Jump to content

இப்படியும் சில ஈழத்தமிழர் எங்கள் மத்தியில்......


Recommended Posts

ராஜா.....! ஒரு இந்திய தமிழர்... ஈழப்பிரச்சினை வேண்டாம் என்பதற்கும்... ஈழத்தமிழர்... ஈழப்பிரச்சினை இங்கு வேண்டாம் என்பதற்கும் வித்தியாசம் பல உண்டு.... அதை அவர் விரும்பலாம் ஈழ மக்கள் விரும்ப வேண்டும் எண்று நினைக்க முடியாது........ அதைத்தான் ஆரூரன் சொல்லவந்தார்.......

ஆம் !! அவரின் வேதனை புரிகிறது. ஆனால் அந்த தளத்தின் உரிமையாளர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அவரை குறை கூறலாமே!! அவர் சில மாதன் கழித்து மேலும் பல புதிய இந்திய நண்பர்கள் கிடைத்த பின்பு ஈழம் பற்றி பேசலாம் என்று அவ்ர் சொன்னதாய் படித்த எனக்கு நினைவு. அந்த தளம் ஒரு புதிய முயற்சி, அந்த தளத்தின் உரிமையாளரை அவர் போக்க்கு விட்டு விடுவதது நல்லது.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடன் தனி மடலில் கதைத்த விடயத்தைப் பற்றி அந்த இணையத் தளத்தின் முகவர், நான் ஈழத் தமிழினத்தின், ஈழவிடுதலையின் எதிரிகளாகக் கருதுபவர்களிடம், எங்களின் விடுதலைப் போராளிகளின் தியாகங்களைக் கொச்சைப் படுத்துபவர்களிடம் வெளிப்படையாகக் கொக்கரித்து, தம்பட்டமிட்ட

Webmaster said:

"I'm the one who asked both of them not to post anything about Srilankan issues. Other members sent me PM about them."

"I don't want them here".

"Still I prefer whoever want to discuss other than indian issues goto thetamils.com forum."
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜா.....! ஒரு இந்திய தமிழர்... ஈழப்பிரச்சினை வேண்டாம் என்பதற்கும்... ஈழத்தமிழர்... ஈழப்பிரச்சினை இங்கு வேண்டாம் என்பதற்கும் வித்தியாசம் பல உண்டு.... அதை அவர் விரும்பலாம் ஈழ மக்கள் விரும்ப வேண்டும் எண்று நினைக்க முடியாது........ அதைத்தான் ஆரூரன் சொல்லவந்தார்.......

தளா! இது என்னுடைய ஆதங்கம் மட்டுமல்ல, இப்படியும் ஒரு பச்சோந்தியாக, தன்னைத் தானே வெறுக்கும், தாழ்வு மனப்பான்மையுள்ளவராக, ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் இருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இப்பவும் கூட அவர் உண்மையிலே ஈழத்தமிழராக இல்லாது விட்டால் நான் மிகவும் மகிழ்ச்சிப் படுவேன். நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்

ஆரூரன் நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லுமிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.... அது அவர்களின் விருப்பு.... உங்களுக்கு தெரியுமா சில விடயங்கள்...??? ஈழத்தவரை மற்ற நாட்டவரிடம் இருந்து அன்னியப்படுத வேண்டும் எண்றே சிலர் பணம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறார்க
Link to comment
Share on other sites

உவங்கள் ரெண்டு பேரும் எமனுக்கே இடியப்பம் தீத்தக்கூடிய ஆட்கள், கவனம் மக்காள்.

