Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோர்வேயில் போர்க்குற்றவாளிகள் 20பேருக்கு எதிராக வழக்கு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் போர்க்குற்றவாளிகள் 20பேருக்கு எதிராக வழக்கு !

Saturday, May 7, 2011, 4:00

உலகம், சிறீலங்கா

நோர்வே நாட்டில் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பாரிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அந் நாட்டு முன்னணிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த, கோத்தபாய உற்பட இலங்கையில் உள்ள உயர்மட்ட தலைவர்கள் 20 பேருக்கு எதிராக போர்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கில் மகிந்தர் போன்ற இலங்கையின் உயர்மட்ட தலைவர்களும் அடங்குகின்றனர், அவர்கள் வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கு பாதுகாப்பு உண்டு. அந் நாடுகளில் அவர்கள் கைதுசெய்ய முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. ஆனால் அரசு முறைப் பயணத்தைத் தவிர, தனிப்பட்ட ரீதியாக அவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்லும் போது கைதாகும் வாய்பு இருப்பதாக நோர்வே பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக நோர்வேயில் தொடரப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதிகளாக 20 பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது. இவர்கள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற காலத்தில், மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் என பல்வகையான சான்றுகள் நோர்வே நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இனி நோர்வே நாட்டினுள் இலங்கை உயர் அதிகாரிகள் எவரும் வரமுடியாதவாறு தற்போது போடப்பட்டுள்ள வழக்கு கடுமையாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமாதான காலத்தில் அதன் ஏற்பாட்டாளராக இருந்த நோர்வே அரசாங்கம் தாம் நடு நிலை வகிப்பதாகக் கூறிவந்தாலும், புலிகளின் விழ்ச்சிக்குப் பின்னர் இலங்கை அரசோடு தனது உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது. அதற்கும் ஒரு படி மேலேபோய், புலம்பெயர் தமிழர்களையும், இலங்கை அரசையும் தான் சேர்த்துவைக்கப் போவதாகவும் அது கூறிவருகிறது. இந் நிலையில் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் நோர்வே தமிழர் அவையால் இந்த வழக்கு வெற்றிகரமாக நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நோர்வே அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பெரும் சிக்கல் நிலை தோண்றும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறு இருப்பினும், தமிழர்கள் பரந்து வாழும் நாடுகள் பலவற்றில், இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றது. இதே நிலை நீடித்தால், இன்னும் சிறிது காலத்தில் போற்குற்றவளிகள் எந்த ஒரு வெளிநாட்டிற்கும் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைதோன்றும் என்பதில் சந்தேகமில்லை.

tamilthai.com

நல்ல முயற்சி, உழைத்தவர்களுக்கு பாராட்டுக்கள்

Sri Lanka for genocide

A group Norwegian tamiler requires that Norwegian authorities A. murder of civilians Tamils during civil war on Sri Lanka. -Dette as new legal ground in Norway, says NUPI-commander Jan Egeland.

Anmelder Sri Lanka for folkemord

En gruppe norske tamiler krever at norske myndigheter etterforsker drapet på sivile tamiler under borgerkrigen på Sri Lanka. –Dette pløyer ny rettslig mark i Norge, sier NUPI-sjef Jan Egeland.

http://www.aftenposten.no/nyheter/iriks/article4113498.ece

War crime, genocide case against Rajapaksa placed in Norway courts

Leading Norwegian Lawyer on Human Rights, Harald Stabell, has filed a case under the Norwegian national law, against the Sri Lankan President and Commander-in-Chief of the SL armed forces, Mahinda Rajapaksa, his brother and Defence Secretary Gotabhaya Rajapaksa, and former Sri Lanka Army commander Sarath Fonseka, now in Rajapaksa's custody, and several other SL commanders, for allegedly committing War Crimes, Crimes against Humanity and Genocide against Eezham Tamils. The case is filed on behalf of the Norwegian Council of Eezham Tamils (NCET) and 15 affected Norwegian Tamils.

