Jump to content

உண்மை உறவுகள்..!


Recommended Posts

சரவணனிற்கு தவறுதலாய் தான் மண்டை உடைந்தது, இருந்தும் தான் தள்ளியதால் தான் உடைந்தது என்ற கவலை கலந்த பதட்டம் கலாவிற்குள். 999 ற்கு அடிக்கச் சென்றாள்.

"இஞ்ச கலா அதொன்டும் பெரிய காயம் இல்லை பேசாமல் விடும், இப்ப அவங்களுக்கு கடிச்சால் ஆயிரம் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பானுகள். அவனது பேச்சைக் கேட்கையில் தலைக்கேறின வெறி முற்றாய் முறிஞ்சிருக்க வேணும் என்ற எண்ணம் கலாவிற்குள் எழுந்தது. சரவணனின் பேச்சையும் மீறி 999 ற்கு அடித்து அம்புலன்சிற்கு சொல்லிவிட்டு வீட்டுச்சாவி மற்றும் ஏனைய முக்கிய பொருட்களை எடுத்து கைப்பையில் போட்டுக்கொண்டு அம்புலன்ஸ் வர போவதற்கு தயாரானாள். சரவணனின் தலையில் இருந்து கசிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்த வெள்ளைத்துணியினால் கட்டி தன்னால் முடிந்த முதலுதவியைச் செய்து முடித்திருந்தாள்.

இரண்டு ஆண்களும் ஒரு தாதியும் அம்புலன்சில் வந்து இறங்கினார்கள். தாதியாக வந்த ஒரு வெள்ளைக்கார பெண்மணி என்ன நடந்தது என்று கேட்க, கலா நடந்ததை சொல்ல முன்னர். " ஒரு சிறிய விபத்து" என ஆங்கிலத்தில் கூறிமுடித்தான் சரவணன். சரவணனைப் பார்க்க கலாவிற்கு பாவமாய் இருந்தது. ஏன் பொய் சொல்கிறான் என்னைக்காக்கவா இல்லை தன்னைக்காக்கவா? என்ற கேள்வி அவளிற்குள்.

போதையில் வந்து கலாவிடம் வாலாட்டிய சரவணனிடம் இருந்து தன்னக்காக்க நடந்த கெடுபிடியில்.. அவள் அவனைத் தள்ளியபோது அருகில் இருந்த நிலையுடன் அவன் மோதியதால் ஏற்பட்ட காயம். அதில் இருந்து தான் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உண்மை தெரிந்தால் பொலிஸ் கேசாக் கூட மாறலாம்.

பிரயாணத்தின் நடுவே "கலோ றூபி... நான் அண்ணி கதைக்கிறன். அண்ணாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறன், உனக்கு நாளைக்கு ஏதாவது சோதினை இருக்கோடா இல்லை எண்டா ஒருக்கா வா. இதில கை கில் யெனரல் கொஸ்பிரல் என்று தான் நினைக்கிறன். எதுக்கும் போன உடனை போன் பண்ணிறன். வண்டியைப் பாத்து ஓட்டு அவருக்கொண்டும் இல்லை சரியேடா.. பிறகு உன்னை தனிய வாட்டில பாக்க முடியாது " ... " சரி அண்ணி வந்திடிறன் பதட்டப்படாதேங்கோ இப்ப எனக்கு ஒரு சோதினையும் இல்லை சும்மா தான் நிக்கிறன். " அவன் ரூபன் சரவணனின் தம்பி படிப்பதற்காய் வந்தவன் விடுதி ஒன்றில் தங்கி நின்று படிக்கிறான்.