Link to comment
Share on other sites

கள நண்பர்களுக்காக

ஆரூரான் முகத்தைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கின்றார். சிலரின் அபரிதமான சிந்தனைகளுக்கு அவர் செயல் வடிவம் கொடுக்க முனைந்துள்ளார். பாவம் அவருக்கும் அப்படியொரு ஆசை. ஆரூரன் அவர்களே நான் புனைப்பெயரில் தான் எழுதுகின்றேன் ஆனால் நிஜமுகம் காட்டி. மற்றவர்கள் போல் 3அல்லது 4 பெயர்களில் வந்து எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதுபோல் என்னைக் குறிவைத்தே நீர் இப்பக்கத்தை ஆரம்பித்தீர் என்பது சில களநண்பர்கள் மூலம் நான் ஏற்கனவே அறிந்து விட்டேன். அதை உமது வாயால் அறியவே காத்திருந்தேன். அதை உமது தனிமடலும் உறுதி செய்தது. இங்கு களத்தில் பல நண்பர்களுக்கு நான் யார் என்பதும் எங்கிருக்கின்றேன் என்பதும் நன்கு தெரியும். அநியாயமாக உமது நேரத்தை வீணாக்கியது தான் மிச்சம். உமது இந்தச் செய்தியை வைத்துத்தான் இங்கு சிலர் ஊழையிடுகின்றார்கள். பாவஜென்மங்கள் எனிமேலாவது சுயமாகச் சிந்திக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்கிறாரென்று நினைக்கிறேன். நான் இதுவரை வழக்கமாக யாழ்.களத்துக்கு வருவதில்லை. நீங்கள் இங்கு பெரிய பிரபலமான புள்ளியாக இருக்கலாம்,ஆனால் எனக்கு உங்களைத் தெரியாது, உங்களின் கருத்துக்களும் எனக்குத் தெரியாது. அதனால் தனிப்பட்ட முறையில் உங்களிடம் எனக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது.

என்னுடைய நோக்கமெல்லாம் ஈழத் தமிழர்களுக்கெதிரான அந்த இணையத் தளத்தின் முகவரைப் பற்றி, ஈழத்தமிழர்களுக்குத் தெரியப் படுத்துவது மட்டும் தான்.

நீங்கள் உங்களுக்காகத் தான் இந்த பதிவைச் செய்தேன் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்களெனபது உங்களுக்குத் தான் தெரியும். தற்ஸ்தமிழ் தளத்திலுள்ளவர்கள் இந்த இணையத் தளத்தின் அங்கத்தவர் ஒருவரைக் குறித்துப் பேசும் முன்பே நான் அங்கு அந்த ஈழத்தமிழரின் முகத்திரையைக் கிழிப்பதற்காக அவரைப் பற்றிய செய்தியைப் பதிவு செய்து விட்டேன். இன்னும் பல தமிழ் இணையத் தளத்திலும் சொல்வது தான் என் நோக்கம்.

அப்படியிருக்க ஏதோ, எனக்கு முன் பின் தெரியாத உங்களுக்காகத் தான் இங்கு வந்து இந்தச் செய்தியைப் பதிவு செய்வதாகச் சொல்வது வெறும் அபத்தம். அதை விட நான் இப்படிச் செய்வதால், அந்த ஈழத்தமிழரை எதிர்க்கும் இணையத் தளத்துக்கு நானே விளம்பரம் தேடிக் கொடுப்பதை நினைத்து நான் கவலைப்படும் போது, நீங்கள் என்னடாவென்றால் உங்களுக்காகத் தான் நான் இங்கு வந்து மினக்கெடுவதாக நினைத்துக் கதை விடுவதைப் பார்த்தால் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

(தற்ஸ்தமிழிலுள்ள தமிழெதிரிகள் நீங்கள் தான் அந்த ஆள் என்று சொல்லிய போதே, நான் யாழ் களம் வந்து தேடிப்பார்த்து விட்டு நீங்கள் கனடாவில் இல்லை switzerland இருப்பதாகக் கூறியதை நீங்களே தற்ஸ்தமிழ் களத்த்தில் பார்க்கலாம். இப்படியும் ஈழத்தமிழர்கள் இன்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளார்கள் என்பதைச் சொல்வதே என்னுடைய நோக்கமே தவிர, அவரை அடையாளம் காண்பதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுபோல் என்னைக் குறிவைத்தே நீர் இப்பக்கத்தை ஆரம்பித்தீர் என்பது சில களநண்பர்கள் மூலம் நான் ஏற்கனவே அறிந்து விட்டேன்.

