Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மவர்கள் கண்டு கொள்ளாத சைக்கிள் பயணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கைச் சேர்ந்த (?) இரண்டு உறவுகள் 1000 கிலோமீற்றர்கள் சைக்கிள்(மிதி வண்டி) பயணம் மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கிச் சென்று போர்க் குற்ற விசாரணை தொடர்பில் மகஜர் ஒன்றைக் கையளிக்க உள்ளனர். அவர்கள் சைக்கிள் பயணம் ஆரம்பித்து இன்றோடு 6(?) நாட்கள் ஆகின்றன.

மிகவும் உற்சாகமான முறையில் பல சிரமங்கள் மத்தியில் புலம்பெயர்ந்த ஈழ வயோதிபர்களின் ஆதரவோடு மட்டுமே இதை இப்போது செய்து கொண்டிருக்கின்றனர். மலேசியா.. தாய் தமிழகத்தில் இருந்து அவர்களை தமிழ் மக்கள் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க.. புலம்பெயர்ந்த அமெரிக்க.. ஐரோப்பிய.. அவுஸ்திரேலிய கண்டத் தமிழர்கள் பலர் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அறிக்கை மேல் அறிக்கைகளும்.. இணையக் கட்டுரைகளும்.. வரைந்து போர்க் குற்ற விசாரணை தொடர்பில் வெட்டிக் கிழிக்கும் பெரு மக்களே மற்றும் தமிழ் இளையோர் அமைப்புக்களே இவர்களின் முயற்சிக்கும் கொஞ்சம் ஆதரவளியுங்களேன்..!

இந்த சைக்கிள் பயணம் தொடர்பான விபரங்கள் தொடர்ந்து இணைக்கப்படும்....

Edited by nedukkalapoovan

- ஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்டுள்ளது

மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோ மீற்றர்கள்'- அனைத்துலக மக்களவையின் அறிக்கை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84848

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

- ஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்டுள்ளது

மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோ மீற்றர்கள்'- அனைத்துலக மக்களவையின் அறிக்கை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84848

நன்றி நண்பரே. யாழில் இச்செய்தி இணைக்கப்பட்டிருந்ததை கண்டிருக்கிறேன். ஆனால் GTV க்கு நேற்றைய தினம் செவ்வி வழங்கிய அந்த சைக்கிள் தமிழர்கள்... தங்கள் முயற்சி பற்றி புலம்பெயர் இணைய ஊடகங்கள் சரியான அக்கறை செய்யவில்லை என்றும்.. இளையோர் தமக்கு சரியான ஒத்துழைப்பு நல்கவில்லை என்றும்.. குறைபட்டுக் கொண்டதோடு.. அவர்களின் ஆதரவை தமது இந்த முயற்சிக்கு கோரியும் இருந்தனர்.

அந்த வகையில் தான் இதனை இங்கு இணைத்தேன். இந்த சைக்கிள் தமிழர்களின் முயற்சி பற்றிய படங்கள் மற்றும் வேறு செய்திகள் கிடைத்தால் இணைத்துவிடுங்கள். மக்களின் ஆதரவை அவர்களுக்கு திரட்டிக் கொடுப்பதில் யாழ் களம் உதவி நின்றால் அது அவர்களுக்கு ஒரு உற்சாகமாகவும் அமையும்..!

Edited by nedukkalapoovan

நிச்சயமாக அவர்களுக்கு ஊடகங்கள் உட்பட அனைவரும் ஆதரவு தரல் வேண்டும். மேலும் :

- அந்தந்த நாட்டு ஊடகங்களுக்கு இது பற்றி அறிவித்தல்

- இது பற்றி ஒரு ட்விட்டர் / முகநூலை தொடங்கலாம்

- அவர்கள் ஒளிப்பதிவுகளை எடுத்து அவற்றை யூடியூப் போன்ற தளங்களில் இணைக்கலாம்.

