Jump to content

ஆனந்தகுமாரசுவாமிமுகாம் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது

Recommended Posts

பதியப்பட்டது

போரினால் பாதிக்கப்பட்டு வவுனியா மாவட்டம் ஆனந்த குமாரசுவாமி முகாமில் தங்கியிருந்து புளியங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் 59 மணவ மாணவியர்களுக்கான பாதணிகளை வழங்கும் திட்டத்திற்காக நேசக்கரம் அமைப்பானது உதவும் மனம்படைத்த புலம்பெயர் தமிழ் உறவுகளிடம் உதவிகள் கோரியிருந்தது. மேற்படி மாணவர்களுக்கான உதவிகளை பல நல்லுள்ளங்கள் முன்வந்து உதவியிருக்கிறார்கள். 28.06.2011அன்று மேற்படி மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது.

உதவிகளை முன்வந்து வழங்கிய நல்லிதயங்களுக்கு அம் மாணவர்களின் சார்பாக நேசக்கரம் அமைப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இத்திட்டத்திற்கான பங்களிப்பு வழங்கியோரின் பெயர் விபரங்கள் கிடைத்த தொகை ஆகிய விபரங்கள் PDFவடிவில் இணைக்கப்பட்டுள்ளது. கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

ஆனந்த குமாரசுவாமி முகாம் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கல்

மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கிய படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளது.

DSC00330.jpg

DSC00324.jpg

DSC003171.jpg

DSC00321.jpg

இம்முறை பொருட்கள் கொள்வனவுக்கானதும் பொருட்கள் வழங்கியமைக்குமான போக்குவரத்துச் செலவு 3900ரூபா உறவுகள் நீங்கள் வழங்கிய உதவியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை போக்குவரத்துச் செலவு எனது பங்காகக் கொடுத்து வந்தேன். நிர்வாகச்செலவும் எனது தனிப்பட்ட பங்களிப்பாகையால் என்னால் எல்லாவற்றையும் சுமக்க முடியவில்லை.

நேசக்கரம் நிர்வாகச் செலவு தொலைபேசி ,தபால் செலவு மற்றும் இதர செலவுகளை நிவர்த்தி செய்ய வாரத்தில் ஒருநாள் cleaning வேலையொன்று செய்தே சமாளிக்கிறேன். தனித்து எனது குடும்பம் அதற்கான வேலையோடு நிர்வாகச் செலவு மிகவும் அதிகமாக உள்ளது.

ஆகவே இம்முறை போக்குவரத்துச் செலவினை கிடைத்த உதவியிலிருந்து வழங்கியுள்ளேன். இதில் யாருக்காயினும் கருத்து முரண்பாடுகள் இருந்தால் அறியத்தாருங்கள்.

2வருடங்கள் இத்தகைய போக்குவரத்து நிர்வாகச் செலவுகள் தனித்தே சுமந்தாயிற்று. இம்முறை இயலாத நிலமையில் கிடைத்த உதவியிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனந்தகுமாரசாமிமுகாம் மாணவர்களுக்கான உதவிகோரிய செய்தி இணைப்பு கீழ் உள்ள இணைப்பில் இணைக்கிறேன்.

http://www.yarl.com/...showtopic=87136

Posted

... ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும், ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேசக்கரம் நிர்வாகச் செலவு தொலைபேசி ,தபால் செலவு மற்றும் இதர செலவுகளை நிவர்த்தி செய்ய வாரத்தில் ஒருநாள் cleaning வேலையொன்று செய்தே சமாளிக்கிறேன். தனித்து எனது குடும்பம் அதற்கான வேலையோடு நிர்வாகச் செலவு மிகவும் அதிகமாக உள்ளது.

யாழ் களத்தில் இருந்து பிறப்பெடுத்த நேசக்கரம் அமைப்பு தனது தற்காலிக திட்டங்களோடு நீண்ட கால திட்டங்களை செய்ய முன் வர வேண்டும். நேசக்கரம் அமைப்பிற்கு மாதாந்தம் 15 பவுண்களை கிரமமாம வழங்க விரும்புகிறேன். (நான் ஒரு மாணவன்.. வெளிநாட்டில் எங்கள் நிலை என்ன என்பது புரியும்.). பிரித்தானியா வாழ் நேசக்கர உறவுகள் இதனைப் பெற்றுக் கொள்ள முன் வந்தால் நல்லது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

***

அண்ணோய் இன்றைய நிலையில் தாயக மக்கள் எதிரியினதும் துரோகிகளினதும் பிடியில் தான் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு ஒரு சிறிய உதவியை வழங்க வேண்டும் என்றாலும்.. இவர்களுக்கு கூடாகவே உடனடியாக வழங்க முடியும். நான் ஒக்ஸ்பாம் போன்ற நிறுவனங்களுக்கும் பங்களிக்கிறேன். ஆனால் அவை எமது மக்களையா போய் சேர்கின்றன என்பது எனக்குத் தெரியாது.