வைத்தியசாலைக்கு வந்த ரூபன் நேரடியாகச் சென்று அண்ணன் சரவணனை சந்தித்தான், அவனுடன் காரசாரமான வாக்குவாதம். " அம்புலன்ஸைக்' கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாச்சு இனி வக்கிலக் கூப்பிட்டு கோட்டுப்படி ஏறுவது எப்பண்ண?.. பாவம் அண்ணி

உன்னை கலியாணம் செய்ததைவிட என்ன தம்புச்செய்தவா?.. உன்ர வாழ்க்கையையும் அழிச்சு அவவின்ர வாழ்க்கையையும் அழிச்சு என்னையும் அநாதையா நடுத்தெருவில நிக்கவிட்டிட்டியே.. இதை நினைச்சா உனக்கு வெட்கமாய் இல்லையே??" ஆத்திரம் தீரக்கத்தி விட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த கலாவிடம்.

" என்ன அண்ணி செம போடு போட்டிருக்கிறயள் போல கிடக்கு இழைப் போட்டிருக்கு... அண்ணா மன்னிப்பெல்லாம் கேக்கிறார்.. நீங்கள் பாவமாம் நிறைய கஸ்டப்படுத்திப் போட்டாராம்.. நினைக்க வெட்கமாயக்கிடக்காம்.. கதையைப்பாத்தா அடிபலமாய் விழுந்திட்டுது போல கிடக்கு?? இதை முதலிலையே செய்திருந்தால் நான் ஏன் கடைச்சாப்பாட்டில கிடந்து காயிறன். உங்களோடயே இருந்திருப்பன் எல்லே. அவற்ற தொல்லை தாங்காமல் தானே என்னை விடுதிக்கணுப்பினியள். போங்கண்ணி உங்களில எனக்கு கோவமும் தான்" மெல்ல சலுத்துக் கொண்டான் ரூபன்

"எட விசரா நான் ஒன்டும் செய்யேல்லை. உன்ர கொண்ணனோட சரியாக்கதைச்சு இரண்டு கிழமையாச்சு. தினமும் சரியான வெறி. நான் வேலையால வந்து என்ரபாடு.. பத்துப்பதினொன்டுக்குப் பிறகு வருவார். நான் சாப்பாட்டைப் போட்டா போய் படுத்திடுவார்.

நான் இல்லாட்டாப் போட்டுச் சாப்பிடுவார். இப்படி தினம் விளையாடிக் கொண்டிருந்தார். இண்டைக்கு வேலையால வந்து களைப்பில படுத்திட்டன் சமைக்க நேரம் போட்டு. அறக்க பறக்க என்டு சமைச்சுக் கொண்டிருக்கிறன் அடுப்படிக்க வந்து ஏதோ தனகிக்கொண்டு நிண்டார். பேசாமல் நான் என்ர பாட்டில வேலை செய்திட்டிருக்க. என்ன உம்.. என்றிருக்கிறாய் கதையன் என்டு அடிக்க வந்தார். தடுத்துப்போட்டு தள்ளிவிட்டன் நிலையில போய் மோதினார், அதில கிடந்த ஆணி ஒன்று கிழிச்சுப்போட்டுது, அது தான் கொண்டந்தனான்" என்று விரக்தியோடு சொல்லி முடித்தாள் .

"நல்ல வேலை செய்தியள் அண்ணி.. நீங்களும் பாவம் அண்ணாவை என்ன செய்யிறது எனக்குத் தெரியேல்லை. பாப்பம் இனிக் குடிக்கமாட்டன் என்றார்" ஏக்கத்தோடு கூறினான் ரூபன்.

கலா துடுக்கோடு சுத்தித்திருந்த ஒரு சிட்டு. இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என்று ஒரு நொடி கூட கற்பனை பண்ணியிருக்கமாட்டாள். உயர்தரம் முதலாவது முறை எழுதி பெறுபேறு காணாதென்று இரண்டாது தடவை தோற்றுவதற்காய் விண்ணப்பித்துவிட்டு படித்துக் கொண்டிருந்தவள். திடீரென கூடிவந்த திருமணம். லண்டன் மாப்பிளை சரவணன். 10ப்பொருத்தமும் பொருந்திச்சாம் நல்லாய் இருப்பாளாம். பெற்றார்களின் ஆவல் அவளை சம்மதிக்க வைத்தது.

