Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இலங்கை மந்திரி திமிர் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிப்பு: ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இலங்கை மந்திரி திமிர் பேச்சு

இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழு அங்கு போர் குற்றம் நடந்ததாகவும், 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் தனது அறிக்கையில் கூறி உள்ளது.

இதனால் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதிகள் சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் ஐ.நா. குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இந்த அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம் என்றும் இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஐ.நா. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். இது சட்டவிரோதமானது. விசாரணை செய்ய அவருக்கு அனுமதி வழங்கியவர் யார்? இலங்கையில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துமாறு அதிகாரப்பூர்வமாக கோரியவர் யார்? இலங்கை ஜனாதிபதியோ, மக்களோ, வேறு நிறுவனங்களோ விசாரணை நடத்துமாறு கோரவில்லை.

தன்னிச்சையாக நடவடிக்கையை எடுப்பதற்கு பான் கீ மூனுக்கு உரிமை இல்லை. இது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். ஐ.நா. நிபுணர் குழு என்று இதனைப் பலர் குறிப்பிடுகின்றனர். இது நிபுணர் குழுவல்ல. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு. பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு ஆரம்பம் முதலே அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

இந்த குழுவுடன் நாம் எந்தவொரு நடவடிக்கையையும் ஒரு போதும் மேற்கொள்ள வில்லை. இவர்கள் இலங்கைக்கு வரவில்லை. சானல் 4 காட்சிகளையும் இலங்கையில் உள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளரான கோர்டன் வைஸ் தெரிவித்த கருத்துக்களையுமே அவர்கள் சாட்சியங்களாக பதிவு செய்துள்ளனர். கோர்டன் வைஸ் இலங்கையில் இருந்தபோது தாம் வடக்குக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறாயின் அவரின் சாட்சியங்கள் உண்மையென ஏற்றுக் கொள்வது எப்படி? இவ்வாறான அறிக்கை ஒன்றை நாடொன்று நிராகரித்த பின்னர் சர்வதேச அமைப்புகள் அதாவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, அல்லது மனித உரிமை பேரவை போன்றன விசாரணையில் ஈடுபடாது.

அவ்வாறு ஈடுபடும் சம்பிரதாயமும் கிடையாது. அவ்வாறு அந்த நிறுவனங்கள் கோரும் பட்சத்தில் மாத்திரமே பான் கீ மூனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை கிடப்பிலே போட்டு முடிக்க வேண்டியதுதான் மிச்சம். அரசாங்கம் என்ற ரீதியில் இதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனவே அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீச வேண்டியது வரும். இவ்வாறு இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52651

:

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறாயின் அவரின் சாட்சியங்கள் உண்மையென ஏற்றுக் கொள்வது எப்படி? இவ்வாறான அறிக்கை ஒன்றை நாடொன்று நிராகரித்த பின்னர் சர்வதேச அமைப்புகள் அதாவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, அல்லது மனித உரிமை பேரவை போன்றன விசாரணையில் ஈடுபடாது

இலங்கை விசாரணையைத் தடுக்கும் முயற்சிகளை வெற்றிகரமாக எடுத்திருப்பதாக நம்புகின்றது!

சர்வதேசச் சட்டங்களின் படி கொலை செய்வது ஒரு குற்றம்!

குற்றத்தை விசாரணை செய்பவர்களுக்கு தேவையானவற்றை வழங்காதிருப்பது இன்னுமொரு குற்றம்!

குற்றவாளிக்கு உடந்தையாக இருந்தது, இந்தியா,பான்கிமூன்,நம்பியார் மீதான குற்றங்கள்!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: புங்கையூரான்,

இந்தியா இந்த அறிக்கைக்கெதிராக வேலை செய்ய வெளிக்கிட்டு விட்டதாகத்தான் செய்திகள் வருகின்றன. இந்த அறிக்கையை ஐ.நா பாதுகாப்புச் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாதென்று இந்தியா வலியுறுத்தி வருகிறதாம்.

ரஷ்ஷியா, சீனா என்று தற்போது இந்தியாவும் களமிரங்கியிருக்கிறது. பா கீ மூனும் தன்னால எதுவும் செய்யா ஏலாதெண்டு கைய்யை விரிச்சுப்போட்டார். ஏதுமொரு அங்கத்துவ நாடு கேட்டால் ஒழிய தன்னால் இதை தொடங்க முடியாதாம். அதிலும் முக்கியமாக இலங்கை விருப்பப்பட வேணுமாமே!!! எப்படியிருக்கிறது இது ?? இலங்கை எப்ப "என்னை விசாரணை செய்யுங்கோ " எண்டு கேக்கப்போகுது, எப்ப எங்கட சனத்துக்கு நீதியும்,விடிவும் கிடைக்கிறது ??

அவரும் கொஞ்சம் பயப்பட்டுத்தானிருக்கிறார் போல. அவற்ற ஆலோசகர் விஜய் நம்பியார்தானே சரணடைதல் நாடகத்தின்ர இயக்குனர். அவர் வெள்ளைக்கொடி விஷயத்தில எக்கச் செக்கமாக மாட்டுப்பட்டப்போறார் என்பதால, அவற்ற குரு பா கீ மூன் வேண்டா வெறுப்பாத்தான் உந்த அறிக்கை பற்றிக் கதைக்கிறார்.

:mellow: புங்கையூரான்,

இந்தியா இந்த அறிக்கைக்கெதிராக வேலை செய்ய வெளிக்கிட்டு விட்டதாகத்தான் செய்திகள் வருகின்றன. இந்த அறிக்கையை ஐ.நா பாதுகாப்புச் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாதென்று இந்தியா வலியுறுத்தி வருகிறதாம்.

ரஷ்ஷியா, சீனா என்று தற்போது இந்தியாவும் களமிரங்கியிருக்கிறது. பா கீ மூனும் தன்னால எதுவும் செய்யா ஏலாதெண்டு கைய்யை விரிச்சுப்போட்டார். ஏதுமொரு அங்கத்துவ நாடு கேட்டால் ஒழிய தன்னால் இதை தொடங்க முடியாதாம். அதிலும் முக்கியமாக இலங்கை விருப்பப்பட வேணுமாமே!!! எப்படியிருக்கிறது இது ?? இலங்கை எப்ப "என்னை விசாரணை செய்யுங்கோ " எண்டு கேக்கப்போகுது, எப்ப எங்கட சனத்துக்கு நீதியும்,விடிவும் கிடைக்கிறது ??

அவரும் கொஞ்சம் பயப்பட்டுத்தானிருக்கிறார் போல. அவற்ற ஆலோசகர் விஜய் நம்பியார்தானே சரணடைதல் நாடகத்தின்ர இயக்குனர். அவர் வெள்ளைக்கொடி விஷயத்தில எக்கச் செக்கமாக மாட்டுப்பட்டப்போறார் என்பதால, அவற்ற குரு பா கீ மூன் வேண்டா வெறுப்பாத்தான் உந்த அறிக்கை பற்றிக் கதைக்கிறார்.

வடக்கத்தைய்களால் தான் இத்தனையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.