Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரன்னையின் 31 ஆம் நினைவு நாள்

Featured Replies

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தில் போற்றிடும் அன்னை பார்வதி அம்மையார் 31-வது நினைவு நாளாகிய மார்ச் 22 அன்று, தமிழ் ஈழத்திலும், தரணியில் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும், அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்நிகழ்வு தொடர்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தலைநகர் சென்னையில், வங்கக்கடல் அலைகளில் மலர்களைத் தூவி நீர்க் கடன் ஆற்றும் நிகழ்ச்சி, பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற இருக்கிறது.

வேலுப்பிள்ளை பிரபாகரனை தன் வயிற்றில் சுமந்த நமது அன்னை பார்வதி அம்மையாரின் ஈமச்சாம்பல், ஈழத்தில் இருந்து வந்து சேர்ந்து இருக்கிறது.

அதனை, வங்கக் கடலில் தூவிட இருக்கிறோம். அதே நேரத்தில், கடலுக்கு அப்பால் ஈழத்தில், கண்ணீர் கடலில் தத்தளிக்கும் தமிழ் ஈழ மக்களைப் பாதுகாத்து, அவர்கள் மானத்தோடும், உரிமையோடும் வாழ, அவர்களின் தாயக மண்ணை மீட்டெடுத்து, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைத்திட, அன்னை பார்வதி அம்மையாரின் நினைவாக வீர சபதம் ஏற்போம்.

எனவே, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணிக்கு பத்தினித்தெய்வம் கண்ணகி சிலை அருகில், தமிழ் ஈழ உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து, நம் அன்னையின் புகழ் அஞ்சலியில் பங்கு ஏற்குமாறு அன்போடு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-31-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81

இன்று (22.03.2011)அன்னை பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் 31 வது நினைவு நாள்

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!

நேரிசை வெண்பா

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! அன்புருவே!

நின்னையே எந்நாளும்; நெஞ்சினில் – உன்னத

தெய்வமாய்த் தாங்கித் திருவிளக் கேற்றினோம்

செய்யதிரு சேயோன் செயல்!

பருத்தித் துறையெனும் பாங்கான ஊரில்

மருவுதமிழ் மேவு மனையாம் – தருமம்

இயற்றுநல் மெத்தைவீட் டில்லறம் தன்னில்

வியத்தகு சேயானாய் வீறு!

வெற்றித் திருநகராம் வேலவன் வாழ்விடமாம்

கற்றவர் சார்பு கவின்பொழில் – நற்றுயர்

வேதம் ஒலித்திடு வீதி; நிறைமனைப்

பாதம் பதித்தாய் பயன்!

நாற்குணமும் நன்றே நடைபயிலச் செல்வந்த

மேற்குடியிற் றோன்றிடு மெல்லியாய் – சாற்று

கரும்பென இன்புற்ற காரிகையாம் நின்னை

விரும்பியே கைப்பிடித்தார் வேல்!

இல்லற வாழ்வெனும் இன்புறு சோலையில்

நல்லறம் காத்து நயப்புடன் – சொல்லற

நீறுடன் குங்குமம் நெற்றியில் நீக்கமற

வீறுடன் ஈன்றாய்நல் வீரன்!

தனையனைத் தேடியே சர்க்காரும் தோன்றத்

தனியளாய்ப் போராட்டம் செய்தீர் – நனிவுயர்

செல்வனும் ஞானத்தாற் கண்ணுற்றான் விட்டகன்றான்

பல்லாண்டு நீக்கினான் பற்று!

தமிழினத்தின் தாயே! தவத்தின் பயனே!

கமழும் புகழ்கரி காலன் – அமிழ்தன்

முருகனைத் தாங்கிய மூலம்தான் நீயே

அருமகனைத் தேடுகிறோம் ஆய்ந்து!

தற்கொடை செய்தாரெம் சந்தன மேனியர்

அற்புதமே ஆற்றினார் அவ்வண்ணம் – பொற்றுயர்

தாயே விலையிலாத் தானமாய் நின்னுயிர்

ஈய்ந்தாய் உணர்வார் எவர்?

போராட்டம் செய்தோமே புன்மைகள் நீங்கிட

பாராளு முன்றிலிலும் பேசினோமே – சீராளத்

தாயுந்தன் வாழ்விற்காய்த் தட்டித்தான் கேட்டோமா?

வாயுரைப்பில் வல்லவரே வார்!

கொடியவரின் வஞ்சனையாற் கொண்டவனை நீங்கிக்

கடிதெனவே நோயுற்ற காலை – மடிதனில்

தாங்கிடப் பிள்ளையின்றித் தாகத்தில் வெந்தீரே

ஏங்கினார் சேய்களும் இங்கு!

அம்மா! நீயின்றி ஆதவன்தான் ஈங்கேது?

இம்மா நிலத்தின் இணையிலாச் – செம்மலவன்

தோற்றமே ஈழத்தின் தொன்மை வரலாறு

ஆற்றலும் ஆன்றோன் அவன்!

கொற்றவனைப் பெற்றவளே! கோப்பெருந் தேவியே!

நற்றுணையாய் நிற்பாய் நமதினத்தைச் – சுற்றியுள்ள

வஞ்சம் அகற்றும் வலிமை தருவாயே

அஞ்சுதல் இல்லா அணங்கு!

( தேசியத் தலைவராம் எங்கள் கரிகாலனை எம்மினத்திற்காய் ஈன்று புறம் தந்த அன்னை பார்வதி அம்மாளின் முப்பத்தோராவது நினைவு நாளையொட்டி வெண்பாவினாலான இப்பாடல் வெளியிடப்படுகிறது)

ஆக்கம் பவித்திரா – கனடா

http://www.alaikal.com/news/?p=62025

பேரனையின் 31 ஆம் ஆண்டு நினைவு இன்று

'பேரன்னையின் 31 ஆம் நினைவு நாள்' என்று தலைப்பு திருத்தப்பட்டுள்ளது. ஈழநாதத்திலும் பிழையாகப் போட்டுள்ளனர்.

மெரீனாவில் பார்வதி அம்மாள் அஸ்தி கரைப்பு

செவ்வாய், 22 மார்ச் 2011( 19:41 IST )

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தி சென்னை மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கடலில் கரைக்கப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையின் பின்புறம் உள்ள கடற்கரையில் இன்று மாலை பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டனர். சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை பிடித்திருந்தனர். ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக் கொடிகளும் பறந்தன.

மாலை 5.30 மணிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனும் வந்தனர். அவர்களோடு கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீரசந்தானம் ஆகியோரும் கலந்துக்கொள்ள, பார்வதி அம்மாளின் படத்துடன் பெரும் திரளாய் கடலை நோக்கிச் சென்றனர்.

கடல் நீரில் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைக்கப்படும்போது, பார்வதி அம்மாள் புகழ் வாழ்க என்று உரத்த குரலில் வைகோ முழக்கமிட, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சி கடற்கரையில் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1103/22/1110322048_1.htm

  • தொடங்கியவர்

பேரனையின் 31 ஆம் ஆண்டு நினைவு இன்று

'பேரன்னையின் 31 ஆம் நினைவு நாள்' என்று தலைப்பு திருத்தப்பட்டுள்ளது. ஈழநாதத்திலும் பிழையாகப் போட்டுள்ளனர்.

ஈழ நாதத்திலும் திருத்தபட்டுள்ளது. நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.