இருந்து அனுமதித்த மேற்குலகுக்கும் கடும் சேதங்கள் ஏற்பட்டால் மகிழலாம்.

  • தொடங்கியவர்

பாரீஸ் உச்சி மாநாடும் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல வரலாற்று முக்கியமான நிகழ்வாகும்.

சென்ற வாரம் பிரான்சிய அதிபர் ஸார்கோசி உலகத்தின் முக்கிய தலைவர்களை அழைத்து நடாத்திய உச்சி மாநாடும் அவர் வழங்கிய இராப்போசனமும் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல வரலாற்று முக்கியமான நிகழ்வாகும்.

இன்றைய உலகத்தை நிர்வாகிக்கும் அதி உச்ச அதிகாரம் கொண்ட தலைவர்களின் சந்திப்பு அது. பிரான்சிய அதிபர் தலைமையில் கிலரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர், அஞ்சலா மேர்க்கல், பலர்ஸ்க்கோனி, அரபுலீக் தலைவர், நேட்டோ செயலர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர், ஐ.நா செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆபிரிக்க யூனியன் கலந்து கொள்ளவில்லை. ரஸ்யா, இந்தியா நாடுகளைக் காண முடியவில்லை. இன்றைய உலகத்தின் இறுதி அதிகாரம் யாருடைய கையில் என்பதை இந்தச் சந்திப்பு விளக்கியது.

இது உலகத்தை மாற்றிப்போடப்போகும் முக்கிய நிகழ்வு. இதோ அங்கு நாம் அவதானித்த முக்கிய ஏழு மாற்றங்கள்…

உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 1

ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சீனா, ரஸ்யா இரு நாடுகளும் வீட்டோவை பாவிக்க முடியாமல் செய்து, இந்தியா எதிர்த்தாலும் அதை ஒரு பொருட்டாகக் கருதாது, பாதுகாப்பு சபையின் அறுதிப் பெரும்பான்மையை இவர்கள் பெற்றது வரலாற்றுப் புகழ்மிக்க சாதனையாகும்.

இதை அடிப்படையாக வைத்து பாரீசில் கூடிய தலைவர்களை எந்த நாடும் எதிர்க்கவில்லை. எதிர்த்தால் உலகப்பந்தில் அவர்களுக்கும் கடாபிக்கு நேர்ந்த அவலமே நேரும் என்பதை அறிந்து, சகல நாடுகளும் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டன. இப்போது லிபியா எரிந்து கொண்டிருக்கிறது. தீயவர்கள் தமது தவணை எப்போதென்று தெரியாமல் வாய் பொத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 2

கடந்த 2001 செப் 11 ல் ஆரம்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அமெரிக்காவே தலைமை தாங்கியது. இப்போது அந்தத் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் உலகப் பெரு மாற்றங்களுக்கான போர்களும், முடிவுகளும், பிரான்ஸ் தலைமையிலேயே நடைபெறப் போகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட நாடுகளின் ஒழுங்கில் பாரிய தவறு இருக்கிறது, அது மாற்றமடையப் போகிறது. ஆகவே புதிய எழுச்சி பிரான்சில்; இருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்கா முழு ஆதரவுடனும் பின்னால் நிற்கப் போகிறது. ஆகவே இதுவரை இருந்த முக்கிய தடைகள் பல இடித்து தகர்க்கப்படப் போகின்றன. 1789 ல் பிரான்சில் பஸ்ரல் கோட்டை உடைந்தது போல உழுத்துப்போன பல நாடுகள் உடையப்போகின்றன.

உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 3

ஐ.நா அனுமதிக்காவிட்டாலும் அதற்காக காத்திருக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை மேலைத்தேய தலைவர்கள் தெளிவாக எடுத்திருக்கிறார்கள். வீட்டோ அதிகாரத்தை யாராவது பாவித்தால் அது வெறும் காகித ஏடாகவிடும் என்ற எச்சரிக்கை ஐ.நாவில் விடப்பட்டுவிட்டது. உதாரணம் : இனியும் ஐ.நாவில் நாம் அங்கத்தவராக இருக்க வேண்டியதில்லை என்று டேனிஸ் பாராளுமன்றில் கேட்ட குரல். ஐ.நாவுக்காக காத்திருக்காமல் உடனடியாக களம் இறங்குகிறோம் என்று டேனிஸ் அரசு அறிவித்தமை. இனி பான் கீ மூனுக்கு விளங்கும்வரை உலகம் காத்திருக்காது.

உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 4

இந்தப் போரில் நேட்டோ தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை. நேட்டோவில் முள்ளுப்போட துருக்கி போன்ற பல நாடுகள் உண்டு. ஆகவே நேட்டோ என்ற போர்வையில் ஏராளம் நாடுகளை சேர்த்து அத்தனைபேரின் கைகளையும் கட்டிவிட்டார்கள். நேட்டோவோடு அவர்களும் உறங்க வேண்டியதுதான். பிரான்சின் தலைமையில் புதிய அணி உலகத்தின் தப்பிதங்களை தகர்ககப் போகிறது.

உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 5

லிபிய அதிபர் கடாபியின் 40 வருட கால ஆட்சியை பாராட்டி ஓர் இன்ரசிற்றி ரெயினை சில மாதங்களுக்கு முன்னர் பரிசளித்தவர் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி, கடாபி ஆபிரிக்க ஒன்றிய தலைவராக வருவதற்கு ஆதரவு கொடுக்க, சில கிழட்டு ஆபிரிக்க தலைவர்களுக்கு விபச்சாரிகளை பரிசாக அனுப்பி வைத்தவர் பலர்ஸ்கோனி. கடாபியுடன் இவ்வளவு நெருக்கம் கொண்ட பலர்ஸ்கோனி வாய்மூடி மௌனியாகி பாரீஸ் மாநாட்டுக்கு வந்தார். இன்று அவருடைய நாட்டுக்கு சொந்தமான தீவுகளில் இருந்தே மேலை நாடுகளின் தாக்குதல்கள் கடாபிக்கு எதிராக நடைபெறுகின்றன. ஒரே தரத்தில் பலர்ஸ்கோனி அந்தர் பல்டி அடிக்க வேண்டிய நிலை.

உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 6

கேணல் கடாபி பிரான்சிற்கு வழங்காத எரிபொருள் கிடையாது. பிரான்சின் இரத்தத்தையே ஓட வைத்தது அவருடைய பெற்றோல்தான். பிரான்சிய அதிபர் தமது குடும்ப நண்பர் என்று கடாபியின் மகன் அல் இஸ்லாம் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இப்போது கடாபி மிருகம் என்று வர்ணிக்குமளவிற்கு இந்த நட்பு ஒரே இரவில் மாற்றமடைந்தது. இது உலகத்தின் பதிய அரசியலில் நட்பு என்பதை செல்லாக்காசாக்கியிருக்கிறது.

உலகத்தின் முக்கிய மாற்றம் இல : 7

ஈராக், ஆப்கான் போரை நடாத்தியபோது கடாபியை மௌனமாக வைத்திருக்க முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயர் லிபியா போய் வந்தார். கடாபியின் கதிரைக்கு உறுதி வழங்கி அங்குள்ள பெற்றோலை உவிவதற்கான குழாயையும் கமுக்கமாகப் பூட்டிவிட்டு வந்தார். இன்று எல்லாம் உவிந்த பின் கடாபிக்கான நாளை அவர்கள் கச்சிதமாக குறித்தார்கள். இதன் கருத்து 2001 லேயே உலக மாற்றத்திற்குப் புதியதோர் நிகழ்ச்சி நிரல் போடப்பட்டுவிட்டதை தெளிவாக எடுத்துரைக்கிறது. அதுவே இன்று படிப்படியாக நகர்கிறது என்பதுதான் உண்மை. ( விக்கிலீக்ஸ் என்பது பொய் அல்ல அதுவே புதிய பயங்கரவாத பட்டியல் போன்றதுதான் )

Edited by akootha

  • தொடங்கியவர்

இந்த ஏழு மாற்றங்கள் வழியாக ஈழத் தமிழர் உள்ளங்களில் எழ வேண்டிய ஐந்து முக்கிய கேள்விகள் ?

