Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கு வளர்கின்றது வடக்கு தேய்கிறது- ஒரு ஆய்வு

Featured Replies

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பும் பணி எந்தளவுக்கு உள்ளது என்று இலங்கையில் எத்தனை பேருக்குத் தெரியும்? போரின் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், இழப்பீடு போன்றவை எந்தளவில் வழங்கப்பட்டுள்ளன என்ற அறிதல்

எத்தனை பேரிடம் உள்ளது? யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களின் பிரச்சினைகளும் தேவைகளும் எந்தளவுக்குத் தீர்க்கப்பட்டுள்ளன? இந்த மாதிரியான கேள்விகள் நிச்சயமாக இலங்கையில் இருக்கின்ற ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்திருக்க வேண்டும்.

ஏனெனில், அமைதியை நோக்கியும் அபிவிருத்தியை நோக்கியும் சமாதானத்தை நோக்கியும் அரசியற் தீர்வை நோக்கியும் இலங்கைத் தீவு பயணிக்க வேண்டுமாயின் போர்ப் பிரதேசங்களின் இயல்பு நிலையும் அபிவிருத்தியும் முதலில் சமனிலை அடைய வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் நீடித்த யுத்தத்தினால் வடக்குக் கிழக்குப் பகுதிகள் முற்றாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றன. அங்குள்ள மக்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இந்தப் பாதிப்புகளை அரசாங்கம் எந்தளவுக்கு நிவர்த்தி செய்திருக்கிறது என்று சிந்திக்க வேண்டியது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவனதும் கடமையாகும். அவ்வாறே இந்தப் பிரதேசங்களை மீள் நிலைப் படுத்துவதற்கு உழைப்பதும் இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு உதவுவதும் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.

யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் எப்போதும் பிரச்சினைகளும் அதிகமாக இருக்கும்.

அங்கே தேவைகளும் அதிகமாக இருக்கும். யுத்தம் எல்லாவற்றையும் அழித்து நிர்மூலமாக்கி விடுவதால் இந்த நிலைமை ஏற்படுகிறது.

இந்த அதிகத்த தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அங்குள்ள ஏராளமான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் அங்கே சிறப்பான நிர்வாக அலகும் விசேடமான திட்டங்களும் அவற்றை நடைறைப்படுத்துவதற்கான பொறிறையும் வளங்களும் அவசியம்.

இல்லையெனில் போனால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பவும் முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் இயலாது.

அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியாது.

இப்படியே நிலைமை நீடித்தால் அது நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கும். நாட்டின் வளர்ச்சியில் பிரதேசங்களின் சமனிலை என்பது முக்கியமானது. ஒரு பிரதேசம் அதிகமான வளர்ச்சியை எட்டுவதும் ஏனைய பிரதேசங்கள் வளர்ச்சியின்மையில் இருப்பதும் நிச்சயமாக பல முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். சமனிலைத் தளம்பல்களே இன, மத, பிரதேச முரண்பாடுகளுக்கான அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.

முரண்பாடுகளின் மத்தியில் இலக்குகளை எட்டுவது என்பது சிரமமான காயமாகும்.

ஆகவே, பிரதேசங்களுக்கிடையில் உறவை வலுப்படுத்துவதும் அவற்றுக்கிடையிலான பரிவர்த்தனைகளை அதிகப்பதும் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்தும்.

இதற்குப் பிரதேசங்களிடையே சமனிலை வளர்ச்சி ஏறக்குறையப் பராமக்கப்பட வேண்டும். இலங்கையில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பதும் இந்தப் பிரதேசங்களின் இயல்பு நிலை என்பதும் வளர்ச்சி என்பதும் ஏனைய பிரதேசங்களையும் விட முற்றிலும் வேறாகவே இருக்கின்றன. ஏறக்குறைய இந்தப் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பது குறைவிருத்தியாகவே காணப்படுகிறது.

போர்ப் பாதிப்புக் குறைந்த அம்பாந்தோட்டை மற்றும் காலி போன்ற மாவட்டங் களுக்கு அபிவிருத்தியில் வழங்கப்பட்ட முன்னுமையும் விசேட கவனம் போர்ப்பாதிப்புக்குள்ளாகிய வடக்குக் கிழக்கிற்கில்லை என்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வடக்குக் கிழக்குக்கான விசேட நிதி ஒதுக்கீடும் அந்த நிதியை சிறப்புத் திட்டங்களின் வழியாக அபிவிருத்திக்குப் பயன்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் குறைவிருத்தி நிலையைக் கடக்க முடியாத நிலையே நீடிக்கிறது.

வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்றவற்றின் மூலமாகச் செலவழிக்கப் படும் பணத்தின் அளவுக்கு அவற்றின் விளைபலன் போதாது என்பதே பலருடைய அபிப்பிராயமாகும்.

இதற்குக் காரணம் இங்கே இன்னம் சிவில் நிர்வாக இயந்திரத்தின் பலம் போதாமையே ஆகும். இங்கே சிவில் நிர்வாகத்தை பலப்படுத்துவதற்கு இரண்டு பிரதான பிரச்சினைகள் உள்ளன.

