Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போருக்கு தயாராகும் தமிழீழ விடுதலைப் புலிகள் – பிரெஞ்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போருக்கு தயாராகும் தமிழீழ விடுதலைப் புலிகள் – பிரெஞ்சு

Saturday, July 16, 2011, 18:08உலகம், சிறீலங்கா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு மொழி சஞ்சிகைகளில் ஒன்றான ASIES தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றமை வழக்கம்.

இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

இதில் மேலும் கூறப்பட்டு இருப்பவை வருமாறு :-

- புலிகள் ஓரணி சேர்ந்து வருகின்றனர் என்று பல நாடுகளின் புலனாய்வாளர்களும் தெரிவித்து உள்ளார்கள். புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பின் ஒரு பகுதி தொடர்ந்தும் பலமாக இருந்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புக்களுடன் சேர்ந்து வெளிநாடுகளில் புதிய வலையமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த வருடம் கப்பலில் கனடாவுக்குள் பிரவேசித்தபோது 500 பேர் வரையான தமிழர்கள் பிடிக்கப்பட்டனர். இவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. பிரான்ஸ், பிரிட்டன், நோர்வே மற்றும் தென்னாசிய நாடுகள் ஆகியவற்றில் புலி ஆதரவு சக்திகள் நிலை கொண்டு உள்ளார்கள்.

கொரில்லாக்கள் ஒரு போதும் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் வைத்து 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்பட்டார்.

இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் அரசுடன் அண்மைய காலங்களில் பேச்சு நடத்தி இருக்கின்றார்கள். பதிலுக்கு அரசியல் நீரோட்டத்தில் இணைவார்கள் என்று கூறி உள்ளனர்.

10,000 புலிகள் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கின்றனர். புலிகள் வலை விரிக்கின்றார்களா? என்று பெரிதும் அஞ்சுகின்றது இலங்கை அரசு.

http://www.tamilthai.com/?p=21912

பல மேலைத்தேய மக்கள் தொடர்பு சாதனங்கள் ( பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி,..) 'பயங்கரவாதம்' பற்றி எழுதுவதன் மூலம், ஆதரமில்லாத விடயங்களை ஊதிப்பெரிப்பிபதன் மூலமும் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக உள்ளன.

இந்த சஞ்சிகை கூட தனது ஊடகவியலாளர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பி நேரடியாக நிலைமைகளை அறிவிக்குமாக இருந்தால் அது பாராட்டப்பட வேண்டிய பத்திரிகை தர்மம்.

இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளது
.

வணக்கம் யாழ் இணையத்தள உறவுகளே விடுமுறையிலிருந்து நேற்றுத்தான் திரும்பியிருந்தேன். அதனால் யாழில் கருத்துக்களை எழுதமுடியாமல் போய் விட்டது. மீண்டும் உங்களுடன் இணைவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பிரஞ்சு ஊடகத்தின் ஆய்வுக்கட்டுரையானது தற்போதைய நிலையில் எமக்கு பாதகமான சூழல் ஒன்றையே உருவாக்கும் என்பது என் கருத்து. ஏனெனில் ஜன நாயகரீதியில் நாம் எடுத்துவரும் பலமுயற்சிகள் ஓரளவு வெற்றியடைந்து வரும் நிலையில் இவ்வாறான அறிக்கை எமது செயற்பாடுகளை முடக்கி.மடக்கி முற்றுப்புள்ளி வைப்பதாகவே அமையக்கூடும்.இந்த ஊடகத்திற்கு உண்மையான எம் நிலமையை விளங்கப்படுத்த நாம் முயல வேண்டும்.

புலமெங்கும் பலரை சிங்களம் கூலிக்கு அமர்த்தி ... பிரான்ஸ் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் ... ஊடகவியலாளரை அணுகி, கொடுப்பது கொடுத்து/வார்ப்பது வார்த்து இப்படியான செய்திகளை ஊடகங்களில் வெளிவர முண்டியடிக்கிறது!!! ... இல்லையா சாத்திரியார்????????? :lol:

... சில புலத்து ஊடகங்கள் இதில் மாள்கின்றன!!! .... நாமும் விசில் அடிக்க தயாராகிறோம்! .... எம்மொழி பெயர்பாளர்களும், ஏதோ அந்நாட்டு அரசுகள் சொல்வதுபோல் திரிக்கின்றன!!!!!!!!! <_<

  • கருத்துக்கள உறவுகள்

ரொகாண் குணவர்த்தன போன்ற "பயங்கரவாத நிபுணர்களின்" கைவரிசைதான் இந்த செய்திகள் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழரின் இன்றைய அரசியல் முன்னெடுப்புக்கள், சிங்கலத்துக்கெதிரான போர்க்குற்ற விசாரணைகள் என்பவற்றை தடுக்கும் ஒரு சூழ்ச்சியாகவே இவை பார்க்கப்பட வேண்டும். அண்மையில் கூட இங்கிலாந்து டெலிகிராப் பத்திரிக்கைச் செய்தியாளர்கூட, சனல் 4 ஒளிபரப்பைக் கேள்வி கேட்டிருந்தார். அதன் உண்மைத்தன்மை பற்றியும், காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் பற்றியும் விமர்சித்திருந்தார்.

தனது இமெஜை தூக்கி நிறுத்த பகீரதப் பிரயத்தனம் செய்யும் சிங்கள அரசின் கைவேலைதான் எனக்குத் தெரிகிறது.

சிங்களப் பயங்கரவாதிகளின் பஹீரதப் பிரயாணத்தில் வெளிவந்திருக்கும் செய்தி போலுள்ளது. ஆதாரங்கள் அற்ற செய்தி.

இந்த சஞ்சிகை சிங்கள - அயல் நாட்டு போர்க்குற்றவாளிகளின் தமிழின அழிப்பை ஆராய்ந்து எழுதாததால் சிங்களப் பயங்கரவாதிகளின் ஊடுருவலில் இரையாகி இருக்கலாம்.

போர் பற்றிய அறியாத்தனத்தோடு எழுதும் பத்திரிகையிது. தமிழர்கள் புத்தி கெட்டுப் போய்க்கிடக்கிறார்கள் என்று நினைப்பதிலும் பார்க்க, சர்வதேசத்தை முட்டாளாக்க நினைக்கும் கைங்கரியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.