Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்முலா1 2011 - Formula1 2011

Featured Replies

  • தொடங்கியவர்

வரும் ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்தில் 9 ஆவது போட்டி நடக்கவுள்ளது. இப் போட்டியில் போர்முலா 1 சம்மேளனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெற முடியாமல் உள்ள இரண்டாம் நிலையிலுள்ள Hamilton போன்ற ஓட்டுனர்கள் கடுப்பில் உள்ளனர். புதிய கட்டுப்பாட்டு விதிகள் Redbull காரின் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி போட்டியின் போக்கினை மாற்றாதா என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

கார் ஓடத் தொடங்கும்போது காரின் கீழ் பகுதியால் - காரின் முன் பகுதிக்கும் ஓடுபாதைக்கும் இடையிலான இடைவெளி - காற்று அமுக்கமாக நுளைகிறது. காரின் பின் பகுதியில் உள்ள கீழ்ப் புறம் கோது போன்று அதிக கன அளவுடன் காணப்படும். முன் பகுதியால் சிறிய இடைவெளியால் உள் நுளைந்த குறிப்பிட்ட அளவான காற்று பின் பகுதியை அடைந்ததும் பெரிய கன அவளவைச் சந்திக்க நேரிடும். ஆகவே காற்றில் அடர்த்தி குறையும். காரின் மேல் புறமாக உள்ள காற்றின் அடர்த்தியை விட காரின் கீழுள்ள அடர்த்தி குறைவடைய கார் நிலத்தை நோக்கி இழுக்கப்படும். இந் நிலையானது அதி வேகமாக ஓடும் காரினை நிலை குலையாது நேர்த்தியாக வைத்திருக்க உதவும்.

barcfd20032.jpg

கடந்த இரண்டு வருடங்களாக இந்த அடர்த்தி வித்தியாசத்தை அதிகரிக்க இன்னொரு உத்தியையும் கையாண்டார்கள். புகை போக்கியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை இந்த இடைவெளிக்குள் செலுத்த காற்றின் அடர்த்தி மேலும் குறைந்தது. புகைபோக்கியின் வெப்பம் 1000°C வரை செல்லும். இது இந்த 9 ஆவது போட்டியில் தடை செய்யப்படுகிறது. இதனால் இழக்கப்படப் போகும் வலுவை வேறு வழிகளில் தேட முயற்சி செய்கிறார்கள்.

  • Replies 67
  • Views 6.5k
  • Created
  • Last Reply

நாளை, 10 July 2011 டொராண்டோவில் இண்டி பந்தயம்

2011 Toronto IZOD IndyCar Series Practice 1 Highlights

Edited by akootha

  • 2 months later...
  • தொடங்கியவர்

15 ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஜப்பானில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியாளர்களின் புள்ளி விபரம்.

image1rc.png

Sebastian Vettel

உலக சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு இவர் இன்னும் 1 புள்ளி மட்டும் எடுத்தால் போதுமானது. ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் திறமையாகவும் நேர்த்தியாகவும் ஓடி இந்த நிலைக்கு வந்துள்ளார். இதுவரை நடந்த 14 போட்டிகளில் 9 இல் முதலாவதாக வந்துள்ளார்.

Jenson Button - Fernando Alonso - Mark Webber - Lewis Hamilton

இந்த நால்வரில் இரண்டாவது இடத்தை யார் பெறுவது என்பதில்தால் கடுமையான போட்டி இருக்கும்.

Lewis Hamilton

மூர்க்கத் தனமாக கார் ஓட்டுகிறார் என்று பலராலும் விமர்சிக்கப் பட்டிருந்தார். நடந்த போட்டிகளில் பலவற்றில் ஏனைய கார்களுடன் மோதி அவற்றைச் சேதப் படுத்தியிருந்தார். சில தடவைகள் எதிர் போட்டியாளர் முற்றாக ஓட முடியாதவாறு விபத்துக்களையும் உண்டாக்கியிருந்தார். அனேகமான போட்டிகளில் நடுவர்களால் தண்டனைகளும் வழங்கப்பட்டிருந்தன. இவரின் பின்னடைவிற்கு இதுவும் காரணம்.

