Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறிதியழித்த வீடுகளைக்கூட கட்டித்தர வக்கற்ற இந்தியா அரசியல் தீர்வை பெற்றுத்தருமா?

Featured Replies

இந்திய வீட்டுத்திட்ட உதவிக்கு என்ன நடந்தது? இப்போது வடக்குக் கிழக்கில் உள்ள மக்களின் கேள்வி இது. இந்தியா மீண்டும் மீண்டும் எதற்காக தங்களுடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறது என்று இவர்கள் கேட்கிறார்கள். வாக்குறுதியளித்தபடி வீடமைப்புக்கு உதவப் பின்னிற்கும்இந்தியா எவ்வாறு

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கும் உதவும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள். இந்திய உதவி என்பது இன்று மக்களைச் சோர்வடைய வைத்துள்ளது.

வடக்குக் கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்த இந்தியா இப்போது அந்தக் கதையையே எடுப்பதில்லை. இந்தியாவின் அறிவிப்பின்படி வடக்குக் கிழக்கில் 50,000 வீடுகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவின் இந்த அறிவிப்பை இலங்கை மகிழ்ச்சியுடன் வரவேற்றது. பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியா முன் வந்திருப்பதாக இலங்கை மகிழ்ந்தது.

இந்தியாவின் இந்த அறிவிப்பை அப்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இங்கே இலங்கையில் பகிரங்கப்படுத்தியிருந்தார். இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒரு அணியினர் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இலங்கையில் ஐம்பதினாயிரம் வீடுகளை அமைப்பதற்கான அறிவிப்பை இந்தியா செய்தது. ஆகையால் இந்தச் சேதி உடனடியாகவே அங்கிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

இந்தியாவின் இந்த வீடமைப்புத் திட்டம் பற்றிய செய்தி அறிந்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மகிழ்ச்சி தெரிவித்தது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை இந்தியா முன்வந்து செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூட்டமைப்பினர் கேட்டு வந்தனர்.

இந்த நிலையிலேயே இந்தியா இந்த வீடமைப்பு உதவிக்கு முன் வந்திருப்பதாகக் கூட்டமைப்பினர் கருதினர். அத்துடன் போரின் போது இலங்கை அரசாங்கத்துக்கு உதவிய இந்தியா, போருக்குப் பின்னர், தமிழ் மக்களுக்கு உதவிசெய்து, தன்னுடைய வரலாற்றுக் கறையைப் போக்கிக் கொள்ளும். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த வீடமைப்புத்திட்ட உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூட்டமைப்பினர் கருதியிருக்கலாம்.

இந்தியாவின் அறிவிப்பின்படி இந்திய வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் உட்பட இந்தியப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையின் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஜீ. எல். பீரீஸ் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் இருக்கும் போது எதற்காக இந்தியாவும் இலங்கையும் யாழ்ப்பாணத்தில் இந்திய வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டுகின்றன என்ற கேள்வி அப்போது எழுப்பப்பட்டது.

இந்த வீடமைப்புக்கு அடிக்கல் நாட்டப்பட்ட காலப்பகுதியிலேயே இந்தியாவின் இலங்கைக்கான துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது. இப்போது இந்தத் துணைத்தூதரகத்தில் இருந்து பல பொது நிகழ்ச்சிகளில் அங்குள்ள தூதரக அதிகாரியான மகாலிங்கம் கலந்து கொள்கிறார். இந்த மகாலிங்கம் ஒரு அருமையான மனிதர் என்று பல யாழ்ப்பாணத்தவர்கள் மகாலிங்கத்தைப்பற்றிச் சொல்கிறார்கள்.

யாழ்ப்பாண மக்களுக்கு தன்னால் முடிந்த அவர்களுக்குத் தேவையான பயண அனுமதி, படிப்புக்கான வாய்ப்புகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மகாலிங்கம் செய்து கொடுக்கிறார். ஆனால், வீடமைப்புக்கு நாட்டப்பட்ட அடிக்கல்லைச் சுற்றிப் புல் வளர்ந்து விட்டது. இந்திய வீடமைப்புப் பற்றிய கோவைகள் எங்கோ தூரப் போய்விட்டன. இது பற்றி அண்மையில் வன்னி மக்கள் கொஞ்சம் சூடாகக் குரல் எழுப்பியபோது, முதற்கட்டமாக 1500 வீடுகளை அமைக்கலாம் என்று இந்தியத்தரப்பில் சொல்லப்பட்டதாகத் தகவல். இதேவேளை, இந்த ஆயிரத்து ஐநூறு வீடுகளை ஆரம்பிப்பதற்கான முதல் நடவடிக்கையாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 50 வீடுகள் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த வேலைகள் மிக மந்த கதியிலே நடக்கின்றன. என்ற போதும் ஏனைய தரப்புகள் வன்னிப் பகுதியில் மேற்கொண்டு வரும் வீடமைப்பு வேலைகளைப் போல விரைவான முறையில் இந்த வீடமைப்புகள் நடைபெறவில்லை.

