Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுண்டிக்குளத்தில் நான்கு கடற்படையினர் படகுடன் மாயம்

Featured Replies

வியாழக்கிழமை, மார்ச் 31, 2011

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

வடமராட்சி கிழகு சுண்டிகுளத்தில் நான்கு கடற்படையினர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் முலைத்தீவில் இருந்து வினியோக நடவடிக்கைக்காக சுண்டுக்குளம் கடற்படை முகாமிற்கு சென்று கொண்டிருந்த வேளை காணாமல் போயுள்ளனராம். இவர்கள் சென்ற படகு, ஆயுதங்கள் உட்பட எவையும் காணவில்லையென கூறப்படுகின்றது. கூடவே முகாமுடனான தொடர்பும் கடந்த 24 மணி நேரமாக துண்டிகப்பட்டுள்ளதாம்.

இவர்களை கண்டு பிடிக்க இந்திய கடற்படையினரின் துணையினை நாடியுள்ளது இலங்கை அரசு. இலங்கை கடற்படையினர் விமானபப்டையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் வெளி நாடு செல்லும் நோக்கில் தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, மார்ச் 31, 2011

-------

இவர்கள் வெளி நாடு செல்லும் நோக்கில் தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகின்றது.

ஆயுதங்களுடன் வெளிநாட்டுக்குப் போவதாக இருந்தால்..... பாகிஸ்தான், வங்காளதேசப் பக்கமாகத்தான் போயிருக்க வேணும்.

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நான்கு கடற்படையினருடன் கடற்படைப் படகு ஒன்று காணாமல் போயுள்ளதை சிறிலங்கா கடற்படை இன்று காலை உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தகவல் வெளியிடுகையில்,

'நேற்றுமுன்தினம் செவ்வாய் மாலை நான்கு கடற்படையினருடன் முல்லைத்தீவுக்கு வடக்கேயுள்ள சுண்டிக்குளம் முகாமில் இருந்து டிங்கி வகை ரோந்துப் படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது.

ரோந்துப் பணியை முடித்துக் கொண்டு இது நேற்றுக்காலை தளத்துக்குத் திரும்பியிருக்க வேண்டும்.

ஆனால் இன்னமும் அது முகாமை வந்தடையவில்லை.

இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகம் ஊடாக இந்திய கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.“ என்று தெரிவித்தார்.

இதனிடையே பருத்தித்துறைக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் காணாமற்போன இந்தக் கடற்படைப் படகைத் தேடி சிறிலங்கா கடற்படையும், சிறிலங்கா விமானப்படையும் பாரிய தேடுதலை நடத்தி வருகின்றன.

முன்னைய செய்தி

பாக்கு நீரிணையில் நான்கு கடற்படையினருடன் சிறிலங்கா கடற்படைப் படகு மாயம்

சிறிலங்கா கடற்படையின் படகு ஒன்று நான்கு கடற்படையினருடன் பாக்கு நீரிணையில் மாயமாகியுள்ளது.

காணாமற்போயுள்ள இந்த சிறிலங்கா கடற்படைப் படகையும் அதிலிருந்த கடற்படையினரையும் தேடிக் கண்டுபிடிக்க சிறிலங்கா அதிகாரிகள் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமற்போயுள்ள இந்த கடற்படைப் படகு பாக்கு நீரிணையில் மூழ்கியிருக்கலாம் அல்லது ஏதாவது விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காணாமற்போயுள்ள சிறிலங்கா கடற்படைப் படகையும், அதிலிருந்து நான்கு கடற்படையினரையும் தேடிக் கண்டுபிடிக்க உதவுமாறு இந்திய கடற்படையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்று மாலை இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க 650 படகுகளில் புறப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களிடம், சிறிலங்கா கடற்படைப் படகு பற்றிய தகவல் எதையும் அறிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு இந்திய அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அதேவேளை காணாமற்போன சிறிலங்கா கடற்படையினர் தொடர்பாக அவதான மாக இருக்கும்படி, தமிழ்நாடு கரையோர காவல்துறையும், தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

புதினப்பலகை

http://www.puthinappalakai.com/view.php?20110331103503

Edited by komagan

  • தொடங்கியவர்

ஆயுதங்களுடன் வெளிநாட்டுக்குப் போவதாக இருந்தால்..... பாகிஸ்தான், வங்காளதேசப் பக்கமாகத்தான் போயிருக்க வேணும்.

