Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரம் என்கையில் இல்லை -மன்மோகன் சிங் வாக்கு மூலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் குற்றச்சாட்டுகளில் இந்திய நடுவன் அரசின் அமைச்சர்கள் பதவி இழப்பதால் புது டில்லியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பினாமிப் பிரதமராகப் பதவி வகிக்கும் மன்மோகன் சிங் “கூட்டணி அரசில் எனது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. யாரை அமைச்சராக்க வேண்டும் என்கிற அதிகாரம் எனக்கில்லை” என்று கண்ணீர் சிந்தாத குறையாகச் சொன்னார்.

தெற்கு ஆசியாவின் பிராந்திய வல்லரசும், உலகப் பொருளாதாரத்தில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இடம்பெறும் இந்தியாவின் அதியுயர் அரசியல் தலைவரின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் 180 ஊழல் நாடுகளில் இந்தியா 84ம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஒரு இலட்சம் கோடிக்கு மேற்பட்ட பணம் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வெளிநாடுகளில் வைப்பில் இடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் அமைச்சர்களும் தொழிலதிபர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக லோக்பால் மசோதா கொண்டு வருவதில் அரசுக்கு ஆர்வம் இல்லை. காந்தியவாதி அன்னா ஹசாரே தனது 74 வயதுப் பிறந்த நாட் கொண்டாட்டங்களின் போது தான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாகச் சூளுரைத்துள்ளார்.

ஏற்கனவே யோகி ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை டில்லி பொலிசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் மூலம் குழப்பியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த தொலைத்தொடர்பு அமைச்சர் அ.ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்தப் பதவியைப் பெற்றுக் கொடுத்தவரும் அதன் மூலம் பெருந்தொகை இலஞ்சம் பெற்று கலைஞர் தொலைக்காட்சியை உருவாக்கியவருமான கனிமொழி எம்.பியும் சதிக் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்னும் இரு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படலாம் என்று புது டில்லிச் செய்திகள் கூறுகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் தங்கள் பதவியைப் பயன்படுத்திப் பெருந்தொகை பணத்தைச் சுருட்டியுள்ளதாகப் புகார் கிளம்பியுள்ளது.

பணம் காய்க்கும் அமைச்சகங்களைத் தேடிப் பிடிப்பது தான் திமுகவின் கொள்கை. தொலைத் தொடர்பு உரிமங்கள் வழங்குவதில் ராஜா செய்த தில்லு முல்லுகளை அதே தொலைத் தொடர்பு பதவியை முன்பு வகித்த தயாநிதி மாறன் செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

தயாநிதி மாறனின் தம்பி கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி மற்றும் சன் திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர். அண்ணனும் தம்பியும் கூட்டாக ஊழல் செய்ததாகவும் இதற்காக இருவரும் விசாரிக்கப்படலாம் என்றும் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாநிதி மாறன் இப்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

மாறன் சகோதர்கள் கருணாநிதியின் பேரன்கள். மகன் அழகிரி மத்திய அமைச்சராகப் பதவி வகிக்கிறார். அவர் மீது பல ஊழல் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. பதவியிழந்து விசாரணைக்கு உட்பட்டுச் சிறை செல்லும் வாய்ப்பு இருவருக்கும் இருக்கிறது.

ஒரு சாதாரண வசதிகள் குறைந்த குடும்பத்தில் பிறந்தவரான கருணாநிதி இன்று இந்தியாவின் முக்கிய செல்வந்தக் குடும்பங்களில் ஒன்றுக்குத் தலைவராக உயர்ந்ததில் பெரும் மர்மம் கிடையாது. அவர் சிறந்த உழைப்பாளி, குடும்ப நலனில் தீவிர அக்கறையும் பற்றும் உள்ளவர். பணம் திரட்டுவதைக் குறியாகக் கொண்டவர்.

மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் என்று பரந்து விரிந்த கருணாநிதி குடும்பத்தில் 135 குடும்பங்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டின் எல்லா வகை முயற்சிகளையும் இந்தக் குடும்பங்கள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சி புரிந்தன.

தமிழ் நாட்டிலிருந்து புது டில்லிக்கும் இந்த விரிவாக்கத்தை நகர்த்திய போது வீழ்ச்சி ஏற்பட்டது. இந்தியாவின் ஊழல் சாம்ராச்சியத்தைத் தகர்ப்பது மிகவும் கடினம். அரசியலிலும் தொழிற்துறையிலும் ஆரம்பித்த ஊழல் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஆக்கிரமித்துள்ளது.

http://www.pathivu.com/news/17135/57//d,article_full.aspx

அவளுக்கென்ன மாட்டிவிட்டாள் அநுபவிப்பது சிங்கல்லவா... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டி சுட்டதடா கைவிட்டதடா...... புத்தி கெட்டதடா நெஞ்சைத்தொட்டதட :blink:

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் குற்றச்சாட்டுகளில் இந்திய நடுவன் அரசின் அமைச்சர்கள் பதவி இழப்பதால் புது டில்லியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பினாமிப் பிரதமராகப் பதவி வகிக்கும் மன்மோகன் சிங் “கூட்டணி அரசில் எனது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. யாரை அமைச்சராக்க வேண்டும் என்கிற அதிகாரம் எனக்கில்லை” என்று கண்ணீர் சிந்தாத குறையாகச் சொன்னார்.

எமது உறவுகளின் கோரப் படுகொலைகளுக்கு, யார் பொறுப்பேற்கப் போகின்றார்கள்?

அரசின் தலைவர் என்ற வகையில், பிரதமர் மன் மோகன் சிங் தான் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.