Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. வில் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்ற ஆவணக் காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. வில் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்ற ஆவணக் காட்சி (காணொளி இணைப்பு)

பதிந்தவர்: தம்பியன் சனி, 4 ஜூன், 2011

நேற்று ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் காண்பிக்கப்படும் என சனல்4 அறிவித்த "இலங்கையின் கொலைக்களம்" என்னும் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது சனல்4 வெளியிட்டுள்ள இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நேற்று மிகப் பெரும் பேசு பொருளாகவே இருந்தது.

பார்வையாளர்களின் கண்களில் இருந்து வந்த கண்ணீரும், சில காட்சிகளை பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.

இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்ட இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் பார்வையிட்ட போதிலும், தாம் ஏற்கனவே இக்காணொளிகள் தொடர்பாக விசாரணைக்குட்பட்டுவிட்டதாக தட்டுத்தடுமாறி கருத்து தெரிவித்திருப்பினும், சனல்4 செய்தியாளர் ஜொனத்தன் மில்ரர் சந்தித்து உரையாட முற்பட்டவேளை 'தனக்கு ஒரு மீட்டீங்' இருப்பதாக கூறி அங்கிருந்து விரைந்து சென்றது கானக்கூடியதாக இருந்தது.

செல்பேசியில் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல் 04 தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் காடைத்தனமான தாக்குதல் காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளும் அதன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகளும் சனல் 04 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பார்ப்போரை அழவைத்துள்ளது.

சனல் 04 தொலைக்காட்சியானது இதுவரை வெளியிடாத மிகவும் பயங்கரமான தமிழ் மக்கள் மீதான கண்மூடித்தனமான போர் அவலக் காட்சிகளையும் இந்த ஆவணத் திரைப்படம் தாங்கியுள்ளது.

SriLanka;s Killing Fieldsஇலங்கையின் படுகொலைக் களம் என வெளியான இத்திரைப்படம் எதிர்வரும் 14ம் திகதி மக்கள் பார்வைக்காக விடப்படும் என சனல்4 செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.vannionline.com/2011/06/blog-post_04.html

நன்றி - Vannionline

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

'MAKE OR BREAK' என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்தொடர் உண்டு.

அது மாதிரித்தான் இந்த ஆவணப் படத்தையும் நான் நினைக்கின்றேன்!

மனித அவலம் ஒன்று நடந்ததை அறியும் போது, மனிதகுலம் எமக்குத் தெரியாத ஒரு காரணத்தால் ஒன்று படுவதை நான் பல தடவைகள் அவதானித்திருக்கின்றேன்!

அண்மையில் அவுஸ்திரேலியா வந்த அகதிப் படகொன்று, கடற்காற்றில் அகப் பட்டுப் பாறையில் நொறுங்கி உடைந்தது!

பொதுவாக அகதிகள் வரவை எதிர்ப்பவர்கள் கூட, அரசு நடந்து கொண்ட முறை சரியானதல்ல என்றும், அந்த அகதிகள் நினைவாக ஒரு நடுகல்லும் வைத்து இருக்கின்றார்கள்!

அந்த அகதிகளுக்குக் கிடைத்த நடுகல் கூட, எங்கள் தமிழாராய்ச்சி மாநாட்டில் இறந்த தமிழர்களுக்கு எம்மால், வைப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை!

இந்த ஆவணத்தைத் தொடர்ந்து, எமது உறவுகள் தங்கள் பரப்புரைகளைப் பலப் படுத்துவது, உச்சமான பலனைத்தரும் என்பது எனது கருத்து!!!

இலங்கை அரசு தண்டிக்குப்படுவது உறுதி, நாங்கள் எங்கள் இலக்கை எட்டுவதற்குறிய எல்லா வழிகளையும் செய்யவேண்டும்

http://www.channel4.com/news/un-screens-channel-4-sri-lanka-war-crimes-film

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.