Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொபேட் பிளேக், எரிக் சொல்கைம் ஆகியோரின் இலங்கைப் பயணம்?

Featured Replies

மஹிந்தவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா தனது பாராட்டினை தெரிவித்துள்ளது. இது முதற்தடவை அல்ல போரினை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக கூறிய பின்னர் அமெரிக்கா இவ்வாறு பல அறிக்கைகளை விடுத்துள்ளது. அதே நேரம் இலங்கையினை மனித உரிமை தொடர்பில் சில மென்மையான கண்டனங்களையும் அவ்வப்போது கூறியும் வந்துள்ளது.

.

அமெரிக்காவின் இந்த மென்மையான கண்டன அறிக்கைகள் இலங்கை அதிபர் மஹிந்த இராஜபக்‌ஷவை ஒன்றுமே செய்துவிடவில்லை. மாறாக அமெரிக்கா தெரிவிக்கும் பாராட்டுக்கள் மஹிந்த இராஜபக்‌ஷவின் இனஅழிவு நடவடிக்கைக்கு மேலும் தைரியம் ஊட்டுபவையாகவே இருந்து வந்துள்ளது. மட்டுமன்றி இலங்கையின் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்ற சாட்டுக்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து வரும் மஹிந்தவிற்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் அமைகின்றது.

.

எடுத்துக்காட்டாக உலக மனித உரிமைகள் அமைப்புக்கள் அனைத்தும் மஹிந்த இராஜபக்‌ஷவின் நல்லிணக்க ஆணைக்குழுக்களை விமர்ச்சித்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கும் வேளை அமெரிக்க பல தடவை மஹிந்தவின் இந்த முயற்சிகளை வரவேற்றும் பாராட்டியும் உள்ளது. அமெரிக்காவின் இந்த வெட்டியொட்டும் இராஜ தந்திரம் ஏன்?

.

அடுத்ததாக அமெரிக்காவின் தெற்காசிய இராஜாங்க செயலர் ரொபேட் பிளேக் மற்றும் நோர்வே நாட்டின் அமைச்சர் எரிக் சொல்கைம் ஆகியோர் இலங்கை செல்லவுள்ளனர். இவர்களின் பயணம் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் அறிக்கை வெளியாகப்போகும் முன்னராக அமையவுள்ளது.

.

அதற்கு முன்பாகவே இன்று ஓர் அறிக்கையினையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா மீண்டும் தனது பாராட்டைத்தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று தெற்காசிய விவகார செயலர் ரொபேட் பிளேக் விட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

.

இலங்கையில் மூன்று இலட்சம் மக்களும் மீழ குடியேற்றம் செய்யபப்ட்டுள்ளனர். ஐந்து இலட்சம் சதுர மீற்றர் நிலங்களில் கண்ணிவெடி அகற்ரப்பட்டுள்ளது. கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையினை ஆரம்பித்துள்ளது. இவையெல்லாம் நல்ல சமிக்ஞைகள். இதனை அமெரிக்கா வரவேற்கின்றது. என்றாலும் அரசாங்கம் இன்னும் நம்பிக்கையினை ஏற்படுத்தும் வேலைகளை செய்யவேண்டும். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையினை மதிக்க வேண்டும் அதனை ஏற்கவேண்டும். இல்லையேல் சர்வதேச விசாரணை ஒன்றை எதிர்கொ|ள்ள வேண்டி ஏற்படலாம் எனவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

.

உண்மையில் தெற்காசியாவிற்கான அமெரிக்க இராஜாங்க செயலர் இலங்கைகு ஏன் செல்கின்றார்?

இது தொடர்பில் ஈழ நாதத்தில் முன்பே ஒரு கட்டுரை வெளியானது. அதாவது உலகத்தமிழர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்புக்களை நோர்வே , அமெரிக்க அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் அவர்கள் மக்களுக்கு என்ன நடக்கின்றது என கூற மறுத்துவிட்டனர். எல்லாவற்றையும் வெளிப்படையாக பகிர முடியாது என கூறிவிட்டனர்.