எல்லாத்தையும் தூக்கி கடலில வீசிவிட்டு அவுஸ்ரேலியா பக்கம் போயிருப்பாங்கள் அங்க கேட்டால் சரத் பொன்சேகாவின் ஆட்கள் என்று சொல்லலாம் அல்லது அரச எதிர்ப்பு ஆட்கல் என சொல்லி அசைலம் அடிச்சிடுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: நேவிக்காரனே தப்பி ஓடுற அளவுக்கு நிலமை அப்படி மோசமாகவா இருக்கு ??
  • கருத்துக்கள உறவுகள்

:lol: நேவிக்காரனே தப்பி ஓடுற அளவுக்கு நிலமை அப்படி மோசமாகவா இருக்கு ??

நேவிக்காரனை விட யாழ்ப்பாண மக்கள் சந்தோசமா இருக்கினமாமே..! :D அதை நினைக்க இன்னும் மகிழ்ச்சியா இருக்கு..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இச்சம்பவத்தை அடுத்து வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு கரையோரங்களுக்கு கனரக வாகனங்களில் வந்த ஆயிரக்கணக்கான சிங்களப் படைகள் அந்தப் பகுதிகளை சுற்றிவளைத்து வீடுவீடாக தேடுதல் வேட்டை நடத்தி வருவதுடன் பொதுமக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறவும்.. உள்வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறீலங்கா சிங்கள கடற்படைப் படகு.. அதில் பயணித்தவர்களை இழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக தமிழ்நெட் கூறுகிறது.

உடனடியாக காணாமல் போன சிங்களக் கடற்படை வீரர்களை கண்டுபிடிக்க இந்திய உதவி கோரப்பட்டுள்ளதாம். :)

Thousands of SL troops round up resettled villages in Jaffna, Mullaiththeevu

[TamilNet, Thursday, 31 March 2011, 06:50 GMT]

Thousands of occupying troops of Sri Lanka Army rounded up the village Uduththu’rai in Vadamaraadchi East and are engaged in search operation since Thursday early morning. A similar operation is simultaneously being undertaken in Mullaiththeevu also. Vanni IDPs were recently resettled in both the places. The operation is said to be following an alleged incident in which some SL troops who went on a boat are missing in the sea and only their boat came ashore.

The SL troops came in armoured vehicles rounded up the entire coastal area.

No one from the village Uduththu’rai was allowed to go out and outsiders were not permitted inside since Thursday morning.

The military entered into every household and was engaged in checking the inmates and registration documents.

While people who came from Vanni and resettled are being investigated, large number of workers and officials who had gone there for rehabilitation and construction work are being separated and are taken by the SL Army for special enquiries.

The war-like operation has evoked terror in the minds of the people in the north.

Meanwhile, Sri Lanka Navy sources in Colombo said that four SL Navy personal were missing in the sea between Chaalai and Chu’ndikku’lam in the Vadamaraadchi East.

The SL Navy said that its personnel were missing while returning to Chu’ndikku’lam Wednesday morning. The SL Navy has asked the help of the Indian Navy to locate its missing troops.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33745

Edited by nedukkalapoovan

-------------

காணாமல் போன கடற்படையினர்களை கண்டீர்களா?

இலங்கை கடற்படையினர் நால்வர் காணாமல் போனது தொடர்பில் இன்று தமிழக புலனாய்வு துறை அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களிடம் விசாரணை நடத்தினர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு மீனவன் காணாமல் போனால் ஐயோ பாவம் என்று கூட சொல்லாத தமிழக உளவுத்துறையும் காவல்துறையும் தமிழர்களைக்கொன்று குவித்த சிங்கள கூலிப்படைகள் காணவில்லையென கூறியதுடன் அவர்களை கண்டீர்களா? கண்டீர்களா என ஒற்றைக்காலில் நின்று தேடுகின்றனர்.

