Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்4 தொலைக்காட்சியின் ஒளிப்பேழை அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by சோபிதா on 08/06/2011 in செய்தி

சணல்4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்பு செய்து காட்டப்பட்ட கொலைக்களம் எனும் ஒளிப்பேளை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் நவ நீதம் பிள்ளை அவர்கள் உத்தியோகப்பற்றற்ற கூட்டங்களை நாடுகளுடன் நடாத்தி வருகின்றார்.

.மனித உரிமை சபையில் இந்த போர்க்குற்றம் தொடர்பில் விவாதிக்க வேண்டும் சர்வதேச விசாரணை ஒன்றிற்கான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்பதே நவ நீதம் பிள்ளையின் கருத்தாக உள்ளது.

.

ஆனால் சில நாடுகளுக்கு முடிவு எடுப்பது பற்றி தளம்பல்கள் இருக்கின்றன. முக்கியமாக மணி கட்டுவது யார்|? இதில் பெரும்பாலும் அமெரிக்காவின் நிலைப்பாட்டினை பலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அமெரிக்காவோ தமக்குள் வாக்குவாதபட்டுக்கொண்டிருக்கின்றது.

.

அமெரிக்க பதுகாப்பு திணைக்களம் கூறுகின்றது இலங்கையில் நடந்தது நம்பதகுந்த மீறல்கள் என்று ஆனால் அமெரிக்க இராஜாங்க திணைக்களமோ இது அப்பட்டமான போர்க்குற்ற சாட்டு என கூறுகின்றது.

.

அமெரிக்காவைப்பொறுத்தவரை அதன் பாதுகாப்பு தினைக்களத்தில் இலங்கைக்கு சார்பாக செல்வாக்கு செலுத்தும் காரணிகள் இன்னமும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

.

இதே வேளை மனித உரிமை சபையில் தீர்மானம் எடுக்காவிடில் ஒரு கட்டத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு இலங்கை பிரச்சினை கொண்டு செல்லபப்டலாம் என இலங்கைக்கு சார்பாக வாதிடுபவர்களுக்கு ஓர் உள்ளார்ந்த பயமும் உள்ளது.

.

எது எப்படி இருப்பினும் சனல்4 தொலைக்காட்சியின் ஒளிப்பேழை அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

நாடுகளுக்கு மட்டும் அல்ல சிங்கள ஊடகவியலாளர்களே திகைத்துப்போய்விட்டதாக கூறபப்டுகின்றது. ஊடகவியலாளர் சஞ்சனா ஹட்டடுவ அவர்கள் கூறுகையில் சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றத்தை விசாரிக்கும் என நம்பவேண்டாம் என ஆணித்தரமாக கூறுகின்றார்.

.

எது எப்படியோ இறுதியில் இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளது என அனைவரும் ஏற்றுக்கொண்டது ஓர் முன்னேற்றமே இப்போ விசாரணைகளை எப்படி செய்யலாம் என்பதே அடுத்த கட்ட நடவடிக்கை.

source:eelam press.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களின் செயல் பாரட்டுக்குரியது.

அவரை தமது சார்ப்பாக கதைக்க..... ஸ்ரீலங்கா எவ்வளவோ முயற்சித்தும், துணிந்து நேர்மையுடன் செயற்படுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.