Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

87ம் ஆண்டில் புலிகளின் தோல்வியை இந்தியா தடுத்து நிறுத்தியது – கோதபாய ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

31 மே 2011

பிரிகேடியர் டென்சில் கொப்பாகடுவ, கேணல் விஜய விமலரட்ன ஆகிய இருவரும்..

1987ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை இந்திய மத்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1987ம் ஆண்டு இந்தியாவுடனான உறவு சரியான முறையில் பேணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு வடமராட்சி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் தலையீட்டினால் இந்த இராணுவ முன்நகர்வை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய காலானித்துவ ஆட்சியின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய மரபு ரீதியான போராக 87ம் ஆண்டு யுத்தம் கருதப்படுகின்றது.

பிரிகேடியர் டென்சில் கொப்பாகடுவ, கேணல் விஜய விமலரட்ன ஆகிய இருவரும் இந்த யுத்தத்தை வழிநடத்தியதுடன், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர் அரசியல் ரீதியான தலைமைத்துவத்தை வழங்கினர். எனினும், இந்திய அரசாங்கம் திடீரென இலங்கை வான் பரப்பிற்குள் பிரவேசித்து உணவுப் பொதிகளை போட்டதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து, புது டெல்லியுடன் சிறந்த உறவுகளைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த முனைப்புக்களுக்கு இராஜதந்திர ரீதியில் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில நட்பு ரீதியான நாடுகள் யுத்தத்திற்கு ஆரம்பம் முதல் உதவிகளை வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாத சில தரப்பினர் யுத்தத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

source:GTN.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரை சிங்களம் தனியே செய்து புலிகளிடம் தோற்றிருந்தால், தேசத்தின் நான்கில் ஒரு பகுதி மட்டும்தான் அவர்களின் கையை விட்டுப் போய் இருக்கும். ஆனால் மொத்த தேசத்தின் ஆதிக்கத்தையும் அன்னிய தேசங்களிடம் கொடுத்து புலியை வீழ்த்தி இருப்பது, தமிழருக்கு மட்டும் இல்லை இனிச் சிங்களவருக்கும் நாடு இல்லை என்ற யதார்த்தம்தான் வெளிப்பட்டிருக்கின்றது.

ஒருகாலத்தில் தனக்கு எதிராக பயகரவாதத்தை ஏவி விட்ட நாடே, இப்போது தனது பக்கம் என்று அதன் காலுக்குள் போய் நின்று சொல்லுகின்ற மாற்றத்திற்கு யார் காரணம்?

//

மூஞ்சை உடைய குப்புற விழுந்துவிட்டு மீசையில் மண் படவில்லையாம்...

:rolleyes:

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//

மூஞ்சை உடைய குப்புற விழுந்துவிட்டு மீசையில் மண் படவில்லையாம்...

:rolleyes:

வெற்றி, தோல்வியால் வீரம் அளவிடப்படுவது இல்லை பனங்காய்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சமர்களுக்கெல்லாம் தாய் சமர் என்று சொல்லி நடத்தின ஜெயசிக்குறு தோல்வியும் ஓயாத அலைகள் 3 இன் முடிவில் யாழ் குடாநாட்டில் படைகளை காக்க இந்தியா ஆயத்தம் செய்ததும்.. யாரைக் காப்பாற்றவாம்..! போடாங் கொய்யாலா. உள்ள பொய் எல்லாம் சொல்லி தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைச்சு மக்கள் மீது குண்டுகளைக் கொட்டி யார் தான் யுத்தம் செய்து வெல்ல முடியாது. கோழையும் செய்வான் அதை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதுவது நடந்தது 10ம் நூற்றாண்டில் நெடுக்ஸ்.............??? :(

வெற்றி, தோல்வியால் வீரம் அளவிடப்படுவது இல்லை பனங்காய்.

போரில் வீரன் கோழை எண்டு ஒருவரும் இல்லை.....