கார்த்திகேயன்

8 ஆவது போட்டியுடன் இவர் இடை நிறுத்தப்பட்டு பதிலாக வேறு ஒருவர் கார்த்திகேயனுக்குப் பதிலாக ஓடுகிறார். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, கார் ஓட்டுவதில் கார்த்திகேயனுக்குத் திறமை போதாது. எல்லாப் போட்டிகளிலும் கடைசியாகவே வந்துள்ளார். ஒரே தரமுடைய தனது சக போட்டியாளரைக் கூட முந்தியதில்லை. இரண்டாவது, அவரது கார் நிறுவனம் வேறு ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் கார்த்திகேயனின் பதவி பற்போகக் காரணமானது. இப்போது பரீட்சார்த்த ஓட்டங்களில் மட்டும் பங்கு கொள்கிறார். இந்த மாத இறுதியில் இந்தியாவில் நடைபெறும் 17 ஆவது போட்டியில் பங்குபெற ஏற்பாடாகியுள்ளதாகத் தெரிகிறது.

கருண் சந்தோக்

பரீட்சார்த்த போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற கருணுக்கு ஜேர்மனியில் நடந்த போட்டியில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதில் இவர் தனது திறமையை வெளிப்படுத்தத் தவறிவிட்டார். இவரும் இந்தியாவில் நடக்கும் போட்டியில் பங்குபெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வரும் ஞாயிறு இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்தியாவின் போர்முலா 1 ஓட்டப் போட்டியில் காருண் சந்தோக் பங்குபெற மாட்டார் என அவரது கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்திய ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கும். இருந்தபோதிலும் வெள்ளிக் கிழமை நடைபெறும் பரீட்சார்த்த ஓட்டத்தில் அவர் பங்குகொள்வார்.

கார்த்திகேயன் பங்குகொள்வாரா இல்லையா என இன்னும் உறுதியாகவில்லை.

இப் போட்டியில் அதிக வரவேற்பிற்குள்ளாகப் போவது Force India நிறுவனத்தின் இரண்டு கார்களுமாகத்தான் இருக்கும். வெளிநாட்டவர் இவ் இரு கார்களை ஓட்டப் போவதைவிட இக் கார்கள் இந்தியக் கொடியின் நிறங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது வரவேற்பைப் பெறும்.

  • தொடங்கியவர்

இந்திய கட்டிட வல்லுனர்கள் போர்முலா 1 நிர்வாகிகளுக்கு தமது ஓட்டப் பாதையை விபரிக்கிறார்கள்.

8197.jpg

இந்த ஓட்டப் பாதையில் இரண்டு இடங்களில் அதி வேகமாக ஓடலாம். இந்த இரண்டு இடங்களிலும் DRS பாவிப்பதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.

8105.jpg

இணைப்பிற்கு நன்றி இணையவன் அண்ணா!

---

இம்மாதம் 16 ஆம் தேதி அன்று நடைபெற்ற Indy Car season finale at Las Vegas Motor Speedway போட்டியில் ஏற்பட்ட விபத்தில் Dan Wheldon உயிரிழந்தார். அதிகப் படியான கார்கள் போட்டியில் பங்கெடுத்ததாகவும், ஓட்டப் பாதையின் அளவு ஒடுக்கமாக இருந்தமையுமே விபத்திகுரிய காரணங்களாக இருக்கலாம் என்று கூறப் பட்டிருந்தது...

இந்த விபத்து 1994ல் நடைபெற்ற Ayrton Senna வின் விபத்தை ஞாபகப் படுத்தியிருக்கிறது...

http://www.youtube.com/watch?v=wRSBVgqVpq0

நான் விரும்பிப் பார்ப்பது இது தான், இப்போதெல்லாம் இந்தப் போட்டியைப் பார்க்கிற ஆர்வம் குறைந்தது போகிறது... :(

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

<p>

இந்திய கட்டிட வல்லுனர்கள் போர்முலா 1 நிர்வாகிகளுக்கு தமது ஓட்டப் பாதையை விபரிக்கிறார்கள்.

