Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலைகள்

Featured Replies

இலங்கை தமிழ் காங்கிரசின் செந்தில்நாதன் சுட்டுப் படுகொலை

[]

வவுனியா அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மூத்த உறுப்பினரும் வர்த்தகருமான செந்தில்நாதன் இன்று புதன்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் இன்று முற்பகல் 11 மனியளவில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

வவுனியாவில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக அவர் போட்டியிடவிருந்தார்.

சம்பவ இடத்துக்கு சிறிலங்கா காவல்துறையினர் உடனே செல்லவில்லை. இருப்பினும் படுகொலை நடந்த இடத்தை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர்.

இதனிடையே ஓமந்தை சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் எஸ்கே.ரவீந்திரன் (வயது 36) என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து தாண்டிக்குளம் நிலையைத் தாண்டி ஏ-9 வீதியில் போக்குவரவுகள் முடக்கப்பட்டன.

http://www.eelampage.com/?cn=25784

  • 2 weeks later...
  • Replies 126
  • Views 24.6k
  • Created
  • Last Reply

வடமராட்சியில் 6 இளைஞர்கள் படுகொலை

யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவத்தினரது ஆர்.பி.ஜி. ரொக்கட் தாக்குதலில் ஆறு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். வடமராட்சி நெல்லியடி சந்திக்கு 300 மீற்றர் அருகில் நவிண்டிலில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை முகாமுக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு ஓட்டோ வாகனங்களில் இருந்த ஆறு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் உள்ள ஈ.பி.டி.பி. முகாமுக்குள் இளைஞர்கள் கைக்குண்டு வீசியதால் அவர்களைப் படுகொலை செய்ததாக சிறிலங்கா பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

நன்றி: புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சியில் 7 இளைஞர்கள் படுகொலை!!!

(மேலதிக இணைப்பு)

யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவத்தினரது ஆர்.பி.ஜி. ரொக்கட் தாக்குதலில் ஏழு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். வடமராட்சி நெல்லியடிச் சந்திக்கு 300 மீற்றர் அருகில் நவிண்டிலில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை முகாமுக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு ஓட்டோ வாகனங்களில் இருந்த ஏழு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

படுகொலை செய்யப்பட்டவர்கள் உடல்கள் பல மணி நேரங்களாக சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படவில்லை. படுகொலை செய்யப்பட்டவர்களை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

அனைவரும் நெல்லியடி அருகாமையில் உள்ள இராஜ கிராமத்தினைச் சேர்ந்தவர்கள்.

படுகொலை செய்யப்பட்டோர் விவரம்:

மணியம் சுபாஸ் (வயது 19)

நவரத்தினராசா நாசன்னா (வயது 19)

தாமோதரம்பிள்ளை மஞ்சு (வயது 17)

பாலச்சந்திரன் கிரிசாந்தன் (வயது 18 )

நாகரட்ணம் நகுலேஸ்வரன் (வயது 18 )

ஒரு குழந்தையின் தந்தையான கோவில்மணி சின்னமணி (வயது 21)

ஒரு குழந்தையின் தந்தையான செல்வராசா சுமன் (வயது 22)

இச்சம்பவத்தை அடுத்து அந்தக் கிராமத்தில் மக்கள் கொதிப்படைந்து காணப்படுகின்றனர்.

சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் உள்ள ஈ.பி.டி.பி. முகாமுக்குள் இந்த இளைஞர்கள் கைக்குண்டு வீசியதால் அவர்களைப் படுகொலை செய்ததாக சிறிலங்கா பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்:புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகளைச் சுட்டுக் கொன்று விட்டு, முன்பு பக்கத்தில் கிரனைட் வைத்து புலி என்று பொய்க் குற்றச்சாட்டுக்களை சிங்கள பேரினவாதம் சொல்லி வந்தது. இப்போதும் கூட 7 இளைஞர்களையும் ஆட்டோக்களில் போய்க் கொண்டிருந்தபோதே சுட்டுக் கொன்று விட்டு கிரனைட் வீசியதாகக் கதை விடுகின்றது.

