Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரன் பத்மநாதனின் பேட்டியின் பின்னணியில் றோ? இந்திய செய்தி சேவை

Featured Replies

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பின்னணியில் றோ புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இந்திய செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத்துறையான றோ மேற்கொண்டிருக்கின்றது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது.

இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததோடு, தேநீர் விருந்துக்கு டில்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிரான உணர்வுகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா,2009 போரில் இலங்கை இராணுவத்தினரின் கொடூரச்செயல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அது குறித்த செய்திகளை அறிந்த பின்னர்தான் ஓரளவுக்குத் தனது நிலையை மாற்றிக்கொண்டார்.

குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் படும் அவதிகளை நேரில் கண்டறிந்து வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக எடுத்துக் கூறிய உண்மைகள்தான் அவரை ஓரளவுக்கு மாற்றியது.

அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்கள் வாயிலாகவும் அவருக்கு இலங்கை நிலவரம் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.அதன் பின்னரே இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.

இந்நிலையில் அவரது இந்த மாற்றம், வெறும் வாக்குகளை பெறுவதற்காகத்தானோ அல்லது அவர் மாறவே இல்லையோ என்ற எண்ணம், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தோன்றியது.

அதாவது ஈழத் தமிழர் பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சினை என்றும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், இதில் மாநில அரசு ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்றும் கூறியதைப் பார்த்தபோது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்களின் மனதில், 'ஐயோ... இவரும் கருணாநிதி கூறியதைப் போன்றே கை கழுவும் பாணியில் பேசுகிறாரே...!' என்ற ஐயம் ஏற்பட்டது. இந்நிலையில், போர்க் குற்றச்சாட்டிலிருந்து இலங்கையையும், ஜனாதிபதி ராஜபக்ஷவையும் முட்டுக்கொடுத்துக் காப்பாற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, ஆதரவாகவும், ஜனாதிபதி ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய ஜெயலலிதாவிடமிருந்தும், தமிழகத்திலிருந்தும் குரல் எழும்பாத வகையில் முடக்கிப் போட திட்டமிட்டுள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.

இதன் முதல்கட்டமாக ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'றோ' மூலம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன.இதன் ஓர் அங்கமாக, இலங்கையில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் கே.பி. என்கிற பத்மநாதனை இந்திய தொலைக்காட்சி ஒன்றின் மூலம் பேட்டி எடுத்து வெளியிட வைத்துள்ளது.இந்திய தொலைக்காட்சிக்காக அந்தப் பேட்டி எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்தப் பேட்டியில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி. கூறும் பதில்களும், கே.பியை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப 'றோ' முயற்சிப்பது தௌ;ளத் தெளிவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் குறிப்பிடும் கே.பி., அதற்காக மன்னிப்புக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில், ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே 'இசட்' ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டது என்றும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொன்றிருப்பார்கள் என்றும் கே.பி. அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'ரா' மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய ) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும், அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது.

இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததோடு, தேனீர் விருந்துக்கு டெல்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிரான உணர்வுகளை கொண்டிருந்த ஜெயலலிதா,2009 போரில் சிங்கள் இராணுவத்தினரின் கொடூர செயல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அது குறித்த செய்திகளை அறிந்த பின்னர்தான் ஓரளவுக்கு தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் படும் அவதிகளை நேரில் கண்டறிந்து வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக எடுத்துக் கூறிய உண்மைகள்தான் அவரை ஓரளவுக்கு மாற்றியது.

அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்கள் வாயிலாகவும் அவருக்கு இலங்கை நிலவரம் குறித்து எடுத்து சொல்லப்பட்டது.

அதன் பின்னரே இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.

இந்நிலையில் அவரது இந்த மாற்றம் வெறும் ஓட்டுக்களை பெறுவதற்காகத்தானோ அல்லது அவர் மாறவே இல்லையோ என்ற எண்ணம், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் "ஜெயா" தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தோன்றியது.

