Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவே எமது மிகப்பெரிய நம்பிக்கைக்குரிய நண்பன் - சிறிலங்கா அரசு

Featured Replies

சீனாவே இலங்கையின் மிகப்பெரியதும் நம்பிக்கைக்குரியதுமான நண்பன். சீனா எம்மை ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலகத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியது. பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்க இதைய சுத்தியுடன் செயற்பட்டது. இவ்வாறு கூறியுள்ளது சிங்கள அரசு.

.

ஜூலை 1 இல் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 80 வது ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதற்கு சிறிலங்காவில் இருந்து அரச குழுவொன்று சென்றது. அந்த குழுவே விழாவில் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்கள்.

.

சீனா ஆசியாவின் மிகப்பெரியதும் முதலாவதுமான சக்தி, 2020 இல் அமெரிக்காவை பொருளாதாரத்தில் சீனா தோற்கடித்துவிடும். சீனாவின் இத்தகைய வளர்ச்சி இலங்கைக்கு பாதுகாப்பைத்தரும்.

.

1952 இல் இருந்தே சீனா இலங்கையில் தனது உறவை வளர்த்து வருகின்றது. இந்த உறவில் எப்போதும் விரிசல் வந்ததில்லை. ஆனால் அயல் நாடுகள் தமது சொந்த நலன்களுக்காக இலங்கையினை பாவித்து வந்துள்ளன. ஆகையால் சீனாவே எமது நம்பிக்கைக்குரிய நண்பன் என கூறி முடித்தனர்.

.

இத்தகைய செய்திகளை பிரசுரித்தால் இந்தியாவை சீண்டும் என்பதற்காக தென் இலங்கையின் முக்கிய பத்திரிகைகள் குறித்த செய்திக்கு இருட்டடிப்புச் செய்துள்ளன.

ஈழநாதம்

சீன காலனித்துவம்

ஏழு பில்லியன் ஏற்றுமதிகளில் ஒரு வீதமே சீனாவுக்கு செல்கிறது. அதேவேளை சீனா இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதாவது சிங்கள பணம் கூடுதலாக சீனாவுக்கு செல்கிறது. மே 2011 வரையான காலம் வரையில் 1337 சீனர்கள் உல்லாசப்பிரயாணிகளாக வந்துள்ளனர். இது 2 வீதமே, மொத்தம் 48,000. வேலை தேடி அதிகளவில் மத்திய கிழக்கிற்கே மக்கள் செல்கிறனர். ஒருவர் மட்டுமே சீனா சென்றுள்ளார் இந்த ஆண்டில்.15000- 20000 மாணவர்கள் மேற்குலக நாடுகளில் கல்வி கற்கின்றனர்.

மொத்தத்தில் மக்களுக்கு சீன உறவால் எந்த இலாபமும் இல்லை, எல்லாம் மகிந்த குடும்பத்திற்கே. ஆபிரிக்காவில் இருந்து ஆசியா வரை சீன முதலீடுகள் தமது நலன்களையே குறிக்கோளாக கொண்டுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88073

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நிபுணர் தோழர் அகூதா சொன்னால் சரியாகத்தான் இருக்கம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவால் இலங்கையை இனிமேல் ஒன்றும் செய்துவிடமுடியாது. இலங்கை வல்லரசாகவும் இந்தியா இலங்கைக்குக் கால் கழுவும் நாடாகவும் தான் இருக்க முடியும். இவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வரும் எல்லோருக்கும் பாதப+சை செய்து தோல்வியைச் சமாளிக்க நண்பராக இருப்போம் என்பார்கள். தமிழர்களை வைத்து இலங்கையில் குழப்பத்தை விளைவித்து தமிழர்களுக்கு நம்பிக்கைத்துரோகம் இழைத்த இந்திய அரசு. இன்று மண்கௌவி விட்டது. இந்திய ராஜதந்திரத்தின் மிகப்பெரிய தோல்வி இதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

வெளி வரும் சமிக்கைகளைப் பார்த்தால், இந்தியா எப்போதோ சிங்களத்திற்குப் பயப்பிடத் தொடங்கி விட்டது!

இனி வரும் காலங்களில் சிங்களத்தை மகிழ்ச்சிப் படுத்தும் காரியங்கள் கூடுதலாக நடக்கும்!!!

சீனா அவர்களின் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் நாங்கள்தான் இலங்கையின் உண்மையான நண்பர்கள். ( இந்தியா ) :( :( :(

அதாவது இந்தியாவைச் சிதறடிக்கும் சீனாவின் திட்டத்துக்கு தாம் ஆதரவு என்கிறார்கள் சிங்களப் பயங்கரவாதிகள்.

எப்படியாவது பயங்கரவாதிகள் மாறி மாறி அழிந்தால் நல்லது தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.