ஒரு கிரனைட்டை வீச 7 இளைஞர்கள் போனார்கள் என்று விடும் கதையை யாரும் நம்பப் போவதில்லை. தமிழர் மீதான படுகொலைகளை மூடி மறைக்கும் செயற்பாட்டில் சிங்களப் பேரினவாதம் செய்யும் முயற்சிகளும் வெற்றி பெறப்போவதில்லை.

அப்பாவி இளைஞர்கள் 7பேருக்கும் எம் கண்ணீர் அஞ்சலிகள்!!!

தமிழீழம் கிடைக்குதோ இல்லையோ ஆனால் அதில்வாழ ஒரு தமிழனும்மிருக்க போவது என்பது தற்போது கேள்விக்குறியாகவேயுள்ளது இப்படியான சம்பவங்கள் 80 களில் நடந்தால் நாம் பலமில்லாதவர்கள் நிராயுதபாணிகள் கேட்க ஆளில்லாதவர்கள் ஆனால்லிப்போ புலிகள் உலகத்திலேயே மிகப்பலம் பொருந்திய விடுதலையியக்கம் அத்தோடு பொங்கியெளும்படை எள்ளாளண்படை இராவணண்படை அந்தப்படை இந்தப்படை என இருந்து என்ன பயன் எங்கள் சனம் ஒன்று என்றால் அவனில் பத்தாவது விழவேண்டாமா என்ன செய்யினம் உந்த பொங்கியெளும்படை யாராவது தண்ணி தெளிச்சு அணைச்சுப்போட்டினம் போல? முன்பொருக்கா பாலகுமார் வன்னியில் நடந்த நிகழ்வொண்றில் கூறியது பலருக்கு ஞாபகம்மிருக்கலாம் கிளிநோச்சிக்குள் வந்து யாராவது கிளிக்கமுடியுமா என்றார் ஆனால்நேற்று அவன் மாங்குளத்தில் போய்கிளிச்சு காட்டியிருக்கிறான் அந்தபேரூந்துமட்டும் மாட்டியிருந்தால் 50உயிர்கள் திரும்பவெருகதவடைப்பு கிளிநேச்சியில் பல்லாயிரம்மக்கள் கூடி கண்டணப்பேரணி புலிகள் கடும் கண்டணம் பொறுமையை சோதிப்பதாக சீற்ரமான அறிக்கை சம்பவ இடத்தை கண்காணிப்புக்குழு பார்வை விசாரணை மேற்கொள்வதாக கூறிநர் இதேதான் திரும்ப திரும்பநடக்கப்போகிறது இன்னும் 10வருடங்களில் இலங்கையில் தமிழினமே அழிந்துபோம் புத்தம் சரணம் கச்சாமி பாடமாக்கி வைத்துக்கௌ;ளுங்கோ கெதியில தேவைப்படும்.

நாளைக்கு வடமராட்சியில் 70வது சிறிலங்கா இராணுவமாவது விழவேணும் இல்லையேல் எனது கருத்து பலிக்க கனநாள்ளாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் வயசு 18க்கும்23க்கும் உற்பட்டது, இதில இலங்கை அரசாங்கத்தினது அறிக்கையை பாருங்க, கைகுண்டு வீசிவிட்டு தப்பி போன புலிகள் மீது ஆர்பீஜி தாக்குதல் நடாத்தப்பட்டதாம்? என்ன டாங்கியில வந்தா தாக்குதல் நடத்தினவங்க அந்த அப்பாவி இளைஞர்கள்?

