Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியர் கே.சிற்றம்பலம் அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

Featured Replies

பேராசிரியர் கே.சிற்றம்பலம் அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

திருநெல்வேலியில் உள்ள இவரது வீட்டுக்கு நாய் ஒன்றை சுட்டு கொலைசெய்து அதனை வீட்டி மதில்மேலே கட்டியுள்ளனர். இவர் அண்மையில் முள்ளிவாய்க்கால் ஒரு குருசேத்திரம் என வர்ணித்திருந்தார். இந்த நிகழ்வை தமிழர்கள் மறக்ககூடாது எனவும் கேட்டிருந்தார்.

இதன் முழுமை செய்தி

Sitrampalam receives dead-dog threat

A dog shot by gun and packed in a bag was put into the well of the house of Professor S.K. Sitrampalam in Thirunelvealy, Jaffna, on Thursday night. The emeritus Professor of Archaeology of the University of Jaffna and Ilangkai Thamizh Arasuk Kadchi (ITAK) stalwart recently gave an interview to a Tamil daily in which he has said that the Mu’l’livaaykkaal war was like Kurukshetra (the war of the Mahabharata epic) and Tamils should never forget it.

In another incident recently Rev. Fr. C.G. Jeyakumar, the parish priest of Kayts and former director of Human Development Centre of the Catholic Church was humiliated by a group of thugs who bucketed him with dirt at his church. The identity of the assailants was traced to a private army operated by Sri Lanka Defence Secretary, Gotabhaya Rajapaksa.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34049

Edited by akootha

  • தொடங்கியவர்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலத்திற்கு கொலை அச்சுறுத்தல்!

யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுத்துறை பேராசிரியரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமான பேராசிரியர் க.சிற்றம்பலத்திற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 'முள்ளிவாய்க்கால் போர் என்பது மகாபாரதத்தில் இடம்பெற்ற குருசேஷ்திர போரை போன்றது. அதனை தமிழ் மக்கள் இலகுவில் மறந்துவிடப் போவதில்லை' என தமிழ் பத்திரிகை ஒன்றிற்கு அவர் அண்மையில் செவ்வி ஒன்றை வழங்கியிருந்த நிலையில் இந்தக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நாய் ஒன்றை பொதியொன்றில் போட்டு அவரின் வீட்டுக் கிணற்றினுள் இனந்தெரியாதவர்கள் வீசியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அதேவேளை, ஊர்காவற்றுறை தேவாலயத்தின் பங்குத் தந்தை வண.சி.ஜி.ஜெயக்குமார் அடிகளாருக்கும் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த சர்வதேச குழு என்றுக்கு குடாநாட்டின் உண்மையான நிலையை எடுத்துக் கூறியதால் ஜெயக்குமார் அடிகளாருக்கு இந்தக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த பிறிதொரு சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு குடாநாட்டின் உண்மை நிலைகளை விளக்கிக் கூறியமைக்காக முன்பொரு தடவை அவர் மீது கழிவு நீர் ஊற்றி அவமதிக்கப்பட்டிருந்தார். அதேபோன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அண்மையில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த இனந்தெரியாத நபர்கள் தவறுதலாக விட்டுச் சென்ற கைத்தொலைபேசி மீட்கப்பட்டு ஊர்காவற்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனினும் ஊர்காவற்துறைப் பொலிஸாரிடம் இருந்த இக் கைத்தொலைபேசி தற்போது காணாமல் போய்விட்டதாக கூறப்படுகின்றது. இதுபற்றிய தகவல்களை வழங்க ஊர்காவற்துறைப் பொலிஸார் மறுத்து வருகின்றனர். இந்நிலையில், யாழ் குடாநாட்டில் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் பின்னணியில் நின்று செயற்படுபவர்கள் யாரென்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

இதேபோன்று கடந்த வருடமும் அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தவர்களும் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இக்கொலைச் சம்பவங்களின் பின்னணியில் சிறிலங்கா படைத்தரப்பின் புலனாய்வுப் பிரிவினரும், சிறிலங்கா அரசாங்கத்தின் துணைக் குழுக்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, இத்தகைய கொலை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களின் பின்னணியில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் விசேட குழுவொன்றும் செயற்பட்டு வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={8ABD3F74-835B-45BB-966A-851C7073C062}

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களைச் சுட்டுப் போடுவதுதான் இவர்களின் வீரம்..!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலத்திற்கு கொலை அச்சுறுத்தல்!

-----

இதேபோன்று கடந்த வருடமும் அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தவர்களும் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இக்கொலைச் சம்பவங்களின் பின்னணியில் சிறிலங்கா படைத்தரப்பின் புலனாய்வுப் பிரிவினரும், சிறிலங்கா அரசாங்கத்தின் துணைக் குழுக்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, இத்தகைய கொலை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களின் பின்னணியில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் விசேட குழுவொன்றும் செயற்பட்டு வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திலை இருக்கிற, ஒட்டுக் குழுக்களையே... தாங்க முடியாத மக்கள்,

கோத்தாவின் விசேட குழுவை, எப்பிடித் தாங்கப் போகிறார்களோ...

அந்த விசேட குழுவுக்கும், தமிழ் ஒட்டுக்குழு தான்.... காட்டிக் குடுத்திருக்கும். :(

  • தொடங்கியவர்

நாய்களைச் சுட்டுப் போடுவதுதான் இவர்களின் வீரம்..!

மேற்குலக நாடுகளில் வாய் பேசாத பிராணிகளை தாக்குபவர்கள், கொல்லுபவர்கள் ஆழமாக வெறுக்கப்படுவார்கள் . இந்த விடயத்தை நாசூக்காக இப்படியான அமைப்புக்களுக்கு மத்தியில் ( animal rights groups) எடுத்து செல்லவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.