Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரணடைந்தவர்கள் காணாமல் போனது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்தவர்கள் காணாமல் போனது எப்படி? குளொபல் தமிழ் செய்திகளுக்காக றொகான்

முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் குறிப்பிடத்தக்கவர்கள் சரணடைந்தார்கள். ஈழத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தின் படைகளும் உலக வல்லாதிக்கப்படைகளும் தொடுத்த யுத்தம் மிகவும் மூர்க்கத்தனமானது. வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளிடமிருந்த கட்டுமானங்கள், ஆளணிகள், மக்கள் தொகை, இராணுவப் பலங்கள் முதலியவற்றை முழுமையாக குறி வைத்து போர் நடத்தப்பட்டது. அந்தப் போரில் நிகழ்த்தப்பட்ட அவலங்களில் சரணடைந்த போராளிகளுக்கு நடந்த குரூரங்கள் என்பது ஈழப் போரின் இறுதிநாட்களில் அரங்கேறிய கொடுமைகளில் துரோகம் மிகுந்த ஒரு பகுதி. சரணடைந்த போராளிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்களில் பேரதிர்வுகளை எழுப்பும் விதமாக இப்பொழுது கிளம்புகின்றன.

இன்று முன்னாள் போராளிகளின் விவகாரங்களை தீண்டத்தகாத கதைகளாகவும் குற்றம் நிறைந்த பக்கங்களாகவும் அரசும், அரச படைகளும் காட்டிக் கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பின் தொலைக்காட்சிப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா என்ற பெண் போராளி இறுதி யுத்த களத்தில் இராணுவத்திடம் சரணடைந்தார். அவர் மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு கொடுமைகளாலேயே கொல்லப்பட்டார். இந்தக் கொடுமைகளுக்கு விசாரணைகளும் தண்டனைகளும் முன் மொழியப்பட்ட பொழுது, போராளிகளுக்கும் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு அவர் ஆதாரமாகிய பொழுது, இசைப்பிரியா புலிகள் இயக்கப் போராளி உறுப்பினர் என்றும் அவரது இயக்க அடையாள அட்டையை வெளியிட்டு அவர் யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்றும் பாதுகாப்பு அமைச்சு விளக்கம் தருகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என்றால் அல்லது விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பெண்கள் என்றால், அல்லது விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த இளைஞர்கள் என்றால் இத்தகைய கொடுமைகளை செலுத்துவதுதான் இலங்கை அரச படைகளின் போர் முறையும் தர்மமுமா? ஆடைகளை களைந்து உயிரோடும் பிணமாக்கியும் வன்புணர்வு செய்யும் வெறித்தனம்தான் இலங்கை இராணுவத்தின் யுத்த ஒழுக்கமா? இப்படிப் பல போராளிகள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொன்றது இலங்கை அரசின் இந்த சட்டதிட்டத்தின்படியா? இப்படிப் பல போரளிகள் சித்திரவதை செய்யப்பட்டது இராணுவத்தின் நீதி நியாத்தின்படியா? இதுதான் இலங்கை அரசின் குணம் என்பதையும் இந்த அடிப்படையில்தான் யுத்தம் நடந்தது என்றும் பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு திமிரோடு சொல்கிறது. புலிகள் என்றால் அல்லது தமிழ் மக்கள் என்றால் எத்தகைய கொடுமைகளையும் இழைப்போம் என்று திமிரோடு சொல்கிறது பாதுகாப்பு அமைச்சு. இலங்கை அரசினதும் இராணுவத்தினரதும் கொலைக்குணமும், அடக்குமுறைப் போக்கும் எத்தகைய கொடுமையானவை என்பதை ஈழத்து மக்கள் தெரிந்தவர்கள்.

சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு நடந்த கதி இன்று ஈழத்து மக்களின் வாழக்கையில் பெரும் தாக்கத்தை செலுத்துகிறது. இரத்தம் உறைந்த கதைகளாகவும் சித்திரவதைகள் நிறைந்த கணங்கள் மிக்க காலமாகவும் இன்னும் தகித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பல குடும்பங்கள் கண்ணீரோடு அலைகின்றார்கள். தினமும் பொழுதும் காணாமல் போணவர்களுக்காகவும் சரணடைந்தவர்களுக்காகவும் காத்திருக்கிறார்கள். இந்த காத்திருப்பு இன்றைய காலத்தில் இரண்டாண்டை கடந்து கொண்டு போகிறது. சரணடைந்தவர்கள் பற்றிய மர்மங்களும் அலைச்சல்களும் இரண்டாண்டுகளை நிரப்பியுள்ளன. போருக்குப் பிந்திய வாழ்க்கையில் ஈழத்து மக்களின் இயல்பை பாதிக்கின்ற மிகவும் தாக்கம் செலுத்துகின்ற பெரும் விடயமாக இது நீள்கிறது. இந்தப் பிரச்சினை வன்னியில் மட்டும் தாக்கத்தை செலுத்தவில்லை. முழு ஈழத்தையும் கலங்கப்பண்ணுகிறது.

சரணடைந்தவர்கள் என்ன ஆனார்கள்? காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள்? இலங்கை அரசின் மனிதாபிமானக் கண்களுக்கு சரணடைந்தவர்களும் ஒன்றுதான்., காணாமல் போனவர்களும் ஒன்றுதான்., மக்களும் ஒன்றுதான். சரணடைந்தவர்களும் காணமல் போனவர்களுக்கும் நடந்தது ஒன்றுதான். போரில் மக்கள் இரக்;கமற்ற வகையில் எப்படி கொன்றழிக்கப்பட்டார்களோ அதைப்போலவே அதன் தொடர்ச்சியாக சரணடைந்தவர்களுக்கும் நடந்தது. அவர்கள் இப்படிச் சித்திரவதை செய்ததைவிட என்னைக் கொன்றிருக்கலாம் என்று உயிர் தப்பிய போராளிகள் குறிப்பிடுகிறார்கள். மக்களைப் பற்றியோ, ஒடுக்குமறையைப் பற்றியோ, போராட்டத்தைப் பற்றியோ, விடுதலையைப் பற்றியோ இனியொரு பொழுதும் சிந்திக்காதீர்கள் என்பதற்காகவே எல்லாச் சித்திரவதைகளும் நடத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லத்துறை கோபிநாத் ஈழப் போரின் இறுதிநாட்களில் முள்ளிவாய்க்காலில் வைத்து தனது குடும்பத்தை பிரிந்து சரணடையச் சென்றார். இவர் சரணடையும் முடிவை எடுத்திருந்ததை தன் தாயாருக்குத் தெரிவித்திருக்கிறார். ஆனால் கோபிநாத் எங்கு? எப்படி? சரணடைந்தார் என்ற விடயம் தெரியவரவில்லை. இன்று கோபிநாத்தின் தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். தனது மகன் திரும்பி வருவான் என்கிற காத்திருப்பையும் அவன் சொல்லிச் சென்ற இறுதி வார்த்தையையும் அவனைப் பற்றிய நினைவுகளையும் தவிர அவரிடம் ஒன்றுமில்லை. இவரைப் போல பல போராளிகள் சரணடைந்த தருணத்தில் தங்கள் குடும்பங்களுக்குத் தெரிவித்து விட்டு யுத்த களத்தில் சிதறுண்டிருக்கிறார்கள்.

நான்காம் ஈழப் போரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் சிலர் சரணடையும் முடிவை எடுத்தார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பளர் பா. நடேசன், சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் உட்பட உயர்மட்டப் புலிகள் சிலரும் ஏனைய போராளிகளும் சரணடைந்தார்கள். அவர்கள் இலங்கை அரசின மனிதாபிமானக் குணத்தை நம்பிச் சரணடையவில்லை. சர்வதேச பேச்சு வார்த்தைகளினால் பெறப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக வெள்ளைக் கொடியுடன் சென்றார்கள். இலங்கை அரச படைகள் அதே வெறிக்குணத்துடன் சரணடைந்த போராளிகளை அதே இடத்தில் அதே கணத்தில் சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொன்றது. பா. நடேசனும், புலித்தேவனும் யுத்தகளத்தில் கொல்லப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டார்கள் என்று இலங்கை அரசு அறிவித்த மறுகணமே அவர்களுக்கு நடந்த துரோகம் தெரியவந்தது. இதே சூழலில் அல்லது இதே கணங்களில் பல போராளிகள் சரணடைந்த பொழுது இந்தக் கதியே நடந்தது. வெள்ளைக் கொடிகளை துப்பாக்கிக் குண்டுகளும் சித்திரவதைக் கத்திகளும் கிழித்து எரித்துப் போட்டன.