ஆட்டோவின் ஆகக்கூடிய வேகம் என்ன? ஒரு 60,70 கிலோமீட்டர் வேகம் வருமா? அதை இராணுவ வண்டியினால் துரத்திபிடிக்கமுடியாதோ? எதற்கு ஆர்பீஜி தாக்குதல் நடாத்தவேண்டு? சரி இது நடந்தது இராணுவ முகாம்களுக்கு அண்மையில்த்தானே? ஈபிடிபி முகாமுக்கு கைகுண்டு எறிந்தவர்களை ஆர்பிஜி அடித்து கொலை செய்துவிட்டதாக அறிக்கைவிடும் மோட்டு சிங்களவனை என்ன செய்யவேண்டும்?

புலிகளும் பொறுமை பொறுமை என்று இருக்கிறார்கள், எதற்காக என்று தெரியவில்லை, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அன்றாடம் கொலை செய்யப்படுகிறார்கள், அறிக்கை கண்டனம் எண்டு விடுவதோடு விட்டுவிடுகிறார்கள், மக்கள் படை, எல்லாளன் படை தேசவிரோதிகளை மட்டும்தான் யாழ் கூடா நாட்டில் தேடி திருகிறார்களா? இப்படிப்பட்ட சிங்கள காட்டேறிகளுக்கு பாடம் புகட்ட முடியாதா?

1983, யூன் 23 அன்று ஒரு நாளில் பல நூறு தமிழர்களை கொன்றழித்தார்கள், ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் அனு அனுவாக கறையாங்கள் மாதிரி உலகத்தின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அழித்துக்கொண்டு இருக்கிறார்கள், ஒரு சாவை என்னொரு சாவுதான் நிறுத்தும் என்று டயலக் விட்ட மக்கள் படைக்கு என்ன நடந்தது? நேற்று முந்தினம் மாங்குளத்தில் வைத்த கிளைமோர் வெடித்திருந்தால் அதற்கும் கண்டனம் தெரிவித்துவிட்டு பேசாமல் இருப்பார்கள் இவர்கள்,

உலகத்திற்கு பயந்து எமது மக்களை அழிய நாங்களே காரணமாக இருக்கிறோம் என்றதுதான் உண்மை போல தற்போதைய நடவடிக்கைகள் அமைகின்றது, தலையில்லா முண்டங்களும் துப்பாக்கி சூடுகளும் அன்றாட செய்திகளில் கேட்டு கேட்டு சாதரண விடயங்கள் ஆகிவிட்டது,

இப்பொழுது மோட்டு சிங்களவன் ஒரு கணக்கு போட்டிருப்பான், 20 ஆயிரம் புலிகளை அழிக்கிறதைவிட 20 லட்சம் அப்பாவி தமிழரை அழிக்கிறது சுலபம் என்று, அதை செயற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் போல் தெரிகிறது, :idea: :evil:

Danklas நண்பரே..........

"புலிகளும் பொறுமை பொறுமை என்று இருக்கிறார்கள்இ எதற்காக என்று தெரியவில்லைஇ இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அன்றாடம் கொலை செய்யப்படுகிறார்கள்இ அறிக்கை கண்டனம் எண்டு விடுவதோடு விட்டுவிடுகிறார்கள்இ மக்கள் படைஇ எல்லாளன் படை தேசவிரோதிகளை மட்டும்தான் யாழ் கூடா நாட்டில் தேடி திருகிறார்களா? இப்படிப்பட்ட சிங்கள காட்டேறிகளுக்கு பாடம் புகட்ட முடியாதா? "

:P :P :P :P

சோமாலியாவை விட்டிட்டு இலங்கைக்குப் போய் பாடத்தை நீங்கள் புகட்டலாம் தானே... நீங்கள் போனால் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து கூடிய தமிழ் மக்கள் உங்களின் பின்னால் வருவார்கள். என்னையும் சேர்த்துத்தான்..

அதைவிட்டிட்டு சும்மா அவர்களை இவர்களை குறை சொல்லி என்ன பயன்?? :?:

சொல்ல எழுதச் சுகம், ஆனால் செயலில் காட்டுவது தான் கடினம். உங்களால் அது முடியும் என நினைக்கிறேன்....

வீறுநடை போட்டு எழுந்து வாருங்கள்!!!!