அதாவது ஈழத் தமிழர் பிரச்சனை ஒரு சர்வேதேச பிரச்சனை என்றும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், இதில் மாநில அரசு ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் கூறியதை பார்த்தபோது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்களின் மனதில,"ஐயோ... இவரும் கருணாநிதி கூறியதைப் போன்றே கை கழுவும் பாணியில் பேசுகிறாரே...!" என்ற ஐயம் ஏற்பட்டது.

இந்நிலையில் போர்க் குற்றச்சாற்ற்றுச்சாட்டிலிருந்து இலங்கையையும், அதன் அதிபர் ராஜபக்சவையும் முட்டுக்கொடுத்து காப்பாற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, முதல்கட்டமாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், அதிபர் ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கருத்து கூறிய ஜெயலலிதாவிடமிருந்தும், தமிழகத்திலிருந்தும் குரல் எழும்பாத வகையில் முடக்கி போட திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதன் முதல்கட்டமாக ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'ரா' மூலம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதன் ஒரு அங்கமாக, இலங்கையில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் கே.பி. என்கிற பத்மநாதனை இந்திய தொலைகாட்சி ஒன்றின் மூலம் பேட்டி எடுத்து வெளியிட வைத்துள்ளது.

இந்தியத் தொலைக்காட்சிக்காக அந்த பேட்டி எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்த நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி கூறும் பதில்களும்,கே.பி. யை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப 'ரா' முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் குறிப்பிடும் கே.பி., அதற்காக மன்னிப்புக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில் ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே "இசட்" ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டதாகவும், சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொண்றிருபார்கள் என்றும் கே.பி. அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வலது கரம் தான் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபாகரன் தன்னை ஒரு அரசன் போலக் கருதியதாகவும், அதற்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளே காரணம் எனவும் கூறியுள்ளார்.

இதுதவிர இனி இலங்கையில் ஈழ போராட்டம் எழாது என்றும் கே.பி. வாயிலாகவே சொல்ல வைத்துள்ளது 'ரா'.

தான் உயிருடன் உள்ளவரை இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியாது என்றும் கூறியுள்ள கே.பி., இலங்கை மீதான போர்க் குற்றச்சாற்றையும் நீர்த்துப் போகும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

"இலங்கைப் படையினர் மீது போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் ஐ.நா. அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்ற கேள்வியை போட்டு வாங்கி, இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்களை அவரிடமிருந்து பெற்றுள்ளது 'ரா'.

"நாம் புதிய சகாப்தம் ஒன்றின் ஆரம்பத்தில் இருக்கிறோம். நடந்ததெல்லாம் நடந்ததுதான். ஐ.நா. அறிக்கையின்படி இரு தரப்புகளுமே தவறிழைத்துள்ளன. இந்த அறிக்கை எந்தவொரு நல்லிணக்கத்துக்கும் உதவப்போவதில்லை.இது ஒரு இடைஞ்சல்தான். யாருக்கும் இந்த அறிக்கையால் பயனில்லை.அது ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; ஒரு அறிக்கை, அவ்வளவுதான்.

இந்த அறிக்கையுடன் வன்னிக்குப் போனால் ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்களாக இருந்தால்... அப்போது அது வேறு கதையாக இருக்கும். ஆனால் இந்த அறிக்கையால் எவருமே நன்மையடையப் போவதில்லை என்பதுதான் உண்மை. முழு நாடும் இந்த அறிக்கைக்கு எதிராக இருக்கிறது. கள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முடிந்தது முடிந்ததுதான்.ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?" என்று கூறியுள்ளார் கே.பி.

ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருப்பதால், அவருக்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசின் தயவு தேவையாக உள்ளது.

இதை பயன்படுத்தி, இலங்கை விடயத்தில் ஈழத் தமிழர்களையும், அதற்காக போராடிய அமைப்புகளையும் தங்களது கைப்பாவையாக ஆட்டுவிக்க நினைத்த காங்கிரஸ் கட்சியும், 'ரா'வும் இன்னும் எத்தகைய "ஈரக் குலையை அறுக்கும்" திட்டத்தை வைத்துள்ளனவோ...?!

