Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பக்கச்சார்பான போர் அனைவரும் ஒல்லாந்து ஹேக் கொண்டு செல்லப்பட வேண்டியவர்களே..

Featured Replies

பக்கச்சார்பான போர் அனைவரும் ஒல்லாந்து ஹேக் கொண்டு செல்லப்பட வேண்டியவர்களே..

நடைபெற்ற போர் வெறும் அப்பட்டமான பக்கச் சார்பான போராகும் என்று சனல் 4 தெரிவிக்கிறது.

- சீனாவின் விமானம், இஸ்ரேலின் விமானங்கள் பறப்பதை அது காட்டுகிறது. இப்படியொரு சின்னஞ்சிறிய நிலப்பரப்பில் உள்ள மக்களை கொன்றொழிக்க வேண்டிய தேவை சீனர்களுக்கு ஏன் வந்தது என்ற கேள்வியை ஒளிநாடா எழுப்புகிறது.

- இஸ்ரேலிய கொலைஞர்களுக்கு இங்குவர என்ன முகாந்திரம் இருக்கிறது என்ற கேள்வியையும் அத ஏற்படுத்துகிறது.

- மேலும் இந்தியா என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்காமலே சீனாவை உச்சரிக்கிறார்கள். இது மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். சர்வதேச சமுதாயம் பக்கச் சார்பாக நடந்து சமநிலையற்ற ஒரு போரை உருவாக்கியிருக்கிறது என்றும் அது கூறுகிறது.

இது போரல்ல சர்வதேச போர்க்குற்றம். இதற்கு துணை போன அத்தனைபேரும் குற்றவாளிகளே என்பதை அப்பட்டமாக சந்தேகத்திற்கு இடமின்றி அது எடுத்துரைக்கிறது. மேலும் கூறுகையில் ஐ.நா செயலருக்கு இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்ற கருத்தில் உண்மை இருந்தாலும் கூட, பாதுகாப்பு சபையில் இதை எதிர்க்க எவனும் முன்வரக் கூடாது என்று தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

இந்திய மேனனும் நிருபாமாவும் கூறுவது போல தீர்வை வழங்குவதால் மட்டும் சிறீலங்காவை மீட்க முடியாது என்பதை காணொளி மௌனமாக உணர்த்துகிறது. இது போர்க்குற்றம், இத்தகைய குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கினால் உலகமே குற்றவாளியாக நிற்க நேரிடும். ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் என்கிறது காணொளி.

மேலும் இது குறித்து சிறீலங்காவிற்கு உணர்த்தப்பட்டாலும் அவர்கள் இதை பெரிதுபடுத்தவில்லை என்கிறது. இதுவரை அவர்கள் செய்த எந்தக் கொலைக்கும் தண்டனை பெறாமல் சர்வதேச லைசென்சை பெற்றிருக்கும்போது இப்போது மட்டும் எப்படி குற்றமென உணர முடியும் என்ற எண்ணத்தையும் காணொளி ஏற்படுத்துகிறது. ஆனால் அனைத்து குற்றவாளிகளிலும் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதில் யாதொரு பின்வாங்கலையும் அது ஏற்படுத்தவில்லை.

http://www.alaikal.com/news/?p=73838

வைத்தியசாலைக்கு வெளியிலும் குண்டு வீச்சு

சர்வதேச சட்டங்களுக்கு முரணாக சிறீலங்கா அரசு வைத்தியசாலைகளுக்கு குண்டு வீசித்தகர்த்தது. ஒரு தடவை மட்டுமல்ல பல தடவைகள் குண்டு வீசி காயப்பட்டவர்களை கொன்று தள்ளியது. யாதொரு வைத்திய வசதியோ, மருந்தோ, மின்சாரமோ எதுவுமற்ற வன்னி வைத்தியசாலை ஷெல் தாக்குதலால் சின்னாபின்னமாகித் தெறித்துக் கொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான காயப்பட்டவரை உள்ளே வைக்க இடமின்றி வெளியில் வைக்க அங்கும் ஷெல் அடித்து கொன்றார்கள். கொட்டும் மழையில் இரத்த வெள்ளம் வைத்தியசாலையில் வழிந்தோடியது.