லண்டன் குடியுரிமை பெற்ற சரவணன் அவளை இலங்கைக்கு வந்து மணம் முடித்து வர எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. திருமணமான புதிதில் சரவணன் இலங்கையில் இருந்த ஒரு சில வாரங்களில் இருவரைப்பற்றியும் பேசி தாங்களே அறிந்து கொண்ட நேரம். குடி புகை பற்றி கலா கேட்டபோது முன்பு பழக்கம் இருந்ததாகவும் பின்னர் நிறுத்திவிட்டதாகவும் சரவணன் கூறினான். நேர்மையாக உண்மையைக்கூறிய அவனை அவளிற்கு அந்தக்கணங்கள் மிகவும் பிடித்திருந்தது. " எல்லாம் அளவோட இருந்தால் நல்லது தானே... இதில மற்றவைக்கு இடையூறுகள் வராமல் இருக்கவேணும்.... நீங்கள் இப்ப விட்டிட்டியள் என்றதில மகிழ்ச்சி.." அவனைப் பாராட்டினாள்.

திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களின் பின்னர் சகல சம்பிரதாயங்களையும் சட்டரீதியாக முடித்து லண்டன் வந்து சேந்தாள் கலா.

புதிய நாடு, புதிய சூழல் வாழ்க்கை மாற்றம், பிடித்த கணவன் என்று இடர்களிற்குள்ளும் சிறிதுகாலம் ஆனந்தமாய் போனது வாழ்க்கை.

அவர்களது மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நிகழ்வாய் ஒரு அழைப்பு. திருமண விருந்து என்று இருவரையும் உறவினர்கள் அழைக்க அங்கு சென்ற சரவணனிற்கு மறுபடி அரங்கேற்றம். மெல்ல மெல்ல கைவிட்டவற்றை எல்லாம் கையில் எடுத்தான். ஆரம்ப நாட்களில் அளவோடு நின்றான். அதால் அவளிற்கு எந்தப்பிரச்சனைகளும் இல்லை. சிறு வருத்தம் இருந்தாலும் அதை அவள் சரி செய்து கொண்டாள்.

நாளாக நாளாக நிலமை முற்றியது சரவணன் மறுபடி மதுவிற்கு தன்னை முற்றாக அடிமையாக்கிக்கொண்டான். அது மட்டுமல்ல கலாவை தாக்கவும் செய்தான். முதன்முறை எதுவும் அறியாமல் அவனிடம் அடிவாங்கிய கலா என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றாள். அதன் பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டாள் அவனை எதிர்கொள்ளத் தயாரானாள். இப்படித்தான் ஒருநாள் முழுப்போதையில் வந்து அவளை அடிக்க முயன்றவனை தும்புத்தடியால் விளாசு விளாசென விளாசிவிட்டு கட்டிக்கட்டிலில் போட்டுவிட்டாள். இவற்றை எல்லாம் பார்த்திருந்த ரூபன் சற்று குழப்பமடைந்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியாது தவித்தான். சரவணனின் கூத்து அப்போதெல்லாம் ஏதாவது ஒருவிதத்தில் தினமும் வீட்டில் கலகத்தையே கொண்டு வந்தது. அதனால் தான் கலா ரூபனை விடுதியில் தங்க வைத்தாள். எப்பாவது ஒருநாள் இவர்களை ரூபன் வந்து பார்த்துச்செல்வதுண்டு. அன்பான அண்ணி அண்ணன் அருகில் இருந்தும் அநாதையாய் தனியாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ரூபன்.

சரவணனிற்கும் கலாவிற்குமிடையிலான இடைவெளி நீண்டுகொண்டே போனது. சரவணனது குடிப்பழக்கத்தை கண்டிக்கும் தகப்பனும் கலா அவனை அடித்தாள் என்பதைக்கேட்டு கலாவிற்கு சாபமழை பொழியும் தாயும் என்று சரவணன் குடும்பம் ஒருவிதமாக இருந்தது.