- ...............

நிச்சயமாக அவர்களுக்கு ஊடகங்கள் உட்பட அனைவரும் ஆதரவு தரல் வேண்டும். மேலும் :

- அந்தந்த நாட்டு ஊடகங்களுக்கு இது பற்றி அறிவித்தல்

- இது பற்றி ஒரு ட்விட்டர் / முகநூலை தொடங்கலாம்

- அவர்கள் ஒளிப்பதிவுகளை எடுத்து அவற்றை யூடியூப் போன்ற தளங்களில் இணைக்கலாம்.

- ...............

இந்த தளத்தில் நேரடி ஒளிபரப்பை காணலாம்

http://tamilvoice.tv/

ஆறாம் நாளில் ஜேர்மன் நாட்டில்

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ், அகூதா, உமை.

எனது ஊருக்கு கிட்ட வந்தால்... நிச்சயம் சந்திப்பேன்.

இந்த நிகழ்வை முன்னெடுக்கும் உறவுகளுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்!

இவர்களுக்கு எம்மால் முடிந்த ஆதரவை நாம் கொடுப்பது எமது கடமையும், காலத்தின் தேவையும் கூட!!

DSC_0888.jpg

DSC_0886.jpg

DSC_0878.jpg

DSC_0864.jpg

DSC_0898.jpg

நீதி தேடி ஆறாவது நாளாக தொடரும் மிதிவண்டிப் பயணம்

மே முதலாம் திகதி டென்மார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட மிதிவண்டிப்பயணம் நேற்று மாலை ஐந்தாவது நாளாக Rendsburg எனும் இடத்தை வந்தடைந்தது.தொடர்ந்து இன்று அதிகாலை அவர்களுடைய பயணம் Hamburg எனும் நகரத்தை நோக்கி செல்ல இருக்கின்றது .நேற்று அவர்களுடைய பயணம் Neumünster எனும் நகரத்தை செல்ல திட்டமிடப்பட்டாலும் ஓடும் பாதைகளின் சிரமங்களால் தாமதமாக முன்னெடுக்கப்பட்டது .இவர்களுடைய நீதி தேடி முன்னெடுக்கப்படும் பயணம் 18 . மே 2011 போர்குற்ற நாள் அன்று Den Haag நகரத்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்றலில் வந்தடையும்.

அங்கு டென்மார்க் தமிழர் பேரவையின் சட்டத்தரணி ஊடாக கொடுக்கப்பட்ட ஆவணங்களும் அத்தோடு மனுவும் அதேவேளையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துக்களைச் சேகரித்து அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ள மனுவில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொல்லில் அடங்கா துயரத்தில் துடிக்கும் எம் உறவுகளின் உரிமைக்கு இவர்களின் உறுதி தளராத நீதி கேக்கும் பயணத்தை அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் ஆதரிப்பதோடு அவர்களுக்கு வாழ்த்தும் உற்சாகமும் வழக்கும் முகமாக அவர்களை தொடர்புகொள்வதற்கு பின்வரும் தகவல்களை இங்கே குறிப்பிடுகிறோம். இத்தோடு யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை பிரசுரித்த செவ்வியையும் (6 .5 .2011 ) இங்கே வழங்குகின்றோம்.

நேரடித் தொடர்பு : (0049 ) 01746356387

மின்னஞ்சலில் மற்றும் முகப்புத்தகத்தில் உங்கள் வாழ்த்து செய்திகளை அனுப்புவதற்கு

forum@dansktamilskforum.dk

Facebook : 1000 km for retfærdighed – War Crimes Day

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

http://dansktamilskforum.dk/tamil/

நான் முகநூலில் இந்த செய்தியை சில நாட்களுக்கு முன்பு இணைத்திருந்தேன், ஆங்கிலத்தில் இந்த செய்தி வந்திருந்தால் தயவு செய்து இணைப்பை அறியத்தாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.