Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா அறிக்கை 2011

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

PDF file Inner City Press

scanned copy of the report, 216 pages including the exhibits, and as a public service puts it online here.

http://bit.ly/exX5vI

Edited by Muhil

இன்னும் ஐ.நா. வால் முழுமையாக வெளியிடப்படவில்லை என்கிறது இந்த செய்தி தளம்.

With the UN still not having released its Panel of Experts report on war crimes in Sri Lanka, Inner City Press on Monday morning in the UN's North Lawn building obtained from two separate sources identical scanned copies of the report, 216 pages including the exhibits, and as a public service puts one online here.

http://www.innercitypress.com/srirep4lanka042511.html

ஐநா அறிக்கை 2011

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை 2011

www.ibctamil.fm

http://www.ibctamil.fm/unreport.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா அறிக்கை 5011

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை 5011 :(

ஐ.நா.வின் முழுமையான அறிக்கை ( Expires: May 25, 2011 12:55 PST)

மொத்தம் 38.6 MB

மே 25, 2011 வரையே இந்த தளத்தில் கிடைக்கும்

https://www.yousendit.com/dl?phi_action=app/orchestrateDownload&rurl=https%253A%252F%252Fwww.yousendit.com%252Ftransfer.php%253Faction%253Dbatch_download%2526batch_id%253DVnBwWWVzckl1Yk0wTVE9PQ

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. அறிக்கை முழுமையாக வெளிவந்தது! (முழுமையானது இணைப்பு)

Posted by admin On April 26th, 2011 at 7:21 am

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது.

இலங்கையில் இறுதிப் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.

196 பக்கங்களை உள்ளடக்கிய அந்த அறிக்கையின் எந்தப் பாகமும் தணிக்கைக்கு உட்படாமல் வெளிவந்துள்ள இவ்வறிக்கையே யுத்தக் குற்ற விசாரணை ஒரு உள்ளக விசாரணையாக நடைபெறுமா அல்லது வேறு அலகுகளுடன் இணைந்த ஒரு விசாரணையாக இடம்பெறுமா என்பதை முடிவு செய்ய சிறீலங்காவிற்கும் சர்வதேசத்திற்கும் உதவும்.

இந்த அறிக்கை இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் யுத்தக் குற்றங்கள் என அறியப்பட்டவற்றை அப்படமாகப் பட்டியலிடுகிறது.

அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்

http://www.saritham.com/?p=18099

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா நிபுணர்களின் அறிக்கை 11 நாட்களுக்குப் பின்னர் 216 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது

26 ஏப்ரல் 2011

விஜய் நம்பியார் வெள்ளைக் கொடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து 171- 172 ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது:-

ஐநா நிபுணர்களின் அறிக்கை 11 நாட்களுக்குப் பின்னர் 216 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது

வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்காகவும், பரந்த பொது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டும் ஐநா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் ஐநாவுக்கான உதவி நிரந்தரப் பிரதிநிதி சர்வேந்திர சில்வாவிடம் 36 மணித்தியாலங்களுள் வெளியிடுவதாகச் சொன்ன ஐநா நிபுணர்களின் அறிக்கையை 11 நாட்களுக்குப் பின்னர் நேற்று ஐநா வெளியிட்டுள்ளது.

216 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை ஐநா செயலாளர் நாயகத்தின் ஒன்றரைப்பக்க முகப்பக் குறிப்புடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

இலங்கையில் பல தசாப்தகாலமாக இடம் பெற்றுவந்த ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்ற விடயங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென் ஐநா செயலாளர் நாயகம் பான் கீனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கை ஏப்ரல் 12, 2011 அன்று பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்காகவும், பரந்த பொது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டும் ஐநா இப்போது அந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்துகிறது.

ஏப்ரல் 12 அன்று இந்த அறி;க்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்திற்கும் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையுடன் இலங்கை அரசாங்கத்தின் பதிலையும் சேர்த்து வெளியிடப் பான் கீ மூன் விரும்பினார். அதற்காக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இது வெளியிடப்படுவது பிற் போடப்பட்டு வந்தது. இறுதியாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும் பான் கீ மூனினால் அவனாசம் வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எத்தகைய பதில்களும் வழங்கப்படவில்லை.

இலங்கையின் இறுதிப் போரில் இடம் பெற்ற விடயங்கள் குறித்து எவ்வாறு கடப்பாட்டையும் பொறுப்புணர்வையும் பேணுவது என்பது குறித்து தான் நியமித்த ஆலோசனைக்குழுவினர் தமது ஆலோசனைகளை வழங்கியமையிட்டு அவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார் பான் கீ மூன்.

சர்வதேச மனிதாபிமான மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் என இரு தரப்பும் மீறியமையையும,; அவற்றில் சில போர்க்குற்றங்களாகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளாகவும் கொள்ளளப்படத்தக்க நிலையிலும் போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து நிபணர் குழு முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் செயலாளர் நாயகம் மிகவும் அவதானமாகப் பரிசீலனை செய்தார்.

ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான குற்றச்சாட்டுக்கள் குறித்து தனது கடப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் இலங்கை ஒரு உண்மையான விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். இதனோடு குறுகிய கால மற்றும் நீண்டகாலப் பரிந்துரைகளையும் நிபுணர் குழு முன் வைத்திருக்கிறது. இவை இப்போது இலங்கை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாகப் பதிலளிக்கும் என்று அவர் நம்புகிறார்.

இந்தப் பரிந்துரைகளின்படி அவர் ஒரு சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட நாட்டின் ஏற்புடன் அல்லது ஐநா உறுப்பு நாடுகளின் தீர்மானத்துடன் பொருத்தமான முறைமை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் எனவும் பான் கீ முன் கருதுகிறார் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அறிக்கையின் முழு வடிவத்தையும் பெற:

http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

விஜய் நம்பியார் வெள்ளைக் கொடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து 171- 172 ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது:-

ஐநா இன்னமும் வெளியிடாத இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நிபுணர் குழுவின் 216 பக்க அறிக்கையின் ஸ்கான் செய்யப்பட்ட பிரதிகள் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இரண்டு தரப்புக்களிடமிருந்து தமக்கு அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த இன்னர் சிற்றி பிரஸ் இதன் பிரதிகள் இரு வேறு இணையத் தளங்களில் வெளியாகி இருந்ததாகவும் அதனை நீக்குமாறு கேட்டக் கொள்ளப்பட்டதன் பேரின் ஒரு இணையத்தளம் அதனை நீக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நேற்று மதியம் நடைபெற்ற ஐநாவின் செய்தியாளர் மாநாட்டில் அதன் பேச்சாளர் மாட்டின் நேர்ஸ்கி இன்று அவ்வறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

முதலில் இலங்கை அரசாங்கத்திடம் அறிக்கையைக் கையளித்த ஐநா இலங்கை அது குறித்துப் பதிலளிப்பதற்கு 36 மணித்தியாலங்களை வழங்கியது. ஆனால் தற்போது ஒரு வாரத்திற்கு மேலாகிறது. ஆனால் இதேவேளை இந்த அறிக்கையின் சில பகுதிகள் இலங்கை அரசுக்கு ஆதரவான ஐலண்ட் பத்திரிகையில் கசியவிடப்பட்டிருந்தன. இந்த நிலைமை உள்ளூர் அரசியல்வாதிகளாலும் ரஷ்யா போன்ற நாடுகளாலும் அறிக்கையை வெளியிடாதிருக்க ஐநாவுக்கு அழுத்தம் கொடுக்கவும் அது தோடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

ஏன் ஐநாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிக்கையை வெளியிடுவதை காரணம் ஏதுமின்றி ஒரு வாரத்திற்கும் மேலாகத் தாமதித்து வருகிறார் என்பது புலப்படாமல் இருக்கிறது. பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் வெள்ளைக் கொடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து 171- 172 ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்டிருப்பதன் காரணமாகத் தான் அறிக்கை வெளியிடப்படுவது தாமதிக்கப்படுகிறது என்று வேறு சில வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

வெள்ளைக் கொடி விவகாரத்துடன் சம்பந்தப்பட்டிருந்த தூதுவரான பாலித கோகண கடந்த பெப்ரவரியில் ஐநா நிபுணர் குழுவுக்கும் இலங்கையின் சட்டமாஅதிபர் மொஹான் பீரிஸ}க்குமிடையேயான சந்திப்பை ஒழுங்கு படுத்தி இருந்தார். அவுஸ்ரேலியப் பிரஜையான அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின் 9வது பக்கம் விடுபட்டுள்ளதையும் இன்னர் சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வறிக்கையின் ஸ்கான் செய்யப்பட்ட பிரதிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.z9web.com/Panel1SriRep.pdf

gtn

வெளிவந்து விட்டது ... ஆனால் ... குப்பைத்தொட்டிக்குள் போகும் சந்தர்ப்பம்தான் கூட உள்ளதாக சொல்கிறார்கள் .... அது மேற்குலக நாடுகள் சிலதினதும் குறிப்பாக நாம் வாழும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கைகளில் உள்ளது, அவர்கள் இது தொடர்பாக கொடுக்கப்போகும் அழுத்தங்களில்தான் தங்கியுள்ளது .... அந்த அழுத்தங்களை கொடுக்க தூண்டுவதற்கு புலம்பெயர் தமிழ்த்தேசிய(??????????????) அமைப்புகள் என செய்யப்போகின்றன???? எவ்வாறு ஒரு பொதுத்திட்டம் அமைத்து செயற்படப் போகின்றார்கள்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.