உங்களுடைய அந்தக் களநண்பர்கள் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி விடுவது போல்,ஈழத்தமிழர்களைப் பிரித்து அவர்கள் தங்களுக்கிடையில் சண்டை போடுவதை ரசிக்கும் ஓநாய்களாகக் கூட இருக்கலாம், ஏனென்றால் தற்ஸ்தமிழ்க் களத்தில் LUCKYLOOK உங்களின் பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் தான் அவர் என்றும், நீங்கள் இந்தியாவுக்குச் சார்பானவர் என்றும், TRICHY007 என்றவர் நீங்கள் இந்தியாவில் படித்திருக்க வேண்டும் அதனால் ஈழத்தை விட இந்தியாவில் பற்று அதிகம் இருக்கலாம் என்று சொல்லும் வரை உங்களின் பெயரைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை.

அதை விட அவர்கள் ஈழத்தமிழர்களைப் பற்றிச் சொல்வது எதையும் நான் நம்புவதுமில்லை. ஏனென்றால் அந்த தளத்திலுள்ளவர்களைப் பற்றி உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் என்னால் கணக்குப் போட முடியும், அவர்கள் சொல்வதெல்லாவற்றையும் நம்புமளவிற்கு நான் ஒன்றும் இளிச்சவாயனல்ல நான் ஒரு ஈழத்தமிழன்

Link to comment
Share on other sites

ஆருரான்,

உங்கள் தமிழ்ப்பற்று, ஈழப்பற்று - பற்று என்ற எல்லையை தாண்டி வெறி என்ற நிலைக்கு வந்து விட்டது என்றே நினைக்கிறேன்...

வசம்பு அவர்களிடம் நான் இயற்கையாக ஈர்க்கப்பட்டேன்.... ஏனென்றால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பாதிக்கப்படுவது தமிழனா, சிங்களவனா என்று அவர் பார்ப்பதில்லை.... மனிதத்துக்கு ஏதாவது சேதாரமா என்று தான் அவர் பார்க்கிறார்....

அவர் தான் கருத்து தளத்தை நடத்துகிறார் என்று நான் எங்கே குறிப்பிட்டேன்... முடிந்தால் நிரூபியுங்கள்....

நான் வசம்பு அவர்களின் நற்பண்புகளுக்காக அவரை எந்த தளத்திலும் புகழ எனக்கு உரிமை உண்டு... உங்களிடமோ, அல்லது வசும்புவிடமோ கூட அதற்கு நான் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.....

நட்புக்கு மரியாதை கொடுக்க முடியாத அளவுக்கு உங்கள் இனவெறி, மொழிவெறி உங்கள் கண்ணை மறைக்கிறது.... இருந்தாலும் நீங்கள் என் நண்பர் தான்... நன்றி உங்கள் கருத்துகளுக்கு.....

Link to comment
Share on other sites

மொழி வெறிக்கும் மொழி பற்றுக்கும் உள்ள வேறுபாடு நன்றாகவே தெறிகிறது. ஆம் நாங்கள் இந்தியர்கள் தான் தவறு யார் பக்கம் என்று பார்பதுதான் அழகு, அதை விடுத்து தமிழ்ன் தவறு செய்தாலும் அவனை காப்பற்றும் குணம் இல்லை.

மனிதே நேயமே வெல்லும்

நண்பர் வசம்பு இதே அனுகுமுறையில் தன் கருத்துகளை சொல்வாதால் அவர்பால் எங்களுக்கி ஈர்ப்பு.

Link to comment
Share on other sites

ஆரூரான்,

ஈழத்தை எதிர்ப்பவர் எல்லாம் தமிழர் அல்லர் என்று நீங்கள் முடிவு செய்தால் "பூனை கண்ணை மூடி கொண்டு பூலோகம் இருண்டு விட்டதாக" சொன்னதற்கு ஒப்பாகும்....

நானும் ஈழ நாடு பிறக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவன் தான்.... தட்ஸ் தமிழில் ஈழத்தமிழர் அவமானப் படுத்தப் பட்ட போதெல்லாம் பொங்கி எழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்.... இனியும் தெரிவிப்பேன்....