கேள்வி 01.

ஐ.நாவில் இயற்றப்பட்ட 1973ம் ஆண்டு தீர்மானம் தமது மக்களின் மீதே ஓர் அரசு தாக்குதல் நடாத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச சமுதாயத்திற்கு உரிமை உண்டு என்கிறது. இதன் அடிப்படையிலேயே லிபியா மீது இன்று தாக்குதல் நடைபெறுகிறது. இந்தச் சட்டத்தின் அடிப்படை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டதா ? நமது அரசியல் தலைவர்கள் ஏன் இந்த விதிகளின் அடிப்படையில் தமது மதியூகத்தை வழி நடாத்தத் தவறினார்கள் ?

கேள்வி 02

உலகத்தின் அதிகார உச்சங்களில் இருந்து சிறிய அனுமதியை பெறும் தரகர்களாகவே ஆசிய நாடுகள் இருந்துள்ளன. வெறும் தரகர்களின் வாசலில் நின்று நமது பிரச்சனைக்கு தீர்வு தேடியிருக்கிறோம் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம் ?

கேள்வி 03

ஐ.நாவின் வாயிற்படிக்கு ஈழத் தமிழன் போக முடியாமல் சிறீலங்கா அரசு இதுவரை சிங்களவரையே அங்கு அனுப்பியுள்ளது. அனைத்து இரகசியங்களும் ஈழத் தமிழருக்கு தெரியாமலே மறைக்கப்பட்டுவிட்டன. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் உலகம் அறியாத பேதைகளாக, பொன்னம்பலமா ? செல்வநாயகமா? என்று சண்டையிட்டு நாம் சீரழிந்திருக்கிறோம். நமது தலைவர்கள் எல்லோரும் சட்டத்தரணிகள் என்கிறார்கள் இவர்கள் சரியான சட்டத்தரணிகளாக இருந்தால் ஐ.நா வை ஏன் கோட்டை விட்டார்கள் ?

கேள்வி 03

பிரான்சில் கூடிய உலக அதிகார மையத்தில் ஈழத் தமிழ் மக்களின் நிலையை எடுத்து வைக்க நமக்கு ஒரு வலுவான நாடு தேவை. அந்த மேலை நாடு எது ?

கேள்வி 04.

கடாபியின் 40 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியால் களைத்துப்போன மக்களுக்கு ஒரு சுதந்திரம் வேண்டும். அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது என்று மேலை நாடுகள் தெரிவிக்கின்றன. நாமும் அதைத்தானே சொல்கிறோம். கடந்த 62 ஆண்டுகளாக உரிமைகள் எதுவுமற்று சிங்கள இனவாத சர்வாதிகார ஆட்சியில் களைத்துவிட்டோம், எம்மை சுதந்திரமாக வாழ விடுங்கள் என்றுதானே கேட்கிறோம். அதற்காக பல இலட்சம்பேர் செத்துவிட்டோம். கடாபியின் கீழ் உள்ள மக்கள் போல நாமும் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறோம் என்று எடுத்துரைக்க இதுதான் நேரமென நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம். அறுபத்து நாலு தாபனங்களை வைத்து ஆளுக்கு ஆள் அடிபட்டு ஏன் சாகிறோம் ?

கேள்வி 05

இன்று வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் சுதந்திர வேட்கையை அடையாளம் காட்டாது தமிழ் ஊடகங்களும், தமிழ் தலைவர்களும் மௌனமாக இருப்பதை நமது மக்கள் ஏன் இன்னமும் அடையாளம் காண முடியாத பேதைகளாக இருக்கிறார்கள் ?