ஆனால் அதே நேரம் எரிக் சொகைம் தான் புலம்பெயர் மக்களுக்கும் - இலங்கை அரசிற்கும் பாலமாக இருந்து செயற்படமுடியும் என ஓர் அறிக்கை விட்டுள்ளார். அதே நேரம் சிங்கள கடும்போக்காளர் அதனை எதிர்த்தும் வந்துள்ளனர்.

நோர்வே தன்னுடைய பணிகளை கடந்த காலத்தில் சரியாக செய்யவில்லையென்பதும் போரின் இறுதிப்பகுதியில் மோசமான விளைவுகளுக்கு நோர்வேயும் காரணமாக இருந்ததும் தமிழர்களுக்கு நன்கு தெரியும். இதே வேளை நோர்வே அரசாங்கம், இலங்கை அரசு உட்பட பல்வேறு தரப்பினர் எரிக் சொல்கைம் அவர்களில் விமர்சனங்களையும் முன்வைத்தும் வருகின்றனர். இத்தைய சூழலில் எரிக் சொல்கைம் மீண்டும் இப்படியான முயற்சியில் ஈடுபடுவது ஏன்? யாருக்காக?

.

உண்மையில் இலங்கை அதிபர் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு அழுத்தங்களை கொடுத்து தமது நிகழ்ச்சி நிரலிற்குள் கொண்டு வர மேற்குலகம் முயற்சி செய்து வருகின்றது. இதில் இந்தியாவிற்கும் சற்று உடன்பாடு உள்ளது.

உண்மையில் அரசியலை விடுத்து மனிதாபிமான நடவடிக்கை என்றாலும் கூட அமெரிக்க இதுவரை என்ன செய்துள்ளது. இந்த இரண்டு வருட காலத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கு எதனை சாதித்துள்ளது.

சிறையில் உள்ள போராளிகள், கணாமல் போனோர், மீழ் குடியமர்வு, உயர் பாதுகாப்பு வலையம், இராணுவ பிரசன்னம், நில ஆக்கிரமிப்பு. ஆகிய விடயங்களில் அமெரிக்கா மற்றும் நோர்வே உட்பட மேற்குலகின் பங்களிப்பு என்ன?

.

விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்கவேண்டும் என கங்கணம் கட்டி நின்று அதனை செய்து முடித்த இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் அதன் பின்னர் தமிழர் பிரச்சினைகளுக்கு செய்தது என்ன?

.

உண்மையில் எதனையுமே மேற்கூறப்பட்டவர்கள் செய்யப்போவதில்லை. மாறாக போர்க்குற்றம் என்ற பேரில் தமிழர்களையும் ஏமாற்றுவதுடன் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு அழுத்தத்தை கொடுத்து தமது நலன்களை பாதுகாத்துக்கொள்வதே இறுதி விளைவாக இருக்கும்.

.

அமெரிக்காவோ இந்தியாவோ தமிழர் பிரச்சினை தொடர்பில் எதுவும் கூறவில்லை. எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. கூட்டமைப்புடன் பேசுங்கள் இதுதான் அவர்களது ஆக கூடிய அழுத்தமாக இருக்கின்றது. ஆனால் கூட்டமைப்புடன் மஹிந்த எப்படி நடந்து கொள்கின்ரார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மேற்குலகின் மஹிந்தவிற்கு அழுத்தம் கொடுத்து தமது நோக்கங்களை நிரைவேற்றுவது என்ற நிகழ்ச்சி நிரலில் தமிழர்கள் பிரச்சினை எங்கு உள்ளது என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. இந்த சூழலில் அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையினை ஏற்குமாறு வலியுறுத்துகின்றதே தவிர இலங்கை தீவில் தமிழர்க்கான பிரச்சினையினை ஆழமாக உணர்ந்து அங்கு இப்போதும் நடைபெற்றுவரும் நில பறிப்பு , மற்றும் உரிமை மீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் அள்விற்கு செயற்படவில்லை. ஆனால் வேறு பல நாடுகளில் இவ்வாறு தலையிட்டு வருகின்றது.