ம்ம் நடக்கட்டும் .........

ஒரு சந்தேகம்- இந்தமாதிரியான செய்தி இணைப்புகளின்போது- ஜனநாயகம் - சமத்துவம் - இன்னும் ஏதேதோ - சொல்லி தொலைபாங்களே- அவங்க எல்லாம் ஏன் கருத்து எழுதுறல்ல? :?

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியாவை விட்டிட்டு இலங்கைக்குப் போய் பாடத்தை நீங்கள் புகட்டலாம் தானே... நீங்கள் போனால் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து கூடிய தமிழ் மக்கள் உங்களின் பின்னால் வருவார்கள். என்னையும் சேர்த்துத்தான்..

அதைவிட்டிட்டு சும்மா அவர்களை இவர்களை குறை சொல்லி என்ன பயன்?? :?:

சொல்ல எழுதச் சுகம், ஆனால் செயலில் காட்டுவது தான் கடினம். உங்களால் அது முடியும் என நினைக்கிறேன்....

வீறுநடை போட்டு எழுந்து வாருங்கள்!!!!

சும்மா அபத்தமாகக் கதைக்காதீர்கள். புலம்பெயர்ந்தவன் தான் தப்பி விட்டேன் தானே பிறகென்னத்திற்கு நாட்டுப் பற்று என்று, தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துவர்களுக்கு மத்தியில், ஒவ்வொரு தமிழனும் மரணமாகின்ற போது இரத்தம் கொதிப்பதை கேவலப்படுத்தாதீர்கள்!!

உப்படியான கதைகள் தான் தாயத்தின் மீது வைத்திருக்கம் பற்றறை அவமதி;க்கின்ற காரணிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த எம்முறவுகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்பு குழுவுக்கு இளம்பரிதி கடிதம்

நெல்லியடிப் பகுதியில் ஓட்டோக்களில் சென்ற ஏழுபேர் கொல்லப்பட்ட சம்பவத் துக்கு கடும் கண்டனம் தெரிவித்து விடு தலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி இலங் கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

இத்தகைய சம்பவங்களால் வரும் விளவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என்று இளம்பரிதி அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லியடியில் படையினரின் உந்துகணைத் தாக்குதல்: 7 இளைஞர்கள் பலி!வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க அருகில் யாழ் வீதியில் படையினரின் ஆர்.பி.ஜி உந்துகணைத் தாக்குதலுக்கு 7 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

மொடேன் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகில் உள்ள ஈபிடிபி துணை ஆயுதக்குழுவின் முகாமிற்குள் கைக்குண்டு வீசியதால் இவர்களைத் தாக்கியதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இரு முக்சக்கர வண்டியில் இந்த இளைஞர்கள் பயணம் செய்த வேளையே படையினரால் உந்துகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொல்லபட்டவர்கள் அனைவரும் கரவெட்டி இராஜகிரமத்தைச் சேர்ந்தவர்கள். 19 அகவையுடைய மணியம் சுபாஸ், 17 அகவையுடைய தமோதரம் சுபாஸ், 19 அகவையுடைய நவரத்தினராசா நாசன்னா, 18 அகவையுடைய நாகரட்னம் நகுலேஸ்வரன், 18 அகவையுடைய பாலச்சந்திரன் கரிசாந்தன், 21 அகவையுடைய கோயில்மணி சின்னமணி, 22 அகவையுடைய செல்வராசா சுமன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்களாவார்கள்.

இதேவேளை இன்று நெல்லியடி திருமகள் வீதியில் நடத்தபட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.

-பதிவு

திருக்கோவில் விநாயகபுரம் முகத்துவாரத்தில் சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புண்ணியமூர்த்தி ரூபன் (19) என்ற விநாயகபுரம் பாலக் குடாவினை சேர்ந்தவரின் சடலம் என அது இனம் காணப்பட்டுள்ளது.