Following the latest revelations by the Norwegian Minister Erik Solheim in Norwegian national media NRK about his knowledge of the white-flag surrender, which turned into a war crime, the lawyers have indicated to the Chief Prosecutor of Norway that evidence may be sought from Mr. Solheim.

One of the 15 Norwegian Eezham Tamils who have filed the case through NCET legal effort, is seeking justice for a Norwegian citizen who died in Vanni during the war. The others are Norwegian citizens or residents who have filed the case requesting the court redress for their kith and kin killed in Vanni.

The Genocide argument is the noteworthy aspect of the Norwegian case, which points out that a systematic and planned military action was carried out by the SL state, blocking the media and humanitarian access to Vanni.

The charges filed in the case arise under Norwegian Penal Code articles (20 May 2005) §§ 101-109 §§ 5 and 6, which are applicable to specific acts committed abroad by persons who are not Norwegian citizens or residents in Norway or in another Nordic country. Under these provisions, Norwegian Eezham Tamils who lost their relatives or property can sue against those who committed these crimes against them.

Under the Norwegian penal code, courts may hear cases involving war crimes and other major violations of human rights.

Norway having signed and ratified the Rome Statute, which established the International Criminal Court (ICC), has in accordance with the said statute incorporated war crimes and crimes against humanity in its domestic Criminal law, which paved the way for Norwegians to file review papers relating to these crimes in local courts.

Norwegian Eezham Tamil victims, directly affected by the genocidal onslaught of the Sri Lankan military have come forward to sue the military with the help of the NCET, said NCET's group for legal action.

In the Court filing the Plaintiffs have cited the report on war crimes by the International Crisis Group and the latest report by the UN Secretary-General’s Panel of experts on accountability in Sri Lanka.

“Satellite Imagery Evidence Showing Sri Lanka Military Purposely or Intentionally Targeted PTK Hospital,” a key document on SL crimes against humanity, compiled by US based legal group Tamils Against Genocide (TAG) has also been cited by the Norwegian Lawyer.

Video clips collected as evidence material from the ground, compiled by Switzerland Council of Eelam Tamils (SCET) is another key material evidence for the case, according to NCET activists.

It is now left to The Chief Prosecutor of Norway to investigate whether there are grounds for charges or a police investigation.

Human rights activists believe that the Norwegian Police now has an opportunity to investigate the major Sri Lanka state actors and even Norwegian Minister Erik Solheim, the main facilitator during the Sri Lanka Peace process between the SL government and the LTTE.

The lawyer, Harald Stabell has in the past filed similar Review Papers against the Ex-Prime Minister of Israel Ehud Olmert, Defense Minister of Israel and many other Military Commanders for attacks against Palestinians in Gaza.

He is assisted in this case by his Junior Mary Bergram Aas.

Two years ago, already at the end of May 2009, Harald Stabell, who was watching the course of the war as well as a video discussion by Gotabhaya Rajapaksa told in an interview to Thamizhiyam that there were enough solid grounds under the Norwegian law to sue the criminals of the war.

The video clip of the interview of Stabell in 2009 is reproduced here with courtesy to Thamizhiyam (the producer of Vanni Mouse) that made the document available to TamilNet on Saturday.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33918

உந்த ஜ.நா அறிக்கை பற்றி நோர்வே பதில் சொல்லவில்லை.

அதை முதல் செய்ய வேனும். இவர்கள் தான் இந்த இனக்கொலைக்கு ஒரு காரணம்.