தொகுப்புரை

நாம் ஆயுதம் எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. பயங்கரவாதி பட்டம் பெற வேண்டிய தேவையும் இனி இல்லை. முற்று முழுதான ஜனநாயக வழியில் நாம் சிங்கள இனவாத இழவுகளை தூக்கி வீசிவிட்டு வாழ புது வழி பிறந்திருக்கிறது. போலித் தரகர்களை நம்பியிராது, சோனியாகாந்தி சொல்விட்டாரென்று சொக்கியிராது மாணவரும், மக்களும் தாமாக சிந்திக்க வேண்டும். இப்படியொரு கோணத்தில் வழிகாட்ட வக்கில்லாத கூட்டங்களுக்கு வால்பிடித்து இன்னுமொரு அறுபதாண்டுகள் தாலியறுக்க வேண்டாம். முதலில் யாழில் இருந்தும், மட்டக்களப்பிலிருந்தும் பிரான்ஸ் தலைமையிலான உலக மன்றுக்கு பல்லாயிரம் கையெழுத்துக்களுடன் ஒரு கடிதம் வரவேண்டும். காரணம் நமது மக்கள் இந்திய, சிறீலங்கா இழவுகளால் களைத்துவிட்டார்கள், நமக்கும் விடிவு வேண்டும்.

இயேசுநாதரின் கடைசி இராப்போசனத்தில் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆனாலும் அதற்குப் பிந்திய உலகத்தை அவர் சுமந்த சிலுவையே தீர்மானித்தது. கடந்த வெள்ளி பாரீசில் நடந்த உச்சி மாநாடும் இயேசுநாதரின் கடைசி இராப்போசனம் போலவே புதிய உலகத்தை எழுதப் போகிறது. அந்த ஒளி எமது மண்ணிலும் ஏன் விழக்கூடாது.

கேட்க நமக்கு உரிமை உண்டு !

http://www.alaikal.com/news/?p=61854#more-61854

ஈழத்தமிழர்களின் மதிநுட்பங்களுக்கும் கடபிக்கு எதிரான போரும் எப்படி ஒன்றையொன்று ஒத்துப் போகும். ஈழத் தமிழர்களின் அரசியலும் போராட்டமும் உரிமைகளைப் பெறுவதற்கானது. கடாபிக்கு எதிரான போர்????????????????????????

லிபியாவில், அளவுக்கு அதிகமான சீனாவின் உள்நுளைவும் ... இத்தாக்குதல்களுக்கு ஓர் காரணம்????

http://edition.cnn.com/video/#/video/world/2011/03/13/gps.china.flex.cnn

  • தொடங்கியவர்

லிபியாவில், அளவுக்கு அதிகமான சீனாவின் உள்நுளைவும் ... இத்தாக்குதல்களுக்கு ஓர் காரணம்????

http://edition.cnn.com/video/#/video/world/2011/03/13/gps.china.flex.cnn

- சிங்கள தேசத்தில் போன்று "அபிவிருத்தி கட்டுமாணம்" என்ற பெயரில் அங்கும் சீனா ஆழமாக கால் பதித்திருந்தது.

- 12000 பேர் அளவில் அங்கிருந்து கப்பலில் சீனாவுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்

Libya evacuation: China evacuates 12,000 nationals via naval frigate

அதைவிட ஐரோப்பாவின் பல நாடுகளின் மசகு எண்ணெய், நில வாயு தேவைகளில் ஒரு பங்கை லிபியாவே பூர்த்திசெய்துவருகின்றது (முக்கியமாக பெங்க்காசி உட்பட்ட கிழக்கு லிபியா). அதை அவர்கள் தமது கைவசம் வைத்திருக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படலாம்.

  • தொடங்கியவர்

01. லிபிய போருக்கு தலைமை தாங்க முடியாது என்று அமெரிக்கா தெளிவாகக் கூறிவிட்டது.

02. இப்போது நடைபெறும் போருக்கு யார் தலைமை தாங்குவது என்பது பெரும் அடிபிடியை ஏற்படுத்தியுள்ளது.