உயிருடன் இருக்கிறவர் வெண்டவர்.. அவர் சொல்வது மட்டும்தான் இனி நடக்கும்.

செத்துப்போனவர் தோத்தவர்.. தோத்தவருக்கு வாழுவதற்க்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது..

குணா ஸ்டைலில் சொல்வதானால்..

போரியல்/ அரசியலை தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் பூமி இல்லை..

அடிமையாக வாழ இயற்றப்பட்ட இனம் அரசனாவது இயற்கைக்கு முரனானது..

தூற்றுதல் ஒழி நேர்படப்பேசு

சொல்வது தெளிந்து சொல்

பூமி இழந்திடேல்

தோல்வியில் கலங்கேல்

செய்வது துணிந்துசெய். :(:(:(

அரசியல் போராட்டத்துக்கான தேவையை எமக்கு சிங்களம் தான் 1948 ஆம் ஆண்டிலிருந்து தந்து வருகின்றது.

அரசியல் உரிமையை வென்று எடுப்பதற்கு தொடர்ந்தும் வழிவகைகளை தேடி முயற்சிப்பதும், உழைப்பதுமே வெற்றியாகும்.

தூற்றுதல் ஒழி நேர்படப்பேசு

சொல்வது தெளிந்து சொல்

பூமி இழந்திடேல்

தோல்வியில் கலங்கேல்

செய்வது துணிந்துசெய். :(:(:(

வாயால் சொல்வதும் காதால் கேட்பதும் மெய்யல்ல.. தீர விசாரித்து அறிந்து கொள்வதே அறிவு......................................

எவ்வளவு தரம் எமது தலைவர்கள் ஏமாத்தினாலும் எமக்கு புத்தி வராது.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரில் வீரன் கோழை எண்டு ஒருவரும் இல்லை.....

உயிருடன் இருக்கிறவர் வெண்டவர்.. அவர் சொல்வது மட்டும்தான் இனி நடக்கும்.

செத்துப்போனவர் தோத்தவர்.. தோத்தவருக்கு வாழுவதற்க்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது..

குணா ஸ்டைலில் சொல்வதானால்..

போரியல்/ அரசியலை தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் பூமி இல்லை..

அடிமையாக வாழ இயற்றப்பட்ட இனம் அரசனாவது இயற்கைக்கு முரனானது..

புலியின் வீழ்ச்சி கொடுத்த துயர் காரணமாகின்ற புலித்தூசிப்பு ஒருவகை. இந்த வகைக்குள் பனங்காயின் தூசிப்பு அடங்குகின்றது.

புலியின் வீச்சி கொடுத்த மகிழ்ச்சி காரணமாகின்ற புலித்தூசிப்பு இன்னொரு வகை. இந்த வகைக்குள் வருவது அர்யுனின் புலித்தூசிப்பு.

புலியிசத்தில் எப்பவுமே நியாயம் தெரிந்திராத குருடு ஒன்றிற்கு முள்ளிவாய்க்காலுக்கு பிறகு அந்த நியாயம் போதிக்கும் உரிமையை நாம் கொடுக்கப் போவது இல்லை. புலிப்போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்த எங்கள் அறிவிற்கு அதற்கு எதிரணியில் நின்றோரின் அறிவீனத்தையும் எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

போராட்டம் எது? பயங்கரவாதம் எது? என்று வகைப்படுத்தும் உரிமை எடுப்பது அந்தந்த நாடுகளின் தேசநலம்.

இந்த அறிவு கூட இல்லாத உலக-அறிவுகளுக்கு புலிப்போராட்டத்தின் தோல்விக்கு புத்தி சொல்ல வருகின்றார்கள்.

பட்டினி கிடந்து, பல்லாயிரம் மக்களின் உழைப்பு ஒற்றுமையில் ஒரு அமைதிவழிப் போராட்டம் செய்யவே! அதை அரசுகள் ஒரு நொடி செலவில் அதன் கதையை மாற்றி எழுதுகின்ற வலி உடையவர்களாக இருக்கின்றார்கள்.

பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்திற்கு நிகழ்ந்த கொடுமை யாவரும் அறிவோம்!

உண்ணாவிரதி ஒருவர் உண்ணுகிறாரா? இல்லையா? என்பதை அறிய அவர் வாயில் கமறா இணைத்தால் கூட அது அல்ல வெற்றி அளிக்கக் கூடிய வழி. மருதுவப் பரிசோதனை ஒன்றுதான் அதை நிரூபிக்கக் கூடியது. ஒரு குழந்தப் பிள்ளை அறிவிற்கே பொருத்தம் இல்லாத பொய்யை மிகப் பெரிய இரண்டு பத்திரிக்கைகளான சன், மெயில் இவைகளைக் கொண்டு எம் இனத்தின் ஆன்மாவின் மேல் எப்படி சேறு பூசி இருக்கின்றார்கள்.

கையக் கட்டிக் கொண்டு அப்பாவித்தனமாக காலடியில் வீழ்ந்து இருக்கின்ற மனிதனின் முதுகிலேயே குத்துவதை ஒத்த் மிகவும் கேவலமான வழிமுறை கொண்ட இந்த அரசுகளா போர் முறையைச் சொல்லித்தரும் அருகதை உடையவர்கள்?

ஒருவன் தனது தேடலுக்கு பெறுமதியான தன் முயற்சியை செலவு செய்ய வேண்டும். அதன் பிறகும் அதை அடைய முடியவில்லை என்றால்கூட அந்த தோல்விசார்பாக வருந்த வேண்டியது தேவை இல்லாதது. இப்படித்தான் எமது போராட்டத்தின் உழைப்பும். மரணத்தின் வாசல் வரை விடுதலையை சுமந்த எங்கள் மாவீரர்களுக்கு எங்கள் நெஞ்சங்கள் என்றுமே துயிலும் ஆலயங்கள். இவர்களைக் கொச்சைப் படுத்துவதென்பது மிகவும் நன்றி கெட்டதனம்! பொறுத்துக் கொண்டிருக்கவும் முடியாதவை!

தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக கதைப்பவர்கள் எல்லொரும் தமிழ்தேசியத்துக்கு ஆதரவானவர்கள் அல்ல..

என்னும் தத்துவங்களை விளங்கிக்கொள்ளுங்கள்.

.

பாதிக்கப்பட்டது எல்லொரும்தான்.. செத்ததும் சாவு கொடுத்ததும் எல்லொரும்தான்.. ஒடுக்கப்படுகிறதும் எல்லொரும்தான்...

கேள்வி கேட்டால்....விளக்கம் கேட்டால்.... உந்தா மாவிரர்களை அவமதிக்கிறான் எண்டு வாயை அடைக்கும் தொழிலை விடுங்கள்..

இப்படி.. அளவுக்கு அதிகமாக குத்த வெளிக்கிட்டுதான் இண்டைக்கு ஆயிரெத்தெட்டு ஒட்டுகுழுக்கள்.. காட்டிக்கொடுப்புக்கள்...

அதான் சொல்லுவார்கள் தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் எண்டு... இவர்களால்தான் இண்டைக்கு முழுப்பிரச்சினையும்..

.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக கதைப்பவர்கள் எல்லொரும் தமிழ்தேசியத்துக்கு ஆதரவானவர்கள் அல்ல..

என்னும் தத்துவங்களை விளங்கிக்கொள்ளுங்கள்.

.

இங்கே கதைக்க மட்டும்தானே முடியும். புடுங்குகின்ற கதைகள் சொன்னால் கூட அவை இடப் பொருத்தம் இல்லாதவையே! தவிர அவை மதிக்கப்படவும் மாட்டாது.