பெருமளவான மக்களுடன் யுத்தம் ஓயும் கணங்களில் சரணடைந்த போராளிகள் பலருக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளே இன்று அரசை நோக்கி மக்களிடமிருந்து எழுகின்றன. இதில் விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்கள், மூத்த போராளிகள், இளம் போராளிகள், போராளிக்குடும்பங்கள் எனப் பலர் சரணடைந்துள்ளார்கள். கொடும் யுத்தத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு மக்களை வாருங்கள்! வாருங்கள்!! என்று அழைத்து மக்களையும் போராளிகளையும் பிரித்து ஏற்றும் அறிவித்தல்களை இராணுவத்தினர் வழங்கியுள்ளார்கள். இதனையடுத்து பல போராளிகள் தாமாகவே சென்று இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்கள். சிலர் மக்கள் தடுப்பு முகாங்களில் வைத்து கைது செய்யப்பட்டு போராளித்தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

இந்தத் தருணத்தில்தான் விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகளான கலைபண்பாட்டுக் கழக பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா. வே பாலகுமாரன், திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன், சமராய்வுக் கழக பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி, அரசியல் பிரிவு துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த இன்பன், ராஜா, வௌ;வேறு துறைகளைச் சேர்ந்த போராளிகளான குட்டி, வில்வன், பாபு, பிரியன், பூவண்ணன், சாந்தன் உட்பட பல போராளிகள் சரணடைந்தார்கள். சரணடைந்த நிலையில் சுமார் ஐந்தாயிரம் பேர் இப்படி என்ன ஆனார்கள் என்ற நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு அருட்தந்தை ஜோசேப் பிரான்ஸ் அடிகளாரும் இதே தருணத்திலேயே சரணடைந்துள்ளார். சிங்கள மொழியில் பேசுவார் என்பதினால் அவரே போராளிகளை அழைத்துச் சென்றிருக்கிறார். அடிகளாரும் என்ன ஆனார் என்று தெரியவில்லை. குழந்தைகள், முதியவர்கள் என்று சித்திரவதை செய்து கொல்லுபவர்களிடம் பாதிரியார்களுக்கு மட்டும் என்ன மனிதாபிமானம் கிடைக்கப் போகிறது? நான்காம் ஈழப் போரின் உக்கிரம் அதனுடைய காலத்தையும் கடந்து பயங்கரங்களை உருவாக்கியிருக்கிறது. முன்னாளிப் போராளிகளை தேடியபடி இராணுவ முகாங்களுக்கும் அரசின் பிரசார முகாங்களுக்கும் அமைச்சர்களிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் மனித உரிமை அமைப்புக்களிடமும் மக்கள் நாளும் பொழுதுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி மகிந்தராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஜனாதிபதி நல்லிணக்க ஆனைக்குழுவின் முன்பாக பல முன்னாள் போராளிகளின் மனைவிமார், தாய், தந்தையர் சாட்சியங்களை அளித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் யாருமில்லை என்றும் இல்லாதவர்கள் இல்லை என்றும் அவர் சரணடையவில்லை என்றும் இவர் சரணடையவில்லை என்றும் இடத்திற்கு ஒரு கதை பேசி வரும் அரச தரப்பினரது முகங்களில் மக்களின் சாட்சியங்கள் ஓங்கி அறைகின்றன. சாட்சியங்கள் சாட்சியங்களாக அந்த இடத்தில் ஒலித்திருக்கின்றன. எனது காணவரை இராணுவத்தினர் ஏற்றிச் சென்றார்கள். அவர் செல்லுவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லும் திருகோணமலை மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி தனது கணவரை சரணடையுமாறு தானே வற்புறுத்தியதாக குறிப்பிட்டார்.

