Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதம் சாகுமோ!

Featured Replies

காத்திருந்து, காத்திருந்து கடைசியில் இலங்கையின் போர்குற்ற ஐ. நா. மூவர் குழு அறிக்கை முழுதாய் வெளியாகிவிட்டது. ஏதோ புதுப்பட Trailer போல் Isaland பத்திரிக்கை அறிக்கையின் ஓர் பகுதியை கொஞ்சமாய் வெளியிட்டது. இப்போ முழுதாய் பக்கம், பக்கமாய் உயிரை பதறவைக்கிறது. எங்குமே, Bloggers தொடக்கம் சர்வதேச ஊடகங்கள் வரை அலசப்படுகிறது. இந்த அலசல் எல்லாம் துண்டு, துண்டாய் அறிக்கை வெளியானபோதே முடிந்துவிட்டது.

ஆனாலும், பயங்கரவாதத்தை வன்மையாக, மிதமாக கண்டிப்பவர்கள் எல்லோருமே ('Counterinsurgency Writers') அல்லது எனது மொழியில் நடுநிலமையாளர்கள் என்று கொள்ளலாமா தெரியவில்லை, அவர்கள் அரசும் புலிகளும் போர்க்குற்றங்கள் செய்ததாக அறிக்கையின் துணை கொண்டு பக்கம், பக்கமாய் விளக்கியுள்ளார்கள். இந்த உலகத்திலேயே பிரபாகரனும் புலிகளும் தான் மிக கொடிய பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா கண்டுபிடித்த உண்மையை பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களும் எழுத்தில் ஆமொதித்தாகிவிட்டது. இனி அடுத்தது என்ன?

அடுத்து தமிழர் தரப்பு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கும் போது தான் ஏன் எங்களுக்கென்று ஓர் ஆதரவும் இல்லாமல் போனது என்கிற கேள்வியும் எழுகிறது.

வழக்கம் போல் புலத்தில் வாழும் தமிழர் அமைப்புகள் ஒன்றாய், ஒரே அணியில் எங்கள் அடுத்த நகர்வு அறிக்கை விடயத்தில் என்னவாயிருக்கும் என்று தெளிவுபடுத்துவது நல்லது. யாருக்குமே உடனடியாய் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனாலும், அதிகம் காலம் கடத்தாமல் எதையாவது முயன்றால் என்ன என்பது தான் எனது சிந்தனை மட்டுமல்ல தவிப்பும் கூட. இல்லையென்றால் இலங்கை விடயத்தில் வாழாதிருக்கும் ஐ.நா. கூட இலங்கையின் திரைமறைவு அரசியல் சாணக்கியத்தில் ஊத்தி மூடிவிட்டுப் போகத்தான் பார்ப்பார்கள்.

இருந்தாலும் மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச ஊடகங்களுமே இது பற்றி தொடர்ந்து ஓரளவுக்கேனும் பேசுவார்கள் போலுள்ளது. இதற்கிடையே, சனல் 4 பிரித்தானிய காட்சி ஊடகம் மீண்டும் ஓர் காணொளியை மே மாதம் வெளியிடப்போவதாக ஓரிரு நாட்களுக்குமுன் சொல்லியிருக்கிறது.

ஈழப்படுகொலைகளில் எப்போதும் குறைவில்லாத காணொளிகள். ஆனாலும், போர்க்குற்ற விசாரணை தான் இழுத்துக்கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் பான் கி மூன் சொல்வது இலங்கை "consent" தந்தால் அல்லது ஐ. நா. பாதுகாப்பு சபை அல்லது மனித உரிமைகள் சபை எதுவென்று குறிப்பிடாமல், இதில் ஏதோவொரு அமைப்பு அதிகாரம் இவருக்கு கொடுக்க வேண்டுமாம். அப்படியானால் தான் சர்வதேச விசாரணைக்குழு அமைக்க முடியுமாம். தனக்கு இதுக்குமேல் அதிகாரம் இல்லையாம். இனி, எங்கள் வேலை அதிகாரத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து காய்நகர்த்துவது தானோ!!!

ஈழத்தமிழர்கள் மேல் உண்மையான அக்கறையோடு கூட வேண்டாம், மனிதம் சாகவில்லை என்று நிரூபிக்கும் ஓர் நாடேனும் உண்டா சொல்லுங்கள்!!!

http://lulurathi.blogspot.com/2011/04/blog-post_28.html

ஒரு உண்மையான தமிழக உறவின் ஏக்கம் கலந்த வரிகள் இதற்கு நாம் என்ன சொல்லப் போகின்றோம்?

நாம் இன்று தமிழக உறவுகள் ஊடாக புது டெல்லியை எமக்கு சார்பாக மாற்றி ஒரு அரசியல் தீர்வை எட்டல்வேண்டும்.

அவர்களுக்கு, புது டெல்லிக்கு, தாம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆகவேண்டும் என்ற தேவை உள்ளது. அதற்கு மேற்குலக நாடுகளின் ஆதரவும், மனித உரிமை அமைப்புக்களின் ஆதரவும் தேவை. புலம் பெயர் தமிழர்கள் தமது மேற்குலக நடுகல் மூலம் தமிழர் பிரச்னையை தீர்க்க இதை ஒரு துரும்பாக பாவிக்கலாம்.

தமிழக மக்களை ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு அரசியல் அழுத்தம் கொடுக்க புலம்பெயர் தமிழர் உதவேண்டும்.

- மதுரையில் போடப்பட்ட வழக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=84753

- தினமணி தலையங்கம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=84660

- பல்வேறு போராட்டங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=84732

இவற்றை செய்தால் தமிழன் என்ற மனிதம் சாகாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.