ஆனால் என் நாட்டின் இறையாண்மை எனக்கு முக்கியம்... அது அசிங்கப்படுத்தப்படும் போது நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் நான் என் தந்தைக்கு பிறந்தவனே அல்ல.... இதையும் மனதில் கொள்ளுங்கள்....

இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியில் நீங்கள் இலங்கையை தான் ஆதரிப்பேன் என்று கூறினீர்களே... அதற்கு இந்த களத்தில் விளக்கம் கொடுங்கள் பார்க்கலாம்.....

Link to comment
Share on other sites

அது மட்டுமல்ல இந்தியாவில் இறையாண்மையை பல முறை கேவலபடுத்தி இந்திய தமிழ்ர்களுக்கும் ஈழ தமிழ்ர்களுக்கும் பிரிவை உண்டாக்க பார்த்திர்களே அதை பற்றியும் சொல்லுங்கள்.நீங்கள் தனி தமிழ்நாடு கேட்ட சொல்லி தூண்டி விட்ட்தது பற்றியும் பேச்சலாமா?

Link to comment
Share on other sites

ஆருரான்,

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது...

நான் என் நாட்டை காட்டிக் கொடுக்க ஒப்புக் கொண்டால் தான் என்னை தமிழனாக ஏற்றுக் கொள்வீர் போல இருக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

LUCKYLOOK, உங்களுக்குத் தெரியும் நான் ஒரு நாளும் எதைப் பற்றியும் பொய் சொன்னதில்லை. Technically நீங்கள் அப்படிச் சொல்லவில்லை மறுக்கலாம் ஆனால் நாங்கள் யார் அந்த ஈழத்தமிழரை வெறுக்கும் இணையத் தளத்தின் முகவரென்று வாதாடும் போது நீங்களும், திருச்சியும், சொன்னவையும், என்னுடைய பதிலும் கீழே உள்ளன

pure_tamil wrote:  

That webmaster has used கதைப்பது. It proves 200% that he is a Srilankan Tamil.

Trichy said:

but he is against LTTE and he loves india. may he finished his studies in india. so natural love with our country. he is not taking chances for removing all the pro LTTE messages

.

*karuththu.com webmaster lives in Canada.

luckylook wrote:

I am sure that Webmaster is a good human....  

I saw a person with same attitude in Yarl.com.... He is Vasampu.... But he is living in Canada

aruran said

VASAMPU lives in Switzerland

Trichy007 wrote:  

Aaruran wrote:  

luckylook wrote:  

I am sure that Webmaster is a good human....  

I saw a person with same attitude in Yarl.com.... He is Vasampu.... But he is living in Canada

arauran said

VASAMPU lives in Switzerland

Trichy said:

That is for to hide his location from LTTE supporters. luckylook knows where he lives  

ARURAN SAID:

Who gives a hoot about it. I wish you good luck, I wouldn't have posted this message, if he didn't bragg about that he told us not to post Eelam messages.

Trichy007 wrote:  

Nice to see eellam tamils are also against LTTE

Link to comment
Share on other sites

ஆருரான்,

நன்றாக படித்து பாருங்கள்... கருத்துக் களத்தின் வெப் மாஸ்டர் ஒரு நல்ல மனிதர் என்றே குறிப்பிட்டுள்ளேன்... மேலும் இதுபோன்ற ஒரு நல்ல மனிதரை யாழில் சந்தித்துள்ளேன்... அவர் பெயர் வசம்பு என்று தான் குறிப்பிட்டுள்ளேன்.... இதில் நான் எங்கு 'வசம்பு கருத்து இணையத்தை நடத்தும் வெப் மாஸ்டர்' என்று கூறியுள்ளேன்....

கெட்டிக்காரன் புளுகு, எட்டு நாளைக்கு......

Link to comment
Share on other sites

வசும்பு அது போல ஒரு தளத்தை நடத்தினால், நான் மிக மகிழ்ச்சி கொள்ளுவேன்...