தானாக வேலையைத்தேடி தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க தொடங்கிவிட்டாள் கலா. குடிவெறி அதனால் அவளிடம் சச்சரவு இதைவிட குறை சொல்லும்படி சரவணனிடம் எதும் இல்லை. ஆனால் அவனது போதைக்கு அவள் காயங்களைச்சுமக்க முடியாது என்ற முடிவோடு அதன் வலியை அடிக்கடி அவனிற்கு உணர வைத்தாள் கலா இன்றும் கூட அப்படித்தான். அழகாய் பூத்துக்குலுங்க வேண்டிய இளம் தம்பதிகளின் வாழ்க்கை இப்படி விடையின்றி விரிந்து சென்றது.

பாவம் சரவணன் இப்படி படுக்கவைத்து விட்டோமே என்ற கவலை அவளினுள். அவளது வாழ்க்கை நாலுபேர் சிரிக்கிற நிலையில் இருக்கிறதே என்று வருத்தம். அவர்களிற்குள் உள்ள விரிசலை சரி செய்ய முனையாத உறவுகள் விடுப்புப் பார்ப்பதில் துடியாய் நின்றார்கள். அதனால் உறவுகள் மேலும் அவளிற்கு வருத்தம். தான் உண்டு தன்ர பாடு உண்டு என்று ஒதுங்கியே இருந்தாள். அவர்களது வெற்றிலை வாய்க்கு இவள் அவலாக விரும்பவில்லை.

இன்றைய பிரச்சனை கொண்டு வந்த தீர்வு. இனிமேல் குடிப்பதில்லை என்ற முடிவுக்கு சரவணன் வந்திருந்தான். தான் செய்த தவறுகளுக்காய் கலாவிடமும் ரூபனிடமும் அழுது மன்னிப்புக்கேட்டான். இதை எந்த அளவு நம்புவது கலாவிற்கு சிறிய தடுமாற்றம் நடப்பதை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டாள். அவனை துண்டு வெட்டி வீட்டிற்கும் கூட்டி வந்து விட்டார்கள்.

சரவணன் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் மண்டை உடைந்ததையும் அறிந்த சரவணனின் பெற்றோர் துள்ளிக்குதித்தார்கள். " ஒரு பொடிச்சி மண்டையை அடிச்சு உடைச்சு ஆஸ்பத்திரில போடுவாள் அதைப்பாத்திட்டு சும்மா இருக்கவேணுமே.. அப்பவே சொன்னான் உந்த புத்தகம் தூக்கினதுகளை கட்டாதேங்கோ.. என்னை மாதிரி ஒன்டைக்கட்டியிருந்தால் அடிச்சா என்ன பிடிச்சா என்ன அழுதுபோட்டு அமைதியா இருந்திருக்கும்.. இது நாலு எழுத்துப்படிச்சதை கட்டிவைச்சு அது வேலை வெட்டி செய்யிறன் என்ட உடனை அவன்ர மண்டையை உடைச்சுப்போட்டுது. அங்க ஒருத்தன் பாத்துக்கொண்டிருக்கிறான். அண்ணனுக்கு அடிச்சவளை வெட்டிப்போட்டு ஜெயிலுக்குப் போக வேண்டாமே..?? " அறியாமை நிறைந்த ஒரு அப்பாவித் தாயின் ஏக்கங்கள் அப்படி வெளிப்பட்டன... அவள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டாள் என்றதை உணர அவர்கள் தயாராக இல்லை.