இணையவன், வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நடைபெற இருக்கும் போர்முலா - 1 ஐரோப்பிய நேரம் எத்தனை மணிக்கு ஆரம்பமாகின்றது. ஓட்டப்பாதையை.... ஊழல் செய்யாமல் இந்தியர்கள் கட்டியிருப்பார்களா என்று நினைக்க, இப்பவே.... நெஞ்சு திக், திக் என்று இருக்குது.
  • தொடங்கியவர்

ஓட்டப் பாதையா அல்லது ஓட்டைப் பாதையா என்று நாளை தெரியவரும். இது தவிர அராஜகமான முறையில் போட்டியில் பங்குபெறும் அணிகளிடம் இந்தியா வரி அறவிடுகிறது. பாதுகாப்பு பிரச்சனை, விவசாயிகளின் காணிகளைப் பறித்து ஓடுபாதை கட்டப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை போன்ற பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஏற்பாடுகள் தமக்குத் திருப்தியாக உள்ளதாக போர்முலா1 சம்மேளனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Jenson Button ஓட்டப் பாதையில் ஆட்டோவுடன்.

12384.jpg

போட்டி நேரம் (ஐரோப்பிய நேரப்படி):

பரீட்சார்த்த ஓட்டம் 1 : வெள்ளி காலை 6-30

பரீட்சார்த்த ஓட்டம் 2 : வெள்ளி காலை 10-30

பரீட்சார்த்த ஓட்டம் 3 : சனி காலை 7-30

தெரிவுப் போட்டி : சனி பிற்பகல் 10-30

போட்டி : ஞாயிறு காலை 10-30

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பிரபலமான நபர்தான் போட்டி நிறைவு பெறுவதைக் குறிக்கும் கறுப்பு வெள்ளை கட்டம் போட்ட கொடியை அசைப்பது வழக்கம். ஞாயிறன்று கிறிக்கெட் வீரர் சச்சின்தான் இறுதிச் சுற்றில் வெற்றிக் கொடியை அசைப்பாராம். சச்சினும் போர்முலா1 இரசிகர்.

சச்சினும் கார்த்திகேயனும் ஸ்பெயினுல் நடந்த போட்டியில் சந்திதுள்ளனர் :

12348.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பார்முலா-1 கார் பந்தயங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

மிகுந்த எதிர்பார்ப்போடு இன்று துவங்கும் பார்முலா-1 கார் பந்தயம், கார் பந்தய ரசிகர்களிடையே மட்டுமின்றி இந்திய மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்தியாவின் மாபெரும் நிகழ்வாக கருதப்படும் பார்முலா-1 பந்தயங்கள் பற்றிய சில சுவாரஸ்யமான விதிமுறைகள் மற்றும் தகவல்களை காணலாம்.

ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சம் 18,000 முறை சுழலும்(ஆர்பிஎம்) திறன் படைத்த பார்முலா-1 கார் எஞ்சின்கள் ஒரு நொடிக்கு 450 லிட்டர் காற்றை உட்கொள்கின்றன. மேலும், 100 கிமீ செல்வதற்கு 75 லிட்டர் எரிபொருளை உறிஞ்சித்தள்ளுகின்றன.

பார்முலா-1 பந்தயங்களின் விதிமுறைகளின்படி, ஒரு சீசனுக்கு 8 எஞ்சின்களை மட்டுமே ஒரு அணி பயன்படுத்த முடியும். இந்த எண்ணிக்கையை தாண்டினால் அந்த அணியின் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்படும். இதேபோன்று, காருக்கு ஒரு கியர் பாக்ஸை 4 போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள அணிகளுக்கு அனுமதியுண்டு.

மேலும், சர்வதேச பார்முலா-1 சம்மேளனத்தின்(எப்ஐஏ)வழிகாட்டுதலின்படியே எஞ்சின்கள் தயாரிக்க வேண்டும். இதற்காக, பார்முலா-1 எஞ்சின் தயாரிப்புக்காக பல கடுமையான வழிமுறைகளை எப்ஐஏ கடைபிடித்து வருகிறது.