போர் எல்லாவிதத்திலும் மக்களை தாக்கிய நிலையில் மக்களுக்காக போராடிய கணவர் எழிலன் இனியாவது குடும்பத்திற்காக வாழ வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலேயே ஆனந்தி கணவனை சரணடையச் சொல்லியிருக்கிறார். இன்று, ஏன் அவரை சரணடைச் சொன்னேன் என்று தலையில் அடித்து அழுகிற நிலமையில் அவர் இருக்கிறார். சைனைட் குப்பியை கடித்திருந்தாலும் சித்திரவதைகள் இல்லாமல் அவர் செத்துப் போயிருப்பார். சரணடைந்ததால் என்ன சித்திரவதைகளை அனுபவிக்கிறாரோ? என்று ஆனந்தி அழுகிறார். இன்று போரால் தனித்து விடப்பட்ட பெண்களில் முன்னாள் போராளிகளின் மனைவிமாரும் அதிகமதிகம் சமூகத்தின் அவலங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தை எதிர்கொள்வதைவிட இது அவலமானது. தனித்த பெண்ணாக குழந்தைகளுடன் வாழும் நிலையில் இராணுவ சூழலும் ஆதரவற்ற தன்மைகளும் அவர்களை ஆபத்து மிக்க வாழ்க்கையை சுமக்க வைக்கிறது. போரால் கணவனை இழந்த பெண்களும் காரணம் அறியப்படாமல் தடுப்பில் வைக்கப்பட்டவர்களின் மனைவிமாரும் முன்னாள் போராளிகளின் மனைவிமாரும் இந்த அவலங்களை இன்று பெரியளவில் எதிர்கொள்கிறார்கள்.

முன்னாள் போராளிக் குடும்பங்கள் முழுமையான கண் காணிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்த கண்காணிப்புக்களும் விசாரிப்புக்களும் இயல்பான வாழக்கையை மறுக்கும் அச்சுறுத்தலாகவே தொடர்கின்றன. இதனால் சமூகத்தின் ஓட்டத்திலிருந்து விலக்கப்பட்டு விருப்பங்களையும் வெறுப்புக்களையும் துறந்து நடைபிணங்களைப் போல வாழ்வதாக சில பெண்கள் தெரிவிக்கிறார்கள். தடுப்பில் இருந்து ஒரு போராளி விடுவிக்கப்பட்டு வரும் பொழுது அந்தப் போராளியை பலரும் சென்று பார்க்கிறார்கள். பார்த்துக் கொண்டு மிக ஆவலுடன் இவரைக் கண்டாயா? அவரைக் கண்டாயா என்று காத்திருப்பு மிகுந்த விசாரிப்புக்களை தொடுப்பார்கள். முன்னாளிப் போராளிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இப்படிக் கேட்பதும் இந்தக் குடும்பங்கள்மீது இராணுவத்தினர் கண்காணிப்புக்களை செலுத்துகின்றனர். உறவைத் தேடும் ஆவலையும் காத்திருப்பையும்கூட வெளிப்படுத்துவதும் குற்றமா? என்று முன்னாள் போராளிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கோபத்துடன் கேட்கிறார்கள்.

எனது பிள்ளைளையின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டால் கண்ணை மூடி விடுவேன் இல்லாவிட்டால் எனது சிதை எப்படி எரியும் என்ற கேள்வியால் அவலத்தை வெளிப்படுத்துகிறார் அரசியல் பிரிவு துணைப் பொறுப்பாளர் சோ தங்கனின் தயாhர் அன்னலட்சுமி. சோ. தங்கனுடன் அவரது மனைவி பிள்ளைகளும் சரணடைந்துள்ளார்கள். அந்தப் குடும்பமே என்ன ஆனது என்று தெரியாத நிலையில் வெறுமையுடன் இருக்கிறார் அன்னலட்சுமி. போராளிகளுடன் அவர்களின் குடும்பங்களும் பலிகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்சலெ;வி எனப்படும் சசிரேகாவும் அவரின் குழந்தைகள் இருவரும் கடும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்கள் யுத்தம் முடிந்த நிலையில் தடுப்புமகாமிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு பனாங்கொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்ட்டார்கள்.