கலாவிற்கு சிரிக்கிறதா அழுகிறதா தெரியவில்லை. சரவணனைப் பார்த்தாள் அவன் தெளிந்திருந்தான், தனது தவறிற்கு தக்க தண்டனை தன் மனைவி கொடுத்திருந்தாள் அதை அவனும் ஏற்றிருந்தான் தாயிடம் கூறினான். "அம்மா உன்ர பிள்ளை நான் குடிச்சு கொண்டு என்னையே நான் அழிச்சுக்கொண்டிருந்தா நீ பாத்திட்டு சும்மா இருப்பியா..?? உன்னை மாதிரித்தானே கலா என்னை திருத்தியிருக்கிறாள். ஏன் பேசிறாய்?? இனியாவது நாங்கள் வாழலாம் மகிழ்ச்சியாய் மூன்று வருசங்கள் வீணாய் போயிட்டுது இனி இப்படி ஒரு தவறை நான் செய்ய மாட்டன். சும்மா கத்தாதையணை." உறுதியோடு அழைப்பைத் துண்டித்தான்.

கலாவின் மகிழ்ந்தாலும் சற்று கனத்தது வன்முறைக்கு வன்முறை தான் தீர்வா?? அவளது மனதில் பெரிய கேள்வி?.

பெட்டி படுக்கைகளுடன் ரூபனும் வாசலில் நின்றான். " அண்ணி இனி நீங்கள் அடிச்சுக் கலைச்சாலும் நான் போகமாட்டன். நேரத்திற்கு நேரம்.. படம் பாத்தது காணும் புத்தகத்தை எடுடா என்ற அந்த அன்பான அதட்டலும் அடிக்கடி என்னை மேற்பார்வை செய்யும் அண்ணாவின் அன்பும் எனக்கு வேணும். அநாதையா என்னால வாழமுடியாது" ஓடிச்சென்று இருவரையும் அணைத்துக்கொண்டு.. அவனும் குதூகலத்தில் பங்கெடுத்தான். கலாவிற்கு சரவணன் மேல் நம்பிக்கை மறுபடி சற்று அதிகரித்திருந்தது.

ஆக்கம் - கயல்விழி.

Link to comment
Share on other sites

கதையில் கலாவின் அணுகுமுறை கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கிறது.. குடித்துவிட்டு துன்புறுத்தும் தன் கணவனுக்கு அதனால் தான் படும் துன்பத்தை உணர வைக்கும் முறை..!

அழகாகச் சொல்லி இருக்கிறார் கயல்விழி சில சந்தர்ப்பங்களில் ஆண்களை கட்டியாளும் அணுகுமுறை எப்படி என்று...! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எல்லாரும் தும்புத்தடியைத்தூக்கினால் வாலைச்சுருட்டி வைச்சுக்கொண்டு இருக்கமாட்டினமா என்ன..??? அது சரி 999 க்கு முதலே அடிச்சா நோகாமல் கொள்ளாமல் கொண்டுபோய் கம்பி எண்ண வைச்சிருப்பினமே..?? :wink: :P

Link to comment
Share on other sites

என்ன இந்தக் கதைக்க..மிச்ச கலா ரசிகர் ரசிகைகளைக் காணவே இல்லை..! ஒருவேளை கலாவைப் பிடிக்கல்லையோ..! எல்லாரும் அடக்கிவாசிக்கிறாங்க..! :wink: :lol:

Link to comment
Share on other sites

ம்ம் கயல்விழியின் கதை வழமை போல் வித்தியாசமாக அழக்கா உள்ளது.

கலாவின் துணிச்சலில் எல்லா பெண்களும் இருந்தால் பிரச்சினையே இல்லை. :wink: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லாயிருக்கு :P

கலா செய்தது தான் சரி :lol:

இப்பிடி இடைக்கிடை ஒண்டு குடுத்தாத்தான்

சில பேர் அடங்குவினம் :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி சுவி அண்ணா. =================== உண்மையில் இது ஒரு உண்மைச் சம்பவத்தை ஒட்டிய கிறுக்கல். காலை நேரம்.. வேலைக்கு கிளம்புகிறான் அந்த பையன். தன் துணைவி.. குடும்பத்திற்காகவும்.. தனக்காவும்.. நனிகுளிர் காலத்தின் அந்த நடுங்கும் குளிருக்குள் இருந்து தப்ப.... இழுத்துப் போர்த்திக் கொண்ட ஜாக்கட்டுக்குள் பதுங்கிய படி.. தொடரூந்தில் ஏறி அமர்கிறான். அதுவரை எதனையும் அவதானிக்காதவன்.. எதிர்முனையில் அமர்ந்திருந்த அந்த இளம் பெண்ணை காண்கிறான். தலையில் கறுத்த முக்காடு.. ஓரளவு மேக் கப்.. ஆனாலும் அவளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு என்பதை பார்த்த மாத்திரத்தில் உணர்ந்துவிடுகிறான். இருந்தாலும்.. அந்த நாட்டுச் சட்டப்படியும்.. அவனின் மனச்சாட்சிப்படியும்.... ஒருவரை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது.. வரவேற்கப்படவில்லை.. என்பதால்.. தன் நீளக்காற்சட்டை பொக்கட்டுக்குள் இருந்த போனை எடுத்து நோட்ட மிடுகிறான்.. என்ன ஒரு அதிர்ச்சி. எதிர்முனையில் அமர்ந்திருந்த பெண்.. அழுவது விம்பமாக விழுகிறது மீண்டும் அவன் கண் திரையில். எதற்கும் உறுதி செய்து கொள்ள நோட்டமிடுகிறான். ஆம் அவள் அழுகிறாள் தான். கண்ணீர் தாரையாகி கன்னங்களில் வழிந்தோடிய நெடிய கோடுகள் இரண்டு.. இரண்டு பக்க விழிகளின் கீழும்... பேட்டிருந்த மேக் கப்பை கழுவித்தள்ளியபடி.. வழிந்தோடி இருந்ததன் அறிகுறிகள் அவை.  சிறிது நேரத்தில் மீண்டும் அதிர்ச்சி. தன் கைப்பையில் இருந்த பேனை எடுத்து தான் அழுவதை ஒரு செல்பி எடுக்கிறாள் அந்த இளம்பெண். அதனை அவசர அவசரமாக வாட்ஸ் அப் வழியாக அஞ்சல் செய்வது தெரிகிறது. மீண்டும்.. போனை கைப்பையில் இடுகிறாள். மீண்டும் இவன் நோட்ட மிடுகிறான். அவள் கண்களில் மீளவும்.. கண்ணீர் திரண்டு வழிகிறது. மீண்டும் செல்பி எடுக்கிறாள்..  இப்படியே.. செய்து கொண்டிருந்தவள்.. அவளின் தரிப்பிடம் வந்ததும் இறங்கிச் சென்று விடுகிறாள். ஆனாலும்.. அந்தப் பையனுக்குள் ஒரு கேள்வி.. அவளின் பரிதவிப்பு.. கண்ணீர் எல்லாமே.. பட்சாபத்திற்குரியது என்றாலும்.. எதற்கு அதனை செல்பி ஆக்கினாள்.. அஞ்சல் செய்தாள்.....???! விடை காண தேவையற்றவனாயினும்.. தனக்குள் எழுந்த வினாக்களோடு.. உலக மனித நடத்தைக் கோலங்களின் மாற்றங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவனாய்.. தன் வேலையிடம் நோக்கிப் போகிறான் அவன். வினாக்களுக்கோ விடையில்லாமலே தன்னைச் சுற்றிய உலகத்தில் நடப்பவற்றை எல்லாம் நொந்தபடி...!