இவரை நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கும் 10.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இனம் தெரியாதவர்கள் இவரது பெயரினை கூறி அழைத்து சென்றுள்ளனர்.

நேற்று காலை தலையிலும், நெஞ்சிலும் சூட்டு காயங்களுடன் சடலமாக மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

மட்டு ஈழநாதம்

º¢¨¸ «Äí¸¡¢ôÀ¡Ç÷ ÍðÎì ¦¸¡¨Ä.

¡úôÀ¡½õ «îº§ÅÄ¢ôÀ̾¢Â¢ø «¨¼Â¡Çõ ¦¾¡¢Â¡¾ ¬Ô¾¾¡¡¢¸Ç¡ø º¢¨¸ «Äí¸¡¢ôÒ ¿¢¨Ä ¯¡¢¨Á¡Ç÷ ÍðÎ즸¡øÄôÀðÎûÇ¡÷. þýÚ ¸¡¨Ä 7.30 Á½¢ÂǢŢø «îͧÅÄ¢ ¾õÀ¡¨ÄôÀ̾¢Â¢ø þîºõÀÅõ þ¼õ¦ÀüÚûÇÐ. ÌÈ¢ôÀ¢ð¼ ¿À÷ Á£Ð «ÅÃÐ ¸¨¼Â¢ø¨ÅòÐ ¯óÐǢ¢ø Åó¾ «¨¼Â¡Ç󦾡¢Â¡¾ ¬Ô¾¾¡¡¢¸û ÐôÀ¡ì¸¢ôÀ¢Ã§Â¡¸õ; §Áü¦¸¡ñ¼É÷ þ¾ý§À¡Ð «îͧÅÄ¢ ¾õÀ¡¨Ä¨Âî §º÷ó¾ ¸ó¨¾Â¡ º¢Å»¡Éõ (45) ±ýÀŧà ¯Â¢¡¢ÆóÐûÇ¡÷.

சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலை மாவட்டம் மூதூரில் தமிழ் மாணவன் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

மூதூர் தேவாலய வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதினேழு வயதான பாலகுமார் என்ற மாணவனே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் ஆவார். திருகோணமலை நகர பாடசாலையில் கல்வி கற்கும் இவர், வார விடுமுறைக்காக சொந்த இடமான மூதூருக்கு வந்திருந்த போதே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

pathivu

சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றைய தமிழ் மாணவன் மூதூர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

மூதூரில் கடந்த 36 மணிநேரத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது தமிழ் இளைஞன் படுகொலை சம்பவம் இதுவாகும்.

கடந்த வியாழக்கிழமை 22 வயதான சுரேந்திரன் என்ற சிகையலங்கரிப்பு நிலைய உரிமையாளர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட இளம் உறவுகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்" அது விரைவில் நிச்சயம் நடக்கத்தான் போகிறது.

எனது கண்ணீர் அஞ்சலிகளும் உரித்தாகட்டும்.

யாழ். தீவகத்தில் சிறிலங்கா கடற்படைத் தாக்குதலில் 6 பொதுமக்கள் பலி

யாழ். தீவகம் மண்டைத் தீவு பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 6 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அல்லைப்பிட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பொதுமக்களைச் சுற்றி வளைத்த கடற்படையினர் கைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 6 பொதுமக்கள் இறந்ததாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த பொதுமக்களை யாழ். மருத்துவமனைக்கு நோயாளர் காவு வாகனங்களில் கொண்டு செல்ல யாழ். நீதிபதி உத்தரவிட்டதையடுத்து காயமடைந்த 3 பொதுமக்கள் யாழ். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கடற்படையினரது இந்த வெறியாட்டத்தில்

எஸ். மோகனாம்பிகை(வயது 46)

டி. செல்லத்துரை (வயது 61)

எஸ். சிவநேசன் (வயது 46)

ஆகியோர் படுகாயமடைந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலில் 4 பேர் மட்டுமே படுகொலை செய்யப்பட்டதாக சிறிலங்கா இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் மேலும் 4 பேர் படுகொலை செய்யப்படிருக்கக் கூடும் பொதுமக்கள் தெரிவிக்கின்றன.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

