Jump to content

கண்ணீர்க் கோலம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடம்புரண்டோடும் மனித வாழ்வில்

தடம்புரளா வண்டி போல் அவன்

தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில்

தபுதாரனற்ற ஒருத்தன்

தவிப்பில் அவள்

தவிர்க்க முடியாது

தவித்த அவன் விழிகள்

தத்தை அவள்

தகிக்கும் வதனம் காண......

 

தண்ணீர் போல் கண்ணீர்

தத்தளிக்கும் துளிகள்

தரவரிசையாய் சரிகின்றன.

தவிக்கிறது அவன் மனசு

தரமறியாது

தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க..

தவிர்த்த விழிகள்

தகர்ந்து போகின்றன

தகரடப்பா போல் போனுக்கு

தத்தை அவள் கண்ணீர் கோலம்

தரவாகிறது

தகவலாய் மறுமுனை தாவ

தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...!

 

தகர்கிறது

தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில்

தகரும் அவள் வதனப் பூச்சொடு 

தத்தை மேல் வைத்த காருணியம்.

தவித்தே போகிறது அவன் மனம்

தரணியில் மனிதக் கோலங்கள் கண்டே...!

 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாகத்தில் தவித்திருக்கும் களத்துக்கு 

தண்ணீர் தந்ததுபோல் ஒரு கவிதை .......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, suvy said:

தாகத்தில் தவித்திருக்கும் களத்துக்கு 

தண்ணீர் தந்ததுபோல் ஒரு கவிதை .......!   👍

நன்றி சுவி அண்ணா.

===================

உண்மையில் இது ஒரு உண்மைச் சம்பவத்தை ஒட்டிய கிறுக்கல்.

காலை நேரம்.. வேலைக்கு கிளம்புகிறான் அந்த பையன். தன் துணைவி.. குடும்பத்திற்காகவும்.. தனக்காவும்.. நனிகுளிர் காலத்தின் அந்த நடுங்கும் குளிருக்குள் இருந்து தப்ப.... இழுத்துப் போர்த்திக் கொண்ட ஜாக்கட்டுக்குள் பதுங்கிய படி.. தொடரூந்தில் ஏறி அமர்கிறான். அதுவரை எதனையும் அவதானிக்காதவன்.. எதிர்முனையில் அமர்ந்திருந்த அந்த இளம் பெண்ணை காண்கிறான். தலையில் கறுத்த முக்காடு.. ஓரளவு மேக் கப்.. ஆனாலும் அவளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு என்பதை பார்த்த மாத்திரத்தில் உணர்ந்துவிடுகிறான்.

இருந்தாலும்.. அந்த நாட்டுச் சட்டப்படியும்.. அவனின் மனச்சாட்சிப்படியும்.... ஒருவரை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது.. வரவேற்கப்படவில்லை.. என்பதால்.. தன் நீளக்காற்சட்டை பொக்கட்டுக்குள் இருந்த போனை எடுத்து நோட்ட மிடுகிறான்..

என்ன ஒரு அதிர்ச்சி. எதிர்முனையில் அமர்ந்திருந்த பெண்.. அழுவது விம்பமாக விழுகிறது மீண்டும் அவன் கண் திரையில். எதற்கும் உறுதி செய்து கொள்ள நோட்டமிடுகிறான். ஆம் அவள் அழுகிறாள் தான். கண்ணீர் தாரையாகி கன்னங்களில் வழிந்தோடிய நெடிய கோடுகள் இரண்டு.. இரண்டு பக்க விழிகளின் கீழும்... பேட்டிருந்த மேக் கப்பை கழுவித்தள்ளியபடி.. வழிந்தோடி இருந்ததன் அறிகுறிகள் அவை. 

சிறிது நேரத்தில் மீண்டும் அதிர்ச்சி. தன் கைப்பையில் இருந்த பேனை எடுத்து தான் அழுவதை ஒரு செல்பி எடுக்கிறாள் அந்த இளம்பெண். அதனை அவசர அவசரமாக வாட்ஸ் அப் வழியாக அஞ்சல் செய்வது தெரிகிறது.

மீண்டும்.. போனை கைப்பையில் இடுகிறாள். மீண்டும் இவன் நோட்ட மிடுகிறான். அவள் கண்களில் மீளவும்.. கண்ணீர் திரண்டு வழிகிறது. மீண்டும் செல்பி எடுக்கிறாள்.. 

இப்படியே.. செய்து கொண்டிருந்தவள்.. அவளின் தரிப்பிடம் வந்ததும் இறங்கிச் சென்று விடுகிறாள்.

ஆனாலும்.. அந்தப் பையனுக்குள் ஒரு கேள்வி..

அவளின் பரிதவிப்பு.. கண்ணீர் எல்லாமே.. பட்சாபத்திற்குரியது என்றாலும்.. எதற்கு அதனை செல்பி ஆக்கினாள்.. அஞ்சல் செய்தாள்.....???!

விடை காண தேவையற்றவனாயினும்.. தனக்குள் எழுந்த வினாக்களோடு.. உலக மனித நடத்தைக் கோலங்களின் மாற்றங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவனாய்.. தன் வேலையிடம் நோக்கிப் போகிறான் அவன். வினாக்களுக்கோ விடையில்லாமலே தன்னைச் சுற்றிய உலகத்தில் நடப்பவற்றை எல்லாம் நொந்தபடி...!

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.