சில இடத்தில் வளைந்து கொடுத்துத் தான் போக வேண்டும். அதை வைச்சு முயற்சிகளை.. மக்களை நோக்கி செய்யப்படும் மனிதாபிமான சேவைகளை விமர்சிப்பது மனிதப் பண்பாக இருக்க முடியாது. அதுவும் நேசக்கரம் செய்பவர்கள் எந்த இலாப நோக்கற்றும் தங்கள் சொந்த குடும்ப சுமைகளுக்கு மத்தியில் இதனை செய்கின்றனர். அவர்களுக்கு உபத்திரபம் செய்யாது.. நிம்மதியாக செயற்பட விட்டாலே போதும் என்று உணர முடிகிறது.

எங்கள் உறவுகளை கூலிக்கும் விபசாரத்துக்கும் விற்கும் கையறு நிலையில் நாம் இருந்து கொண்டு... இங்கே வீம்புச் சண்டை செய்வதில் எந்தப் பயனும் இல்லை. நாம் தான் அந்த உறவுகளை மீட்சிப்படுத்த வேண்டும். அதனை உணர்ந்து செயற்படுங்கள். அதற்கான வழிமுறைகளில் நேசக்கரத்தையும் பாவிக்க முடியும். அதனை செய்யுங்கள்.

Posted

... ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும், ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் ....

உங்கள் இலயாமையை மறைக்க உங்களை நீங்களே ஏமாற்றுகிறீர்கள் நெல்லையன். உங்களுக்கா அனுதாபப்படுகிறேன். பொய்யான குற்றச்சாட்டுகள் வைப்பது உங்களுக்கு மறுகருத்துச் சொல்வோர் மீதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த கே.பி. கோத்தாவை நண்பர்கள் என சொல்வது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இதை கருத்தாளர்கள் நன்கு அறிவர்.

இத்தகைய வக்கிரம் மிகுந்த நெல்லையனை நம்பி ஒரு போராளி குடும்பத்தைத் தந்தேன். அந்தக்குடும்பத்துக்கு உங்களால் ஒரு நன்மை கிடைத்ததே எனப் பெருமைப்பட்டேன். ஆனால் உங்கள் கருத்துக்கள் பழிசுமத்தல்கள் உங்கள் உள்நோக்கத்தை புரிய வைத்துவிட்டது. தயைகூர்ந்து உங்களிடம் பொறுப்புத்தந்த குடும்பத்தையும் இந்த துரோகிகள் வரிசையில் இணைத்து மகிழ்ச்சியடையாதீர்கள்.

யாருடனும் கூட்டு வைத்து குலாவ வேண்டிய தேவை எனக்கில்லை. நானும் உங்களைப்போல கருத்தால் எனது தேசியப்பற்றை வெளிப்படுத்தலாம். ஆனால் அது ஒரு சதத்துக்கும் உதவாத கருத்தாகவே இருக்கும்.

நீங்கள் கொழும்புக்கு இரகசிய பயணம் போகலாம் இரகசிய சந்திப்புகள் நடத்தலாம். ஆனால் நாங்கள் எவரையும் சந்திக்கப்போகவுமில்லை சந்திப்புகள் நடத்தவுமில்லை எங்களுக்காக எல்லாவற்றையும் இழந்தவர்களுக்காக இயன்றதை செய்கிறோம்.(இதுகூட உங்களுக்கு பெருமையடிப்பாக புரியப்படும்) அதையும் குழப்ப இப்படியான விசத்தை கக்குவீர்கள் அதற்கு நாங்கள் வாய்மூடியிருக்க வேணும் அதுதானே உங்கள் விருப்பம்.

