Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு சொல்வதெல்லாம் பொய்; மீறல் சம்பவமும் எதுவும் இல்லை: சிங்கள அரசு

Featured Replies

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரான வன்முறைகள் வடபகுதியில் இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் மஹிந்த அரசு மட்டும் வடபகுதியில் அவ்வாறான சம்பவங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை என மறுத்துள்ளது.

.

ஆனால் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே எனப்படும் அமைப்பு தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் உண்மைதான் என நிரூபித்துள்ளது. அவர்கள் இது தொடர்பில் கூறியுள்ளதாவது.

.

எமது அமைப்பின் பிரதிநிதிகளுடன் நானும் நேரடியாகச் சென்று கண்காணிப்பு நடவடிக்கை களை மேற்கொண்டோம். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் இல்லாத ஒரு மூலை முடுக்குக் கூட இல்லை. அதே போன்று பொலிஸாரும் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவற்றிற்கெல்லாம் மேலாக ஜனாதிபதியின் சகோதரர், பலம்மிக்க அமைச்சர் பஸில் ராஜ பக்ஷ, மகன் நாமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களும் வடக்கில் தற்போது முகாமிட்டுள்ளனர்.

இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.இப்படியான ஒரு சூழலில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் வீட்டில் நாயை வெட்டித் துண்டித்து தலைவேறு உடல் வேறாகப் போடுகின்றனர்.

.

நாயின் துண்டிக்கப்பட்ட தலை வேட்பாளரின் வீட்டுக்கேற்றில் செருகி வைக்கப்பட்டிருந்தது.இந்தச் சம்பவத்தோடு நின்றுவிட வில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரின் வீட்டின் முன் மலர் வளையம் வைக்கின்றனர். போஸ்டர்களிலும் வீட்டு மதிலிலும் கழிவுகளையும் கழிவு எண்ணெய்யும் ஊற்றி அலங்கோலப்படுத்தி வருகின்றனர்.

.

இத்தனை பாதுகாப்புக்கும் மத்தியில் இப்படி மிலேச்சத்தானமான அநாகரிகமான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அரசின் அனுசரணை இன்றி இவை நடைபெறமுடியுமா? முடியாது. அரசுக்கும் பங்குண்டு என அடித்துக் கூறும் கீர்த்தி தென்னக்கோன் அங்கு இடம்பெற்ற வேறு சம்பவங்களையும் பட்டியல் போட்டுக் காட்டுகின்றார்.

.

முதன்முறையாக அளவெட்டியில் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கலந்துரையாடலின் போது 50இக்கும் மேற்பட்ட இராணுவ சீருடை தரித்தவர்கள் ஏ.கே. 47, மண்வெட்டிப் பிடிகள், இரும்புக் கம்பிகள் சகிதம் நின்று தாக்குதல் நடத்தியமை.

.

வல்வெட்டித்துறையில் கூட்டணி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தேர்தல் அலுவலகம் தாக்கி நொறுக்கப்பட்டமை.

.

தென்மராட்சியில் மிருசுவில், தவசிக்குளத்தில் கூட்டமைப்பு ஆதரவாளர் கந்தையா அசோகலிங்கம் என்பவரின் வீட்டின் முன் மலர்வளையம் வைக்கப்பட்டு, மதிலில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மீது கழிவு ஒயில் ஊற்றப்பட்டமை.

.

வலி.மேற்கில் கூட்டணி வேட்பாளரான திரு மதி நாகரஞ்சினி ஐங்கரன் என்பவரின் வீட்டின் மீது கற்களையும், கண்ணாடிப் போத்தல்களையும் வீசித் தாக்கி உள்ளமை. அவரது வீட்டு மதிலில் ஒட்டப் பட்டிருந்த போஸ்டர்கள் மீது கழிவு ஊற்றப்பட்டமை.

.

கிளிநொச்சியில் கூட்டமைப்புக்காக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டமை.

.

கிளிநொச்சியில் கூட்டமைப்பின் கூட்டங்களுக்குச் செல்லவிடாமல் மக்களை இராணுவத்தினர் தடுத்துநிறுத்தியமை.

.

கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளும் இடங்களைச் சுற்றி அளவுக்கு அதிகமாக வழமைக்கு மாறாக இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டமை. இவை அனைத்துமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டவை.

.

இந்தச் சம்பவங்கள் அனைத்துமே பொலிஸிலும் தேர்தல்கள் தொடர்பான வன்முறைகளைப் பதிவு செய்யும் மத்திய நிலையத்திலும் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளை, இந்தச் சம்பவங்கள் அனைத்துமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளை முடக்கவும் மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி கூட்டமைப்பினருக்குப் பின் செல்லாமல் ஆதரவு தராமல் தடுக்கும் ஒரு யுக்தியாகவுமே கருதமுடியும்.

.

எனவே இவை அனைத்துமே அரசின் அனுசரணையுடன்தான் இடம்பெறுகின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று அடித்துக் கூறுகின்றார் "கபே" அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன்.

.

குறிப்பு: அரச தகவல் திணைக்களம் அனுப்பி இருந்த ஊடக அறிக்கை வருமாறு:

.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்களை முடக்க அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டுவருவதாக வடபகுதி செய்திப்பத்திரிகை ஒன்றில் வெளியான தகவலை அரசாங்கம் முற்றாக மறுப்பதாகவும் அதில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்தார்.

.

கடந்த 30 வருடங்களாக வடக்கில் தடைப்பட்டிருந்த ஜனநாயக அரசியல் உரிமைகளை இந்த அரசாங்கமே மீட்டுக் கொடுத்தது.இதனடிப்படையில் இந்த மாதம் வடக் கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக ரீதியில் சுதந்திர மாகச் செயற்பட சகல கட்சிகளுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

.

அமைதியான தேர்தலை நடத்தப் பாதுகாப்புப் படையினர் உறுதிபூண்டுள்ளனர். கோரிக்கை விடுக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளுக்கும் எதுவித பேதங்களுமின்றி உரிய பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.

ஜனநாயக ரீதியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற முடியாதவர்கள் மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்''. இதுதான் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல வெளியிட்ட மறுப்பு அறிக்கை.

My link

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரான வன்முறைகள் வடபகுதியில் இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் மஹிந்த அரசு மட்டும் வடபகுதியில் அவ்வாறான சம்பவங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை என மறுத்துள்ளது.

சொல்லுவது சிங்கள பௌத்த தர்மப் பொய்யர்கள்.

இனிமேல் கட்டாயமாக இப்படி பட்ட அறிக்கைளின் ஆங்கில மூலப்பிரதிகளையும் இங்கே இணையுங்கள். வாசிப்போர் அதனை உபயோக படுத்தலாம்.French, Spanish, German போன்ற மொழிகலில் மொழி பெயருங்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.