தமிழர்கள் எல்லாம் சேர்ந்து நோர்வே அரசிடம் நிலைப்பாடு என்ன என்று வெளிப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இல்லை என்டா மீண்டும் பேச்சு வார்த்தைக்கு கூப்பிடு வினம் என்று காத்திருக்கினமோ

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேக்கு பல உண்மைகள் தெரியும்.ஆனால் நழுவல் போக்கை கடைப்பிடித்துக் கொண்டு வருகிறார்கள்.இப்படியானவர்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க வேண்டும்.குறிப்பாக இறுதிக்கட்ட போரில் நோர்வேயும் ஐ.நாவுடனான பேச்சில் ஈடுபட்டு இருந்தது.ஆனால் பின்னர் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நழுவிக்கொண்டே இருக்கிறார்கள்.

மேலே உள்ள தமிழ்நெட் இணைப்பில் சொல்ஹெய்ம் கூட சாட்சிக்கு அழைக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, இவரும் சாட்சிகளை வழங்கினால், பல உண்மைகள் வெளிவரக்கூடும். ஆனால் அவர் அவற்றை, உண்மைகளை, சொல்வாரா என்பது கேள்விக்குறியானதே.

எமக்கு இன்று இறுதியாக இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் .... குறிப்பாக புலத்தில் ...... சிங்களத்தினால் நடாத்தப்பட்ட யுத்த நிறுத்த மீறல்களும்/ மனித உரிமைகள் மீறல்களுமே!!! ... இதனை நாம் கை நழுவ விடலாகாது!!! ...

... இவைகளை சர்வதேசமெங்கும் நீதி கேட்க ... பாரிய நிதி தேவைப்படும்!!! ... அதற்கான ஓர் நிதியம் ஆரம்பிக்கப்பட வேண்டும்!!! அதில் எம் பங்களிப்புகளுக்கு மேல் புலத்தில் ஓரிருவரின் கைகளுக்குள் அகப்பட்டிருக்கும் தேசியத்தின் சொத்துக்களின் வருமானங்களும் ... பயன்படுத்தபட வேண்டும்!! ... நடக்குமா????????

  • கருத்துக்கள உறவுகள்

யாசீர் அரபாத்தின் பாலஸ்தீனக் கனவை உடைத்ததே இந்த நோர்வேயின் 'ராஜதந்திரம்' தான்!

பிரபாகரன் 'சொல்ஹெய்மை' ஒரு மனிதனாக மட்டுமல்ல, அதற்கும் மேலேயே மதித்திருந்தார்.அதற்காக மிகப் பெரிய விலையை அவர் கொடுக்க வேண்டி வந்தது!

எவ்வளவு தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும், இந்தியாவின் அனுசரணையுடன் நோர்வேயின் ராஜதந்திரம் உடைத்தெறிந்தது!

இவர்களது உண்மையான முகம் உலகத்துக்குக் காட்டப் பட வேண்டும்!

இது விதையாகிப் போன எம் வீர உறவுகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட!!!

கடந்த திங்கள் அதிகாலை அமெரிக்கவால் நடாத்தப்பட்ட ஒசாமா மீதானா தாக்குதலில் பங்குபற்றியவர்கள் பற்றிய பல கருத்துக்களில் அவர்கள் "மிகவும் நாட்டுப்பற்று மிக்கவர்கள்", "பணத்திற்காகவோ, புகழுக்காகவோ செய்யாதவர்கள்" என புகழாரம் சூட்டப்பட்டனர்.

எமது வரலாற்றில் இதைவிட பெரிய தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. அவர்களும் மிகவும் நாட்டுப்பற்று மிக்கவர்கள், பணத்திற்காகவோ, புகழுக்காகவோ செய்யாதவர்கள், எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக வாழ்ந்தவர்கள். அவர்களின் பாதையில், அந்த கனவுகளை வென்றெடுக்க சரீர- நிதி- நேர-,,,, உதவிகளை பலரும் வழங்கிய வண்ணம் உள்ளார்கள். அதன் பிரதிபலிப்புக்களே ஐ.நா. அறிக்கை; ஜி.எஸ்.பி. பிளஸ் நிறுத்தம், பல நாடுகளில் வழக்குகள் என பலதும் நடந்துள்ளன, நடக்கின்றன.