மண்டைதீவில் கடற்படை வெறியாட்டம் - குழந்தை உட்பட 8 பொதுமக்கள் பலி

யாழ தீவகம் மண்டை தீவுப் பகுதியில் இலங்கை கடற்படையினர் நடத்திய வெறியாட்டத் தில் குழந்தை உட்பட 8 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டியில் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பொதுமக்களைச் சுற்றி வளைத்த கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் கைக்குண்டுகளையும் வீசியுள்ளனர்.

இதனால் ஒரு குழந்தை உட்பட 8 பொதுமக்கள் அவ்விடத்திலேயே பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது.

மேலும் படுகாயமடைந்த மூவர் யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் இந்த வெறியாட்டத்தில் எஸ்.மோகனாம்பிமை (வயது 46), டி.செல்லத்துரை (வயது 61), எஸ்.சிவநேசன் (வயது 46) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர்.

கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களே தம்மால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சிறீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

தகவல்:சங்கதி

குழந்தையும் வந்து தாக்குதல் நடத்தியதாக கதை விடுகின்றதா கடற்படை?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். தீவகத்தில் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 பொதுமக்கள் பலி

யாழ். தீவகம் மண்டைதீவு அல்லைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து தீவகத்துக்கு செல்லும் மார்க்கத்தில் மண்டைதீவுக்கு அடுத்துள்ள வேலணையின் அல்லைப்பிட்டி கிராமத்தில் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள மாடி வீடு ஒன்றில் இந்த கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது.

கறுப்புத்துணியால் முகத்தை மூடியபடி துப்பாக்கிகள் சகிதம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையினரும் துணை இராணுவக்குழுவினரும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

வீட்டின் அறைகள் ஒவ்வொன்றையும் தேடி அங்கு இருந்த ஒவ்வொருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். நான்கு மாதக்குழந்தையும் இந்த கொலை வெறியாட்டத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது.

வீடு முழுவதும் படையினரின் கொலை வெறியாட்டத்தில் இரத்த வெள்ளமானது.

சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் சிறிலங்கா கடற்படையின் பாரிய முகாம் உள்ளது.

அல்லைப்பிட்டிப் பிரதேசம் சிறிலங்கா கடற்படையின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதி என்பதுடன் அல்லைப்பிட்டியே தீவக மக்களை சோதனையிடும் கடற்படையின் நிலையமாகும்.

இரவு வேளைகளில் அப்பகுதியில் யாரும் நடமாட முடியாது. சம்பவத்தினையடுத்து அப்பகுதியில் உள்ள பங்குத்தந்தை அருட்திரு அமல்ராஜ் அடிகளார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். சிறிலங்கா நீதவானுக்கு தகவல் தெரிவித்தார். காயப்பட்டோரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை தெரிவிக்கப்பட்டது.

நீதவானின் கட்டளையை அடுத்து காயமடைந்தோரை யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. பங்குத் தந்தை தனது வாகனத்தில் காயமடைந்தோரை யாழ். மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கொல்லப்பட்டோர் விவரம்:

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏபிரகாம் றொபின்சன் (வயது 28 )

ஒரு பிள்ளையின் தந்தையான செல்லத்துரை அமுதாஸ் (வயது 28 )

பாலச்சாமி கேதீஸ்வரன் (வயது 25 )

பாலச்சாமி கேதீஸ்வரனின் மனைவி அனஸ்எஸ்த்தர் (வயது 25 )

பாலச்சாமி அனஸ்எஸ்த்தர் தம்பதிகளின் மகன் தனுஸ்காந் (வயது 04), மகள் யதுசா ( 04 மாதம்)

நான்கு பிள்ளைகளின் தந்தையான கணேஸ் நவரத்தினம் (வயது 50)

