Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்காக ஏப்.25-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காக ஏப்.25-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ

சென்னை, ஏப்.20,2011

இலங்கைப் போர்க்குற்றங்களை விசாரித்து, அந்நாட்டு அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்றிட வலியுறுத்தவும், ஈழத் தமிழர்களுக்கு வலுவான ஆதரவை உலகுக்கு காட்டவும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வரும் 25-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள கொலைக் காரப்பாவி மகிந்த ராஜபக்ஷே அரசு போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று 2010 ஜனவரியில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் தீர்ப்பாயம் அறிவித்த பின்னணியில் ஈழத் தமிழ் இனத்தின் அவலம் மிக்க ஓலக்குரல் ஐ.நா.வின் மனசாட்சி கதவை ஓங்கித் தட்டியதால் அதன் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் இலங்கைத் தீவில் நடந்ததை விசாரிக்க மூவர் குழுவினை நியமித்தார்.

அனைத்து நாடுகளுடைய நிர்பந்தத்தால் மூவர் குழு இலங்கையை விசாரிக்க முடிந்தது. தமிழர்களின் கண்ணீர் பிரதேசத்தில் அக் குழுவினர் சரியான ஆய்வு நடத்த இயலவில்லை. இருப்பினும் தற்போது ஐ.நா.வின் பொதுச் செயலாளரிடம் அக் குழு அறிக்கை தந்துள்ளது.

அந்த அறிக்கையின் படி அனைத்துலக மனித நேயச் சட்டத்தையும், மனித உரிமைச் சட்டத்தையும் அப்பட்டமாக மீறியவாறு லட்சக்கணக்கான தமிழ் மக்களை சிங்கள ராணுவம் கொலை செய்திருக்கிறது. பத்திரிகை, ஊடகங்களின் குரல்வளையை நெறித்துள்ளது.

வெள்ளை வேன்கள் எனும் 'எமன்'களை அனுப்பி எண்ணற்றோரை இருக்கும் சுவடு தெரியாமல் ஆக்கியுள்ளது. தாக்குதல் நடை பெறாத பாதுகாப்பு வளையங்கள் என அறிவித்த அந்த இடங்களுக்குள் உயிர்பிழைக்க தஞ்சம் புகுந்த 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களில் பெருமளவு தமிழ் மக்கள் சாக சிங்கள அரசு இன வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்க அலுவலகம் உணவு விநியோகிக்கும் இடங்கள் அனைத்தும் குண்டு வீச்சுக்கு இலக்காயின. மருத்துவமனைகள் இருக்கும் இடங்கள் எனத் தெரிந்து கொண்டே அவற்றின் மீது இடைவிடாத குண்டு வீச்சை வான்வெளித் தாக்குதலை இலங்கை விமானப்படை செய்துள்ளது.

2011 ஜனவரி-மே மாதத்துக்குள் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டனர். சித்திர வதை முகாம்களில் தமிழ் மக்களை அடைத்து குறிப்பாக இளைஞர்களைப் படுகொலை செய்ததோடு தமிழ் இளம் பெண்களை கற்பழித்துக்கொன்ற கொடுமைகளையும் செய்தது.

அரசுக்கு எதிரான ஊடகவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் படுகொலை செய்யப்பட்டனர். ராஜபக்ஷே அரசின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா.பொதுச் செயலாளர் தக்க விசாரணை நடத்த வேண்டுமென்று குழு பரிந்துரை செய்துள்ளது.

2006-ஆம் ஆண்டிலேயே சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து நாடுகள் சிங்கள அரசுக்கு எதிராக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அதனை வரிந்து கட்டிக் கொண்டு இந்திய அரசு தோற்கடித்தது.

தமிழ் இனப்படுகொலை நடத்திட சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் செய்த காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் மத்திய அரசு 2009 தொடக்கத்தில் அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரமுயன்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்தது இந்திய அரசு தான்.

கூண்டில் சிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளியான ராஜபக்ஷேவை திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வந்து வரவேற்றுக் கொண்டாடிய இந்திய அரசு இன்னமும் இலங்கை அரசை ஆதரிக்கின்ற வேலையில் ஈடுபடுமானால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு இந்தியாவும் பகிரங்கப் பங்காளி எனும் குற்றச்சாட்டுக்கு மேலும் ஆளாகும்.

இலங்கை அரசுடன் ஆன ராஜிய உறவுகளை இந்திய அரசு முறித்துக் கொள்ள வேண்டும். ஐ.நா. மன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் இலங் கைக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும். ஐ.நா. அறிக்கைக்கு எதிராக இலங்கையில் ராஜபக்ஷே ஆள் திரட்டுகிறார். பேரணி என்று சவால்விடுகிறார்.