இதுதான் மக்களுக்குக் கவலையளிக்கும் சங்கதியாகும். வன்னியில் பல நாடுகளின் தொண்டு நிறுவனங்கள் வீடமைப்புப் பணிகளைச் செய்து வருகின்றன. கியூடெக், சுவிஸ் உலக வங்கியின் அனுசரணையுடன் உள்ளூர் அமைப்பான நேர்ப், செஞ்சிலுவைச்சங்கம், ஐக்கிய நாடுகள் வீடமைப்புத்திட்டம், தேசிய வீடமைப்பு அதிகார சபை போன்றவை துரித கதியில் வீடமைப்புகளைச் செய்து வருகின்றன.

அண்மையில் கிளிநொச்சியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஐம்பது வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டன. இதைப்போல வேறு நிறுவனங்களின் வீடமைப்புகளும் 40 வீதத்துக்கு மேல் பூர்த்தியாகியுள்ளன.

ஆனால், இந்திய வீடமைப்பு மட்டும் மந்த கதியில் உத்தரவாதமற்ற நிலையில் இருக்கின்றது. இந்தியா வாக்குறுதியளித்தபடி இந்த 50 ஆயிரம் வீடுகளையும் அமைத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினை என்பது பெருமளவுக்கும் தீர்ந்து விடும்.

இப்போது இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், தமிழகத்தில் தி.மு.க ஆட்சியிலிருந்தபோது மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கியமானதாக வன்னிக்கான வீடமைப்பும் அடங்கியிருந்தது.

இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ஜெயலலிதா அரசு இதை ஒரு எதிர் நிலைப்பாடு எடுத்து கிடப்பில் போடாமல், அல்லது இந்த உதவித்திட்டம் தாமதமாகாத வகையில் விரைவுபடுத்தி நிறைவேறுவதற்கு உதவ வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதாகச் சொல்லும் ஜெயலலிதா அணியினர் அவருடன் ஆதரவாக நிற்கும் ஏனைய கட்சியினர் அனைவரும் இந்த விசயத்தில் மிகக் கரிசனையோடு இந்திய அரசைத் தூண்ட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் அதிகாரியான மகாலிங்கம் அவர்களும் இந்த இந்திய வீட்டுத்திட்ட உதவிகள் குறித்து தன்னுடைய பொறுப்புக்குச் செய்திகளை அனுப்பி, மக்களின் எதிர்பார்க்கையைச் சொல்ல வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், “இந்தியா வீடமைப்புக்கு உதவுகிறது, அதற்கான ஏற்பாட்டுக்குத் தாமே வித்திட்டோம் என்று போட்டியிட்டுக் கொண்டு சொன்ன அரசியற் கட்சிகள் இப்போது வாயைப் பொத்திக் கொண்டு சத்தமில்லாமல் மௌனமாக இருக்கின்றன.

இந்திய உதவியைப் பற்றி விமர்சிக்கவோ வாய்திறக்கவோ முடியாத நிலையில் இருக்கின்றன என்பதே உண்மையாகும்.

இந்திய வீட்டுத்திட்டம் மந்த கதிக்குச் சென்றுள்ளதையிட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர் என்பது உண்மை. இந்தச் செய்தியை பிரதான தமிழ் ஊடகங்கள் கூட இதுவரையில் சுட்டிக்காட்டவில்லை.

இது மேலும் இந்த மக்களுக்குக் கவலை அளிக்கும் ஒரு விடயமாகும். இப்போது கேள்வி என்னவென்றால், இந்திய வீட்டுத்திட்டம் எந்த அளவில் நடைபெறும்? ஏத்தனை வீடுகள் அமைப்பது சாத்தியப்படும்? அது எப்போது? எவ்வளவு காலத்தில் சாத்தியப்படும்? என்பதே.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

2010011759390201_218165e.jpg

அட பாவமே ..வழிய போற ஆச்சாரிய கூப்பிட்டு எனக்கு ஆப்பு வை.. என்று ஆராவது சொல்வார்களா?.. மரத்தடியில் தூங்கினால் கூட உயிருக்கு பாதுகாப்பு உண்டு.. இவனுங்க கட்டிதர வீடு... ^_^ ^_^

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.