கையால் கொண்டு போய் இராணுவத்திடம் அவர்கள் கொடுக்கப்பட்டார்கள். அவர்கள் கையளிக்கப்படவர்கள். பொதுமன்னிப்பு வழங்குகிறோம் என்று அறிவிக்கப்பட்டதினாலேயே அழைத்த ஒலிபெருக்கியை நம்பி அவர்கள் சரணடைந்தவர்கள். முள்ளிவாய்காலிலும் முல்லைத்தீவிலும் ஓமந்தையிலும் இப்படி அறிவிக்கப்பட்டது. சரணடையாதவர்கள் வெள்ளைவானில் கடத்தப்படலாம் என்றும் அதே ஒலிபெருக்கியில் அச்சுறுத்தப்பட்டது. வன்னி யுத்தத்தில் தீவிரமாகச் செயற்பட்ட 58ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த சவேந்திரடிசில்வா தலமையிலான இராணுவத்திடமே விடுதலைப் புலி முன்னாள் போராளிகள் சரணடைந்துள்ளார்கள். இந்த தகவல்களை முன்னாள் போராளிக்குடும்பங்கள் தெரிவித்தே சரணடைந்தவர்களை விடுவிக்க வலியுறுத்துகிறார்கள்.

என் கணவர் உயிரோடு இருக்கிறார்! ஏன் பிள்ளை உயிரோடு இருக்கிறது!! என்ற நம்பிக்கை, காத்திருப்பையும் ஆவலையும் துயரத்தையும் நீட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு என்ன சித்திரவதை நடக்கிறது? அவர்களின் கணங்கள் எப்படிக் கழிகின்றன என்ற ஏக்கங்களும் தொடர்கின்றன. இராணுவத்தின் தடுப்புமுகாங்களில் உளவியல் ரீதியான அழுத்தங்களையும் மன மாற்றங்களையும் செய்து மனத்தையே பெயர்க்கும் நிகழ்ச்சித் திட்டங்களே நடத்தப்படுகின்றன. தடுக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மிகுந்த மனவுளைச்சலை கடக்க முடியாதிருக்கிறார்கள்.

கிளிநொச்சியில் அக்கராயன் பிரதேசத்தில் கணவர் தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்து புதைத்துக் கொன்றுள்ளார். இப்பொழுது அந்தப் பெண் சிறையில் வைக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் கணவனற்ற தனிமையையும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட வறுமையையும் சாதமாக பயன்படுத்தி அந்தக் குடும்பத்தின் வாழக்கையையும் எதிர்காலத்தையும் யாரோ சிதைத்துள்ளார்கள். இம்மாமாதிரியாக குடும்பங்களின் சிதைவுகளையும் அழிவுகளையும் காணாமல் போதல்களும் தடுப்புமுகாங்களும் ஏற்படுத்தி சமூகத்தை சிதைத்து விடுகின்றன. இதனால் பல குழந்தைகளும், சிறுவர்களும், பிள்ளைகளும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

தமிழ்ச்செல்வி கிளிநொச்சியில் விவேகானந்தநகரைச சேர்ந்தவர். இறுதி யுத்த களத்தில் தனது தாய் தந்தை மற்றும் சகோதரர்களை செல் தாக்குதல் ஒன்றிற்குப் பலி கொடுத்தவர். அவருக்காக உயிரோடு இருக்கும் ஒரே ஒரு சகோதரனும் போராளித்தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இன்று அநாதரவு நிலையை அடைந்துள்ள தமிழ்ச்செல்வி உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருக்கிறார். யுத்ததால் உறவுகளை இழந்து பெரும்பாதிப்பிற்கு முகம் கொடுத்த இந்தச் சிறுமி தொடர்ந்தும் தனிமையிலும் ஆதரவற்ற தன்மையிலும் வாடும் நிலையை சகோதரனின் தடுப்புமுகாம் வாழ்வு ஏற்படுத்தியுள்ளது. அண்ணா எப்பொழுது திரும்புவான் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த நலிந்த குரல் தொடர்ந்து நம்பிக்கையை வைத்திருக்கிறது. முன்னாள் போராளிகளது குடும்பங்கள் இப்படிப் பல சமூக அவலங்களுக்கு முகம் கொடுக்கத் தள்ளப்படுகிறார்கள்.

