Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை சற்றுமுன்னர் சமர்பிக்கபட்டுள்ளது

Featured Replies

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது ,நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை இறிதியாக இன்று சமர்பிக்க பட்டுள்ளது, இதில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர்

பான் கீ மூன் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார். மூவர் அடங்கிய இந்த நிபுணர்கள் குழுவினரின் விசாரணை அறிக்கை இன்றைய தினம் பான் கீ மூனிடம் இதை ஒப்படைத்துள்ளது எவ்வாறெனினும் இதன் ஒரு பிரதியை அவர் மகிந்த ராஜபக்‌ஷவுடன் தற்பொது பகிர்து கொண்டுள்ளார், இந்த அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்த மாட்டாது என சுட்டிக்காட்டப்படுகிறது.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1640:2011-04-12-19-29-35&catid=1:latest-news&Itemid=18

Edited by சிறிலிங்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்த கொலைகளை மூடி மறைக்க பார்க்கினம். இந்த அறிக்கையை பார்த்து, இரயபக்சாவின் புழுகல் பரிவாரங்கள் புதுசு புதுசாக கதை அளக்க கிழம்பிவிடுவினம். விட்டால், வேற்று கிரக வாசிகள் தான் ஒரு இலட்சம் தமிழரை கொன்றவை என்று இரயபக்ச சொல்லுவான்.

http://www.un.org/apps/news/story.asp?NewsID=38086&Cr=sri+lanka&Cr1=

12 April 2011 – The panel of experts set up to adviseSecretary-General Ban Ki-moon on accountability issues with respect to the conflict in Sri Lanka today delivered its report to the United Nations chief, who is sharing a copy with the Government prior to making it public.

The three-member panel was set up following the Joint Statement made by Mr. Ban and Sri Lankan President Mahinda Rajapaksa after the Secretary-General visited the South Asian nation shortly after the end of the conflict in May 2009.

During their meeting today at UN Headquarters in New York, Mr. Ban expressed his sincere appreciation to the members of the panel for having completed their assignment, and said he would study the report carefully and will determine his next steps in the coming days.

The panel was tasked with examining “the modalities, applicable international standards and comparative experience with regard to accountability processes,” taking into account the nature and scope of any alleged violations of international humanitarian and human rights law during the final stages of the conflict in Sri Lanka.

Government forces declared victory over the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 2009 after a conflict that had raged on and off for nearly three decades and killed thousands of people. The conflict ended with large numbers of Sri Lankans living as internally displaced persons (IDPs), especially in the north of the island country.

The members of the panel are: Marzuki Darusman of Indonesia (chair), Yasmin Sooka of South Africa and Steven Ratner of the United States. They began their work in September 2010.

இந்த அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்த மாட்டாது என சுட்டிக்காட்டப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்

இதனை பகிரங்கப்படுத்துவதற்கு என்ன செய்யப்போகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் குறற்ம் தொடர்பான ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கையின் பிரதி மரியாதையின் நிமித்தம் இலங்கை அரசுக்கும் வழங்கப்பட்டது

[Wednesday, 2011-04-13 03:47:19]

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை கூறவென ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு தனது அறிக்கையை நேற்றுக் கையளித்தது. அதன் ஒரு பிரதி கொழும்பு அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு மரியாதைக்காக அது இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டதாக ஐ.நா. பொதுச் செயலரின் அலுவலகம் தெரிவித்தது.

இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற போது மனித உரிமை மீறல்களும் அனைத்துலகச் சட்ட மீறல்களும் இடம்பெற்றன என்றும் போர்க் குற்றங்கள் புரியப்பட்டன என்றும் அனைத்துலக அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றன. இதனை அடுத்து, எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஐ.நா. பொதுச் செயலாளர், மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தார்.

கடந்த பல மாதங்களாக விசாரணைகளை நடத்தி சாட்சியங்களைப் பெற்ற இந்த நிபுணர் குழு, தனது அறிக்கையை நேற்று பொதுச் செயலாளரிடம் கையளித்தது. நீண்ட நாள்களாகத் தாமதிக்கப்பட்டு வந்த அறிக்கை நேற்று கையளிக்கப்பட்டது என்பதை பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்கான் ஹக் உறுதிப்படுத்தி அறிவித்தார்.