இலங்கை மீதான மேற்கின் நிகழ்ச்சி நிரலிற்கு அவர்களிடம் இருக்கும் இப்போதைய ஒரே ஒரு ஆயுதம் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைதான். அந்த அறிக்கையினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பிளேக் செல்கின்றார். உண்மையில் அந்த நிபுணர் குழு அறிக்கையில் போர்க்குற்றத்திற்கான சர்வதேச விசாரணை தேவை என்பதனை அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப்படவில்லையென்பது கசிந்த தகவல். மாறாக நிபுணர் குழு போரில் ஈடுபட்டவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே நிபுணர் குழுவின் முக்கிய சிபார்சு. இந்த சிபார்சினை இலங்கை ஏற்கவேண்டும் என்பதனை வலியுறுத்தவே பிளேக் செல்கின்றார்.

அமெரிக்க நினைப்பது போன்று மஹிந்த நிபுணர் குழுவின் தேவைகளை பூர்த்தி செய்தால் அடுத்து நடக்கப்போவது என்ன? சில வேளை மஹிந்த போர்க்குற்றம் செய்த சிலர் அதிகாரிகளுக்கு தண்டனை கொடுத்தவுடன் பிரச்சினை தீர்ந்துவிடுமா? ஒரு கதைக்காக மனித உரிமை மீறல் விசாரணைக்கு நிபுணர் குழுவினை மஹிந்த அனுமதிக்கும் போது மறு பக்கத்தில் புலம்பெயர் தமிழர் தரப்பினை மஹிந்தவின் ஏனைய நல்லிணக்க முயற்சிகளுக்கு ஒத்துப்போகவேண்டும் என அமெரிக்கா மற்றும் நோர்வே தரப்பு கேட்கலாம்.

.

இந்த ஒரு சூழல் ஏற்பட்டால் என்ன நடக்கும்? தமிழர்கள் என்ன செய்வார்கள்? என்ன செய்யவேண்டும் என்பதற்கும் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும்.

http://eelanatham.net/story/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88

'அமெரிக்க நினைப்பது போன்று மஹிந்த நிபுணர் குழுவின் தேவைகளை பூர்த்தி செய்தால் அடுத்து நடக்கப்போவது என்ன? சில வேளை மஹிந்த போர்க்குற்றம் செய்த சிலர் அதிகாரிகளுக்கு தண்டனை கொடுத்தவுடன் பிரச்சினை தீர்ந்துவிடுமா? ஒரு கதைக்காக மனித உரிமை மீறல் விசாரணைக்கு நிபுணர் குழுவினை மஹிந்த அனுமதிக்கும் போது மறு பக்கத்தில் புலம்பெயர் தமிழர் தரப்பினை மஹிந்தவின் ஏனைய நல்லிணக்க முயற்சிகளுக்கு ஒத்துப்போகவேண்டும் என அமெரிக்கா மற்றும் நோர்வே தரப்பு கேட்கலாம்.

இந்த ஒரு சூழல் ஏற்பட்டால் என்ன நடக்கும்? தமிழர்கள் என்ன செய்வார்கள்? என்ன செய்யவேண்டும் என்பதற்கும் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும்'

இதுவே இரணில் ஆக இருந்திருந்தால் சிலவேளை மேலே கூறப்பட்ட மாதிரி நடந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், தன்னை ஒரு நவீன கெமுனுவாக காட்டி அதையே பெரும் மூலதனமாக கொண்டுள்ள மகிந்தர் குடும்பம் செய்யாது. மேலும், இதில் கோத்தா கூட மாட்டுப்படலாம், எனவே குடும்பத்துக்குள் பிரச்சனை. மேலும், இதில் பொன்சேகா வேறு உள்ளார்.

அதையும் மீறி தண்டனை கிடைத்தால் அதன் முடிவுகளை வைத்து தமிழர் தரப்பு "மீண்டும் இவ்வாறான நிலைமை வராமல் இருக்க, ஐ. நா. சாசனங்களுக்கு ஏற்ப , நாம் வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பிரிந்து போக சர்வதேசம் உதவ வேண்டும்" என கேட்டு அதற்கு சர்வதேச ரீதியாக ஆதரவு சேர்க்கவேண்டும்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.