ஒரு நாட்டுக்காரன், அவன் நாட்டு பிரச்சினைகளை மட்டுமே பேசவேண்டும், மற்ற பிரச்சினைகளை பற்றி பேசக்கூடாது என்று நினைப்பது சர்வாதிகாரத்தனம்....

வேறு நாடு தானே, நாம் ஏன் சேவை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த அன்னை தெரசா நினைத்திருந்தால், இந்தியாவுக்கு அந்தத் தெய்வத்தாய் கிடைத்திருப்பாரா?

முதலில் மனிதனாய் இருப்போம்.... அதன் பிறகே மொழி, இனம், நாடு எல்லாம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியில் நீங்கள் இலங்கையை தான் ஆதரிப்பேன் என்று கூறினீர்களே... அதற்கு இந்த களத்தில் விளக்கம் கொடுங்கள் பார்க்கலாம்
.....

நிச்சயமாக, இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையில் கிரிக்கெட் போட்டி நடந்தால் நான் இலங்க்கைக்குத் தான் ஆதரவளிப்பேன், இந்தியாவுக்கல்ல. இலங்கை தான் என்னுடைய நாடு, தமிழீழம் என்னுடைய தாயகம், ஆனால் இலங்கையும் இன்னொரு நாடுமென்று போட்டி வரும் போது நான் 100% இலங்கையன்.

எங்களுடைய முன்னோர்கள் தங்களை இலங்கையர் என்று தான் கருதினார்களே தவிர இந்தியரென்றல்ல. அவர்கள் "மாவலி சூழ் இலங்கை நாடெங்கள் நாடு" என்று பாடினார்களே தவிர, ஹிந்தி பொங்கும் இந்தியா எங்கள் நாடென்று அவர்கள் பாடவில்லை.

எங்களுக்கிடையில் ஆயிரம் சண்டைகளிருந்தாலும், இலங்கைத் தீவின் வளமும், காலநிலையும் எங்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் சில பொதுவான கலாச்சாரப் பழக்க வழக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.அதை நாம் மறக்க முடியாது. இந்தியாவின் மேல் எனக்குள்ள அன்பு வேங்கடமலையின் அடிவாரத்தில் மறைந்து விடும், அதற்கு அப்பாலுள்ள இந்தியாவில் எனக்கு எந்தவிதப் பற்றும் கிடையாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகமென்றால் Homeland, நாடு என்றால் Country.

தமிழீழம் ஈழத்தமிழரின் Traditional Homeland. தமிழீழம் இலங்கை நாட்டிலிருந்து பிரிந்து நாடாகுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் Homeland என்ற கருத்தில் தாயகம் என்ற சொல்லைப் பாவித்தேன்.

தமிழர்கள் இலங்கைப் பிரசைகள் என்பதை ஒத்துக் கொள்ளும் சிங்களவர் தமிழரின் Homeland Claim ஐத் தான் மறுக்கிறார்கள். Homeland அல்லது தாயகம் என்பதன் கருத்தென்னவென்றால் ஈழத்தமிழர்கள் வந்தேறியவர்களல்ல மண்ணின் மைந்தர்கள் என்பதாகும்,

இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே கருத்துப் படுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல. உதாரணமாக ஒரு இந்தியர் இலங்கைப் பெண்ணை மணந்து இலங்கைப் பிரசாவுriமையையும் கடவுச் சீட்டையும் பெறலாம், அவரும் ஒரு இலங்கையர்,ஆனால் அவருக்கு இலங்கையில் Homeland Claim பண்ணும் தகுதி கிடையாது. OK, :lol:

Homeland:

One's native land.

A state, region, or territory that is closely identified with a particular people or ethnic group.

Any of the ten regions designated by South Africa in the 1970s as semiautonomous territorial states for the Black population. The Black homelands were dissolved and reincorporated into South Africa by the 1994 constitution.

Link to comment
Share on other sites

அப்போது ஈழம் உங்களுக்கு நாடு கிடையாதா.... இங்கே சிலபேர் ஈழம் தான் தங்கள் தாய் நாடு என்று குறிப்பிட்டார்கள்....

