Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஷ்யா ஐ.நா அறிக்கையை எதிர்பது ஏன்?-மன்னாரில் உள்ள இயற்கை எரிவாயு வளம்

Featured Replies

ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளி விட்டுள்ளது.என்னதான் அரசாங்கம் அதை நிராகப்பதாகவும், சட்ட வலுவற்றதென்றும் வாதிட்டாலும், இது புறந்தள்ளி விடக் கூடியதொரு விடயம் அல்ல.ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கை தொடர்பாக தன்னால்

மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது என்று கூறியிருப்பினும், இதை வைத்துக் கொண்டு அவராலோ அல்லது ஐ.நா.வினாலோ எதுவும் செய்து விட முடியாது என்று கருத முடியாது.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்தாலும் கூட, பாதுகாப்புச் சபையில் அல்லது மனித உமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு வழிகள் இல்லையென்று கூற முடியாது.

ஏனென்றால் வீட்டோ அதிகாரம் பற்றி அமெரிக்காவோ மேற்குலகமோ அல்லது ஐ.நா. பொதுச் செயலரோ அறிந்துள்ள அளவுக்கு வேறெவருக்கும் தெந்திருக்க நியாயமில்லை.

இந்த அறிக்கையை மேற்குலகம் குறிப்பாக, அமெரிக்கா நினைத்திருந்தால் வெளியே வராமல் தடுத்திருக்க முடியும். அறிக்கையை வாங்கி மேசையில் போட்டதுடன் பான் கீ மூன் தனது நகர்வுகளை நிறுத்திக் கொண்டிருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை.

இலங்கை அரசின் பல்வேறு வேண்டுகோள்களையும் உதாசீனப்படுத்தி விட்டு, பான் கீ மூன் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளார் என்றால், அதன் பின்னணி வலுவானதென்றே அர்த்தம்.

இந்த அறிக்கையைத் தயாரிக்கும் போதும், வெளியிடும் போதும், இதன் சட்டவலு எத்தகையது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

எனவே ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்புத் தெவித்தாலும் மேற்குலகம் நினைத்தால் எதையும் செய்யும் நிலையிலே இருக்கிறது என்ற உண்மை அரசாங்கத்துக்குத் தெரியாத விடயம் அல்ல.

ஏற்கெனவே போர்க்குற்ற விசாரணை கோரி அழைப்பு விடுத்த அமெக்காவும், பிரிட்டனும் ஐ.நாவின் அறிக்கையை வரவேற்றுள்ளன.

இந்தநிலையில் வீட்டோ அதிகாரள்ள பிரான்ஸும் இந்த நாடுகளுடனேயே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் தான் இந்த அறிக்கையைக் கண்டு அரசாங்கம் ஆடிப் போயிருக்கிறது.

அதுமட்டுமன்றி இந்த அறிக்கையை பெரும்பாலான நாடுகள் போர்க்குற்ற விவகாரத்தை வைத்துக் கொண்டு, இலங்கையை மிரட்டத் தொடங்கியுள்ளன அல்லது இதை ஒரு கருவியாக்கிக் காரியம் சாதிக்க முனைகின்றன என்பதே உண்மை, உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி தமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளவே பல தரப்பினரும் முயற்சிக்கின்றனர்.

ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் உள்ளக விசாரணையைக் கோருகிறது. இன்னொரு பக்கத்தில் அது அறிக்கையை எதிர்க்கிறது. ஆனால் முற்றாக நிராகக்கவில்லை. இந்த அறிக்கையை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை எப்படிப் பலவீனப்படுத்தலாம் என்பதே ஐ.தே.க.வின் நோக்கமாக உள்ளது.

ஐ.தே.க.வின் இணை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்க ஒரு யோசனை கூறியிருந்தார் . சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்பதே அது.

