Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருதங்கேணியில் ஐ.தே.க. வேட்பாளர் மீது அமைச்சின் உயரதிகாரி தாக்குதல்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியில் ஐ.தே.க. வேட்பாளர் மீது அமைச்சின் உயரதிகாரி தாக்குதல்: யாழ்.தேர்தல்கள் கண்காணிப்பு அலுவலகத்தில் விஜயகலா முறையீடு

[Monday, 2011-07-18 10:47:09]

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பருத்தித்துறைப் பிரதேச சபை வேட்பாளர் ஒருவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருதங்கேணி சந்தியிலிருந்து தாளையடி செல்லும் வீதியில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அவரது ஆதரவாளர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

"அப்பே மீற்றிவ், "அவ மீற்றிங்" என சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் கூறியவாறு அமைச்சின் அதிகாரி தன்மீது தாக்குதல் நடத்தியதாக தாக்குலுக்குள்ளான ஐ.தே.க. வேட்பாளர் தெரிவித்தார்.

இத் தாக்குதல் தொடர்பாக ஐ.தே.க. யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவ்விடத்துக்குச் சென்ற அவர் தாக்குதலுக்குள்ளான வேட்பாளரைச் சந்தித்து சம்பவம் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன், இத்தாக்குதல் தொடர்பாக அவர் யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல் கண்காணிப்பு அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நேற்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் ஐ.தே.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டுச் செல்வோரிடம் அவர்கள் தமது கட்சிக்கு ஆதரவு கோரும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். இந்த வேளையிலேயே அந்த இடத்துக்கு வந்த அமைச்சின் உயரதிகாரி ஒருவர் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் கத்தியவாறு தன்மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட வேட்பாளர் கூறினார்.

இந்த பிரசாரத்துக்கு உரிய அனுமதியை தாம் பெற்றிருந்ததாகத் தெரிவித்த அவர் பொலிஸாரும் இராணுவத்தினரும் தமது பிரசாரத்துக்கு இடையூறு விளைவிக்காத நிலையில், அமைச்சின் அதிகாரி எந்த அதிகாரத்துடன் தன்மீது தாக்குதல் நடத்தினர் எனவும் கேள்வி எழுப்பினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46691&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நாங்கள் இல்லை என்ற காரணம்தான்!

எல்லாம் நாங்கள் இல்லை என்ற காரணம்தான்!

... மருதங்கேணி, ஓர் நிம்மதி!! நீங்கள் அந்த வேட்பாளர் இல்லையென்று!!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நாங்கள் இல்லை என்ற காரணம்தான்!

மருதங்கேணி

என்ன நாவலடியிலா.....?அல்லது கிராமகோடு ,மருத்துவமனை உள்ள இடத்திலா.....?தாக்குதல் நடைபெற்றது .....?உங்களுக்கு தெரியுமா .....????

Edited by தமிழ் அரசு

மருதங்கேணி

என்ன நாவலடியிலா.....?அல்லது கிராமகோடு ,மருத்துவமனை உள்ள இடத்திலா.....?தாக்குதல் நடைபெற்றது .....?உங்களுக்கு தெரியுமா .....????

மருதங்கேணி வடமராட்சி கிழக்கின் முக்கிய கிராமங்களில் ஒன்று. சம்பவம் நடைபெற்ற இடம்.

தமிழரசு என்ன உலகத்தில இருக்கிறீர். இடம்வலம் தெரியாத ஆளாக இருக்கிறீர்.

பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 18மைல் சென்றால் மருதங்கேணி சந்தி வரும், மருதங்கேணி சந்தியிலிருந்து தாளையடிக்கு போகும் வீதியில் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அருகில் வடமராட்சி உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் இருக்கும் இடத்திற்கு கிட்டத்தான் இச்சம்பவம் நடைபெற்றது. அடிவாங்கினவர் ஒரு பச்சோந்தி ஆர் காசு குடுத்தாலும் பின்னல போகும். இயக்கமும் முதல் ஒருக்கா இவருக்கு பிடிச்சு விளாசினது. அந்த ஆள் அப்பவும் திருந்தயில்லை. பேரினவாத கட்சிகளுக்கு பின்னலை திரியிற கூட்டம். இந்த ஆள் அடிவாங்கிறதைப்பத்தி கவலைப்பட கூடாது.

மருதங்கேணி

என்ன நாவலடியிலா.....?அல்லது கிராமகோடு ,மருத்துவமனை உள்ள இடத்திலா.....?தாக்குதல் நடைபெற்றது .....?உங்களுக்கு தெரியுமா .....????

வடமராட்சியின் கிழக்குக்கரையோர நிலவமைப்பு தெரியாது போல?

கிராமக்கோட்டிலும் மருத்துவமனை இருப்பதாக அறியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி வடமராட்சி கிழக்கின் முக்கிய கிராமங்களில் ஒன்று. சம்பவம் நடைபெற்ற இடம்.

தமிழரசு என்ன உலகத்தில இருக்கிறீர். இடம்வலம் தெரியாத ஆளாக இருக்கிறீர்.

பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 18மைல் சென்றால் மருதங்கேணி சந்தி வரும், மருதங்கேணி சந்தியிலிருந்து தாளையடிக்கு போகும் வீதியில் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அருகில் வடமராட்சி உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் இருக்கும் இடத்திற்கு கிட்டத்தான் இச்சம்பவம் நடைபெற்றது. அடிவாங்கினவர் ஒரு பச்சோந்தி ஆர் காசு குடுத்தாலும் பின்னல போகும். இயக்கமும் முதல் ஒருக்கா இவருக்கு பிடிச்சு விளாசினது. அந்த ஆள் அப்பவும் திருந்தயில்லை. பேரினவாத கட்சிகளுக்கு பின்னலை திரியிற கூட்டம். இந்த ஆள் அடிவாங்கிறதைப்பத்தி கவலைப்பட கூடாது.

நான் அந்தப்பகுதிக்கு பலதடவை போயுள்ளேன் டம் ,

அடிவாங்கியவரை உங்களுக்கு நன்கு தெரியும் போலுள்ளது அவரும் அந்த பகுதியை சேர்ந்தவரா ?

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சியின் கிழக்குக்கரையோர நிலவமைப்பு தெரியாது போல?

கிராமக்கோட்டிலும் மருத்துவமனை இருப்பதாக அறியவில்லை!

நான் மருதங்கேணி என குறிப்பிடுவது 'Maruthankerny ' என்ற யாழ் களஉறுப்பினரை நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்

நான் அந்தப்பகுதிக்கு பலதடவை போயுள்ளேன்.

நான் மருதங்கேணி என குறிப்பிடுவது 'Maruthankerny ' என்ற யாழ் களஉறுப்பினரை நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்

நான் அந்தப்பகுதிக்கு பலதடவை போயுள்ளேன்.

தவறுக்கு மன்னிக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.