03. பிரான்ஸ் – பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் தலைமை தாங்குவதை ஜேர்மனி விரும்பவில்லை. நேட்டோவிற்கு ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலை சமாதானப்படுத்துவது பாரிய தலைவலியாக உள்ளது.

04. ஐரோப்பாவின் சளி என்று வரலாற்றுக் காலத்தில் இருந்தே வர்ணிக்கப்படும் துருக்கி நேட்டோ களமிறங்கவும், தலைமை தாங்கவும் முடியாதவாறு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை நிரந்தரமாக சேர்த்தால் லிபியாவை அழிக்க தானும் வருவதாக கோடி காட்டுகிறது. ஆனால் துருக்கியின் தலைவிதி ஐரோப்பிய ஒன்றியத்தில் சங்கமமாக முடியாத நிலையிலேயே இருக்கிறது.

04. கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் நடாத்திய முதலாவது தாக்குதல் கூட்டுப்படையின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையான இலக்கில் நடாத்தப்பட்டுள்ளது. இப்போதய தாக்குதலின் இலக்கு என்ன.. எதுவரை என்பது முக்கிய கேள்வி…

05. நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசனின் தலைமை தற்போது பெரும் சவாலை சந்தித்துள்ளது. டென்மார்க்கின் குழறுபடி அரசியல்வாதிகளை விட நேட்டோவின் அங்கத்துவ நாடுகள் மோசமான குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. அவர் விமானத்தில் பறந்தே களைத்துவிட்டார்.

06. இன்று மதியம்வரை நேட்டோவிற்குள் சரியான முடிவு எட்டித் தொடப்படவில்லை.

07. பிரான்சிய அதிபர் ஸார்க்கோஸி அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னிச்சையாக தலைமை ஏற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வடக்கு ஆபிரிக்கா பிரான்ஸ் கால் பதித்த இடம் என்பதால் மற்றவர்கள் முன்னணி வகிப்பதை பிரான்ஸ் விரும்பவில்லை.

08. கடாபிக்கு எதிராக போராடும் போராளிகள் ஓர் ஒழுங்கான தலைமை இல்லாமல் போராடுவதைப்போலவே தற்போது மேலை நாடுகளின் அணி ஓர் ஒழுங்கான தலைமை இல்லாமல் களமிறங்கியுள்ளது.

இதன் மறுபக்கம் இதுதான்..

இந்த நாடகம் பிரிக் BRIC (Brazil Russia India China) நாடுகளின் கண்களில் மண்ணைத்தூவ நடப்பதை அவதானிக்க முடிகிறது. பிரிக் நாடுகள் என்றால் பிரேசில் – ரஸ்யா – சீனா – இந்தியா ஆகிய நான்கு நாடுகளுமாகும். கடாபிக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்காத நாடுகளும் இவைதான்.

இப்போது வீசப்பட்டுள்ள அம்புகள் லிபியாவைப் போல பிரிக் நாடுகளில் இறங்காது என்று அந்தந்த நாடுகளின் தலைவர்கள் எண்ணுவதற்கு ஏற்றவாறு இந்த நாடகத்தின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இரகசியம் தெரிந்து குழம்பிப் போயுள்ள ரஸ்யாவிற்கு விளக்க ஓர் அமெரிக்க பிரதிநிதி ஏற்கெனவே மொஸ்கோ போய்விட்டார். சோனியா காந்தி சென்ற வாரம் இங்கிலாந்து வந்தபோது இந்த விபரங்களை காதால் பெற்றிருப்பார்.

இந்த அலையில் பிரிக் நாடுகள் எந்த மாற்றமும் செய்ய முடியாது – என்ன செய்வார்களோ விடுவார்களோ அது அவர்களின் தலையெழுத்து…இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அமைதியாக இருக்கிறார்கள்…

இருந்தாலும்…

நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள்.

