Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரத்தின் நிழல் - இலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் நான்கு ஆவணப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரத்தின் நிழல் - இலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் நான்கு ஆவணப்படம் -

28 ஏப்ரல் 2011

மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்களில் அரசியல் கலாச்சார விஷயங்களில் அதிகமும் ஈடுபாடுள்ளவர்கள் இங்கிலாந்தின் சேனல் நான்கு, பிரான்சின் ஆர்த்தே, இங்கிலாந்தன் பிபிசி நான்கு, கத்தார் நாட்டின் அல்ஜஜீரா போன்ற தொலைக்காட்சி வரிசைகளைத் தொடர்ந்து அவதானித்து வருவார்கள்.

காத்திரமான அரசியல் விவாதங்களை மட்டுமல்ல, கலை இலக்கிய தத்துவ விவாதங்களையும்; கூட இந்தத் தொலைக்காட்சிச் சேனல்களில் நாம் கண்ணுறலாம்.

சேனல் நான்கின் அறிவிப்பாளரான ஜோன் ஸ்நோவை ஓரளவு காத்திரமான நிகழ்வகளைத் தொடர்பவர்கள் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். சேனல் நான்கு தொலைக்காட்சிக்காக ஐடிஎன் நிறுவனம் தயாரித்தளிக்கும் விவரணப்படங்கள் இன்றும் வரலாற்று ஆவணங்களாகவே திகழ்கின்றன.

சே குவேராவின் மரணம், வியட்நாம் யுத்தம் போன்றவற்றை நேரில் சென்று ஆவணப்படமாக எடுத்து வோர்ல்ட் இன் ஆக்ஸன் எனும் வரிசையில் வெளியிட்ட நிறுவனம் ஐடிஎன். இந்த ஐடிஎன் நிறுவனம் இலங்கை அரசின் போரக்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் ஒரு விவரணப்படத்தை உருவாக்கியிருக்கிறது.

சேனல் நான்கின் இவ்வாறான செய்தி ஆவணங்கள் அதனது செய்தியின் பகுதியாக ஏழு மணியிலிருந்து எட்டுமணி வரை ஒளிபரப்பப்படுவதுதுதான் வழமையாக இருக்கிறது.

இலங்கை குறித்த ஆவணப்படமானது அதனது குரூரத்தன்மை, பயங்கரம் போன்ற காரணங்களால் மே மாத நாளொன்றின் நள்ளிரவில் ஒளிபரப்பப்படும் என கார்டியன் பத்திரிக்கை ஒரு கட்டுரையில் தெரிவித்திருக்கிறது.

ஈழத் தமிழ் வெகுமக்கள் எரிக்கப்பட்டமை, மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளாகியமை, உயிரோடு பிடிபட்ட போராளிகள் சுட்டுக் கொல்லப்படுவது, உயிரிழந்த பெண் போராளிகள் இலங்கைப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது போன்ற காட்சிகளைக் கொண்டதால் இந்த விவரணப்படம் நள்ளிரவில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக சேனல் நான்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேனல் நான்கின் தொலைக்காட்சி வரலாற்;றில் இவ்வளவு குரூரமான ஆவணப்படம் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை எனவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். ஆனால் இவ்வாறுதான் இந்தக் கொடுமை நடந்துது என உலகுக்கு அறிவிக்க வேண்டிய தேவை இருப்பதால் இதனை அவ்வாறே வெளியிட முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கிறிஸ் ஷா இயக்கியிருக்கும் இந்த விவரணப்படத்தை கெரத் வில்லியம்ஸ் தொகுத்திருக்கிறார்.

விவரணப்படம் வெளியிடும் திகதியும் நேரமும் சேனல் நான்கு தளத்தினை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் அறியலாம். இந்த ஆவணப்படத்தினையொட்டிய செய்திப் தொகுப்பை ஜோன் ஸ்நோ வழங்குகிறார்.

ஜோன் ஸ்நோ குர்திஸ் விடுதலைக்காக வெளிப்படையாகக் குரல் கொடுத்த ஊடகவியலாளர் என்பது இங்கு குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டத்தக்கது.