உலக நாடுகளின் கவனம் ஈழத் தமிழரின் அவலம் குறித்து திரும்பி இருக்கும் இந்த வேளையில் ஈழத் தமிழன் நாதியற்றுப் போய் விடவில்லை என்று அனைத்துலகிற்கும் அறிவிக்கும் வகையில் தாய்த் தமிழகத்து தமிழர்கள் ஆர்த்தெழ வேண்டியது தலையாய கடமையாகும்.

சிங்கள அரசைக் கூண்டில் ஏற்றவும், போர்க்குற்றங்களை விசாரித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்றிட வலியுறுத்தவும், ஈழத் தமிழர்களுக்கு வலுவான ஆதரவை உலகுக்கு காட்டவும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஏப்ரல் 25 (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பழ.நெடுமாறனும், நானும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முன்னணியினரும் பங்கேற்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கழக கண்மணிகளையும் தமிழ் பெருமக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

http://new.vikatan.com/news.php?nid=1724

இதுக்கு தமிழக வாசகர்கள் விகடனில் போட்ட பின்னூட்டல்களையும் போட்டால்தான் நிறைவும் பெறும்; பல கனவும் வெளிப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனப்படுகொலையை சர்வதேச அமைப்பான ஐநா தெளிவாக இனங்காட்டி சிறீலங்கா சிங்கள அரசை போர் குற்றவாளி விசாரணைக்கு உட்படுத்த கோரி உள்ள நிலையிலும்..

வை.கோ.. சீமான்.. நெடுமாறன் தவிர வேறு எவரும்.. இந்திய மத்திய அரசிடம்.. இந்தப் போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தவும்.. தமிழக மக்களுக்கு இவற்றை சொல்லவும் முனையவில்லை.

ஈழத்தமிழருக்காக 3 மணித்தியாலம் உண்ணா நோன்பிருந்து யுத்த நிறுத்தம் செய்த ஒருவரின் மூஞ்சிலும் ஐநா கரியை பூசியுள்ளது. பாவம் அவரின் முகம் ஏலவே பல கரிகளின் படைகளை கொண்டிருப்பதால் அவர் கரிநாய்நிதி என்று அழைக்கப் பெறுகிறார். இருந்தும் அந்த மனிதர் இன்னும் மெளனமே காக்கிறார். ஒருவேளை அவர் அனைத்துப் புலன்களையும் செயலிழக்கச் செய்துவிட்டு இருக்கிறாரோ என்னவோ..??! இவர் உலகத் தமிழினத் தலைவர்.

போர் என்றால் இழப்புக்கள் வரும் தான் என்ற பெரும் தத்துவத்தை சொன்ன செல்வி கொடநாட்டில் சசிகலாவோடு தீவிர பொழுதுபோக்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கும் இவற்றிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் அவர் 9 கோடி தமிழர்களை ஆளப் போகும் தலைவி..???!

தீக்குளிக்கும் உறவுகளை வைச்சு அரசியல் செய்யும் திருமாவளவன்.. இது பற்றி ஏன் வை.கோ அவர்களுடன் சேர்ந்து இயங்கக் கூடாது. இங்கும் திமுக கூட்டணி ஆதரவு அரசியலா..??!

டாக்டர் ராமதாஸ் வாக்குப் பெட்டிகளை கட்டிக் கொண்டு கிடக்கிறார். எத்தனை தொகுதிகள் வரும். அடுத்த முறை என்ன பேரம் பேசலாம். அது உங்கள் உள்ளூர் அரசியல். ஐயா நீங்கள் உச்சரிக்கும் ஈழத்தமிழன்.. ஒரு வேதனையில் கிடந்து துடிக்கிறான் இப்பவாவது அனைத்துக் கட்சிகளையும் கூட்டி ஐநா தீர்மானத்தை ஒட்டி ஈழத்தமிழர்களுக்கு என்று நீதி கேட்கவும் கூடாதா..??! தலைவருக்கு நேரம் அமையவில்லை போலும்.

மீனவர் சாவுக்கு சொந்தக் கட்சி ஆட்சியில் இருக்க ஆர்ப்பாட்டம் செய்யும் வினோதம் நடத்தும்.. தங்கபாலு ஐயா. நீவிர்.. நினைத்தது போல ஈழத்தமிழன் அழிந்து ஒழிந்துவிட்டான். அவர்களை ஒழித்ததற்கு நன்றி சொல்லி சிங்கள அரசுக்காக ஒரு நன்றி தெரிவிப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அன்னை சோனியா தலைமையில் நடத்தினால் என்ன..???! நன்றிக்கடன் மறப்பது நன்றன்று. ராஜபக்ச இதனை உங்களிடம் மிகவும் எதிர்பார்க்கிறார் ஐயா.