சரியானவர்களை இனம்கண்டு, அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து, எமது தாயக உறவுகளுக்கு சர்வதேச அங்கீகாரத்துடன் ஒரு அரசியல் தீர்வை பெற்றுகொடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம்.

தமிழர்கள் வெற்றிகரமாக ஒரு பிடியாணையை ஒரு நாட்டில் போர்குற்றவாளிகளுக்கு எதிராக எடுத்தால் அவர்கள் எந்த நாடிலும் கூட கைது செய்யப்படலாம்? , அரச ஆட்சியில் இருந்தாலும் கூட இராசதந்திர இறையாண்மையையும் மீறி கைது நடக்குமா?

இப்படி ஒரு மொங்கோலி நாட்டவர்க்கு எதிராக நடந்துள்ளது.

1. கடந்த செம்ரெம்பர் மாதம் இலண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைதான மொங்கோலிய நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் Khurts (41) என்பவரை ஜெர்மன் நாட்டிடம் கையளிப்பது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று புதன்கிழமை இலண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சில் வசித்து வந்த மொங்கோலிய பிரசை ஒருவரை, ஜெர்மனி ஊடாக மொங்கோலியாவுக்கு கடத்தியது தொடர்பாக இவர்மீது ஜெர்மனிய காவற்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்ததுடன் இவர்மீது சர்வதேச பிடியாணையையும் பிறப்பித்திருந்தது. கடத்திச் செல்லப்பட்டவர் மொங்கோலிய அமைச்சர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடையவர் என்றும் பிரான்சிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பின்னர் இவர் மொங்கோலிய சிறையில் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79963

2. மொங்கோலிய பாதுகாப்புச் செயலரின் கைது சட்டபூர்வமானது-லண்டன் தீர்ப்பு

ஜேர்மனியில் வழங்கப்பட்ட ஐரோப்பிய பிடியாணைக்கு அமைய மொங்கோலிய பாதுகாப்பு செயலாளர் பாட் ஹட்ஸ் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டிருந்தமை தொடர் பான மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு நேற்று முன்தினம் மாவட்ட நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

http://valampurii.com/online/viewnews.php?ID=16398

எமக்கு இன்று இறுதியாக இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் .... குறிப்பாக புலத்தில் ...... சிங்களத்தினால் நடாத்தப்பட்ட யுத்த நிறுத்த மீறல்களும்/ மனித உரிமைகள் மீறல்களுமே!!! ... இதனை நாம் கை நழுவ விடலாகாது!!! ...

... இவைகளை சர்வதேசமெங்கும் நீதி கேட்க ... பாரிய நிதி தேவைப்படும்!!! ... அதற்கான ஓர் நிதியம் ஆரம்பிக்கப்பட வேண்டும்!!! அதில் எம் பங்களிப்புகளுக்கு மேல் புலத்தில் ஓரிருவரின் கைகளுக்குள் அகப்பட்டிருக்கும் தேசியத்தின் சொத்துக்களின் வருமானங்களும் ... பயன்படுத்தபட வேண்டும்!! ... நடக்குமா????????

உண்மை தான் இவ்வளவு பலத்தோடு போராடியும் தனிதேசம் அடையமுடியவில்லை. தமிழன் வாழ்வு என்னவோ,

இப்போ நிலையில் தனிதேசம் என்று ஜரோப்ப்பிய நாடுகளை கேட்டால் உதவி செய்ய வரமாட்டார்கள்.

எனவே அதி உச்ச சுயாட்சி அமைப்பை பெற்று கொள்ள வேணடும்.

தற்காலிக தீர்வு இதுதான். இதை வலியுறுத்தி பெற்று எங்கள் நிலத்தை சிங்களம் அபகரிக்காமல் தடுக்கலாம்.

