Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே அரசியல் தீர்வொன்றை நோக்கிப் பயணிக்க முடியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே அரசியல் தீர்வொன்றை நோக்கிப் பயணிக்க முடியும்

.

நாடு இயல்பு நிலைக்குத்திரும்பும் போதுதான் அமைதி முழுமைப்படுத்தப்படும்.அப்போதுதான் நாட்டின் அச்சுறுத்தலும் நீங்கும்.யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும் நாடு இன்னமும் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதையே அவசரகால நீடிப்புக்கான நிலைமை எடுத்துக்காட்டுகின்றது என்று பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் அவசரகால நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் தமதுரையில் தொடர்ந்து கூறியதாவது;

யுத்தம் முடிந்தாலும் நாடு இன்னும் முழுமையான இயல்புச் சூழலுக்கு வரவில்லை என்பதையே இந்த அவசரகாலச் சட்ட நீடிப்புக்கான நிலைமை எடுத்துக் காட்டுகிறது. யுத்தம் நடைபெற்ற நாடுகளில் இந்த மாதிரியான நிலைமை என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நீடிக்கும் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. இந்த நிலைமையை மாற்றுவதற்குப் பங்காற்ற வேண்டிய பொறுப்புஆளுங்கட்சி,எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைவருக்குமே உரியது.

நாட்டைப் பாதுகாப்பதிலும் மக்களுடைய உரிமைகளைப் பேணுவதிலும் யாருக்கும் வேறுபாடான கருத்துக்கள் இருக்க முடியும் என்று நான் கருதவில்லை. ஒரு சட்டமானது நாட்டின் நன்மைக்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவுமே உருவாக்கப்படுகிறது. இந்த அவசரகாலச் சட்டத்தை முன்னர் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியே அதிக காலம் நடைமுறையில் வைத்திருந்தது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இன்று இந்த அவையிலே அவசரகாலச் சட்ட நீடிப்பை எதிர்க்கின்றவர்கள்,முன்னர் இருந்த ஒரு அரசியற் சூழலிலே இதே அவசரகாலச் சட்டத்தின் நன்மைகளை முழுமையாக அனுபவித்தவர்கள் என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். அப்பொழுது இவர்கள் கொழும்பை மையப்படுத்திய அரசியலில் ஈடுபட்டிருந்தனர்.ஆகவே இவர்களுக்கு அன்று அவசரகாலச் சட்டத்தின் தேவை இருந்தது.

இன்று இவர்களின் அரசியல் தேவை மாறியுள்ளது.எனவே அவசரகாலச் சட்டத்துக்கு எதிராகப் பேசுகிறார்கள்.ஆகவே இவர்கள் தமது தேவைகளுக்காகவே இந்தச் சட்டத்தை எதிர்க்கிறார்களே தவிர மக்களின் நன்மைக்காக என்ற நோக்கிலிருந்து இதை எதிர்க்கவில்லை.

இவ்வாறே இவர்கள் மக்களின் நோக்கிலிருந்தும் மக்களுக்கான தேவைகள் என்ற நிலையில் இருந்தும் எதையும் எதிர்க்கவும் இல்லை.எதையும் வரவேற்கவும் இல்லை.

அப்போதும் தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன.அத்துடன் இந்த நாடு இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பிலும் இருந்தது.

ஆனால் நாம் எப்பொழுதும் மனப்பூர்வமாக இந்த அவசரகாலச்சட்டத்தை ஆதரிக்கவில்லை.இதை நாம் எப்போதும் வெளிப்படையாகவே சொல்லியும் வருகிறோம்.

இந்த நாட்டிலே அமைதிச் சூழல் ஒன்று உருவாகி பிரச்சினைகள் தீர்ந்து முழுமையான ஜனநாயக சூழல் நிலைபெறும்போதுதான் அவசரகாலச் சட்டம் தளர்ந்து போகும்.

ஆகவே அத்தகைய ஒரு நிலைமையை உருவாக்குவதற்காகவே நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.அந்த இலக்கிலே நாம் கட்சி வேறுபாடுகள்,கொள்கை நிலைப்பாடுகளுக்கு அப்பால் பாடுபட வேண்டும் என்று விரும்புகிறேன்.