இலங்கை அரசைப் போர்க்குற்றங்களில் இருந்து விடுவிக்கத் தன்னால் மட்டுமே முடியும் என்று சரத் பொன்சேகாவும் கூறியிருந்தார் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. ஆக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சரத் பொன்சேகாவை வெளியே கொண்டு வருவது தான் ஐ.தே.க.வினது திட்டம், வெளியே வருவது தான் சரத் பொன்சேகாவினதும் நோக்கம்.வேறு பலதரப்புகள் இதை வைத்துக் கொண்டு அரசாங்கத்திடம் இருந்து காரியம் சாதிப்பதற்கே முனைகின்றன.

உள்ளூரில்தான் இந்தநிலை என்றில்லை. சர்வதேச அளவிலும் இதேநிலை தான் உள்ளது. அமெக்காவைப் பொறுத்தவரையில் இதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு, இலங்கை அரசை சில விடயங்களை நடைறைப்படுத்த வைப்பதற்கு முனைகிறது.

அமெக்காவின் அழுத்தங்கள் அரசியல் தீர்வு நோக்கியதாக, அல்லது சீனாவின் பக்கம் சாய்வதைத் தடுப்பதற்கானதாக இருக்கலாம். அதேவேளை, இந்தியாவும் இந்த விடயத்தில் மதில் மேல் பூனையாகவே உள்ளது. அதன் கருத்து இன்னும் வெளியாகவில்லை.

மொத்தத்தில் அமெக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை விட இந்தியாவின் கருத்து என்ன என்பதையே பலரும் முக்கியமாக நோக்குகின்றனர்.

ஏனென்றால் தெற்காசியாவில் இந்தியாவின் கையை மீறி எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பது அவர்களின் கருத்து. ஆனால் இந்தியா உடனடியாகப் பதில் எதையும் கூறாமல் தவிர்த்து வருவதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்ற இலங்கை அரசு தவறி விட்டதாக ஒரு கருத்து உள்ளது. குறிப்பாக அரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு விடயத்தில் இந்தியாவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.

இந்தியாவின் திட்டங்களை நடைறைப்படுத்த இலங்கை அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஆனால் சீனாவின் திட்டங்களுக்கு கதவுகள் அகலத் திறந்து விடப்படுகின்றன. சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றவும் இலங்கை அரசு தவறியுள்ளது.

இந்தநிலையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதைத் தடுப்பதற்கும், தமது ஆலோசனைகளை நடைறைப்படுத்த வைப்பதற்கும் இந்தியா இந்த விவகாரத்தை ஒரு பிடியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது.

இதனால் தான் இலங்கைக்கு ஆதரவு அளிக்க இந்தியா தயக்கம் காட்டுவதாகத் தகவல்கள் கசிகின்றன. அதேவேளை சீனாவின் நிலைப்பாடும் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை.

இலங்கை அரசுதான், சீனாவின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறிக் கொள்கிறதே தவிர, சீனா அதுபற்றி இன்னும் வாயே திறக்கவில்லை.

அதுமட்டுமன்றி கடந்த 21 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நடத்திய சந்திப்பிலும் சீனத் தூதுவர் பங்கேற்கவில்லை. ஆக, இலங்கையிடம் இருந்து சில விவகாரங்களை அடைவதற்கு சீனாவும் இதை ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணியிருப்பதாகவே தெகிறது.

ரஷ்யா மட்டும்தான் இந்த அறிக்கை வெளியானதும் இலங்கை அரசுக்கு வெளிப்படையான ஆதரவை தெவித்துள்ளது. ரஷ்யாவைப் பொறுத்தவரையில் விழுந்தடித்துக் கொண்டு ஆதரவளிக்க முன்வந்ததற்கும் காரணம் உள்ளது.

மன்னாரில் உள்ள இயற்கை எரிவாயு வளத்தை அது குறிவைத்துள்ளது.மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறுகளை அமைக்க ரஷ்யாவுக்கு அனுமதி வழங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பயணம் மேற்கொண்டிருந்த போது இணங்கியிருந்தார்.அதை நிறைவேற்றுவதற்காகவே இலங்கைக்கு கைகொடுக்கிறது ரஷ்யா.