கேட்கப்பார்க்க நாதியின்றி வெட்கம் கெட்ட உலக சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

வைத்தியசாலை மீது குண்டு வீசப்பட்டது அப்பட்டமான போர்க்குற்றம் என்பதற்கு வாணி குமார் நல்லதோர் சாட்சியமாக இருக்கிறார். முதியவர் ஒருவர் படுகொலை மயமாக இருக்கிறது என்று கூறுகிறார். நாலாவது நாள் அவரே வைத்தியசாலையில் குண்டு வீச்சுக்கு பலியாகி இறந்து கிடக்கிறார். காயத்தில் அவலக்குரல்கள் வானைப் பிளக்கின்றன. வானம் கண்ணீர் விடுகிறது.. கொலை அலறல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சனல் 4 வெளிக் கொண்டுவந்திருப்பது சிறிய காணொளியே இதன் உண்மை வடிவங்கள் மேலும் அம்பலமானால் இன்னும் பலரது முகமூடிகள் கிழிந்து சின்னாபின்னமாகும்.

http://www.alaikal.com/news/?p=73833

சனல் 4 இந்தியாவின் முன் விழுந்துள்ள பாரிய நெருக்கடி

சிறீலங்காவில் ஆட்சி செலுத்தும் சிங்கள அரசு சீனா, பாகிஸ்தான் பக்கமாக போய்விடும் என்று இந்தியா அஞ்சுகிறது. இதைத் தடுப்பதற்காக இந்தியா வகுத்துள்ள இராஜதந்திரம் சிறீலங்கா அரசை ஆதரித்துப் போக முற்பட்டுள்ளது.

சிறீலங்கா இராணுவம் தமிழ் மக்களைக் கொன்றாலும், தமிழக மீனவரை கொன்றாலும் அதைப் பகைக்க இந்திய வெளியுறவுக் கொள்கை என்றுமே உடன்படுவதில்லை. அதை நன்கு உணர்ந்து இந்தியாவின் ஆதரவை துஷ்பிரயோகம் செய்துள்ளது சிறீலங்கா அரசு.

யுத்தகளத்தில் சிறீலங்கா அரசு நடாத்தியுள்ள கொடுமைகள் இன்று சர்வதேச அரங்கின் முன் மறுபடியும் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. இந்த அவலமான நிலையில் இந்தியா பெரும் தர்மசங்கடத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. சிறீலங்கா அரசுக்கு சார்பாக நடந்த திமுக – காங்கிரசை தமிழக மக்கள் தேர்தலில் தோற்கடித்தது தெரிந்ததே. இப்போது வெளியாகியுள்ள சனல் 4 காணொளியானது இலங்கை விவகாரத்தை அறியாதிருந்த வடக்கு மாநிலங்களிலும் பரவும். அங்கும் இந்திய நடுவண் அரசின் கொள்கை சரியானதா என்ற கேள்வியை ஏற்படுத்தும். இந்தியா சிறீலங்காவுடனான வெளியுறவுக் கொள்கையில் சடுதியான மாற்றத்தை ஏற்படுத்தாமல் தொடர்ந்தும் மௌனம் காக்க முடியாத நிலையை இந்தக் காணொளி ஏற்படுத்தியுள்ளது.

http://www.alaikal.com/news/?p=73889

சனல் 4 காணொளியால் வெட்கித் தலை குனியும் ஐ.நா மன்று

வன்னியில் சர்வதேச பத்திரிகையாளரை விரட்டிவிட்டே இப்படியான கொலைக்களம் நிகழ்த்தப்பட்டிருப்பதாக சனல் 4 நேற்று தெரிவித்தது. போரின் ஒவ்வொரு நகர்வையும் சற்லைற் படங்கள் தெட்டத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டியது.

போரை நிறுத்த ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல மாதங்கள் ஐ.நாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஐ.நா மன்றே பதிலின்றி உறைந்துபோய்க் கிடந்துள்ளது. ஐ.நா செயலரோ சிறீலங்கா போய் 15 நிமிடங்கள் பார்வையிடும் பணியோடு அங்கிருந்து போய்விடுவதையும் அது கோடு போட்டுக் காட்டுகிறது.

புலிகளுக்கு பயங்கரவாத பட்டம் கட்டிய உலக சமுதாயம் சிறீலங்காவுக்கு இனி என்ன பட்டம் கட்டப்போகின்றன. இதுபோன்ற செயலுக்கு சர்வதேச பலத்தை பயன்படுத்த சிறீலங்காவுக்கு உரிமை வழங்கியது யார்..? இதுதானா சர்வதேச சட்டங்களையும் நீதியையும் மதிக்கும் ஒழுங்கு..? என்ற துணிச்சலான கேள்வியை முன் வைக்கிறது சனல் 4.