அவர் அவருக்கு என்று அறிவு உண்டு அதைக் கொண்டு எடை போடுகின்ற உரிமையும் அனைவருக்கும் உண்டு.

சமூக சிந்தனை என்பது மக்களை நேசிக்கும் உணர்வுடையவனுக்கு ஆகின்றது.

அடுத்தவன் பாதிக்க வாழ்கின்றன் சமூக சிந்தனை போதித்தால் அவன் பஞ்சம் பிழைக்கின்ற வழி என்றே கொள்வோம். அப்படி பஞ்சம்பிழைப்பவர்களுக்கு சிங்களத்தேசியத்தின் பக்கமே இன்று வளமான எதிர்காலம் காத்திருக்கின்றது. எனவே இந்தக்கரை அவர்களுக்கு பிடிக்காத கரையாகவே இருக்கும்.

.

.

.

.

புலியின் வீழ்ச்சி கொடுத்த துயர் காரணமாகின்ற புலித்தூசிப்பு ஒருவகை. இந்த வகைக்குள் பனங்காயின் தூசிப்பு அடங்குகின்றது.

புலியின் வீச்சி கொடுத்த மகிழ்ச்சி காரணமாகின்ற புலித்தூசிப்பு இன்னொரு வகை. இந்த வகைக்குள் வருவது அர்யுனின் புலித்தூசிப்பு.

புலியிசத்தில் எப்பவுமே நியாயம் தெரிந்திராத குருடு ஒன்றிற்கு முள்ளிவாய்க்காலுக்கு பிறகு அந்த நியாயம் போதிக்கும் உரிமையை நாம் கொடுக்கப் போவது இல்லை. புலிப்போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்த எங்கள் அறிவிற்கு அதற்கு எதிரணியில் நின்றோரின் அறிவீனத்தையும் எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

போராட்டம் எது? பயங்கரவாதம் எது? என்று வகைப்படுத்தும் உரிமை எடுப்பது அந்தந்த நாடுகளின் தேசநலம்.

இந்த அறிவு கூட இல்லாத உலக-அறிவுகளுக்கு புலிப்போராட்டத்தின் தோல்விக்கு புத்தி சொல்ல வருகின்றார்கள்.

பட்டினி கிடந்து, பல்லாயிரம் மக்களின் உழைப்பு ஒற்றுமையில் ஒரு அமைதிவழிப் போராட்டம் செய்யவே! அதை அரசுகள் ஒரு நொடி செலவில் அதன் கதையை மாற்றி எழுதுகின்ற வலி உடையவர்களாக இருக்கின்றார்கள்.

பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்திற்கு நிகழ்ந்த கொடுமை யாவரும் அறிவோம்!

உண்ணாவிரதி ஒருவர் உண்ணுகிறாரா? இல்லையா? என்பதை அறிய அவர் வாயில் கமறா இணைத்தால் கூட அது அல்ல வெற்றி அளிக்கக் கூடிய வழி. மருதுவப் பரிசோதனை ஒன்றுதான் அதை நிரூபிக்கக் கூடியது. ஒரு குழந்தப் பிள்ளை அறிவிற்கே பொருத்தம் இல்லாத பொய்யை மிகப் பெரிய இரண்டு பத்திரிக்கைகளான சன், மெயில் இவைகளைக் கொண்டு எம் இனத்தின் ஆன்மாவின் மேல் எப்படி சேறு பூசி இருக்கின்றார்கள்.

கையக் கட்டிக் கொண்டு அப்பாவித்தனமாக காலடியில் வீழ்ந்து இருக்கின்ற மனிதனின் முதுகிலேயே குத்துவதை ஒத்த் மிகவும் கேவலமான வழிமுறை கொண்ட இந்த அரசுகளா போர் முறையைச் சொல்லித்தரும் அருகதை உடையவர்கள்?