தொடர்பு பட்ட செய்தி

முல்லைத்தீவு சுண்டிக்குளம் கடற்பகுதிக்குச் சென்ற நான்கு கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 29ம் திகதி சுண்டிக்குளம் கடற்படை முகாமில் இருந்து சென்றவர்கள் நேற்றைய தினம் கரை திரும்பியிருக்க வேண்டும் எனத் தெரிவித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் இதுவரை அவர்கள் கரை திரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.

இதேவேளை காணாமல் போன கடற்படையினர் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இலங்கை கடற்படையினர் காணாமல் போன விடயம் குறித்து இந்திய கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன இலங்கைக் கடற்படையினர் பயணித்த படகு வடமராட்சிக் கடலில் கரையொதுங்கியது

[Friday, 2011-04-01 02:53:12]

முல்லைத்தீவுக் கடலில் காணாமற்போன இலங்கை கடற்படையிரைத் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் அவர்கள் பயணம் செய்த கடற்படைப் படகு நேற்று வடமராட்சி கிழக்கு கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29ம் திகதி மாலை 6 மணியளவில் முல்லைத்தீவுக்கு வடக்கே உள்ள சாலை இலங்கை கடற்படைத் தளத்தில் இருந்த 4 கடற்படையினருடன் புறப்பட்ட- வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடியிழைப் படகு ஒன்று காணாமல் போயிருந்தது.

அங்கிரந்து 7 கடல்மைல் தொலைவில் உள்ள சுண்டிக்குளம் கடற்படைத்தளம் நோக்கிச் சென்ற அந்தப் படகு 2 மணிநேரத்தில் அங்கு சென்றிருக்க வேண்டும் என்று கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அந்தப் படகு நேற்று முன்தினம் காலை தளம் திரும்பாததை அடுத்து இலங்கை கடற்படை பாரிய தேடுதலை ஆரம்பித்தது.

இந்தநிலையில் நேற்றுக்காலை வெற்றிலைக்கேணி அருகே இலங்கை கடற்படையினரின் படகு கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதில் கடற்படையினர் நால்வரும் இருக்கவில்லை.

வெளியிணைப்பு இயந்திரத்துடன் அந்தப் படகு எந்த சேதமும் இன்றி காணப்படுவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமற்போன கடற்படையினரைத் தேடி கடலில் பாரிய தேடுதலை நடத்தும் கடற்படையினருடன் இந்திய கடற்படையினரும் இந்தியக் கடலோரக் காவல்படையினரும் இணைந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை நேற்று அதிகாலை முதல் வடக்கில் பல பகுதிகளில் படையினர் பாரிய தேடுதல், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, நெடுங்கேணி, இரணைமடு, மன்னார், யாழ்.நகரப்பகுதி என்று வடக்கின் பல பகுதிகளில் படையினரின் தேடுதல்களும், சோதனைக் கெடுபிடிக்களும் அதிகமாக இருந்தன. ஏ-9 வீதி வழியாகப் பணயம் செய்த வாகனங்களும் கடுமையாகச் சோதனையிடப்பட்டன.

கடலில் காணாமற்போன கடற்படையினர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்தத் தேடுதல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது இலங்கை படையினரின் சோதனைக் கெடுபிடிகளால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் பல இடங்களில் அவர்கள் துருவித்துருவி விசாரிக்கப்பட்ட துன்புறுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

அதேவேளை தமிழ்நாட்டு மீனவர்களிடமும் இதுபற்றி இந்திய அதிகாரிகள் கடும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். காணாமற்போன கடற்படையினரை தமிழ்நாட்டு மீனவர்கள் கடத்தியிருக்கலாம் அல்லது அவர்களாகவே தப்பிச் சென்றிருக்கலாம் என்றே இலங்கை கடற்படை வட்டாரங்கள் கருதுவதாகத் தெரியவருகிறது. என புதினப் பலகை செய்தி வெளியிட்டுள்ளது.

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.