நிறைவான வாழ்க்கையை பாதுகாப்பான முறையில் மக்கள் பெற வேண்டும் என்ற ஒரு அரசியல் இலக்கில் எமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதற்காகவே நாம் அபிவிருத்தியும் அரசியற் தீர்வும் என்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையில் செயற்பட்டு வருகிறோம். இந்த விடயத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் எப்போதும் தெளிவாகவே இருக்கின்றோம். விடுதலைப் புலிகளின் காலத்திலும் நாங்கள் அபிவிருத்தி என்ற இலக்கில் அத்தனை நெருக்கடிகளின் மத்தியிலும் செயற்பட்டிருக்கின்றோம். இப்போதுள்ள சூழலில் இதை மேலும் விரிவாக்கிச் செயற்படுத்தி வருகின்றோம்.அதேவேளை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற விடயத்திலும் நாங்கள் அக்கறை கொண்டே உள்ளோம்.

அதற்காகத்தான் நாங்கள் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் என்ற அமைப்பை உருவாக்கினோம்.தேர்தல் காலத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பல்ல இந்த அரங்கம்.

அபிவிருத்தியும் அரசியற் தீர்வும் என்பதை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்காகவே நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம்.

ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருந்து கொண்டேதான் நாங்கள் பிரச்சினைகளை அணுகுகிறோம்.எமது நிலைப்பாட்டை அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களும் பெரும்பான்மை இன மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் எல்லோருடைய உரிமைகளையும் பேணக்கூடிய ஜனநாயகத்தையும் அரசியல் அடிப்படைகளையுமே நாம் வலியுறுத்துகிறோம்.

ஆனால் தமிழ்த் தேசியத்தின் பேரால் அரசியல் நடத்துவோர் இதற்கு மாறான அரசியல் உபாயங்களையே கையாண்டு வருகின்றனர். இவர்கள் மக்களுக்கான உட்கட்டமைப்புகளைச் சிதைப்பதில் சிதைந்த உட்கட்டமைப்புகள் மீளுருவாக்கம் பெறாமல் இருப்பதையுமே விரும்புகின்றனர்.அத்துடன் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் ஒற்றைப்படைத்தன்மையான அரசியல் வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர்.

உட்கட்டமைப்புக்களை சிதைத்து மக்களின் நாளாந்த வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கி அபிவிருத்திக்கு எதிராகச் செயற்பட்டு அந்த நாளாந்த வாழ்வின் நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம் என்று குற்றம்சாட்டி அதன் மூலம் அரசியல் ஆதாயத்தைத் தேடும் பழைய வழிமுறையே இதுவாகும்.

இதனையே தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துவோர் செய்து வருகின்றனர். எமது நாட்டை பொறுத்தவரையில் அரசியல் ரீதியான பிரச்சினைகள் இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன. அரசியற் பிரச்சினைகளின் விளைவாக நாடு ஒரு பெரிய போரில் சிக்கித் தன்னுடைய முப்பது ஆண்டுகளை இழந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகள் என்பது மிகப் பயங்கரமான ஒரு காலகட்டமாக உயிருக்கே உத்தரவாதமில்லாத ஒரு யுகமாக இருந்துள்ளது.

யுத்தத்தின் விளைவாக நாடு மிகப்பெரும் பின்னடைவை சந்தித்தது.இந்த நிலைமைகள் தான் அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கான நியாயத்தை உருவாக்கின.இப்பொழுது யுத்தம் முடிவுக்கு வந்தாலும் அரசியல் பிணக்குகள் இன்னும் முழுமையன தீர்வை எட்டவில்லை. அரசியல் தீர்வை எட்டுவதில் அனைத்துத் தரப்பினரும் பங்களிப்புச் செய்யவேண்டும்.அதைப்போல் அரசியற் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அனைவருடைய பங்கேற்பும் அவசியமானது.ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயகச் சூழலில் பேணப்படவேண்டிய அடிப்படைகள் இவை.ஆனால், கடந்த காலத்தைப் போல இதற்கு விலக்காகவும் முரணாகவும் நடந்து கொள்ள முயலும் தரப்பினர்கள் இருக்கின்றனர்.அவர்கள் அரசியல் அதிகாரத்தைப் பன்மைப்படுத்துவதற்குப் பதிலாக தாமே ஏகஉரிமை கொண்டாட விரும்புகின்றனர்.

பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுவதற்குப் பதிலாக பிரச்சினைகளை உருவாக்குவதிலும் பிரச்சினைகளை வளர்த்துக் கொள்வதிலும்தான் இலங்கையின் கடந்த காலம் கழிந்திருக்கிறது.அதேவேளை ஒவ்வொருவரும் மற்றத்தரப்பினரின் மீதே எதிர்த்தரப்பினர் மீதேஎப்போதும் குற்றம் சாட்டி வந்திருக்கின்றனர் பிரச்சினைகளின் உருவாக்கத்துக்கும் பிரச்சினைகளின் வளர்ச்சிக்கும் தாமும் காரணம் என்பதை இவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.இந்த நிலைமைதான் இப்போதும் நீடிக்கிறது.இந்த நிலைமை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்த நிலைமைதான் இப்போது நீடிக்கிறது.இந்த நிலைமை நீடிக்கும் வரையில் நாம் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வைக் காணவும் முடியாது.நாட்டில் அமைதியை எதிர்பார்க்கவும் முடியாது. நாடு இயல்பு நிலைக்கு முழுமையாகத் திரும்பும்போதுதான் அமைதி முழுமைப்படுத்தப்படும்.அப்போதுதான் நாட்டின் அச்சுறுத்தலும் நீங்கும்.அப்போதுதான் நாட்டினது அபிவிருத்தியும் முழுமையான நிறைவுடன் நடைபெறும்.

எங்களின் கடந்த காலம் நெருக்கடிகளின் மத்தியில் கழிந்ததைப் போலவே நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் போக்குவதற்குச் சிலர் முயற்சிக்கின்றனர்.அவர்களுக்கு இந்த நாட்டில் அமைதி ஏற்படக்கூடாது.இயல்பு நிலை தோன்றக்கூடாது.அபிவிருத்தி நடைபெறக்கூடாது.மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடாது என்பதெல்லாம் முக்கியமானது.அவர்கள் மக்களின் அவலத்தைப் பெருக்கி அதையே அரசியல் முதலீடாக்கி அதிலிருந்தே தங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அரசியல் தீர்வை எட்டுவதற்கான சூழலொன்றை இந்த நாட்டில் உருவாக்கவேண்டும்.அதற்கு முன்னோட்டமாக மக்களின் வாழ்வாதாரங்களை முழுமைப்படுத்தவேண்டும்.

அத்துடன், மக்களுக்கான இயல்புச் சூழலை உருவாக்கவேண்டும்.அதனை அடுத்தே அரசியற் தீர்வை நோக்கி நாம் பயணிக்க முடியும். இந்த அடிப்படையிலேயே நாம் மக்களுக்கான தீர்வை நோக்கி நகர விரும்புகிறோம்.இப்போது வடக்குக் கிழக்கில் குறிப்பிடத்தக்க அளவில் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.அங்குள்ள மக்கள் இழந்துபோன தங்கள் கடந்த காலத்தின் பெறுமதியை உணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே,அவர்கள் மீண்டும் இன்னொரு நெருக்கடியான சூழலுக்குத் திரும்புவதை விரும்பவில்லை.ஆகவேதான் அரசாங்கத்தின் உதவிகளையும் அபிவிருத்திகளையும் அவர்கள் முழு ஆர்வத்தோடு வரவேற்கிறார்கள்.

மீளக் குடியேறிய மக்கள் இன்று தங்கள் சொந்த இடங்களில் தங்களுடைய வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதில் முழுமையான ஈடுபாட்டோடு உழைக்கின்றார்கள். இதை அந்தப் பகுதிகளில் அந்த மக்களோடு இணைந்து நிற்கும் ஒருவனாக நின்றுகொண்டு நேரிலே பார்க்கிறேன்.இந்த மக்களுக்கு மேலும் உதவிகள் தேவைப்படுகின்றன என்பது உண்மைதான்.அதை நாம் அரசாங்கத்திடம் எடுத்துக்கூறியிருக்கிறோம். அரசாங்கமும் இந்த மக்களின் விடயத்தில் கூடுதல் கவனமெடுத்துச் செயற்பட்டு வருகிறது.மீள்குடியேற்றம் நடந்த பகுதிகளின் மீள் கட்டுமானம் மற்றும் அபிவிருத்திப்பணிகளின் துரிதமாக்கத்தைச் செயற்படுத்துவதற்காக அமைச்சர்களும் அரச உயர் அதிகாரிகளும் அங்கே அடிக்கடி சென்று வருகின்றனர்.

இதைவிடப் படையினரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் பெரும் பங்களிப்øப் செய்து வருகின்றனர்.மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு பல இடங்களில் இருந்த படையினர் வெளியேறி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். சில இடங்களில் விரைவாக கண்ணிவெடிகளை அகற்றி தமது ஆதரவை மக்களுக்கு வழங்குகின்றனர்.வேறு சில இடங்களில் மக்களின் தொழில் வாய்ப்புக்கான தடைகளை நீக்குவதற்கு ஒத்துழைக்கின்றனர்.ஆகவே இதை நாம் கவனத்திற்கொண்டு பாதுகாப்புத் தரப்பை இங்கே பராட்டுகின்றோம்.

