Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம்.(video & photo in )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, June 27, 2011, 20:25உலகம், காணொளி, தமிழீழம்82 viewsAdd a comment

அகதிகளாக தஞ்சம்கோரிய தமிழ் மக்களை நாடுகடத்த வேண்டாம் என கோரி, பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியப் பிரதமரின் காரியாலயத்திற்கு முன்னால் நேற்று மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளின் செயற்ப்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறீலங்காவில் தற்போதுள்ள சூழலில் தமிழர்களை இங்கிருந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்கு துன்புறுத்தப்படுவார்கள் எனவும், அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத பாதுகாப்பற்ற நிலையே காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மற்ரும் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இன அழிப்பு நடவடிக்கைகளை நன்கு தெரிந்திருந்தும் தமிழ் அகதிகளை தொடர்ந்தும் திருப்பியனுபுவதானது பிரித்தானியா இரட்டை போக்குடன் செயற்படுவதாகவே தெரிவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவது, சட்ட முறைக்கு எதிரானது எனவும், அகதிகள் தொடர்பிலான முறையான சட்டதிட்டங்களை பிரித்தானியா கொண்டிருக்கவில்லை எனவும் தமிழ் அகதிகளின் செயற்ப்பாட்டுக் குழுவினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளின் செயற்ப்பாட்டுக் குழுவினரில் ஒருவரான சட்டத்தரணி வாசுகி அவர்கள் பிரதமரிடம் ஒப்படைக்கவுள்ள மனுமை அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் வாசிக்கும் போதே மேற்கண்ட விடையங்கள் அங்கு தெரிவிக்கப்பட்டன.

அத்தோடு இந்த ஆர்ப்பாட்டத்தில் கூடிய மக்கள் தமது கைகளில் சிறீலங்காவின் இனவழிப்பை சித்தரிக்கும் பதாதைகளை கைகளில் தாங்கியவாறு மெழுகுவர்த்திகளையும் கைகளில் ஏந்தியிருந்தமையை காணமுடிந்தது.

http://youtu.be/rfgjUdvn60w

http://www.tamilthai.com/?p=20406

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற கண்ணியமான நிகழ்வுகளை ஆர்ப்பாட்டமென்றோ போராட்டமென்றோ வர்ணிப்பது பொருத்தமற்ற ஒன்று.

அடையாள ஒன்றுகூடல் என்பது பொருந்தும். தமிழர் பற்றிய செய்திகளை ஊடகங்களில் பதிவு செய்பவர்கள் மிகுந்த

சிரத்தையுடன் சொற்பதங்களைத் தெரிவுசெய்து பயன்டுத்தினால் தான் பிடித்துக் கொண்டிருக்கும் பிள்ளையார் குரங்கு ஆகாமல்

பார்த்துக்கொள்ளமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.