இது ஒரு குளோபல் தமிழ்ச் செய்திகளின் தயாரிப்பு:-

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: வருகிற மாதம் முற்பகுதியில் இந்த ஆவணப்படம் வெளிவரவிருப்பதாகத் தகவல். இதுவரை வெளிவராத மிகவும் கொடூரமான சாட்சியங்களைக் கொண்டுள்ளதென்றும், தேவையானளவு எச்சரிக்கை விடுக்கப்படுவதுடன், சிறுவர் தூங்கியபின்னர் பெரியோர் பார்ப்பதெற்கென்று நள்ளிரவுக்குப் பின்னரே இது ஒளிபரப்பப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தடுத்து நிறுத்த சிங்களம் தன்னால் முடிந்ததைச் செய்ய முயலக்கூடும். ஆனால் வெற்றிபெறுமா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆவணப் படம் வெளியிடப் படுவதற்கு எம்மாலான சகல முயற்சிகளையும் செய்வோம்!

இது உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புமாயின் இதுவே சிங்களத்தின் 'முள்ளிவாய்க்கால்' ஆக அமைந்து விடும் என்பதில் ஐயமில்லை!!!

அது உருவாக்கும் அலையில், இந்தியா, பான் கி மூன், நம்பியார், ராஜபக்ச எல்லோருமே அடித்துச் செல்லப்படக் கூடும்!!!

இது வெளி வராமல் தடுக்கச் சிங்களம் உயிரையும் கொடுக்கும்!

எனது பிரார்த்தனையே, இலங்கைத் தமிழர்கள் இதைத் தடுத்து நிறுத்தி விடக் கூடாது என்பதே!!!

  • கருத்துக்கள உறவுகள்

:( புங்கையூரான்,

கொல்லப்பட்டதோ யாழ்ப்பாணத்து தமிழர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள். அப்படியிருக்க யாழ்ப்பாணத்துத் தமிழர்களே இந்த விசாரணைக்கெதிராக ஆர்ப்பாடம் நடத்துகிறார்களென்றால் அதை அப்படியே நம்புவதற்கு சர்வதேசமோ அல்லது ஐ.நா வோ முட்டாள்கள் அல்ல.

நிச்சயம் வற்புறுத்தப்பட்டே இது நடைபெறும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

கொழும்பில் பேரூந்துகளில் தமிழர்களைக் கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்குகிறார்களாம். இதுபற்றி தமிழ் எம். பி ஒருவர் முறைப்பாடும் செய்திருக்கிறார். ஆகவே இது சிங்களத்துக்கு இலகுவானதாக இருக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:( புங்கையூரான்,

கொல்லப்பட்டதோ யாழ்ப்பாணத்து தமிழர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள். அப்படியிருக்க யாழ்ப்பாணத்துத் தமிழர்களே இந்த விசாரணைக்கெதிராக ஆர்ப்பாடம் நடத்துகிறார்களென்றால் அதை அப்படியே நம்புவதற்கு சர்வதேசமோ அல்லது ஐ.நா வோ முட்டாள்கள் அல்ல.

நிச்சயம் வற்புறுத்தப்பட்டே இது நடைபெறும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

கொழும்பில் பேரூந்துகளில் தமிழர்களைக் கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்குகிறார்களாம். இதுபற்றி தமிழ் எம். பி ஒருவர் முறைப்பாடும் செய்திருக்கிறார். ஆகவே இது சிங்களத்துக்கு இலகுவானதாக இருக்கப்போவதில்லை.

நன்றிகள் ரகுநாதன்.

நான் கருத்தில் கொண்டது எங்கள் 'புலத்திலுள்ள சில புத்திஜீவிகளை'

இலங்கைத் தமிழர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அவர்கள் ஆயுதங்களால் ஆளப் படுபவர்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கொல்லப்படும் போது வாளவிருந்த அனைவருக்கும் chanal 4 நிகழ்ச்சிகள் வாளாய் இருக்கும்.உலகத்தின் மனச்சாட்சியை அது உலுப்பும்.தமிழர்களுக்கான விடிவு வெகு தூரத்தில் இல்லை என்பதை அது பறை சாற்றும். அவர்கள் செய்யும் அளவு கூட நம்மவர்கள் செய்யாமல் தங்களுக்குள் அடிபடுவது வேதனையாய் இருக்கிறது.தயவு செய்து எல்லோரும் ஒற்றமையாய் செயற்படுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.