ஒன்று, சிவில் நிர்வாகத்திற்கான ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகள். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தேவைகளும் பிரச்சினைகளும் அதிகமாக இருக்கும் அளவுக்கு அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை அதிகமாக உள்ளன. அரச திணைக்களங்களிலும் நிர்வாகச் செயலகங்களிலும் இந்தப் பற்றாக்குறை காரணமாக பல வேலைகள் செய்யப்படாமல் தாமதிக்கப்படுகின்றன.

காணி, பிறப்பு இறப்புப் பதிவுகள், நிவாரணம் வழங்கப்படுதல், உதவிப் பொருட்கள் வினியோகம், வீதி அபிவிருத்தி, கட்டுமானப்பணிகள், மின்விநியோகம், மருத்துவசேவை, போக்குவரத்து போன்ற பலவற்றையும் மீள் நிலைப்படுத்துவதற்கு இந்த வளப்பற்றாக்குறைகளும் ஆளணிப்பற் றாக்குறைகளும் பெரும் பிரச்சினையாக இருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள நிர்வாகப் பணி மனைகளில் ஏறக்குறைய 550 வரையான ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டியிருக்கிறது என யாழ். மாவட்ட அரச அதிபர் தெவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலும் இதே நிலைமைதான் உள்ளது.

குறிப்பாக இந்த மாவட்டங்களில் உள்ள ஒரு கிராம சேவையாளர் சராசரியாக இரண்டு அல்லது மூன்று பிரிவுகளைத் தமது சேவைப் பகுதிகளாக வைத்திருக்க வேண்டியுள்ளது.

இங்கே மேற் கொள்ளப்படுகின்ற வீதி அபிவிருத்தியைப் பார்வையிடுவோருக்கான வாகன வசதிகள் கிடையாது. பல அலுவலகங்களில் இன்னும் போதிய இடவசதியோ தளபாட வசதியோ ஏற்படுத்தப் படவில்லை.

பல மருத்துவ மனைகள் மருத்துவர்களுக் கான பற்றாக்குறை வெற்றிடங்கள் காரணமாக மூடப்பட்டிருக்கின்றன. சில மருத்துவ மனைகள் இன்னம் திருத்தப்படவோ கட்டப்படவோ இல்லை.

குறிப்பாக பளை, மருதங்கேணி, இயக்கச்சி, ஆனையிறவு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் இருந்த மருத்துவமனைகள் முற்றாகவே அழிந்து விட்டன. இவற்றைக் கட்டும் பணி இன்னும் ஆரம்பிக்கப்பட வேயில்லை.

பல பாடசாலைகள் இன்னம் தமது வகுப்பறைகளையும் மாணவர்களையும் மரங்களின் கீழேயே வைத்திருக்கின்றன. இதை விட வடக்குக் கிழக்குப் பிரதேசங்களின் பல பகுதிகளில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிவில் நிர்வாகம் இன்னொரு முறையில் இருந்தது.

குறிப்பாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் அவர்களின் நிர்வாக நடைறைகளே அங்கிருந்துள்ளன. இப்போது மீண்டும் அரச நிர்வாகம் அங்கே அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால், அந்த நிர்வாகத்தை மக்களுக்குப் பழக்கப்படுத்துவதற்கே கூடுதலாகச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதாவது, சிவில் நிர்வாக நடைறைகள், சட்டங்கள் தொடர்பான அறிமுகத்தைச் செய்யவே முடியாத நிலை காணப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு நிர்வாகப் பிரிவும் மேலதிகமாக தமது உழைப்பைச் செலவிட வேண்டியுள்ளது. இரண்டாவது போர் நடைபெற்ற பிரதேசங்கள் என்ற வகையில் இந்தப் பிரதேசங்களில் இன்னும் அதிகத்த இராணுவப் பிரசன்னம் இராணுவ ஆதிக்கம் உள்ளது.

படைத்தரப்பின் முதன்மைப்பாடுகளும் அவற்றின் நலன்களுமே இந்தப் பிரதேசங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன. படையினருக்கான வள ஒதுக்கீடுகள் (காணி வழங்கப்படுதல், பிரதேசங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்கள், மக்களின் வாகனங்கள் படையினன் பிடியில் இருப்பது) நிர்வாக நடவடிக்கைகளில் படைத்தரப்பின் பிரசன்னம் அல்லது தலையீடு போன்றவை சிவில் நிர்வாக நடைறை களைத் தாமதத்திற்குள்ளாக்குகின்றன.

ஆகவே சிவில் இயந்திரத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள் மிகச் சிரமத்துக்குரிய ஒன்றாகவே உள்ளன.

இந்த நிலையில் போரின் பாதிப்புகளில் இருந்து இந்தப் பிரதேசங்களை மீட்டெடுப்பது என்பது, மிகச் சவாலான விடயமாகும்.

இந்தப் பிரதேசங்களின் நிலைமையைச் சீராக்குவதற்கு அரசாங்கம் உடனடியாகவே சிறப்புத் திட்டமொன்றை வகுக்க வேண்டும்.