நோர்வே கூட பாலா அண்ணா பேச்சு வார்த்தையில் இடைக்கால அரசு என்ற ஒரு வரும் என்றார்கள். அதுவும் ஒரு சுயாட்சிக்குரிய அம்சம் கொண்டது என சிங்களவன் மறுத்து விட்டான்.

நோர்வெக்கு தெரியும்.

ஏரிக் பல கூட்டங்களில் தமிழரிடம் சுயாட்சி ஒரு தீர்வாக அமையும் என கூறினார்.

ஐ.நா அறிக்கை வெளியான பின்னணியில் நோர்வே ஈழத்தமிழர் அவையின் வழக்கு வலுப்பெற்றுள்ளது! நோர்வே நாளிதழ்

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தமீறல்கள் குறித்து நோர்வேக்கு எதுவித கடப்பாடும் இல்லை என்றபோதும் இதுகுறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஐ.நா நிபுணர் குழு சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள போர்மீறல்கள் தொடர்பான காத்திரமான அறிக்கையினை முன்வைத்துள்ள நிலையில், நோர்வே ஈழத்தமிழர் அவை தொடுத்துள்ள இவ்வழக்கு வலுப்பெற்றுள்ளது என நோர்வே மனித உரிமைகளுக்கான மையத்தின் செயற்திட்ட இணைப்பாளர் Rolf Christian Ranheim தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட மனிதத்திற்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நோர்வே ஈழத்தமிழர் அவை வழக்கொன்றைத் தொடுத்துள்ளது. இது தொடர்பாக நோர்வேயின் முன்னணி நாளிதழான ஆப்தன்போஸ்தன் எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே குடியுரிமையுள்ள 77 வயதான ஒருவர் மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால், 2009 ஜனவரியில் வன்னியில் இறந்துள்ளார். அவரின் இறப்பினை முன்வைத்து, ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, நோர்வே காவல்துறையில் முறையிடப்பட்டதை அடுத்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நோர்வே குடியுரிமை உள்ள ஒருவர் மனிதத்திற்கெதிரான மீறல்களால் பாதிக்கப்பட்டதற்காக முதன் முதலாக வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உள்ளதாக ஆப்தன்போஸ்தன் நாளிதழ் இக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலருமான கோத்தபாய ராஜபக்ச உட்பட சிறிலங்கா அரச தரப்பு மற்றும் படைத்தரப்பைச் சேர்ந்த மொத்தம் 20 பேருக்கு எதிராக இன அழிப்பு - போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கினை பிரபல சட்டவாளர் Harald Stabell ஊடாக நோர்வே ஈழத் தமிழர் அவை தொடுத்துள்ளது.

ஈழத் தமிழர் அவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா இது குறித்து ஆப்தன்போஸ்தனுக்கு கருத்துரைக்கும் போது, உலகெங்கும் இவ்வாறான 30 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், நோர்வேயில் தாம் மட்டுமே இச்செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். இவை மூலம் சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்த முடியுமெனவும் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் மீறல்களை மேற்கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ளும் கந்தையா, விடுதலைப் புலிகளின் தலைமை கொல்லப்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா அரச தலைவருக்கும், சிறிலங்கா படைத்துறைத் தலைமைக்கும் எதிராகவே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளதாக ஆப்தன்போஸ்தன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே மனித உரிமைகளுக்கான மையத்தின் செயற்திட்ட இணைப்பாளர் சுழடக Rolf Christian Ranheim இது குறித்து கருத்துத் தெரிக்கையில், நோர்வேக்கு இது விவகாரம் தொடர்பான எதுவித கடப்பாடும் இல்லை. ஆனால் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்கிறார். ஐ.நா நிபுணர் குழு சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள போர்மீறல்கள் தொடர்பான காத்திரமான அறிக்கையினை முன்வைத்துள்ள நிலையில், இவ்வழக்கு வலுப்பெற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={498DE17C-1BE7-4F6F-9AEB-640189AA926A}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.