ஐந்து பிள்ளைகளின் தந்தையான யோசப் அந்தோனிமுத்து (வயது 64)

வர்த்தகர் சிவநேசன் (வயது 56 )

காயமடைந்தோர் விவரம்:

எஸ்.மோகனாம்பிகை (வயது 46 )

கொல்லப்பட்ட வர்த்தகர் சிவநேசனின் மனைவியான அம்பிகாபதி (வயது 38)

ரி.செல்லத்துரை (வயது 61)

அல்லைப்பிட்டியில் நடந்த இப்படுகொலை வெறியாட்டத்தையடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து அங்குள்ள பிலிப் நேரியார் தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளதுடன் தமது பொருட்களுடன் அல்லைப்பிட்டியை விட்டு வெளியேற முயன்றபோது படையினர் தடுத்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அல்லைப்பிட்டியில் வீடு ஒன்றினுள் சிறிலங்கா கடற்படையினர் நுழைந்து வயோதிபர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வேலணை மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்தில் சிறிலங்கா படையினரால் சுடப்பட்டு தந்தையும் மகளும் படுகாயமடைந்திருந்தனர்.

தகவல்:புதினம்

¾£Å¸ò¾¢ø §ÁÖõ ¿¡ýÌ «ôÀ¡Å¢ Áì¸û À¨¼Â¢Éáø ÀΦ¸¡¨Ä

¡ú. Áñ¨¼¾£Å¢ø §¿üÈ¢Ã× ±ðÎ «ôÀ¡Å¢ô ¦À¡ÐÁì¸û ‚Äí¸¡ ¸¼üÀ¨¼Â¢Éáø ¦¸¡øÄôÀð¼ ¿¢¨Ä¢ø þýÚ §ÁÖõ ¿¡øÅ÷ ‚Äí¸¡ À¨¼¸Ç¡ø ÀΦ¸¡¨Ä ¦ºö ÂôÀðÎûǾ¡¸ ¾¸Åø¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ.

¾£Å¸õ ÒÇ¢Âí̼ø À̾¢Â¢ø ãÅÕõ, §ÅĨ½ô À̾¢Â¢ø ´ÕÅÕÁ¡¸ ¿¡øÅ÷ ÀΦ¸¡¨Ä ¦ºöÂôÀðÎûǾ¡¸ ±ÁìÌì ¸¢¨¼ì¸ô¦ÀüÈ ¦ºö¾¢¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ.

±É¢Ûõ þÐ ¦¾¡¼÷À¡É §Áľ¢¸ ¾¸Åø¸û ¸¢¨¼ì¸Å¢ø¨Ä.

þ§¾§Å¨Ç §¿üÈ¢Ã× À¨¼Â¢Éâý ¾¡ì̾Ģø Àθ¡ÂÁ¨¼ó¾ ¿¢¨Ä¢ø ¡ú. ÁÕòÐÅÁ¨É¢ø §º÷ì¸ôÀð¼ ãÅâø ´ÕÅ÷ ¯Â¢Ã¢ÆóÐûǾ¡¸ ÁÕòÐÅÁ¨É Åð¼¡Ãí¸û ¦¾Ã¢Å¢òÐûÇÉ.

சங்கதி

இறந்தவர்கள் சண்முகலிங்கம் (வயது 62) அவரது மகன் காந்தறூபன் (வயது 29) மற்றும் மனைவி ஆகியோர் என தமிழ் நெற் கூறுகிறது.

(3 ஆம் இணைப்பு) யாழ். தீவகத்தில் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 பொதுமக்கள் பலி

[ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2006, 01:29 ஈழம்] [ம.சேரமான்]

யாழ். தீவகம் மண்டைதீவு அல்லைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து தீவகத்துக்கு செல்லும் மார்க்கத்தில் மண்டைதீவுக்கு அடுத்துள்ள வேலணையின் அல்லைப்பிட்டி கிராமத்தில் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள மாடி வீடு ஒன்றில் இந்த கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது.

