Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டு சிவாஜிலிங்கம் - சிறீகாந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 ஜூன் 2011

ரெலோ இயக்கத்தில் இணைவு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக் கட்சியினை தாங்கள் கலைத்து விடுவதாக இன்று அதன் பொதுக்குழு அறிவித்திருக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுக்குழு அண்மையில் கூடி எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமே தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பைக் கலைத்து விடுவதாக அதன் நாடாளுமன்றச் செயலாளர்களான கே. சிவாஜிலிங்கம் மற்றும் எஸ். சிறிகாந்தா ஆகியோர் தெரிவித்தனர்.

இன்று யாழ் நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. அண்மையில் சுவிஸ்லாந்து நாட்டிலிருந்து தாயகம் திரும்பியிருந்த தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பினது மூத்த உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் குழு ஒன்று நடத்திய சமரசப் பேச்சிசுக்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கலைக்கப்பட்ட தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் ரெலோ இயக்கத்தில் இணைந்து கொள்வார்கள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் தமது கட்சியில் ரெலோ அல்லாதவர்களும் இருப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளில் இணைந்திருக்க விருப்பம் கொண்டிருப்பின் ரெலோ அமைப்பில் இணைந்திருக்க விருப்பம் கொண்டிராதவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளில் இணைந்து கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதய நெருக்குவாரமான அரசியல் சூழலின் மத்தியில் ஆகக் குறைந்தது ஒரு அரசியல் கட்சியிலாவது அனைத்து தமிழ் தேசியக் சக்திகளும் ஒன்றிணைய வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள். புலம் பெயர்ந்த உறவுகளும் அதனையே வலியுறுத்தி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே தமது இயக்கத்தினை தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை கலைத்துவிட்டு தமிழீழ விடுதலை இயக்கத்தில் அனைவரும் மீண்டும் இணைவதென தீர்மானித்திருக்கின்றோம் என அவர்கள் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.

இதனிடையே நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய மாநாடு வவுனியாவில் இடம்பெறவுள்ளது. அரசியல் தலைவராக சிவாஜிலிங்கத்தினை மீண்டும் நியமிக்க வேண்டுமென சிறிகாந்தா இந்த சந்திப்பின்போது வலியுறுத்த உள்ளதாகவும் ஏற்கனவே புலம் பெயர்ந்த உறவுகளுடனான சந்திப்பின்போது சிறிகாந்தா வலியுறுத்தி இருந்ததாகவும் தெரியவருகின்றது.

எனினும் நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெறுகின்ற தேசிய மாநாட்டில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சித் தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63153/language/ta-IN/article.aspx

இதற்கெல்லாம் கேள்விகளே கிடையாது. ஒன்றாயிருத்தல் என்பது தமிழர் சூனியம். வாழ்க.

இடையில் குழப்பம் வராமல் ஒன்றிணைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, 26 June 2011 03:10

சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் மீள இணைவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று கே.என்.சிறிகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இன்று முதல் கலைக்கப்பட்டு கட்சி தமிழீழ விடுதலை இயக்கத்துடன் மீள இணைகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கையை இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கே.என்.சிறிகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் புலம்பெயர் உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் தாம் தமது கூட்டமைப்பை கலைத்து விட்டு மீளவும் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் இணைவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் கே.என்.சிறிகாந்தா மற்றும் அவ் அமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்துடன் இணைவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளையும்ம் குறிக்கோள்களையும் ஏற்று உறுதியுடன் செயற்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்காக எமக்குத் துரோகம் செய்த சக்திகளை கண்டுகொள்ளாமல் விடுவதோ அல்லது அவர்களின் துரோகங்களுக்கு வெள்ளை பூசுவதாயோ எங்கள் நடவடிக்கை இருக்காது.

எமது நிலைப்பாடு தொடர்ந்தும் ஒன்றாகவேயிருக்கும். நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள ரெலோ அமைப்பின் தேசிய மாநாட்டில் நாம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

http://www.sankathi.com/news/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.