இதற்கு முன்னர் கூடுதல் பிக்கப் வேண்டும் என்பதற்காக பார்முலா-1 கார்களுக்கான எரிபொருளில் பவர் பூஸ்டர்கள், பென்ஸீன், ஆல்கஹால் மற்றும் விமான பெட்ரோல் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது அதிக சக்திவாய்ந்த பவர் பூஸ்டர்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தட்பவெப்பம், ரேஸ் டிராக்கின் தன்மை ஆகியவற்றை பொறுத்து 50 விதமான கலவைகள் கொண்ட எரிபொருள்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

பந்தயம் மற்றும் பயிற்சியின்போது ஒரு அணி சராசரியாக 2,00,000 லிட்டர் எரிபொருளை ஒரு சீசனில் பயன்படுத்துகிறது.

சாதாரணமாக, கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் டயர்கள் 16,000 கிமீ வரையிலோ அல்லது அதற்கு மேலும் செல்லும் வகையில் இருக்கும். ஆனால், பார்முலா-1 கார்களில் பொருத்தப்படும் டயர்கள் வெறும் 200 கிமீ வரை செல்லும். பின்னர் புதிய டயர் மாற்ற வேண்டும்.

பார்முலா-1 பந்தயங்களில் பங்கேற்கும் அணி ஒரு சீசனில் பயிற்சி மற்றும் பந்தயங்களுக்காக 1,60,000 கிமீ பயணம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி தமிழ்சிறி.

ஒரு சீசனுக்கு 8 எஞ்சின்களுக்கு மேல் பாவித்தால் அபராதம் உண்டா இல்லையா தெரியவில்லை. ஆனால் ஒட்டம் ஆரம்பமாகும் போது 10 இடங்கள் பிந்தங்கவேண்டி வரும். ஒருவர் தெரிவுப் போட்டியில் 5 ஆவதாக வந்தால் ஓட்டம் தொடங்கும்போது 15 ஆவது நிலையிலிருந்து தொடங்குவார். ஒரு எஞ்சினின் ஆயுட்காலம் 1600 கிலோமீற்றர்கள் மட்டுமே.

போர்முலா1 தொழில்நுட்பம் வாகன உருவாக்க வளர்ச்சியில் பங்குகொள்கிறது. சக்தியைச் சேமித்தல், Aerodynamic போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்தப் படுகிறது. இப்போது ஒவ்வொரு பொட்டியாளரும் ஆரம்பத்தில் நிரப்பப்பட்ட எரிபொருளினக் கொண்டே போட்டியை முடிக்க வேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் எஞ்சின்கள் 2.5 லிற்றர் அளவுடைய 8 சிலிண்டர்களைக் கொண்டது (v8). 2012 இல் நடைபெறும் போட்டிகளில் v6 எஞ்சின்களைப் பாவிக்கப் போகிறார்கள். மேலும் பல கட்டுப் பாடுகள் வரப் போகின்றன. இந்த v6 எஞ்சின் வேறு பல கார் நிறுவனங்களை ஈர்த்துள்ளது. Audi நிறுவனம் 2013 இல் பங்குகொள்வதாக இருந்ததும் பின்னர் தமது எண்ணத்தைக் கைவிட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்....அடிக்கடி போர்முலா பிழை திருத்தம் செய்ய இருக்கிறது.

1.பிந்தங்க வேண்டி அல்ல......பின் தங்க வேண்டி

2.எரிபொருளினக் அல்ல.....எரிபொருளினைக்

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் போர்முலா -1 காரோட்டம் ஆரம்பமாக உள்ளது.

ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கவும்.

  • தொடங்கியவர்

இன்று தெரிவுப் போட்டி நடைபெற்றது. ஆச்சரியமான வகையில் எல்லா ஓட்டுனர்களுமே ஓடுபாதையை ஓகோ என்று புகழ்ந்துள்ளனர்.