ரஸ்யாவின் அறிக்கை

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நாவின் எந்தவொரு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு எதிராக ரஸ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடிக்கும் என்று கொழும்புக்கான ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவுக்கு தண்டனை வழங்கவோ அதை அவமானப்படுத்தவோ சில சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை ரஸ்யா எதிர்த்து நிற்கும்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக நாம் வீட்டோவைப் பயன்படுத்த மாட்டோம். ஆனால் அதைப் பயன்படுத்தி சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் எதுவும் கொண்டு வரப்பட்டால், ரஸ்யா வீட்டோவை பயன்படுத்தலாம்.

ஐ.நா அறிக்கையை விமர்சிக்கும் வகையிலான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதற்கு ரஸ்யா அதரவளிக்கும்.

மொத்தத்தில் பெரும்பாலான நாடுகள் போர்க்குற்ற விவகாரத்தை வைத்துக் கொண்டு, இலங்கையை மிரட்டத் தொடங்கியுள்ளன. அல்லது இதை ஒரு கருவியாக்கிக் காரியம் சாதிக்க முனைகின்றன என்பதே உண்மை.

இந்தநிலையில் இலங்கை அரசின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், எல்லா நாடுகளையும், எல்லாத் தரப்பினரையும் ஒருங்கே தன்பக்கம் திருப்ப முடியாதுள்ளது தான்.

ஏனென்றால் ஒருவன் தேவைகளை நிறைவேற்ற முனைந்தால் அது அடுத்த தரப்பின் அல்லது அடுத்த நாட்டுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

எனவே யாரைத் திருப்திப்படுத்தி யாரைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டு, இந்தப் பிரச்சினையில் இருந்து மீள்வதென்ற தெரிவை மேற்கொள்வது இலங்கை அரசுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கப் போகிறது.

இலங்கை அரசின் பல்வேறு வேண்டுகோள்களையும் உதாசீனப்படுத்தி விட்டு பான் கீ ன் இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்தியுள்ளார் என்றால் அதன் பின்னணி வலுவானதென்றே அர்த்தம்

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1734:2011-05-01-10-39-02&catid=1:latest-news&Itemid=18

ரூசியாவிற்கு 1000 வருடங்களுக்கு தேவையான எரிசக்தி இருப்பு உள்ளது. நான் நினைக்கின்றேன் ரூசியா இலங்கை எதிர்ப்பதற்கு வேறு காரணங்கள்தான் முக்கியமானது.

தென் ஆசியாவில் ( கடல் பிராந்தியம்) இலங்கை தவிர வேறு நாடுகள் எதுவும் நண்பர்களாக நீண்டகாலம் இருக்க மாட்டார்கள் .

ரூசியாவின் பாதுகாப்பான வாணிப போக்குவரத்திற்கும் இலங்கை தான் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கின்றது.

எரிசக்தி விற்பனையில் ஐரோப்பிய நாடுகளை நீண்டகாலம் நம்ப முடியாது ஆகவே ஆசிய நாடுகளில் சந்தைவாய்ப்பினை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவிற்கு எதிரான போக்கு.

கடலிலும் சரி ஆகாயத்திலும் சரி இலங்கை மாத்திரமே வினியோக நடவடிக்கைகளில் தமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என ரூசியா நம்புகின்றது.

தென்னாசியாவில் தாய்லாந்தினை அமெரிக்கா தனது ஆயுத விற்பனைக்கு கறுப்பு சந்தையாக பாவிப்பது போன்று இலங்கையினை ஆயுத விற்பனை மையமாக பாவிப்பது.

இவ்வாறு பல காரணங்கள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு நாடுகளுக்குமே, இந்த போர்குற்றம் தொடர்பான சம்பவத்தில் அவர்களது செயற்பாடுகட்கு அவர்களின் சொந்த ஆதாயமே அடிப்படை ஆகியிருக்கும். இதில் சந்தேகம் இல்லை!