கறுப்புத்துணியால் முகத்தை மூடியபடி துப்பாக்கிகள் சகிதம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையினரும் துணை இராணுவக்குழுவினரும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

வீட்டின் அறைகள் ஒவ்வொன்றையும் தேடி அங்கு இருந்த ஒவ்வொருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். நான்கு மாதக்குழந்தையும் இந்த கொலை வெறியாட்டத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது.

வீடு முழுவதும் படையினரின் கொலை வெறியாட்டத்தில் இரத்த வெள்ளமானது.

சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் சிறிலங்கா கடற்படையின் பாரிய முகாம் உள்ளது.

அல்லைப்பிட்டிப் பிரதேசம் சிறிலங்கா கடற்படையின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதி என்பதுடன் அல்லைப்பிட்டியே தீவக மக்களை சோதனையிடும் கடற்படையின் நிலையமாகும்.

இரவு வேளைகளில் அப்பகுதியில் யாரும் நடமாட முடியாது. சம்பவத்தினையடுத்து அப்பகுதியில் உள்ள பங்குத்தந்தை அருட்திரு அமல்ராஜ் அடிகளார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். சிறிலங்கா நீதவானுக்கு தகவல் தெரிவித்தார். காயப்பட்டோரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை தெரிவிக்கப்பட்டது.

நீதவானின் கட்டளையை அடுத்து காயமடைந்தோரை யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. பங்குத் தந்தை தனது வாகனத்தில் காயமடைந்தோரை யாழ். மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கொல்லப்பட்டோர் விவரம்:

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏபிரகாம் றொபின்சன் (வயது 28)

ஒரு பிள்ளையின் தந்தையான செல்லத்துரை அமுதாஸ் (வயது 28)

பாலச்சாமி கேதீஸ்வரன் (வயது 25)

பாலச்சாமி கேதீஸ்வரனின் மனைவி அனஸ்எஸ்த்தர் (வயது 25)

பாலச்சாமி அனஸ்எஸ்த்தர் தம்பதிகளின் மகன் தனுஸ்காந் (வயது 04), மகள் யதுசா ( 04 மாதம்)

நான்கு பிள்ளைகளின் தந்தையான கணேஸ் நவரத்தினம் (வயது 50)

ஐந்து பிள்ளைகளின் தந்தையான யோசப் அந்தோனிமுத்து (வயது 64)

வர்த்தகர் சிவநேசன் (வயது 56)

காயமடைந்தோர் விவரம்:

எஸ்.மோகனாம்பிகை (வயது 46)

கொல்லப்பட்ட வர்த்தகர் சிவநேசனின் மனைவியான அம்பிகாபதி (வயது 38)

ரி.செல்லத்துரை (வயது 61)

அல்லைப்பிட்டியில் நடந்த இப்படுகொலை வெறியாட்டத்தையடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து அங்குள்ள பிலிப் நேரியார் தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளதுடன் தமது பொருட்களுடன் அல்லைப்பிட்டியை விட்டு வெளியேற முயன்றபோது படையினர் தடுத்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அல்லைப்பிட்டியில் வீடு ஒன்றினுள் சிறிலங்கா கடற்படையினர் நுழைந்து வயோதிபர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வேலணை மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்தில் சிறிலங்கா படையினரால் சுடப்பட்டு தந்தையும் மகளும் படுகாயமடைந்திருந்தனர்.

நன்றி: புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாக்குபட்ட சிங்களவனின் கடற்கலன், திருமலை வருமுன்னமே கண்டனம் தெரிவித்த கண்துடைப்பு குழு எங்கே? BBC எங்கே? கோபி அண்ணன் எங்கே? சிறார்க்காக வரிந்து கட்டி கொண்டு நின்ற UNICEF எங்கே?

இவங்க செய்த குற்றம் தமிழனாய் பிறந்தது தானா :?:

குழந்தைகளைக் கூட விடுறாங்களில்ல

நாய்ச்சிங்களவன். :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.