Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் மீண்டும் ஆரம்பம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் மீண்டும் ஆரம்பம்?

17 ஜூலை 2011

திட்டத்துக்கு முன்னோடியான லைட் புறொஜெக்ட் யாழ். மாவட்டத்தில் மீளவும் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக

இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் மீண்டும் ஆரம்பம்?

இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கில் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கு முன்னோடியான லைட்புறொஜெக்ட் யாழ். மாவட்டத்தில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் வீட்டுத் திட்டம் இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்திருந்தது. அது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனடிப்படையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்துக்கு வந்து அரியாலை நாவலடியில் அடிக்கல் நட்டார்.

இதன் பின்னர் கடந்த 7 மாத காலமாக எந்தவிதமான வேலைக்களும் மேற்கொள்ளப்படாமல் அந்தத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. தற்போது மீண்டும் அந்தச் செயற்றிட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முன்னோடியாக 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 50 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் அடிக்கல் நட்ட அரியாலை நாவலடியில் முழுவீச்சில் வீடமைப்புத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தகாரர் இந்திய அரசினாலேயே நியமிக்கப் பட்டுள்ளனர். பெரும்பாலும் அடுத்த மாத ஆரம்பத்தில் முன்னோடி வீட்டுத் திட்டப் பணிகள் நிறைவடையும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64221/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டுச் சேர்ந்து அழித்தவர்கள் கட்டப் போகிறார்களாம். இது கூட ஒரு திட்டமிட்ட சுரண்டல் நடிவடிக்கையே. சீ இது உலகில் மிகப்பெரிய சனனாயக நாடாம்!

தமிழின விரோதிகளான காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளின் தேர்தல்கால வானவேடிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்

மார்பிலஸ் காரணுக்கதான் வாழ்வு(பெயர் பலகை தாங்கிய சலவைக்கல்).. எவன் எங்க எங்க அடிக்கல் நாட்டுறான் எப்ப முடிப்பார்கள் என 5010 இல் தான் தெரியும்.. :rolleyes:

50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கு முன்னோடியான லைட்புறொஜெக்ட் யாழ். மாவட்டத்தில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் வீட்டுத் திட்டம் இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்திருந்தது.

இந்த ஊழல் மலிந்த இந்திய அதிகாரிகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு இந்திய உபகண்டத்தின் மூக்குக்குள் எப்படி விரலை விட்டு ஆட்டுவது என்று இலங்கை நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

உலக அழுத்தம் காரணமாக இந்தியா போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று கூறும்போது "சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான்" என்று நடந்து கொள்கிறார்கள் இந்த தான்தோன்றிகள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஐநூறு வீடுகள் கட்டிக் கொடுக்கட்டும்!

நான் மொட்டையடிக்கின்றேன்!!! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.