வெள்ளிக் கிழமை பரீட்சார்த்த ஓட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நாய் ஒன்று ஓடிபாதையில் ஓடி குழப்பம் உண்டாக்கியது.

தெரிவுப் போட்டியில் வழக்கம்போல் Vettel முதலாம் இடத்தில் வந்துள்ளார்.

12474.jpg

இரண்டாவதாக வந்த Hamilton தவறான நடத்தையால் போர்முலா நிர்வாகத்தால் 3 இடங்கள் பிந்தள்ளப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார். கார்த்திகேயன் கடைசி.

போட்டி நாளை காலை ஐரோப்பிய நேரம் 10-30 ற்கு ஆரம்பிக்கிறது.

  • தொடங்கியவர்

சில படங்கள் :

12485.jpg

கார்த்திகேயன்

12431.jpg

போட்டியாளர்களை வரவேற்கும் இந்திய அழகிகள் :

12462.jpg

சில படங்கள் :

12485.jpg

கார்த்திகேயன்

12431.jpg

போட்டியாளர்களை வரவேற்கும் இந்திய அழகிகள் :

12462.jpg

இன்று காலை டிவி யில் காட்டினார்கள்.

கார்த்திகேயன் பின் வந்தாலும், இதற்கு அடிக்கல் நாட்டியவர்.

பி.கு.

வரவேற்கும் அழகிகளுக்கும் formula 1 ரேசில் பங்குபற்றக் கூடிய உடல்வாகு உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பி.கு.

வரவேற்கும் அழகிகளுக்கும் formula 1 ரேசில் பங்குபற்றக் கூடிய உடல்வாகு உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நீங்கள் தெரிவித்த பி.கு.....மு.கு என வரவேண்டும்.வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை சூடேற்றுமுன்.......ஓட்டுனர்களை சூடேற்றி..... வெற்றித்திலகமிட்டு வழியனுப்பி வைப்பவர்களும் இவர்கள் தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி பார்முலா-1 பந்தய டிராக்கில் குறுக்கே நாய் ஓடி வந்ததால் பரபரப்பு

28-buddh-international-circuit.jpg27-forula-1-race300.jpg

நொய்டாவில் இன்று காலை பார்முலா-1 கார் பந்தய பயிற்சி போட்டிகள் நடந்து கொண்டிருந்தபோது, ரேஸ் டிராக்கில் குறுக்கே நாய் ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி அருகே நொய்டாவில் ரூ.2,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புத் இன்டர்நேஷனல் பார்முலா-1 கார் பந்தய ரேஸ் டிராக்கில் பந்தயங்கள் இன்று காலை முறைப்படி துவங்கின.

அனைத்து பார்முலா-1 அணிகளின் கார்களும் பயிற்சி போட்டியின்போது ஒன்றையொன்று முந்தும் வேகத்தில் ரேஸ் டிராக்கில் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தன.

அப்போது, தெருநாய் ஒன்று ரேஸ் டிராக்கில் திடீரென தலைதெறிக்க குறுக்கே ஓடி வந்தது. இதைக்கண்ட போட்டி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அங்கு நின்றிருந்த பாதுகாப்பு வாகனத்தில் சென்று அந்த நாயை பிடிக்க விரட்டிச் சென்றனர்.

இருந்தாலும், அந்த நாய் அவர்கள் கையில் அகப்படாமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டே அங்கும் இங்குமாக ரேஸ் டிராக்கில் ஓடியது. இறுதியில் சில நிமிட போராட்டத்திற்கு பின் நாயை ஒரு வழியாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனிடையே, நாய் குறுக்கே ஓடி வந்ததால் கார் டிரைவர்களுக்கு சிவப்பு கொடி காட்டி காரை நிறுத்த சமிக்ஞை கொடுக்கப்பட்டது. இதனால், 5 நிமிடங்கள் பயிற்சி போட்டிகள் பாதிக்கப்பட்டன. பார்முலா-1 ரேஸ் டிராக்கில் நாய் ஓடி வந்தது அங்கு சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