ஒருவன் தனது தேடலுக்கு பெறுமதியான தன் முயற்சியை செலவு செய்ய வேண்டும். அதன் பிறகும் அதை அடைய முடியவில்லை என்றால்கூட அந்த தோல்விசார்பாக வருந்த வேண்டியது தேவை இல்லாதது. இப்படித்தான் எமது போராட்டத்தின் உழைப்பும். மரணத்தின் வாசல் வரை விடுதலையை சுமந்த எங்கள் மாவீரர்களுக்கு எங்கள் நெஞ்சங்கள் என்றுமே துயிலும் ஆலயங்கள். இவர்களைக் கொச்சைப் படுத்துவதென்பது மிகவும் நன்றி கெட்டதனம்! பொறுத்துக் கொண்டிருக்கவும் முடியாதவை!

நீங்கள் மகாபாரதபோரையும் ஈழப்போரையும் போட்டுக்குழப்பிகொண்டிருக்கிரீங்கள்...

தர்மம் நியாயம் மனிதாபிமானம் எண்டு பயித்தியம் விளையாட வெளிக்கிட்டபடியால்தான் இண்டைக்கு எமக்கு இந்தக்கதி....

இங்கே கதைக்க மட்டும்தானே முடியும். புடுங்குகின்ற கதைகள் சொன்னால் கூட அவை இடப் பொருத்தம் இல்லாதவையே! தவிர அவை மதிக்கப்படவும் மாட்டாது.

அவர் அவருக்கு என்று அறிவு உண்டு அதைக் கொண்டு எடை போடுகின்ற உரிமையும் அனைவருக்கும் உண்டு.

சமூக சிந்தனை என்பது மக்களை நேசிக்கும் உணர்வுடையவனுக்கு ஆகின்றது.

அடுத்தவன் பாதிக்க வாழ்கின்றன் சமூக சிந்தனை போதித்தால் அவன் பஞ்சம் பிழைக்கின்ற வழி என்றே கொள்வோம். அப்படி பஞ்சம்பிழைப்பவர்களுக்கு சிங்களத்தேசியத்தின் பக்கமே இன்று வளமான எதிர்காலம் காத்திருக்கின்றது. எனவே இந்தக்கரை அவர்களுக்கு பிடிக்காத கரையாகவே இருக்கும்.

இது தவறு.. விழங்கப்படுத்த ஏலும்.. பொறுமையில்லை.. MSNஇல் சேர்த்துக்கொள்ளுங்கோ.. MrPandaram@live.co.uk ஆறுதலாய் கதைப்பம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதிக்கப்பட்டது எல்லொரும்தான்.. செத்ததும் சாவு கொடுத்ததும் எல்லொரும்தான்.. ஒடுக்கப்படுகிறதும் எல்லொரும்தான்...

கேள்வி கேட்டால்....விளக்கம் கேட்டால்.... உந்தா மாவிரர்களை அவமதிக்கிறான் எண்டு வாயை அடைக்கும் தொழிலை விடுங்கள்..

இப்படி.. அளவுக்கு அதிகமாக குத்த வெளிக்கிட்டுதான் இண்டைக்கு ஆயிரெத்தெட்டு ஒட்டுகுழுக்கள்.. காட்டிக்கொடுப்புக்கள்...

அதான் சொல்லுவார்கள் தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் எண்டு... இவர்களால்தான் இண்டைக்கு முழுப்பிரச்சினையும்..

.

.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னால் புலி இருக்கின்றது அதை தூக்கிவிடுங்கள் என்று சொல்கின்றோமா? புலி என்ற கதை முள்ளிவாய்காலுலன் முடிந்து விட்டது. ஆனால் அவர்களின் போராட்டத்டை கொச்சைப் படுத்த வேண்டாம் என்கின்றோம். இதற்கு எதிர்வினை ஒன்றை செய்வதனூடு எந்த வகையான இலாபத்தை அடைய முற்படுவீர்கள்?

