Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணு மின் நிலையங்களை இழுத்து மூடும் ஜெர்மனி!

Featured Replies

அணு மின் நிலையங்களை இழுத்து மூடும் ஜெர்மனி!

அடுத்த 11 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் இழுத்து மூட ஜெர்மனி முடிவு செய்துள்ளது. மேலும் இனிமேல் புதிதாக எந்த அணு மின் நிலையத்தையும் அமைப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளது.

இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022க்குள் மூடி விட முடிவு செய்துள்ள அந் நாட்டுப் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன என்றார்.

அந் நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நார்பெர்ட் ரோட்ஜென் கூறுகையில், இந்த முடிவு இறுதியானது, மாற்றப்படாதது. நாட்டில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், பழைமையான 8 அணுமின் நிலையங்களின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்படும். 6 அணுமின் நிலையங்கள் 2021ம் ஆண்டிலும், 3 அதி நவீன அணுமின் நிலையங்கள் 2022ம் ஆண்டிலும் மூடப்படும் என்றார்.

ஜெர்மனியின் 23 சதவீத மின் தேவையை 17 அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அணு மின் நிலையங்களை மூடுவதால் ஏற்படும் மின் உற்பத்தியின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு (renewable enetrgy) ஜெர்மனி மாற வேண்டியுள்ளது. இதற்காக எரிசக்தித் துறையில் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

English summaryThe German government announced Monday plans to shut all of the nation's nuclear power plants within the next 11 years, a sharp reversal for Chancellor Angela Merkel after the Japanese disaster at Fukushima caused an electoral b

backlash by voters opposed to reliance on nuclear energy.

http://thatstamil.oneindia.in/news/2011/05/31/germany-lead-green-energy-with-nuclear-shutdown-merkel-aid0090.html

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011 14:34 |

அணு உலைகளை மூடுவதால் பொருளாதாரம் மந்தமாகி உள்ளது: பொருளாதார ஆய்வு நிறுவனம் தகவல்

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஜேர்மனியில் உள்ள அணு மின் நிலையங்களை மூட அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி ஜப்பான் புகுஷிமாவில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பால் அங்குள்ள முதன்மை அணு மின் நிலையத்தில் கதிர் வீச்சு பரவி மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அணு மின் நிலையங்களை முட ஏங்கலா மார்கெல் தலைமையிலான ஜேர்மனி அரசும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது ஜேர்மனியில் பொருளாதாரம் மிக மந்த நிலையில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் நிதி பிரச்னையால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது என அனைவரும் கருதினர். ஆனால் அணு உலைகளை மூடும் முடிவே பொருளாதார மந்த நிலைக்கு காரணம் என மூனிச்சை மையமாக கொண்ட பொருளாதார ஆராய்ச்சி நிறவனம்(ஐ.எப்.ஓ) தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர்களில் ஒருவரான காய் கார்ஸ்டென்சன் கூறியதாவது: இந்த ஆண்டு எதிர்பார்த்த படியே பொருளாதார வளர்ச்சி 0.2 சதவீதத்தை எட்டியிருக்கும்.

ஆனால் ஆண்டு துவக்கத்தில் அணு உலைகளை மூடுவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அணு உலைகளை மூடுவதால் எரிசக்தி செலவு அதிகரிக்கும் என நோவரிட்ஸ் போன்ற சர்வதேச மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் மற்றும் ஜூன் மாத கால கட்டத்தில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதமே உள்ளது. இது ஜேர்மனி அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=9394:2011-08-21-14-39-18&catid=47:2011-04-30-08-39-35&Itemid=103

  • தொடங்கியவர்

பொருளாதாரம் முன்னேற மின்சாரம் மலிந்த விலையில் வேண்டும் என்பது உண்மை. ஆனால் அணு மின்சக்தியின் அபாயங்களை ஜப்பான் நாட்டில் நடந்த சுனாமி மூலம் அவர்கள் கசப்பான பாடத்தை படித்துள்ளார்கள். பொருளாதார இலாபத்தை நாட்டு நலன் மேலாக பார்ப்பது நீண்டகால அடிப்படையில் ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

அணுமின்நிலையங்களை மூடுவதால் புதிய ஆராய்ச்சிகள் மற்றும் திட்டங்களுக்கான நிதிகள் செலவிடப்படும். இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்

யப்பானை படிப்பினையாக கொண்டு ஜேர்மனி தனது அணு உலைகளை மூடுவது நாட்டு மக்களில் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.

புதிய வகையில் மின்சாரத்தை உருவாக்குவதன் மூலம் (ஜேர்மனியர்கள் உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை)எதிர்காலத்தில் அத்தொழில் நுட்பத்தை ஏனைய நாடுகளுக்கும் விற்கலாம்.தற்காலிகமான பொருளாதார தளம்பல் ஏற்பட்டாலும் நீண்ட கால நோக்கில் ஜேர்மனியின் முடிவு அந்நாட்டுக்கு பயனளிக்கத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.