18 ஆவது போட்டி இன்று மத்தியானம் அபுதாபியில் நடக்கவுள்ளது. தெரிவுப் போட்டியில் வழமைபோல் விற்றல் முதலாம் இடத்தில் போட்டியை ஆரம்பிக்கிறார். இது அவரது 15 ஆவது முன்நிலை ஆகும். இதற்கு முன்னர் 1992 இல் Nigel Mansell என்ற ஓட்டுனர் 15 தடவைகள் முன்நிலையில் போட்டியை ஆரம்பித்துள்ளார். பிறேசிலில் நடைபெற இருக்கும் கடைசிப் போட்டியிலும் விற்றல் முதல் நிலையில் ஆரம்பித்தால் அது உலக சாதனையாக இருக்கும். அதுவும் 90 களில் இருந்ததை விட இன்று கடினமான சூழ்நிலை உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக அனேகமான கார்கள் அதி உச்ச வலுவை அடைந்துள்ளன. Red Bull, Mercedes, Ferrari போன்ற கார்களின் வேகம் 5 கிலோ மீற்றர் தூரத்திற்கு சில பத்தில் ஒரு வினாடி வித்தியாசமே காணப் படுகின்றது. இந்த 1/10 வினாடியை இன்னும் குறைக்க ஒவ்வொரு நிறுவன தொழில்நுட்பவியலாளர்களும் படாத பாடுபடுகிறார்கள். அத்துடன் இவ்வருடம் மிகவும் திறமயான ஓட்டுனர்கள் போட்டிகளில் பங்குகொள்கின்றனர். இவர்களில் 5 பேர் ஏற்கனவே உலகக் கிண்ணத்தை வென்றவர்கள்.

முந்தநாள் வெள்ளிக் கிழமை நடந்த பரீட்சார்த்த ஓட்டத்தில் விற்றல் சோர்வாகக் காணப்பட்டார். எவ்வளவு முயன்றும் மற்றைய ஓட்டுனர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த ஓடுபாதை வெப்பநிலை மாறுதல்களினால் ஒவ்வொரு நேரத்திற்கேற்ப வித்தியாசமான தன்மையைக் கொள்ளும். அதற்கேற்றவாறு டயர்களையும் காரின் சிறகுகளையும் தயார் செய்ய வேண்டும். வெள்ளியன்று விற்றலின் கார் ஏன் வேகமாக ஓடவில்லை என்பதைக் கண்டறிய தொழில் நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்ததாகத் தெரிகிறது. நேற்று மத்தியானம் நடந்த தெரிவுப் போட்டியில் அவரது கார் சிறப்பாகத் தயார் படுத்தப் பட்டிருந்தது. 5.554 கிலோமீற்றர் ஓடுபாதையை விற்றல் 1 நிமிடம் 38.481 விநாடிகளிலும் Hamilton 1 நிமிடம் 38.622 வினாடிகளிலும் ஓடி முடித்தனர்.

569.jpg

ஓடுபாதையில் 7 ஆவது வளைவைத் தாண்டியதும் நேர்கோட்டில் 15 விநாடிகளுக்கு 300 கி.மீ ற்கு அதிகமான வேகத்தில் ஓட வேண்டும். அதன்பின் வரும் வளைவிற்கு 110 மீற்றருக்கு முன்னர் ஒருசில வினாடிகளில் 90 கி.மீ ஆக வேகத்தைக் குறைக்க வேண்டும். இதன்போது 5G அளவிலான அமுக்கம் உணரப்படும். டயர்களின் வெப்பம் 130°C வரை செல்லும். நேர்கோட்டில் வேகம் அதிகரிக்க காரின் கீழ் உட்புகும் காற்றின் அடர்த்தி குறைய கார் தரையை நோக்கி ஈர்க்கப்படும். 300 கி.மீ. வேகத்தில் ஓடும்போது டயர்களில் 800 kg அழுத்தம் தரப்படும்.

12664.jpg

யாஸ் கோட்டலின் கீழான ஓடுபாதையின் ஒரு பகுதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.