அறிக்கை உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதன் ஒரு பிரதி இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. "அறிக்கை பொதுப் பார்வைக்கு வெளியிடப்படுவதற்கு முன்னதாக, ஒரு மரியாதைக்காக அதன் ஒரு பிரதியை பொதுச் செயலர் இலங்கை அரசுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்'' என்றார் பேச்சாளர் பர்கான். அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பான் கீ மூன், அது தொடர்பில் பணியாற்றிய மூன்று நிபுணர்களுக்கும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார். நிபுணர் குழுவின் அறிக்கையை கவனமாகப் படித்த பின்னர் அது தொடர்பில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அடுத்து வரும் நாள்களில் ஐ.நா. பொதுச்செயலர் முடிவு செய்வார் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுமா என்று ஐ.நா. பேச்சாளரிடம் கேட்ட போது, இலங்கை அரசுடன் அதனைப் பகிர்ந்துகொள்வது தவிர வேறு எந்த முடிவும் உடனடியாக எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதேவேளை, இலங்கை போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டாலும் அது உடனடியாக வெளிப்படுத்தப்பட மாட்டாது; அல்லது ஒருபோதும்

வெளிப்படுத்தப்படாமலேயே போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு இன்னர் சிற்றி பிரஸ் இணையத்தளம் நேற்றுமுன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.

seithy.com

ஒருபோதும்

வெளிப்படுத்தப்படாமலேயே போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு இன்னர் சிற்றி பிரஸ் இணையத்தளம் நேற்றுமுன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் ஒரு பிரதியை அவர் மகிந்த ராஜபக்‌ஷவுடன் தற்பொது பகிர்து கொண்டுள்ளார், இந்த அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்த மாட்டாது என சுட்டிக்காட்டப்படுகிறது.

யாரவது மருத்துவ ஆராச்சியில் அனுபவம் உள்ளவர்கள், பான் கி மூனின் மூளை 'ஏன் எங்கள் விடயத்தில் மட்டும் இப்படிச் செயல் படுகின்றது?' என விளக்குவீர்களா"?

DNA பற்றிய அடிப்படை அறிவு என்னிடம் உண்டு. இவரது மூளையில் ஒன்று அல்லது இரண்டு மரபணுக்கள் இடம் மாறியுள்ளதோ தெரியாது.

' கோழியைக் கேட்டு ஆராவது குழம்பு வைப்பார்களா?'

  • கருத்துக்கள உறவுகள்

' கோழியைக் கேட்டு ஆராவது குழம்பு வைப்பார்களா?'

இங்குதான் நாம் நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு காரணமானவர்களை இனம் காணவேண்டும்.

கொலை செய்தவனிடமே கொலை செய்யச்சொன்னவன் ஆதாரங்களைக்கொடுப்பதுதானே முறை.

அதேநேரம்

மேலை நாடுகளில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் குற்றப்பத்திரிகையைக்கொடுத்து அதை ஏற்காதவிடத்து

அதற்கான ஆதாரங்களுடன் வருமாறு தெரிவிப்பதும் இங்குள்ள வழமை.

பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது மருத்துவ ஆராச்சியில் அனுபவம் உள்ளவர்கள், பான் கி மூனின் மூளை 'ஏன் எங்கள் விடயத்தில் மட்டும் இப்படிச் செயல் படுகின்றது?' என விளக்குவீர்களா"?

DNA பற்றிய அடிப்படை அறிவு என்னிடம் உண்டு. இவரது மூளையில் ஒன்று அல்லது இரண்டு மரபணுக்கள் இடம் மாறியுள்ளதோ தெரியாது.

' கோழியைக் கேட்டு ஆராவது குழம்பு வைப்பார்களா?'

புங்கையூரான்,

நடேசன் அண்ணா, புலித்தேவன் அண்ணா, சகோதரி இசைப்பிரியா போன்றவர்களின் கொலைகளைப் பார்த்த பின்பும்.....

எம்மிடையே உள்ள ஒற்றுமை இன்மையை ஐ.நா.வும் சிங்களமும் நன்றாகப் பயன்படுத்துகின்றது.

நாம் திருந்தாதவரை எதிரிக்கு கொண்டாட்டம் தான். எம்மவர்கள் இனியாவது மாறி, மாறி சேறடிப்பதை விட்டு இந்த விஷயத்திலாவது ஒருமித்த குரலை கொடுக்க முன்வரவேண்டும். செய்வார்களா....

இனியும் திருந்தாவிடில் அடுத்த ஆண்டுகளில், ஈழக் கொலைகளை உலகம் மறந்துவிடும்.

ஆறின கஞ்சி, பழங்கஞ்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.