ஈழத் தமிழ் சமூகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்த அநீதிகளும் இழைக்கப்பட்ட கொடுமைகளும் பல தாக்கங்களை செலுத்துகிறது. பல வடிவங்களை பெற்று ஈழத்து அரசியலிலும் தாக்கங்களை செலுத்துகிறது. பெரும் போருக்கு முகமளித்த சமூகம் தனது காயங்களை ஆற்றி இயல்பு வாழக்கைக்கு திரும்புவதில் இந்த விவகாரங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் அரசோ முன்னாள் போராளிகளின் விவகாரத்தை பெரும் கொடுமையாக பெருக்கி; கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களின் உரிமை எப்படி மறுக்கப்பட்டதோ அப்படியே உரிமைக்காக போராடியவர்களை சித்திரவதைப்படுத்தி தண்டனை வழங்குகிறது. சரணடைந்தவர்களுக்கு நடந்தவை என்ன என்று அரசு தெரியப்படுத்தாத நிலையில் அவர்களது குடும்பங்களின் துயர் மிகுந்து, தீராக் கண்ணீர் தேசம் எங்கும் பெருகியிருக்க பயங்கரவாத்தை ஒழித்தோம் என்றும் சமாதானத்தை கொண்டு வந்தோம் என்றும் அவலங்களை மூடி மறைக்கிறது. இன்னும் வெறும் அவலம் பீடித்த கேள்வியாக எல்லோரிடத்திலும் தொடர்கிறது. சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் காணாமல் போனது எப்படி? இப்படியிருக்க எங்கள் படைகள் மனிதாபிமானப் பிரதிகளோடு சென்றது என்றும் மனிதாபிமான யுத்தம் நடத்தினோம் என்பதும் எவ்வளவு அபத்தமானது?

www.globaltamilnews.net/

Edited by நிழலி
மூலம் குறிப்பிட

முழுக்கவும் வாசிக்க நெஞ்சு கனக்குது... எமக்காக போராட புறப்பட்ட இந்த புனித உறவுகள் இன்று இருக்கும் அவல நிலை எம் இனத்தின் மீது எம்மாலேயே எழுப்பப்பட்ட சாபக் கேடு.

இவர்களின் இந்த நிலை இப்படி இருக்க இன்னும் நா க அரசு எனும் வியாபாரம் நடத்தும் மேதாவிகளை என்னவென்று சொல்வது

  • கருத்துக்கள உறவுகள்

மனிதத்த்தின் முதுகெலும்பையே அடித்து நொறுக்கி விட்ட கதைகள்!

வேட்டையாடுபவனும், வேட்டையாடப் படுபவனும்,இணைந்து வாழ ஒரு காலமும் முடியாது என்பதையே இந்தக் கதைகள் காட்டுகின்றன!

விரைவில் ஒரு விடுதலையே தேவை, எங்கள் இனத்திற்கு!!!

இணைப்புக்கு நன்றிகள் நுணா!

  • 6 months later...

"சரணடைந்தவர்கள் என்ன ஆனார்கள்? காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள்? இலங்கை அரசின் மனிதாபிமானக் கண்களுக்கு சரணடைந்தவர்களும் ஒன்றுதான்., காணாமல் போனவர்களும் ஒன்றுதான்., மக்களும் ஒன்றுதான். சரணடைந்தவர்களும் காணமல் போனவர்களுக்கும் நடந்தது ஒன்றுதான். போரில் மக்கள் இரக்;கமற்ற வகையில் எப்படி கொன்றழிக்கப்பட்டார்களோ அதைப்போலவே அதன் தொடர்ச்சியாக சரணடைந்தவர்களுக்கும் நடந்தது. அவர்கள் இப்படிச் சித்திரவதை செய்ததைவிட என்னைக் கொன்றிருக்கலாம் என்று உயிர் தப்பிய போராளிகள் குறிப்பிடுகிறார்கள். மக்களைப் பற்றியோ, ஒடுக்குமறையைப் பற்றியோ, போராட்டத்தைப் பற்றியோ, விடுதலையைப் பற்றியோ இனியொரு பொழுதும் சிந்திக்காதீர்கள் என்பதற்காகவே எல்லாச் சித்திரவதைகளும் நடத்தப்பட்டுள்ளன. "

இந்தக் கேள்விகளிற்கு என்னதான் பதில்? இவர்களின் இன்றைய நிலை என்ன? இவர்களின் குடும்பம் தற்போது என்ன நிலையில் உள்ளது.?

யார் தான் நிஜத்தை உரைப்பார்கள் என்று மனம் தவிக்கிறது. எப்படி யோசித்தாலும் பத்தி வினாவாகவே திருப்பி எதிரொலிக்கிறது. அவர்கள் உயிரோடு இருப்பார்களா என்று தான் . உறவுகளை தேடி அலையும் அவலம் தமிழர்க்கு என்று மட்டுமே எழுதப்பட்டதா?