சிறீலங்காவில் அமைச்சர் பீரீஸ் அலறியிருப்பது அவருக்குள்ள வலி காரணமாக ஏற்பட்டதுதான். புலிகள் தோற்கடிக்கப்பட்டது சிங்கள ஆட்சியாளரின் வெற்றிக்காக அல்ல என்பதை

இப்போது அவர் அறிந்துவிட்டார். அமெரிக்கா வந்தபோது இந்தத் தகவலை அவர் செப்பமாக பெற்றுக் கொண்டதும் அலறியபடி ஓடியதும் பழைய கதை.

இதன் மர்மங்களை நம் தமிழ் தலைவர்கள் அறிந்து திரு விழிகளை அகலத்திறக்க மேலும் சில நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம்.

அல்லது எல்லாம் முடிந்த பிறகும் அவர்கள் விளங்கலாம்..

இருந்தாலும் தற்போது நேட்டோவிற்குள் நடப்பது நாடகம் என்பதை அடுத்து வரும் நாட்களில் உணரலாம். நிகழ்ச்சி நிரல் போடப்பட்டுவிட்டது.. மேலை நாடுகள் படிப்படியாக அதை நோக்கி நாடகத்துடன் முன்னேறுகின்றன. இப்படி முன்னேறாவிட்டால் இந்த பொருளாதார மந்தக் குழிக்குள் இருந்து அவர்கள் வெளிவர முடியாது.

அணு குண்டு பாதுகாப்பு என்று கருதிய நாடுகளுக்கு அதுவே பாதுகாப்பில்லாத நோயாக மாறப்போகிறது.

முன்னர் சிறீலங்காவில் பெரும் ஆபத்து வரப்போவதை சுனாமி சொல்லிவிட்டு போனது போல இப்போது ஜப்பானில் வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறது..

நேட்டோவின் நாடகத்தின் மறுபக்கம் இதுதான்.

கடைசியாக வந்த செய்தி…ஐ.நா அவுட் ! நேட்டோ உள்ளே !!!

இப்படி ஒரு போலி நாடகம் வெளி உலகின் முன் நடந்து கொண்டிருக்க…லிபியாவிற்குள் மேலை நாடுகளின் தரைப்படைகள் இரகசியமாக இறங்கிவிட்டன.

ஆனால் இவை தாக்குதலில் ஈடுபடவில்லை என்று அந்தச் செய்தி கூறுகிறது.. வேறுபல நோக்கங்களுக்காக அவர்கள் இறங்கியுள்ளார்கள் என்றும் கூறுகிறது.

தரையில் இருந்து வேவுபார்த்து தகவல் கொடுக்கும் இவர்களது பணி ஒரு வகையில் தரைப்போர்த்தான். ஐ.நா பிரேரணையை தூக்கி வீசிவிட்டே இக்காரியம் நடைபெற்றுள்ளது. இவர்களின் ஆலோசனையில் கூட்டுப்படைகள் லிபியாவில் 300 இலக்குகளில் தாக்குதல்களை நடாத்திவிட்டன. மொத்தம் 160 தோமஸ்குவாக் மிசைல்ஸ்கள் வீசப்பட்டுவிட்டன.

ஆனால் ஒன்று..

ஒன்றுமில்லாத ஈழத் தமிழனுக்கு அவன் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாரத இடத்திலிருந்து அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது..

ஒன்றை நினைத்தால் அது வரினும் வரும்..

அல்லது வராமலே போகினும் போகும்..

நினையாத ஒன்று முன் வந்து நிற்கினும் நிற்கும்

எல்லாம் எனையாளும் ஈசன் செயல்

என்பது பழைய பாடல்..

ஈழத் தமிழன் வாழ்வில்

நினையாத ஒன்று முன் வந்து நிற்கினும் நிற்கும் என்ற வரி நடக்கப் போகிறது..

http://www.alaikal.com/news/?p=62334

ஆனால் ஒன்று..

ஒன்றுமில்லாத ஈழத் தமிழனுக்கு அவன் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாரத இடத்திலிருந்து அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது.