போரின் பாதிப்புகளைச் சீர்ப்படுத்தவில்லை என்றால், உடலில் உள்ள காயத்தை ஆற்றாமல், அதைச் சீழ்ப்பிடிக்க வைத்திருக்கும் ஒரு நிலையைப் போலவே நாட்டின் காயத்தை ஆற்றாமல் அதைச் சீழ்ப்பிடிக்க வைத்திருக்கும் நிலையை ஏற்படுத்தும்.

இது நாட்டுக்குத் தீராத வலியைத் தருவதாகவே அமையும். யுத்தம் முடிந்தால் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்ற ஒரு கருத்து அரசாங்கத்தினாலும் அதற்கப்பால் பல்வேறு தரப்பினராலும் பரப்பப்பட்டு வந்தது. ஆனால், யுத்தம் முடிந்தாலும் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே இன்றுள்ள உண்மையும் யதார்த்தம்.

ஆகவே எங்கோ குறைபாடிருக்கிறதல்லவா? இந்தக் குறைபாடென்பது சாதாரணமான தல்ல. மிகப் பெரிய குறைபாடாகும்.

யுத்தம், யுத்தகாலம் சாதாரணமானவையல்ல. மனித இருப்புக்கே அச்சுறுத்தலானவை. இந்த அச்சுறுத்தலான நிலையைக் கடப்பதற்கு போரின் முடிவு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தாலும் காயங்களை ஆற்றுவதற்கு போருக்குப் பிந்திய நடவடிக்கைகள் சீராக அமைந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை என்பதே கவலைக்குரியது. அத்துடன் இந்தக் கவலையை நாட்டு மக்கள் தங்கள் கவனத்திற் கொள்ளவில்லை என்பது இன்னும் கவலையளிப்பதாகவே இருக்கிறது. இது ஐக்கியம், சமாதானத்துக்கான வழிறைகளைக் குறித்துச் சிந்திப்பதில் கேள்விகளை ஏற்படுத்துகிறது.

யுத்தம் முடிந்தால் நிச்சயமாக நல்லதொரு காலம் பிறக்கும் என்று சனங்கள் நம்பியதில் தப்பில்லை. ஆனால், யுத்தம் முடிந்த பிறகும் மக்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன.

இந்தப் பிரச்சினைகள் சாதாரண பிரச்சினைகளும் அல்ல. ஒன்றிரண்டு பிரச்சினைக ளுமல்ல.

ஏராளம் பிரச்சினைகள். ஏராளம் தேவைகள்.

யுத்தகாலத்தின் பிரச்சினைகளையும் குறை பாடுகளையும் மக்கள் யுத்தத்தின் பேரால் ஏற்றுக் கொண்டார்கள். இப்போது யுத்தம் முடிந்து விட்டது. ஆகவே மக்கள் எதன் பொருட்டும் தங்கள் பாதிப்புகளையும் குறைபாடுகளையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே இது நாளடைவில் ஒரு அரசியல் நெருக்கடியாக இலங்கையில் மீண்டும் உருவாகும்.

அதாவது, யுத்தம் முடிந்தாலும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளும் அரசியல் நெருக்கடிகளும் தீரவில்லை என்பது இந்த நாடு இன்னம் புதிய திசையில் பயணிக்க வில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.

http://akkinikkunchu.com/new/

1. ஒரு அடக்குமுறை ஆட்சியில் உண்மையான அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது.

2. இலங்கையின் ஏனைய பகுதிகளில் வேலையில்லாதவர்களின் வீதம் கிட்டத்தட்ட 5 வீதமாக மாத்திரம் இருக்கும் நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தில் அந்த வீதம் அதன் இருமடங்காக இருப்பதாக அவர் கூறினார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80651&pid=662770&st=0&#entry662770

3. அரசியல் உரிமைகளை மறுக்கும் அதேவேளை, வங்கிகளை திறந்தும், நேர்டோ போன்ற அமைப்புக்களை திறந்தும் புலம்பெயர் மக்களின் பணத்தில் குறியாய் உள்ளது சிங்களம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒன்றை மட்டும் இலகுவாக மறந்து விடுகின்றோம்.

சிங்களத்தினதும் அதன் உறவுகளினதும் உண்மையான நோக்கம் அபிவிருத்தியல்ல.

'பயங்கரவாதம்' என்ற வார்த்தையை எவ்வாறு உபயோகித்து எங்களை அழித்ததோ, இப்போது 'அபிவிருத்தி' என்ற வார்த்தைப் பாவித்து எங்களை ஓரங்கட்டுகின்றது!

சிங்களம் சிறுது சிறிதாக எங்கள் அடையாளத்தை அழித்து, இறுதியில் தற்போதுள்ள முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்திற்கு எமது இனத்தைக் கொண்டு வந்தால், இனப் பிரச்சனை என்ற ஒன்று இல்லாமலே போகும்!

அதற்கிடையில் நாங்கள் விழித்தெழுந்து, எங்களுக்கான ஒரு தீர்வைத் தேடிக் கொள்ள வேண்டும்!!!

அதென்ன வடக்குத் தேய்கிறது? வடக்கு மட்டுமா தமிழர் பிரதேசம்? எழுதினவரும் ஒரு பிரதேச வாதியோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.