இன்றைய நிலையில் ஐநா அறிக்கை சிறீலங்கா சிங்கள அரசு மீது மட்டும் போர் குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை. அன்னை சோனியா வெறுக்கும் புலிகள் மீதும் செய்ய செய்துள்ளது. அதற்கு இந்தியாவை கொண்டு சட்டலைட் படம் எடுத்து செத்துப் போன புலிகளை பிடிச்சு வைச்சு.. விசாரணைக்கு.. உதவக் கோரலாமே.. ஐயா சுப்பிரமணிய சுவாமி. ஏய்யா சும்மா கிடக்கிறே..! உன் சட்ட அறிவை பயன்படுத்தி புலிகளை செத்துப் போன ஈழத்தமிழர்களை உயிர்ப்பிக்கலாமே. ராஜபக்சவை காப்பாற்றலாமே..??!

இடதுசாரி பெரியவர்களே.. சிவப்புத் துண்டை தோழில் போடும் தோழர்களே.. ஈழத்தமிழர் செங்குருதி தோய்ந்து கிடக்கும் நிலத்தில் சிவப்பு கொடி ரஷ்சியா செய்து கொடுத்து ஏவிய குண்டுகளின் கந்தக வாசமே அதிகம். கேளுங்கள்.. ஐயா உங்களின் லெனிடமும்.. மாக்ஸிடமும்.. சிவப்புக் கொடியை தேர்வு செய்ததே ஈழத்தமிழரின் குருதியால் பட்டை தீட்டவா என்று...! ஆம் என்றால்... எங்கள் தலைவிதி அது என்று செத்துப் போகிறோம்..!

செல்கள் விழுந்த போது கதறி அழுத திரையுலக.. மற்றும் பிரமுகர்களே.. இப்போது செத்துப் போன உங்கள் உறவுகளின் அஸ்தி கரைக்கும் நேரம். இப்பவாவது கொலையாளியை தண்டிக்க உலகத்தை நோக்கி முழக்கமிடமாட்டீர்களா...??!

-------------------

வை.கோவின் முயற்சி பாராட்டத்தக்கது. இருந்தாலும் இது விடயத்தில் அனைத்துக் கட்சிகளையும் திரையுலகம் மற்றும் பிரமுகர்களையும் கூட்டி ஆராய்ந்து ஒரு பலமிக்க உலகம் உற்றுநோக்கக் கூடிய ஒரு போராட்டத்தை நடத்துவதே மக்கள் ஆதரவை ஈழத்தமிழர் மீதான போர் குற்றவிசாரணையில் குவிப்பதே.. உள்ளூரிலும்.. உலக அரங்கிலும் அவை கவனத்தைப் பெறும். இப்போது உடனடிச் சாத்தியம் இல்லாவிட்டாலும் செய்வீர்கள் என்று நம்புகின்றோம். அண்ணன் சீமானும் இவை தொடர்பில் வை.கோவின் முயற்சிகளுக்கு உதவி நிற்பதும் கூட ஒத்துழைப்பதும்.. நாம் தமிழர்களாய் நிற்கிறோம்.. என்று உலகிற்கு.. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு காட்ட உதவும். அது ஐநா வரை செல்வாக்குச் செய்யலாம்.

1 கோடி சிங்ளவன்.. 9 கோடி தமிழனை அடிச்சு நொருக்கி அடிமைப்படுத்திறான் அச்சுறுத்திறான் என்றால்.. அதற்கு காரணம்.. சிங்களவனின் திறமையல்ல. தமிழனின் அறியாமை.. ஒற்றுமை இன்மையே ஆகும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோவின் முயற்சி பாராட்டத்தக்கது. இருந்தாலும் இது விடயத்தில் அனைத்துக் கட்சிகளையும் திரையுலகம் மற்றும் பிரமுகர்களையும் கூட்டி ஆராய்ந்து ஒரு பலமிக்க உலகம் உற்றுநோக்கக் கூடிய ஒரு போராட்டத்தை நடத்துவதே மக்கள் ஆதரவை ஈழத்தமிழர் மீதான போர் குற்றவிசாரணையில் குவிப்பதே.. உள்ளூரிலும்.. உலக அரங்கிலும் அவை கவனத்தைப் பெறும். இப்போது உடனடிச் சாத்தியம் இல்லாவிட்டாலும் செய்வீர்கள் என்று நம்புகின்றோம். அண்ணன் சீமானும் இவை தொடர்பில் வை.கோவின் முயற்சிகளுக்கு உதவி நிற்பதும் கூட ஒத்துழைப்பதும்.. நாம் தமிழர்களாய் நிற்கிறோம்.. என்று உலகிற்கு.. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு காட்ட உதவும். அது ஐநா வரை செல்வாக்குச் செய்யலாம்.

1 கோடி சிங்ளவன்.. 9 கோடி தமிழனை அடிச்சு நொருக்கி அடிமைப்படுத்திறான் அச்சுறுத்திறான் என்றால்.. அதற்கு காரணம்.. சிங்களவனின் திறமையல்ல. தமிழனின் அறியாமை.. ஒற்றுமை இன்மையே ஆகும்..!

நெடுக்குக்கு நிகர் நெடுக்கேதான்!!! சரியாகச் சொல்லியுள்ளீர்கள்!!!

Edited by Punkayooran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.