புலிகளின் இறுதித் துடிப்பாக முள்ளிவாய்க்காலில் இருந்தது போராட்டத்தின் தக்கவைப்பு ஒன்றுதான். அந்த உயிர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்றால் எபோதோ அதை அவர்கள் எத்தனை வழிகளினூடு சாதித்திருக்கலாம். முகாம் தகர்ப்புக்களில் ஆயிரம், ஆயிரமாய் உயிர்களைக் கொடுத்து வெற்றியைப் பறித்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் மட்டும் என்ன மரணபயமா வந்தது? அடுத்தவன் மரணம் காவல் செய்த புலிநிலத்தை போற்றியவர்கள் சொந்த மரணத்தில் காவல் செய்யும் நிலை வந்த போது தூற்றியது நியாயமா?

முள்ளிவாய்க்காலுக்கு பின்னால் புலி இருக்கின்றது அதை தூக்கிவிடுங்கள் என்று சொல்கின்றோமா? புலி என்ற கதை முள்ளிவாய்காலுலன் முடிந்து விட்டது. ஆனால் அவர்களின் போராட்டத்டை கொச்சைப் படுத்த வேண்டாம் என்கின்றோம். இதற்கு எதிர்வினை ஒன்றை செய்வதனூடு எந்த வகையான இலாபத்தை அடைய முற்படுவீர்கள்? புலிகளின் இறுதித் துடிப்பாக முள்ளிவாய்க்காலில் இருந்தது போராட்டத்தின் தக்கவைப்பு ஒன்றுதான். அந்த உயிர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்றால் எபோதோ அதை அவர்கள் எத்தனை வழிகளினூடு சாதித்திருக்கலாம். முகாம் தகர்ப்புக்களில் ஆயிரம், ஆயிரமாய் உயிர்களைக் கொடுத்து வெற்றியைப் பறித்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் மட்டும் என்ன மரணபயமா வந்தது? அடுத்தவன் மரணம் காவல் செய்த புலிநிலத்தை போற்றியவர்கள் சொந்த மரணத்தில் காவல் செய்யும் நிலை வந்த போது தூற்றியது நியாயமா?

விடிய விடிய இராமயணம் விடிஞ்சாப்பிறகு கேட்டானாம் துரௌபதி தர்மனுக்கு என்ன முறை எண்டு..

புலிகளுக்கும் புலிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாத்தை உங்களை போன்றவர்கள் அறியாமையினால்தான் கொழுத்த பூனைகள் இன்னும் கொழுக்கிறார்கள்..

.

87ம் ஆண்டும் வடமராட்ச்சில் படுகொலைகள் நடந்த்து நாங்கள் தென்மராட்சிக்கு இடம் பெயர்ந்து வயல்வெளியில் போகும் போது ஹெலியில் வந்து அடிச்சு பலர் இறந்தார்கள். சிலர் உடல்களைக் கூட எடுக்கமால் போய்விட்டு பிறகு 4 5 நாட்களுக்கு பின் வந்து தான் எடுத்து அந்த அந்த இடத்திலையே எரித்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடிய விடிய இராமயணம் விடிஞ்சாப்பிறகு கேட்டானாம் துரௌபதி தர்மனுக்கு என்ன முறை எண்டு..

புலிகளுக்கும் புலிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாத்தை உங்களை போன்றவர்கள் அறியாமையினால்தான் கொழுத்த பூனைகள் இன்னும் கொழுக்கிறார்கள்..

.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னால் எந்தப் பூனை ஐயா உங்களிடம் காசுவாங்க வந்தது. எப்படி இனி அது கொழுக்கப் போகின்றது? செத்தவர்களை தூசிக்விடு இல்லை என்றால் பூனைகள் கொழுத்திடும் என்றால் இதில் பொருள் உண்டானமாதிரி தெரிய வில்லையே!

கடன் அடிப்படியில் பெறப்பட்ட பணம் மீள் மாட்டுது என்ற வயித்தெரிச்சலா இத்தனைக்கும் காரணம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.