Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத்தமிழர் சமஉரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தமிழர் சமஉரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு;

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆயுத மோதல்கள் முடிவுற்று, இரண்டு ஆண்டுகளாகியும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு சம உரிமை, அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசும், ராஜூய உறவுகளை பயன்படுத்தி இலங்கை அரசை வலியுறுத்துவதில்லை.

எனவே, இலங்கை தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி அளித்திடும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும், இன்னும் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்திடக்கோரியும், ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது சுயேச்சையான, நேர்மையான விசாரணை நடத்திட வலியுறுத்தியும் “இலங்கைத்தமிழர் சமஉரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடத்துவதென்று மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

2011, ஜூலை 30 பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷணன் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், இலங்கை தமிழ்க்குடியரசுக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தம் உள்ளிட்ட பல தலைவர்களை பங்கேற்கச் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58441

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக கம்னியூஸ்ட் கட்சிகளில் இந்தியக் கம்னியூஸ்ட் கட்சி தான் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் மார்க்கிஸ் கம்னியூஸ்ட் ஈழப்பிரச்சனையைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. பாரதிய ஜனதா, இந்திய கம்னியூஸ்ட் போன்ற தேசியக் கட்சிகள் இந்தியா பூராகவும் ஈழப்பிரச்சனையினைக் கொண்டு செல்லப் போவதாக அறிவித்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவிம் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது வரவேற்கத்தக்க விடயம்.

அடுத்த மத்திய தேர்தலில் யார் ஆட்சி அமைக்கக்கூடும் என எண்ணுகிறீர்கள்? பா.ஜ.க.?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மத்திய தேர்தலில் யார் ஆட்சி அமைக்கக்கூடும் என எண்ணுகிறீர்கள்? பா.ஜ.க.?

ஊழலினால் காங்கிரசின் பெயர் இந்தியாவில் அடிபட்டாலும், தமிழக சட்டசபைத்தேர்தல் நடைபெற்ற போது வேறு சில மானிலங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு தான் அதிக இடங்களைப் பிடித்தது. அடுத்த தேர்தலிலும் யார் கண்டது மீண்டும் காங்கிரசு வென்றாலும் வெல்லலாம்.

தமிழக சட்டசபையில் குழப்பியடிக்க முற்பட்டது போல குழப்பியடிக்காமல் தீர்மானம் நிறைவேற்றினால் நல்லது.

தமிழக சட்டசபையில் குழப்பியடிக்க முற்பட்டது போல குழப்பியடிக்காமல் தீர்மானம் நிறைவேற்றினால் நல்லது.

அவர்கள் தீர்மானம் நிறைவேற்றும் போது இது தான் தீர்வுக்கு தங்கள் ஆதரவு என்று சொல்லி விட்டார்கள்.

நல்ல விசயம். அது போல் மற்றைய கட்சிகளும் தங்கள் தீர்வு என்ன எனபதை வெளிபடையாக சொல்லி தீர்மானம் கொன்டு வரனும்.

தமிழீழம் போராடு மக்கள் இலக்கு.

ஆனால் மாற்றீடாக வரக்கூடியதை இந்தியக்கட்சிகள் சொல்வதே சிறந்தது.

  • 2 weeks later...

இலங்கையில் தமிழர் பகுதிக்கு சுயாட்சி: மார்க்சிஸ்ட்

கொல்கத்தா, ஆக. 7 : இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ராஜபட்ச அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும், அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும், தமிழர்கள் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அரசியல் ரீதியாக தீர்வு எட்டப்படும் என்று அதிபர் ராஜபட்ச உறுதியளித்திருந்தார். ஆனால், இதற்கான ஆக்கப்பூர்வ முயற்சி எதையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடனும், மானத்துடனும், சம உரிமையுடனும் வாழ வேண்டும். இதற்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மீள்குடியமர்ப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு முடுக்கி விட வேண்டும். இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இலங்கை ராணுவத்தின் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து உயர்நிலைக் குழு அமைத்து இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=457856&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF:%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D

தமிழர் விவகாரம்: டெல்லியில் மார்க்சிஸ்ட் ஆர்பாட்டம் செப்.7ஆம் தேதி

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2011( 17:11 IST )

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்குமாறு நிர்பந்திக்க இந்திய அரசை வலியுறுத்தி செப்டம்பர் 7-ம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் ஆயுத மோதல் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராணுவ மோதலின்போது நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இடம் பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வுக்கு எந்த உத்தரவாதமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம அந்த°து, சம உரிமை, மாநில சுயாட்சி அதிகாரம் உள்ளடக்கிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இலங்கையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்;

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கான நடவடிக்கையை உடனடியாக உறுதி செய்திட வேண்டும்; இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள இந்திய அரசு தேவையான முயற்சிகளை எடுத்திட வலியுறுத்தி, 2011 செப்டம்பர் 7 அன்று தில்லியில் நாடாளுமன்றத்தின் முன்பு பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த இயக்கத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள்.

இலங்கைத்தமிழ் மக்கள் உரிமைக்காக டெல்லியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசின் தலையீட்டை நிர்ப்பந்திக்கும் வகையில் பெரும் திரளாக பங்கேற்க மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக மக்களையும், கட்சித்தோழர்களையும் கேட்டுக் கொள்கிறது என ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1108/09/1110809046_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

பா.ஜ.க. வுக்கு நரேந்திர மோடியை விட்டால்.... நல்ல கவர்ச்சியான தலைவர் இல்லை.

அத்வானியை நம்பி பா.ஜ..க. கரையேறமுடியாது.

ஜெயலலிதா போன்ற மாநில முதலவர்கள் நரேந்திரமோடிக்கு ஆதரவு வழங்கினாலும்......

