Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பு - மக்கள் மீதான தாக்குதல் சம்பவம் : அனைத்துலகத்தின் கவனத்துக்கு கொணடுசெல்ல நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Monday, 2011-06-27 14:28:47]

யாழ்-அளவெட்டியில், தமிழ் தேசிய கூட்டடைப்பின் பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறைச் சம்பவத்தை, அனைத்துலக அரசாங்கங்கள் மற்றும் அனைத்துலக அமைப்புக்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (யூன்26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைச் செயலர் முருகையன் சுகிந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல்வெளி இலங்கைத்தீவில் முற்றாக மறுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்மக்கள் வெளிப்படுத்த விளைகின்ற உணர்வுகளை-உரிமைககளை, சிங்கள மேலாதிக்க இராணுவக் கரங்ககொண்டு நசுக்க முனைகின்ற நிகழ்வாகவே, அளவெட்டிச் சம்பவத்தை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருதுவதாக செயலர் முருகையன் சுகிந்தன் மேலும் தெரிவித்தார்.

தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்க தமிழ்மக்கள் மேற்கொள்கின்ற இத்தகைய சனநாயக முன்னெடுப்புகளை அச்சுறுத்தும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளை, அனைத்துலகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் முகமாக நா.த.அசராங்கத்தின் அரசியல் வெளிவிவகார அமைச்சகம் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள நா.த.அரசாங்க பிரதிநிதிகள் ஊடாக அந்தந்த நாடுகளின் கவனத்துக்கு முதல்கட்டமாக கொண்டு செல்ல இருக்கின்றது.

நாதம் ஊடகசேவை

http://www.seithy.com/breifNews.php?newsID=45551&category=TamilNews&language=tamil

[Monday, 2011-06-27 14:28:47]

யாழ்-அளவெட்டியில், தமிழ் தேசிய கூட்டடைப்பின் பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறைச் சம்பவத்தை, அனைத்துலக அரசாங்கங்கள் மற்றும் அனைத்துலக அமைப்புக்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்னுமொரு தாக்குதலா? எப்ப தாக்குதல் நடந்தது? இன்றைக்கு மாலையிலா?

ஆச்சரியமாக இருக்குது. எமக்கே இன்னும் தெரியவரவில்லை! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவலறியும் வேகம் புல்லரிக்கிறது.

அதுவும் இந்த மிக முக்கியமான விடயத்தை அமைச்சரவை தீர்மானமாக எடுத்த விவேகத்தை நினைக்க ஆச்சரியமாக உள்ளது.

நாம் இவர்கள் ஒன்றுக்கும் உதவாத சோம்பேறிகள், தமிழரின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாதவர்களோ என்று நினைத்து வந்தது தப்பாகிப் போய்விட்டது!

சனல் நாலு இரண்டு வருடத்துக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை காட்டி இன்றைய 'தமிழர் சுபீட்சத்தை' அழிக்கப்பார்கின்றது என்ற பிரச்சாரத்தை முறியடிக்க இது உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.