முள்ளிவாய்க்காலின் அவலம் உலகத்தமிழர்களுக்கு "ஐ.நா" சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்த 'ஐ.நா' அறிக்கை வெளியக முன்னால் உலகத்தமிழர்களுக்கு மட்டுமே ஐ.நா பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு இருந்தது. ஆனால் இந்த அறிக்கை வெளிப்பாடின் பின்னால் மொத்த உலகிற்குமே பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டுக்குள் தன்னை முன்னிறித்திவைத்திருக்கின்றது. இந்த அறிக்கை வெளிப்படுத்தலினூடு. ஐ.நாவின் இந்த நிலையானது மீள்பின்வாங்குதல்-வசதி அற்ற ஒரு நிலை! எனவே இதுவரை எம்மிடம் இருந்த நம்பிக்கைகள் எல்லாம் போல் அல்லாமல் முதல் முதல் திடமான ஒரு படியாக எமக்கு இருக்கின்றது இந்த ஐ.நாவின் முடிவு!

முள்ளிவாய்க்காலின் முன்னால் எமது விடுதலைக்கு பூகோழ அரசியலின் காலாநிலை எப்படி பாதகமாக அமைந்திருந்ததோ, அதே போல் இன்றைய நிலை சாதகமான காலநிலை கொண்டிருப்பதன் விளைவாலோ, அல்ல உண்மையான மனித உரிமைக்காக ஐ.நா வாழும் காலம் வந்துவிட்டது என்ற நிலையின் விளைவாகவோ உலகப் போக்கு எமக்கு இணக்கமாக இருக்க காரணமாகலாம்.

உமையின் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். மேலும், உருசியா அண்மையில் கூறியது போல அது இந்த அறிக்கையை வீட்டோ செய்து. ஆனால் அது சம்பந்தமாக ஏதாவது ஐ.நா. பிரேரணை வருமாயின் அதை வீட்டோ செய்வோம் என கூறியிருந்தாலும் அது லிபியா விடயத்தில் அதை செய்யவில்லை.

மேலும், இந்தியா நிச்சயம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. லிபியா, எகிப்து விடயங்களில் காத்த மௌனத்தை இந்தியா காக்காது. இந்தியாவின் நிலைப்பாட்டை எமக்கு சாதகமாக மற்ற நாம் அனைவரும் முயலவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இருப்பது இயற்கை வாயுவா அல்லது Hot air ஆ? :unsure:

ரஸ்யாவோ,சீனாவோ இதை எதிர்கப்போவதில்லை இதை எதிர்ப்பது இந்தியாமட்டும்தான்ரஸ்யாவும்சீனாவும்வாக்களிப்பில்இருந்துவிலகுமேதவிரஎதிராகவாக்களிக்கப்போவதில்லை.ரஸ்யாவிடமும் சீனாவிடமும் உள்ள வீட்டோ அதிகாரம்.அமரிக்கா,பிரித்தானியா,பிரான்ஸ் போன்ற நாடுகளிடமும் உண்டு.அவர்கள் எதிர்த்தால் இவர்களால் முறியடிக்க முடியும்.இதற்கு எமது ஒற்றுமையே தேவை.

நான் 16 வயதாகவிருக்கும் போது திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் கூட்டமொன்றில் அவர் உதிர்த்த வசனம்

நாம் இன்னும் இன்னும் ஏன் கீழே கிடக்கிறோம் அதற்கு நம்மிடையே உள்ள பிளவுதான் காரணம் என்பார்.இது கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு.இதுவரை எம்மிடம் இருந்து விலகவில்லை.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

------

:o:rolleyes::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

:o:rolleyes::D:lol:

ஏன்.. ஆபாசம் கூடிப்போச்சா? :lol:

ஏன்.. ஆபாசம் கூடிப்போச்சா? :lol:

இசை மங்கையின் அந்த வசனம் அந்தக் காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் மிகப்பிரபல்லயம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.