Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம்பெயர் மக்கள் வடக்கில் முதலீடு செய்ய வேண்டும்! யாழில் பசில் ராஜபக்ச.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம்பெயர் மக்கள் வடக்கில் முதலீடு செய்ய வேண்டும்! யாழில் பசில் ராஜபக்ச.

[Thursday, 2011-07-14 21:47:17]

வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென புலம்பெயர் தமிழர்களை வட பகுதியில் முதலீடுகளை செய்யுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்ச கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

1983ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அசாதாரண சூழல் நிலவியதாகவும் அது கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென அரசாங்கம் தற்போது அங்கு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் புலம்பெயர் மக்களும் வடக்கில் முதலீடுகளை செய்ய வேண்டுமென அமைச்சர் பசில் ராஜபக்ஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46497&category=TamilNews&language=tamil

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு,

காணி - காவல்துறை - அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு;

இராணுவம் அகற்றப்பட்டு; ....... -

இது எல்லாம் சட்டமாக்கப்பட்டால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலீட்டை சிந்திக்க ஆரம்பிக்கலாம். எமது மக்களை வளம்படுத்த உதவலாம். அதுவரைக்கும் தாம் உழைத்த செல்வத்தை சிங்களவன் காலில் கொட்ட அவர்கள் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது வெறும் வெளிநாடுகளுக்காக விடப்படும் அறிவிப்பு

கேட்ட, முயற்சித்த பல புலம் பெயர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்களுக்கு பிச்சை தரும் சீனா இந்தியா ரஷ்யா தட்டில் போட்டது எங்கே .....?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் மக்கள் இது தொடர்பில் சிறீலங்கா அரசிற்கும்.. உலகிற்கும் பகிரங்க அறிக்கை ஒன்றைத் தருவது நல்லது.

புலம்பெயர் மக்கள் சிறீலங்காவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால்..

1. வடக்குக் கிழக்கு மற்றும் மலையகத்தில் இருந்து சிங்களப் படைகளை முற்றாக வாபஸ் வாங்க வேண்டும். இராணுவ பிரசன்னம்.. இராணுவத் தலையீடுகள் எதிலும் இருக்கக் கூடாது.

2. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயக நிலப்பரப்பை உள்ளடக்கிய.. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய... சுயாட்சி அரசியல் தீர்வுக்கு உடன்பட வேண்டும். காலம் கடத்தாது அதனை கூடியது 2 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்து கொள்ள வேண்டும்... இதில் மலையக தமிழ் மக்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.

3. தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்திக் கொள்வதோடு.. 1972ம் ஆண்டுக்கு முன்னான நிலப்பரப்புகளுக்கு அத்துமீறிக் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

4. வடக்குக் கிழக்கில் இருந்து அனைத்து சிங்கள அரசு சார்ப்பு தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களும் களையப்பட்டு அவர்களின் அரசியல் அராஜகமும் பிரச்சனமும் தலையீடுகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

5. சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள் சர்வதேச தரத்திற்கு அமைய நடக்க அனுமதி அளிக்க வேண்டும்.

6. பலாலி.. வவுனியா.. காங்கேசந்துறை.. பருத்தித்துறை.. காரைநகர்.. ஊர்காவற்றுறை.. புங்குடுதீவு.. நயினாதீவு.. நெடுந்தீவு..தலைமன்னார்.. திருமலை.. மட்டக்களப்பு.. அம்பாறை மாவட்ட விமான நிலையங்கள்.. துறைமுகங்கள் அனைத்தில் இருந்தும் சிங்களப் படைகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு அவை சிவிலியன் பாவனைக்கு அனுமதிக்கப்படுவதோடு.. திறந்த தனியார் துறை அபிவிருத்திக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

7. வடக்குக் கிழக்கு மற்றும் மலைய தமிழ் மக்களிடையே நேரடித் தொடர்புகள் தங்கு தடை இன்றி.. சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தலுக்கு இடமின்றி அமைய வேண்டும்.

8. வடக்குக் கிழக்கு மற்றும் மலையக வளங்களை அந்தப் பகுதி மக்களே நிர்வகிக்கவும் பராமரிக்கவும் பாவிக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அவர்களே பார்த்துக் கொள்ளும் நிலை வேண்டும்.

9. மன்னார் எண்ணெய் வளம்.. புல்மோட்டை இல்மனைட் என்று வள வலயப் பகுதிகள்.. பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு.. அவற்றை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பு வடக்குக் கிழக்கு சுயாட்சி அலகிடம் மட்டுமே இருக்க வேண்டும்.

10. மலைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

Edited by nedukkalapoovan

தொடர்ந்தும் நாம் பொருளாதார தடையை நோக்கி பயணிக்கவேண்டும். அதன்மூலமே சிங்களதேசத்திற்கு அழுத்தம் தரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.