" இனி குடும்பத்திற்காக வாழுங்கோ" என்று கதறலில் கணவனைச் சரணடைய வைத்த மனைவி... மகனின் நினைவில் மனம் பேதலித்த தாய் .... என்று நீளும் பட்டியல் நமக்கு எதைக் கூறுகின்றது? முள்ளிவாய்க்காலின் நினைவு நாள் அருகுவதிற்குள் இதற்கு விடை கிடைத்திடுமா? அல்லது காணாமல் போனவர்கள் காணாமல் போனதாகவே இருக்கட்டும் என்ற நிலையைக் காலம் கழிந்து எமை ஏமாற்றி விடுமா................? விடை தேடி மனம் தவிக்கிறது...!

இதை எழுதுவதால் மனத்தின் வலி குறைந்திடுமா என்று சிந்தித்தேன். மனதுள் வைத்து மருகுவதை விட எழுதுவதால் சிறிது பாரம் குறைவது போல ஓர் உணர்வு... !!!!

இவர்களின் இந்த நிலை இப்படி இருக்க இன்னும் நா க அரசு எனும் வியாபாரம் நடத்தும் மேதாவிகளை என்னவென்று சொல்வது

1. நாம் குறுகியகால நீண்டகால திட்டங்களை வகுக்கவேண்டியவர்களாக உள்ளோம்

- உடனடி தேவைகள் குறுகிய கால திட்டங்கள் ஆகவும்

- அரசியல் தீர்வு நீண்ட கால திட்டமாகவும் பார்க்கப்படலாம்

2. நாடுகடந்த அரசின் பொறுப்பு மட்டுமல்ல, எல்லா தமிழர்களினதும் அவர்கள் அமைப்புக்களினது பொறுப்பு இது

3. இதில் தாயக புலம்பெயர் அமைப்புக்கள் சேர்ந்து பயணிக்கவேண்டிய தேவை உள்ளது

மனிதத்த்தின் முதுகெலும்பையே அடித்து நொறுக்கி விட்ட கதைகள்!

வேட்டையாடுபவனும், வேட்டையாடப் படுபவனும்,இணைந்து வாழ ஒரு காலமும் முடியாது என்பதையே இந்தக் கதைகள் காட்டுகின்றன!

விரைவில் ஒரு விடுதலையே தேவை, எங்கள் இனத்திற்கு!!!

இணைப்புக்கு நன்றிகள் நுணா!

நாம் ஒவ்வொருவருவரும் குறைந்தது சிறு பரப்புரையாவது இல்லை ஒரு அமைப்புக்கு

மாதம் மாதம் சிறு பங்களிப்பு செய்யவேண்டும்.

வர இருக்கும் ஐ.நா. மனித உரிமை அமர்வுக்கு சிங்களம் மீதாக ஒரு தீர்மானம் வர உழைக்கவேண்டும். இது ஒரு கடைசி சந்தர்ப்பமாக பார்கப்படல் வேண்டும்.

Dear ALL: Kindly make a note of these dates in your diary, note book blackberry, ipod etc.

Calender of events in the United Nations; Jan-feb 2012

January 2012

Jan 16 - Feb. 03 Committee on the rights of Child - Regular meeting

Jan 18 - Jan 27 Holocaust Rememberence Day

Jan 27 International Day of Commemoration in memory of the victims of War

February 2012

Feb 13 - Mar. 09 Committee on the elimination of Racial Discrimination 80th Session

Feb 20 - Feb. 24 Committee against torture, subcommittee on Prevention of Torture & other cruel inhuman or

degrading treatment or punishment. 16th Session.

Feb 27 - Mar 23 HUMAN RIGHTS COUNCIL MEETING 19TH SESSION

Feb 27 Committee on the status of women - 56th Session [Women - please write few words]

Kindly remember these dates and write few words: Our immediate task is to start writing to our parlimentarians, senators, MPPs from EU, USA, UK and all democratic countries, HRW, Amnesty International, International Crisis group, Elders Org, Commonwealth, CPA, Local and International, Media, Community Human rights organization, clergy regarding GENOCIDE, WAR CRIMES, CRIMES AGAINST HUMANITY RAPE ETC. to take up the SRI LANKAN issue in the HUMAN RIGHTS COUNCIL MEETING STARTING ON FEB. 27TH, thank you.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.