Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தித் துளிகள்: பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி - கவலையில் சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 12:22 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த மே மாதம் சிறிலங்காவுக்கு 48 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சிறிலங்கா வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 39சதவீத அதிகரிப்பாகும்.

இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஆனால் கடந்த மாதம் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 0.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் கவலை கொண்டுள்ளதுடன் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்தமைக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

839 விடுதலைப் புலிகள் மட்டுமே தடுப்புக்காவலில்

போர் முடிவுக்கு வந்த நிலையில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 839 விடுதலைப் புலிகள் மட்டுமே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜேவிபி உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் 839 புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏனையோர் மீதான விசாரணைகள் இடம் பெறுகின்றனர். இவர்களில் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் எவரும் இல்லை.

அனைவருமே புலிகள் இயக்க தீவிர உறுப்பினர்கள் தான் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வவுனியா இராணுவத் தலைமையகம், கொழும்பிலுள்ள புதிய செயலக ஆறாவது மாடித் தடுப்புமுகாம், பூசா தடுப்பு நிலையம் ஆகிய மூன்று இடங்களிலுமே 839 புலிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தனக்குத் தெரிந்தளவில் வெலிக்கந்த மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலும் தடுப்புமுகாம்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்தார்.

ஆனால், அதுபற்றியெல்லாம தனக்குத் தெரியாது என்றும், வவுனியா,கொழும்பு, பூசா ஆகிய இடங்களில் மட்டும் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் தந்துள்ளதாக தினேஸ் குணவர்த்தன பதிலளித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சாதாரண உடையில் சென்று வீடு வீடாக பதிவு

யாழ்.மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சாதாரண உடையில் சென்று வீடு வீடாக பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் வீட்டிலுள்ளவர்கள் குறித்தும் அவர்கள் வித்தியாசமான கோணங்களில் விசாரணை செய்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பதிவுகளை மேற்கொள்ளும் படையினர் வீட்டில் உள்ளவர்களை குடும்பமாகவும், தனித்தனியாகவும் நிழற்படம் எடுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள சில பகுதிகளில் நேற்று இத்தகைய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பான் கீ மூனுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஆதரவு

இரண்டாவது தடவையாகவும் ஐ.நா பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிடவுள்ள பான் கீ மூனுக்கு சிறிலங்கா அரசாங்கமும் ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களே இந்தத் தகவலை உறுதி செய்துள்ளன.

பான் கீ மூன் மீண்டும் ஐ.நா பொதுச்செயலராகத் தெரிவு செய்யப்படுவதற்கு ஆதரவளிக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சீனா மற்றும் ஆசிய நாடுகளும் தீர்மானித்துள்ளன.

வீட்டோ அதிகாரமுள்ள அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளும் பான் கீ மூனை ஆதரிப்பதாக அறிவித்துள்ள நிலையில் ரஸ்யா மட்டும் தனது தீர்மானத்தை இன்னமும் அறிவிக்கவில்லை. எனினும் பான் கீ மூன் போட்டியின்றித் தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதால், சிறிலங்கா அரசாங்கமும் வேறு வழியின்றி அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

பான் கீ மூனுக்கு ஆதரவளிப்பதன் மூலம் சிறிலங்காவுக்கு எதிரான அவரது நடவடிக்கைகளில் தளர்வுகளை ஏற்படுத்தலாம் என்று கொழும்பு நம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அரசின் நிலைப்பாடு ஐ.நா பொதுசெயலருக்கு அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது

ஐ.நா நிபுணர்குழுவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்கா அரசின் நிலைப்பாடு ஐ.நா பொதுசெயலருக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இந்தத் தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்காவில் சமாதானத்தை ஏற்படுத்தவும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இந்த அறிக்கையில் ஐ.நா பொதுசெயலருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

எனினும் சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வ பதில் கிடைத்தது பற்றிய ஐ.நாவின் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

புதினப் பலகை.

[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 12:22 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த மே மாதம் சிறிலங்காவுக்கு 48 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சிறிலங்கா வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 39சதவீத அதிகரிப்பாகும்.

இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஆனால் கடந்த மாதம் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 0.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் கவலை கொண்டுள்ளதுடன் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்தமைக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

சிறிலங்காவில் உல்லாச பயணிகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்:

1. உல்லாச பயணிகளிடம் கொள்ளையடிப்பது, கொள்ளைக்காக கொலை செய்வது என்பன இடம் பெற்றிருக்கின்றன.

2. உல்லாச பயணிகளை பாலியல் வல்லுறவு செய்வது இடம் பெற்றிருக்கிறது.

3. உல்லாச பயணிகளுக்கான உணவு சுகாதாரமான முறைகளில் தயாரிக்கப்படுவது குறைவு. இதனால் சுகவீனமுற்றால், சிறிலங்காவில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மரணம் சம்பவிக்கலாம்.

4. பணமில்லாத காரணத்தால் சிறிலங்கா மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை. ஆகவே உல்லாச பயணிகள் சுகவீனமடைந்தால் மருத்துவ வசதிகள் இல்லாமல் ஆபத்து ஏற்படலாம்.

5. சிறிலங்கா பொலிஸும், இராணுவமும் பெரும்பாலும் சட்டவிரோதிகளை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் சந்திக்கு சந்தி நின்று சோதனை என்ற பெயரில் உல்லாச பயணிகளிடம் கொள்ளையடிப்பது, தகாத நடத்தையில் ஈடுபடுவது அங்கு சாதாரணம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69676

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ என்னும் விடுமுறை விடவில்லை :D

சிங்கள நாடு அந்நிய நாட்டு செலாவாணியை சுயாதீனமாக மாற்றீடு செய்ய விடுவதில்லை. தானே அதைக்கட்டுப்படுத்துகின்றது.

சர்வதேச நாணய நிதி நிறுவனம் அவ்வாறு செய்ய கேட்டுள்ளது. அப்படி செய்யவிடும்போழுது சிங்கள ரூபாயின் பெறுமதி கூடுதலாக சரியும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

Flexible exchange rate - IMF

The IMF urged Sri Lanka's central bank on Friday to avoid continuous sales of foreign exchange and allow a flexible exchange rate to ease pressure on balance of payments. Completing the seventh review of its $2.6 billion loan to the island, the International Monetary Fund said Sri Lanka's macro economic performance was satisfactory.

"Strong export growth and continued large remittance inflows have supported reserves. But going forward, rapid import growth and high oil prices could put pressure on the balance of payments," the IMF said in a statement. "In this event, the central bank should allow the exchange rate to reflect market forces ... and avoid sustained sales of foreign exchange, ensuring that reserves remain healthy and the economy competitive." (Reuters)

http://www.dailymirror.lk/news/11860-flexible-exchange-rate.html

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளில் இந்தியர்கள் முதலிடம்

இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.

இவ்வருடம் முதல் 5 மாதகால பகுதியில 68,830 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறையினர் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் இலங்கைக்கு வந்த இந்திய சுற்றுலா பயணிகளைவிட 54.5 சதவீதமாகும்.

இந்தியர்களுக்கு அடுத்ததாக பிரித்தானியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இக்காலப்பகுதியில் 41,474 சுற்றுலா பயணிகள் (7.1 சதவீத அதிகரிப்பு) இலங்கைக்கு வந்துள்ளனர்.

பாகிஸ்தான் சுற்றுலா பயணிகளின் 98.1 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வருடம் 6027 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

கடந்த வருடம் முழுவதும் சுமார் 650000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வருடம் இந்த எண்ணிக்கை 100,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/22889-2011-06-11-10-28-10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.