    • சுவுக்கு அடிப்படையில்  கம்மனியூசுக்களுக்கு ஆதரவாக இருந்தவர். கம்னியூஸ்ட்டுக்களுக்கு புலிகள் என்றால் அலர்ஜி(தா.பாண்டியன் போன்றோர் விதிவிலக்கு). சவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்தார்.இந்தமுறை அதிமுகவை ஆதரித்தார். கம்னியூசத்தை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. சவுக்கு புலிகளுக்கு எதிராக பல முறை கருத்து தெரிவித்திருக்கிறார்.கடந்த முறை சிறைக்குப் போய் வந்த பிறகு திமுகவை கடுமையாக விமர்சித்தார்.  எதிரியின் எதிரி நன்பன் என்ற வகையில் கடந்த முறை சிறைக்குப் போன பொழது சீமான் அவருக்கு ஆதரவளித்தார். புலிகள் போதைப் பொருள் கடத்தியதாக ஒருமுறை குரத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு சீமான் நேரடியாக சவுக்குச் சங்கரை கண்டித்ததாக நான் அறியவில்லை. சீமான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் நாம் தமிழர்கட்சி சவுக்கு சங்கரை பலமாக விமர்சித்திருக்கிறது. குறிப்பாக சுவுக்குக்கு எதிராக சாட்டை  துரைமுருகன் சாட்டைவலையொளியில் பல முறை விமர்சித்திருக்கிறார்.  அண்மைக்காலமாக சவுக்கு சங்கர் நாம் தமிழரை ஒரு கட்சியாகவே  மதிப்பதில்லை.( யாழில் இருக்கும் சில சீமான் எதிர்ப்பாளர்களும் கிட்டத்தட்ட அந்த நிலைப்பாடுதான்).அதை ஒரு எங்சினியரிங் கொலிங் என்று விமர்சித்திருந்தார். ஒரு தொகுதி படிப்பு முடிந்து வெளியேற அடுத்த தொகுதி மாணவர்கள் வருவது போல என்றார். சின்னமே சிக்கவில்லை. நாடு எப்படிச்சிக்கும் என்று எக்காளமிட்டுச் சிரித்தார்.இடையில் அரசியலில் இறங்கப் போவதாக ஒரு ஸ்டன்ட் அடித்தார். யூன்  ஆ ம்திகதி தேர்தலில் நாம் தமிழ் கட்சியின் வாக்கு சதவீதம் அது எஞசியனியரிங் கொலிங்சா இல்லை களத்தில் நிற்கும் அரிசியல் கட்சியா என்று தெரியவரும். என்கு கொம்னியூஸ்ட்டுக் கொள்கையைும் அதனைப் பின்பற்றுவோரையும் அறவே பிடிக்காது. ஆது எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருக்குமே ஒழிய  எந்த முன்னேற்றத்திற்கும் உதவாது. ஆது ஒரு ஒரு தோல்வி அடைந்த கோட்பாடு.
    • என‌க்கு சென்னையை பிடிக்காது சென்னை அணி இள‌ம் க‌ப்ட‌ன் கெய்க்வாட் முத‌ல் முறை க‌ப்ட‌ன் ப‌தவு கொடுத்து இருக்கின‌ம்  கெய்க்வாட் அவ‌ருக்காக‌ சென்னை வெல்ல‌னும் என்று விரும்புவேன்....................இனி வ‌ரும் விளையாட்டுக‌ளில் தொட‌ர் வெற்றி பெற்றால் தான் 4லுக்குள் வ‌ர‌லாம்....................................    
    • எல்லாரும் க‌வுண்டு போய் கிட‌க்கிறோம் குஜ‌ர‌த் அணி அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளை ந‌ம்பி கீழ் ம‌ட்ட‌த்துக்கு வ‌ந்து விட்டின‌ம்........................ குஜ‌ராத் அணி அதிக‌ம் ந‌ம்பின‌து ர‌சித் ஹானை அவ‌ரின் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத்தின‌ம் எதிர் அணியின‌ர் ஜ‌க்க‌ம்மா மேல் ச‌த்திய‌ம் மிட்டு சொல்லுறேன் நான் தான் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ருவேன் , உங்க‌ளால் முடியுமா என் இட‌த்தை பிடிக்க‌ ஹா ஹா😁.......................................
    • கொஞ்சநேரம் பார்த்திருந்தால் மனம் அமைதியாகின்றது.......!  🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.