நீங்கள் என்னடாவென்றால் ஈழத்தை நாடாகவே ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறீர்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி கூடத்தெரியாமல், ஈழத்தமிழர்கள் 40 வருடங்கள் அகிம்சை வழியில் போராடி அலுத்துப் போய் தங்களைப் பாதுகாப்பதற்காக, ஒரு மாபெரும் தலைவனின் வழியில் போராடும் விடுதலைப் போரைப் பயங்கரவாதம், பயங்கரவாதிகள் என்றும் கூச்சல் போடும் கூட்டத்துகு ஜால்ரா போடும் உம்மைப் போன்றவர்களால் ஈழவிடுதலைப் போராட்டத்தில், ஈழத்தமிழர்களின் வார்த்தைகளின் பிரயோகமும், வேறுபடும் என்பதை அறிந்து கொள்ள முடியாது.

ஈழத்தமிழர்களைச் சிண்டு முடிய விட்டு, உம்மைப் போன்றவர்களை வேடிக்கை பார்க்க ஈழத்தமிழர்கள் அனுமதிப்பார்கள் என்று நீர் நினைத்தால் வெறும் ஏமாற்றம் தான் காத்திருக்கிறது.

நீர் தான் ஈழவிடுதலையை வெறும் வன்முறையென்று வசனம் பேசியவர் என்பது இங்குள்ளவர்களுக்குத் தெரியாது.

LUCKYLOOK said:

ஆமாம் மகேஷ் அவர்களே....

நாம் ஈழத்தமிழரின் இன்னல்கள் பற்றி கதைக்கலாம்... ஆனால் அங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்களை யாரும் ஆதரிக்க விடக்கூடாது....

வெப் மாஸ்டருக்கு ஒரு வேண்டுகோள்.... பல களங்களில் தமிழ் டிரைபூன் என்ற வெப்சைட்டை மேற்கோள் காட்டி சிலர் தனி தமிழ் நாடு கோரிக்கை வைக்கின்றனர்... தயவுசெய்து அது போன்றோரை இங்கு அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.....

Link to comment
Share on other sites

முதலில் வேறு களங்களில் கூறியதையெல்லாம் இங்கே போட்டு பிசினஸ் செய்யும் வேலைகளை விடுங்கள்...

இது குறித்த கேள்வி கேட்க வேண்டுமானால் அங்கேயே வந்து கேளுங்கள். பதில் சொல்கிறேன்....

நான் எப்போதும் உமக்கே ஜால்ரா அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்....

நான் கூறிய ஒரு கருத்துக்கு 10 வண்ணம் கொடுக்கும் உம் எண்ணம் வேலைக்காகாது....

Link to comment
Share on other sites

நேற்றே உமக்கு வக்காலத்து வாங்க ஒருவர் வந்தார்... உம் லட்சணம் தெரிந்ததும் அவரே விலகிவிட்டார்....

அடிப்படை நாகரிகத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்....

Link to comment
Share on other sites

லக்கி லுக் சொன்னது சரி !! இந்திய தமிழ்ர்கள் வன்முறையை வெறுப்பவர்கள் என்று எல்லாருக்கும் தெறியும்.இந்த அடுத்த தளத்தில் இருந்து கருத்துகளை சுட்டு போடும் அவலம் என்று நீங்ககுமோ?

Link to comment
Share on other sites

நேற்றே உமக்கு வக்காலத்து வாங்க ஒருவர் வந்தார்... உம் லட்சணம் தெரிந்ததும் அவரே விலகிவிட்டார்....

அடிப்படை நாகரிகத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்....

ஆரூரனில் இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் செய்வது ஒரு நபரை வெளிச்சம் போட்டுக் காட்டுவது. அதுக்காக நீங்கள் ஏன் கஸ்ரப்படுகிறீர்கள் எண்றுதான் விளங்க வில்லை. ஏன்...???

சரி..... நீங்கள் தற்ஸ்தமிழில் பாலியல் சார்ந்து வர்ணிப்பது போலா பேசியிருக்கிறார் ஆரூரன்.??? (தம்பியடையானைப் பற்றி)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.