உங்கள் பிள்ளைகள் லண்டனில் முதல்தர சிறந்த பள்ளியில் படிக்கிறார்கள் எனது பிள்ளைகளும் யேர்மனியில் யேர்மனியின் முதல்தர பள்ளியில் படிக்கிறார்கள். ஆனால் தாயகத்தில் உள்ள பிள்ளைகள் மட்டும் சாக வேணும். உங்கள் பிள்ளையும் எனது பிள்ளையும் பெற்றுக் கொள்ளும் உதவியில் ஒரு துரும்பு கூட அவர்களுக்கு கிடைக்கக்கூடாது இதுதான் உங்கள் தேசியப்பற்று. இப்போதைய யதார்த்தம் இயன்றவரை அந்த மண்ணும் அந்த மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதுதான் எனது இன்றைய நிலைப்பாடு. இன்னும் இருபதோ அல்லது முப்பதோ வருடங்களின் பின்னால் இன்னொரு போராட்டத்திற்கு அந்த மக்கள் தாங்களாகவே எழக்கூடும். அப்போது நீங்களும் நானும் இந்தப்பூமியில் உயிருடன் இருப்போமோ தெரியாது. உங்கள் எனது பேரப்பிள்ளைகள் அந்த மண்ணுக்கு உரியவர்களாக இருக்கமாட்டார்கள். அப்போது அந்த மண்ணின் பிள்ளைகள் தான் தனக்காக போராட வேண்டும். இன்றைய வீரவார்த்தைகளை விட்டு யதார்த்தத்தை யோசித்த ஒவ்வொருவரும் எமது மண்ணுக்கான கடமைகளைச் செய்ய வேண்டும். (இதெல்லாம் உங்களுக்கு புரியாது)

Posted

ஆனந்தகுமாரசாமி முகாம் மாணவர்களுக்கு வழங்கிய உதவிகள் பெற்ற மாணவர்களின் கையொப்பம் முகாம் பொறுப்பதிகாரியின் கடிதம் மற்றும் ஆசிரியரின் கடிதம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது:-

03.jpg

01.jpg

2.jpg

4.jpg

5.jpg

நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி ஏன் போறபோக்கில புலிகள் மேல சேறடிக்கிறதும் போராட்டத்தை விமர்சிக்கிறதும் தேசியத்தை வசைபாடுறதுமா உங்கட ஆக்கம்கள் விசத்தை பரப்புது எண்டு தெரிஞ்சு கொள்ளலாமா..? பேசாமல் நேசக்கரத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே ஏன் போராட்டத்தை வம்புக்கிழுக்குறீர்கள்..?அரசியலில் நடு நிலையில் இல்லாத ஒருவர் தொண்டு நிறுவனத்தில் இருக்கும்போது அவர் மீது விமர்சனங்கள் வரத்தான் செய்யும்..நீங்கள் பொதுத்தொண்டு செய்கிறீர்கள் என்பதற்காக போராட்டத்தை பற்றி தவறான கதைகளை கசிய விடுவதையும் பொறுத்துக்கொண்டு இருக்கமுடியாது...உங்களைப்பற்றி விமர்சிக்கிறவர்கள் உங்களுக்கு வன்மம் கொண்டவராக தெரியும்போது போராட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் அதை நேசிப்பவர்களுக்கு மிகப்பெரிய வன்மம் கொண்டவராகத்தெரிவீர்கள்...

Posted

நெருப்பு நீலமேகம் உங்களுக்கான பதிலை இணையவன் காக்கா தூக்கிப்போய்விட்டது :lol: திருப்பி எழுதினாலும் கத்திதான் ஆக கையை சற்று கட்டி வைக்கிறேன். :lol:

Posted

யாழ் களத்தில் இருந்து பிறப்பெடுத்த நேசக்கரம் அமைப்பு தனது தற்காலிக திட்டங்களோடு நீண்ட கால திட்டங்களை செய்ய முன் வர வேண்டும். நேசக்கரம் அமைப்பிற்கு மாதாந்தம் 15 பவுண்களை கிரமமாம வழங்க விரும்புகிறேன். (நான் ஒரு மாணவன்.. வெளிநாட்டில் எங்கள் நிலை என்ன என்பது புரியும்.). பிரித்தானியா வாழ் நேசக்கர உறவுகள் இதனைப் பெற்றுக் கொள்ள முன் வந்தால் நல்லது. நன்றி.

நெடுக்கு உங்கள் அதரவுக்கு நன்றிகள். பிரித்தானியா உறுப்பினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. விபரங்கள் விரைவில் தருகிறேன்.

புதிய திட்டமொன்றினை அறிமுகம் செய்துள்ளோம்.

இந்த இணைப்பில் உள்ளது பாருங்கள் :- http://www.yarl.com/forum3/index.php?showtopic=88314

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.