அருமமை அருமை . எதிர்பாரதா நேரத்து அதிர்ஷ்டம், நோர்வே நெடியவனின் அதிரடி செயற்படுகள், தலைவரும் 5000 போராளிகளும். புலம்பெயர் பூனைப் பட்டைகள், இபப்டி பல அதிவெடிகள் நடக்க போகிறது.

:lol: :lol: :lol:

கடந்த ஐந்து நாட்களாக நாளொன்றிற்கு 124 பறப்புக்களை செய்த சர்வதேச படைகள் கடாபியின் 10 டாங்கிகளைத்தான் தகர்த்துள்ளன. கடாபியிடம் 5000 டாங்கிகள் உள்ளனவாம். இந்த டாங்கிகள் பகலில் மணலிற்குள் புதைப்பதும் இரவில் தாக்குதல் செய்வதுமக உள்ளன. இதனால் சர்வதேசப்படைகள் நாசகார தாக்குதலை செய்யும் பொருட்டு உள் நுழைந்துள்ளனர்.

இந்த நாசகார படைகளில் 14 பேரை கடாபியின் தண்டபோல்ட் சினைப்பேர்ஸ் போட்டு தள்ளியிட்டினம் நேற்று இரவு. கடாபியின் தண்டர்போல்ட் ஆட்கள் புரட்சிகர ஆயுத குழுபோல் சென்று இந்த சர்வதேசபப்டைகளை சினைப் பண்ணி இருக்கினம்.

சர்வதேசப்படைகளின் வான் தாக்குதல் சரிவராது இனி ஏவுகணையும் தரைவழித்தாக்குதலும்தான்.

கடாபியும் சரி, சர்வதேசப்படைகளும் சரி பொதுமக்களைத்தான் இப்போ இலக்கு வைத்துவிட்டு ஆளை ஆள் மாறி குற்றம் சாட்ட புறபப்ட்டு விட்டினம்.

இருதரப்பும் பொதுமக்களைப்பற்றி ...

கடந்த ஐந்து நாட்களாக நாளொன்றிற்கு 124 பறப்புக்களை செய்த சர்வதேச படைகள் கடாபியின் 10 டாங்கிகளைத்தான் தகர்த்துள்ளன. கடாபியிடம் 5000 டாங்கிகள் உள்ளனவாம். இந்த டாங்கிகள் பகலில் மணலிற்குள் புதைப்பதும் இரவில் தாக்குதல் செய்வதுமக உள்ளன. இதனால் சர்வதேசப்படைகள் நாசகார தாக்குதலை செய்யும் பொருட்டு உள் நுழைந்துள்ளனர்.

இந்த நாசகார படைகளில் 14 பேரை கடாபியின் தண்டபோல்ட் சினைப்பேர்ஸ் போட்டு தள்ளியிட்டினம் நேற்று இரவு. கடாபியின் தண்டர்போல்ட் ஆட்கள் புரட்சிகர ஆயுத குழுபோல் சென்று இந்த சர்வதேசபப்டைகளை சினைப் பண்ணி இருக்கினம்.

சர்வதேசப்படைகளின் வான் தாக்குதல் சரிவராது இனி ஏவுகணையும் தரைவழித்தாக்குதலும்தான்.

கடாபியும் சரி, சர்வதேசப்படைகளும் சரி பொதுமக்களைத்தான் இப்போ இலக்கு வைத்துவிட்டு ஆளை ஆள் மாறி குற்றம் சாட்ட புறபப்ட்டு விட்டினம்.

இருதரப்பும் பொதுமக்களைப்பற்றி ...

கடாபி கூட சொந்த மக்கள் அல்லது ஒருமத மக்கள் என்ரு பார்ப்பாஅன் ஆனால் மேற்கு நாடுகள் தங்கள் கெளரவம் போகுது என்றால் எதையும் செய்வார்கள். ஆனால் கடாபி சதாம் போல இல்லை. தன் இருப்புக்கு என்னவும் செய்யார் பாருங்கள் ஆனால் கடாபியை போட்டு தள்ளினாலும் தள்ளுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.