ஒவ்வொரு குடிமகனும் ஐ.நாவை நோக்கி நீதிக்கான கேள்வியைக் கேட்க புது வழியை திறந்துவிட்டுள்ளது சனல் 4 அலைவரிசை நிகழ்ச்சி. பான் கி மூனின் தலைமையில் ஐ.நா சந்தித்துள்ள இந்தப் பேரவலமும், அவமானமும் வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத களங்கமாக மாறியிருக்கிறது. ஐ.நா மன்று அவசர அவசரமாக தொழிற்பட்டு இந்தக் களங்கத்தை துடைக்க வேண்டிய பருவம் வந்துவிட்டது. குற்றம் செய்தவருக்கு மட்டும் தண்டனை, இதில் ஐ.நா பின்வாங்கினால் அந்தத் தாபனத்தின் இருத்தலே கேள்விக்குறியாகிவிடும்.

http://www.alaikal.com/news/?p=73879

இந்த இழவைப் பார்த்து என்ன சொல்லப்போகிறார் எரிக் சோல்கெய்ம் !

சிறீலங்கா இனப்பிரச்சனையில் மத்தியஸ்த்தம் வகித்த நோர்வேயின் முன்னிலையிலும் சனல் 4 காணொளி பல கேள்விகளை முன் வைத்துள்ளது.

- போரில் நடுநிலையாளராக செயற்பட்ட எரிக் சோல்கெய்ம் இப்படியொரு நிகழ்வு அரங்கேறியபோது என்ன செய்தார்..?

- இது போர்க்குற்றம் என்ற செய்தியை இதுவரை சோல்கெய்ம் ஏன் ஐ.நாவில் பதிவு செய்வில்லை..?

- இப்படிப்பட்ட ஒருவர் ஏன் நடுநிலையாளராக பணியாற்றினார்..? என்பன போன்ற தார்மீகக் கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.

சிறீலங்கா அரசின் வெளிநாட்டு பிரிவு இந்தக் காணொளியைப் பார்த்து, இப்போது தாம் பாரிய அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடகமாடியுள்ளது. இந்த நாடகத்தில் சர்வதேச சமுதாயம் ஏமார்ந்துவிடக் கூடாது. நோர்வேஜிய மக்கள் இந்தக் காணொளியை பார்த்துள்ளார்கள்.

சோல்கெய்ம் மீது அவர்களுடைய கேள்விகள் விழுவதற்கு வாய்ப்புள்ளன. விடுதலைப் புலிகள் நோர்வேயை முழுமையாக நம்பினார்கள். சர்வதேச சமுதாயத்தை நம்பினார்கள். ஆனால் எல்லாமே பகல் கனவாகிவிட்டது. பயங்கரவாத பட்டம் கட்டிய ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஒளிநாடாவுக்கு என்ன பதில் கூறப்போகிறது.

ருவாண்டா இனப்படுகொலையில் இடம் பெற்றதைவிட பாரிய தவறுகள் செய்யப்பட்டுள்ளதை நிகழ்வுகள் காட்டுகின்றன. நோர்வேக்கு இந்த விடயத்தில் மாபெரும் தார்மீகக் கடமை உண்டு. இப்போதாவது சோல்கெய்ம் விரைந்து செயற்பட்டு நோர்வேயின் நம்பகத் தன்மையை உலக அரங்கின் முன் காட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=73892

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் அகூதா! இந்தியாவின் பெயர் வேண்டுமென்றே விடுபட்டிருக்கின்றது!

எமது இறுதி அழிப்பில் பெரும் பங்கெடுத்த பீரங்கிகள், இந்தியாவாலேயே வழங்கப் பட்டிருந்தன!

இது ஒரு தற்செயலான விடுபடல் போல் எனக்குத் தெரியவில்லை!

ஒன்று மட்டும் தெளிவாகின்றது!

இந்தியா ஓம குண்டத்தில் சிங்களத்தைப் போடத் தயாராகின்றது!

ஓம்! அக்கினி தேவ ஸ்வாக!!!

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கும் சிங்களத்திற்கும் இடையில் எமது தலையீடு இல்லாமல் ஒரு ஆழமான பிளவு வருவதே எமக்கு ஆரோக்கியமானது.

அதேவேளை இந்த ஆவணப்படம் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், முக்கியமாக காங்கிரஸ் / பி.ஜே.பி. கட்சி பிரமுகர்களுக்கு காட்டப்படல் வேண்டும்.

சீன, உருசிய, அரபு, ஸ்பானிய மொழிகளில் மாற்றப்பட்டு தரவேற்றம் செய்யப்படல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.