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1105/24/1110524016_1.htm

இங்கு புலம்பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ்த்தேசியத்திற்கான அமைப்புகள் ... பேரவைகள், நாடு கடந்த அரசுக்கள், எதுவானாலும் .... அவற்றில் செயற்படும்/அல்லது மறைமுகமாக செயற்படும் கேபியுடன் முன்னால் நெருங்கி செயற்பட்டவர்கள் ... அவர்களுக்கு இன்றும் கேபியுடன் தொடர்பிருக்கிறதோ? இல்லையோ?, உண்மையாக மக்களுக்காக செயற்படுகிறார்களோ? இல்லையோ? ... என்பவருக்கு மேல் அவர்கள் செயற்பாடுகளில் இருந்து ஒருங்க வேண்டும்! இல்லையேல் ஒதுக்க வேண்டும்? ... இது இன்றைய காலத்தின் தேவை, எம்மக்களின் விடிவிற்காக!!!!

இது சாத்தியமான நிகழ்வுதான். ஆனாலும் தமிழர்களுக்கெதிராக தமிழ்நாட்டரசு திருப்பப்பட்டால் அதனால் இந்தியாவிற்கோ அல்லது காங்கிரசுக்கு எத்தகைய நன்மை கிடைக்கும் என்பதையிட்டு நான் யோசிக்கின்றேன். ஆயுதப் பாவனைகளற்ற நிலையில், ராஜீவ் காந்தியின் கொலைக்குக் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் இல்லாத நிலையில் இவ்வாறான நிலைப்பாடு காங்கிரசுக்கோ இந்தியாவிற்கோ நன்மையளிக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

இது சாத்தியமான நிகழ்வுதான். ஆனாலும் தமிழர்களுக்கெதிராக தமிழ்நாட்டரசு திருப்பப்பட்டால் அதனால் இந்தியாவிற்கோ அல்லது காங்கிரசுக்கு எத்தகைய நன்மை கிடைக்கும் என்பதையிட்டு நான் யோசிக்கின்றேன். ஆயுதப் பாவனைகளற்ற நிலையில், ராஜீவ் காந்தியின் கொலைக்குக் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் இல்லாத நிலையில் இவ்வாறான நிலைப்பாடு காங்கிரசுக்கோ இந்தியாவிற்கோ நன்மையளிக்குமா?

இப்பொழுது ஈழத்தமிழர்களுக்கு(விடுதலைப்புலிகளுக்கு) ஆதரவான நிலைப்பாடு சீமான் அவர்களினால் தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் உருவாகிவருகின்றது. இதனால் தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாடு உருவாகிவருகின்றது. முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு காரணமானவர்கள் காங்கிரசுக்காரர்கள் என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள். " ஜெயலலிதா அமோக வெற்றி பெற இதுவும் ஒரு காரணம் தான். ஜெயலலிதா பிராமண சமுகத்தைச் சேர்ந்தவர். பிராமண சமுகம் என்பதினால் விடுதலைப்புலிகள் அவரைக் கொல்ல நினைத்தார்கள். இதனால் விடுதலைப்புலிகளை அழிக்க காங்கிரசு மகிந்தாவுக்கு உதவி செய்தார்கள். விடுதலைப்புலிகள் ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள். திமுகவுடன் நெருங்கிய உறவு கொண்டவர்கள்" என்று கேபியின் வாயிலாக சொல்லி தமிழகமக்களையும், ஜெயலலிதாவையும், தமிழகத்து பிராமண சமுகத்தையும் குழப்ப முயற்சிக்கிறது றோ. இதனால் ஜெயலலிதா மூலம் சீமான் போன்றவர்களைக் கைது செய்து சீமான் போன்ற தமிழுணர்வாளர்களை அடக்க நினைக்கிறது றோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.