வடபகுதியில் யுத்தம் முடிந்த பின்னரான இந்த இரண்டாண்டுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை இந்த மன்றிலே தெரியப்படுத்த விரும்புகின்றேன்.முக்கியமாக அதிவிரைவாக அங்கே மின்சார விநியோக நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு நிறைவுக்குள் கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா ஆகிய மாவட்டங்களில் மின்விநியோகம் முழுமைப்படுத்தப்பட்டு விடும் எனத் திட்டத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதைப்போலவே நீண்டகாலமாகத் திருத்தப்படாதிருந்த ஏ 9 வீதியின் திருத்தப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன.அடுத்த முப்பது மாதங்களுக்குள் யாழ்ப்பாணம் வரையான ஏ 9 நெடுஞ்சாலையின் புனரமைப்பு முழுமையாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்துக்கும் பிற இடங்களுக்குமான போக்குவரத்தும் பிற தொடர்பாடல் வசதிகளும் இன்று மிகச் சுலபமாகவுள்ளன.

ஏ 32 வீதியின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் செல்வதற்கான நேரமும் தூரமும் மிகக் குறைந்துவிடும்.நேரத்தைச் சிக்கனப்படுத்தித் தூரத்தைக் குறைத்து செயற்பாட்டை விரைவாக்கி அதிகரிப்பது என்பது வளர்ச்சிக்கான அடிப்படையாகும்.

இந்த அடிப்படை விதியின் நோக்கிலேயே உலகத்தின் வளர்ச்சி நடைபெறுகிறது.நாம் உலக இயல்புக்கும் ஓட்டத்துக்கும் இயையா கவே சிந்திக்கிறோம்.இதைப்போல் போரின் போது இடிந்தழிந்து போன திணைக்களக்கட்டிடங்கள்,களஞ்சிய சாலைகள்,புகையிரத நிலையங்கள்.பாடசாலைகள் போன்றவை எல்லாம் விரைவாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

அமைதிக்கு எதிராகச் சிந்தித்துக் கொண்டும் அமைதிக்கு எதிராகப் பேசிக் கொண்டும் அமைதியைக் குலைக்கும் விதமாகச் செயற்பட்டுக் கொண்டும் இருப்போருக்கு நிச்சயம் அச்சுறுத்தலும் நெருக்கடியும் இருந்தே தீரும்.இது உலகப் பொது நியதியாகும். நாம் அமைதியையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்து அதை முழுமைப்படுத்துவதைப் பற்றி முதலில் சிந்திப்போம்.அதுவே அவசரகாலச் சட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படையாகும் என்று வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.

http://www.thinakkural.com/articles/2283-2011-04-11-03-54-02.html

  • கருத்துக்கள உறவுகள்

இயல்பு நிலைக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பின்னர் தீர்வு என்ற டக்ளஸின் கோஷம் அம்மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. பிரச்சினையின் அடிநாதம் என்னவென்று விளங்காமல் இவர்களெல்லாம் தமிழ் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிவது எங்கள் சாபம்!

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைப் பாதுகாப்பதிலும் மக்களுடைய உரிமைகளைப் பேணுவதிலும் யாருக்கும் வேறுபாடான கருத்துக்கள் இருக்க முடியும் என்று நான் கருதவில்லை. ஒரு சட்டமானது நாட்டின் நன்மைக்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவுமே உருவாக்கப்படுகிறது

இந்த அவசரக்காலச் சட்டம் இருக்கும் போது தானே 'இவ்வளவு தமிழ் மக்களும்' அழிக்கப் பட்டார்கள். இந்த அவசர காலச் சட்டங்கள் யாரைப் பாதுகாக்க என்பது எல்லோருக்கும் தெரியும்.அவசரகாலச் சட்டமும், ஊரடங்குச் சட்டங்களும் எப்போதும் எங்களை அழித்தொழிக்கவே பயன் படுத்தப்பட்டன. இதைத் தமிழரே நியாயப் படுத்துவது தான் வேடிக்கை.

'இவர்கள் என்றைக்குமே நாட்டில் 'இயல்பு நிலை' திரும்ப விடப் போவதில்லை.'இயல்பு நிலை' திரும்பினால் இவர்களுக்கு வேலையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.