பல கட்சி சேர்ந்த கூட்டமைப்பு கன காலம் தாக்குப் பிடிக்காது.

அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக- சம உரிமை

காங்கிரஸ்- சம உரிமை அல்லது 13 சட்டதிருத்த கூக்குரல்

திமுக- எது என்று அவர்களுக்கே தெரியாது

அதிமுக- சம உரிமை அல்லது தமிழீழம்

பாமக - தமிழீழம்

மதிமுக- தமிழீழம்

வி.சி- தமிழீழம்.

ம.ம.க- சுயாட்சி

ம்.கம்னியுஸ்ட்- சுயாட்சி

இ.கம்னியுஸ்ட் - சுயாட்சி

புதிய தமிழகம்- தமிழீழம்

தேமுதிக- சுயாட்சி அல்லது சம உரிமை

சமத்துவ மக்கள் கட்சி- சுயாட்சி அல்லது சம உரிமை

நாம் தமிழர்- த்மிழீழம்.

பகுஜன் சமாஜ்- சம உரிமை

ஆர்.ஜெ.டி(லாலுபிரசாத்து) - சம உரிமை

சமதா கட்சி(ஜார்ஜ் பெர்ணாண்டஸ்)- தமிழீழம்

சமாஜ் வாடி(முலாயம் சிங் யாதவ்) - சம உரிமை

தெலுங்கு தேசம்- சுயாட்சி அல்லது சம உரிமை.

ஜனதா தள் (எஸ்)- தமிழீழம்.

கன்னட ரக்சன வேதிகா + கன்னட சங்கங்கள் - தமிழீழம்.

தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்)- சம உரிமை.

மூமுக - தமிழீழம்

கொங்குவெள்ளாளார் சாதி கட்சிகள் + - தமிழீழம்

ஜனதாகட்சி (சப்புறமணிசாமி) - அரசியல் தீர்வே தேவையில்லை சிங்களவர்களோடு சேர்ந்து வாழவெண்டும்.. :rolleyes:

இதிமுக(டி.ராஜந்தர்) - தமிழீழம்

தெலுங்கானா ராஸ்டிய சமிதி( சந்திர சேகர ராவு) - சுயாட்சி அல்லது தமிழீழம்

சிவசேனா( பால் தாக்கரே) - தமிழீழம்

என்.டி.பி - தமிழீழம்.

பிஜி ஜனதா தள் (நவீன் பட்நாயக்) - சம உரிமை

தேசிய மாநாட்டு கட்சி(காசுமீர் உமர் அப்த்துல்லா) - சுயாட்சி அல்லது தமிழீழம்

அஸ்ஸாம் கன ப்ரிசித்(பிரபுல்ல குமார் மகந்தா) - சுயாட்சி அல்லது தமிழீழம்.

டிஸ்கி:

தேசிய கட்சிகள் மற்றும் லோக்கல் கட்சிகள் கலந்து கட்டி எழுதி இருப்பதால் கொஞ்சம் கன்பூசாக இருக்கம்.. சிலது விடுபட்டும் இருக்கலாம்.. ரைட்டு :rolleyes: :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இவ்வளவு நீளமான கட்சிப் பட்டியலில்....

எத்தனை கட்சிகள், உள்ளூரில் தனித்து நின்று பாராளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் வலு உள்ளன?

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இவ்வளவு நீளமான கட்சிப் பட்டியலில்....

எத்தனை கட்சிகள், உள்ளூரில் தனித்து நின்று பாராளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் வலு உள்ளன?

தெலுங்கானா ராஸ்டிய சமிதி - 1

சிவசேனா - 2

தேசிய மாநாட்டு கட்சி - 3

என்.டி.பி - 4

தனித்து நின்று எவனுடைய தயவுமில்லாமல் இருக்க கூடிய கட்சிகள் இவைகள்... ஈழ ஆதரவு கட்சிகள்..

3 அல்லது 4 எம்பி சீட்டு தேறகூடும் என நான் அனுமானிக்கும் ஈழ ஆதரவு கட்சிகள் ..

மதிமுக -5

நாம் தமிழர் -6

:) :)

டிஸ்கி:

மிகுதி எல்லாம் வாக்கு வங்கி மற்றும் பதவி சுகபோகம். ஆகியவற்றிக்காக கூட்டணி வைத்தே ஆக வேண்டும் போக

பிஜி ஜனதா தள் - 1

திரிணமுள் காங்கிரஸ்- 2

ஒரளவுக்கு தனியாக நின்றால் தேறூம்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஜக- சம உரிமை

காங்கிரஸ்- சம உரிமை அல்லது 13 சட்டதிருத்த கூக்குரல்

திமுக- எது என்று அவர்களுக்கே தெரியாது

அதிமுக- சம உரிமை அல்லது தமிழீழம்

பாமக - தமிழீழம்

மதிமுக- தமிழீழம்

வி.சி- தமிழீழம்.

ம.ம.க- சுயாட்சி

ம்.கம்னியுஸ்ட்- சுயாட்சி

இ.கம்னியுஸ்ட் - சுயாட்சி

புதிய தமிழகம்- தமிழீழம்

தேமுதிக- சுயாட்சி அல்லது சம உரிமை

சமத்துவ மக்கள் கட்சி- சுயாட்சி அல்லது சம உரிமை

நாம் தமிழர்- த்மிழீழம்.

பகுஜன் சமாஜ்- சம உரிமை

ஆர்.ஜெ.டி(லாலுபிரசாத்து) - சம உரிமை

சமதா கட்சி(ஜார்ஜ் பெர்ணாண்டஸ்)- தமிழீழம்

சமாஜ் வாடி(முலாயம் சிங் யாதவ்) - சம உரிமை

தெலுங்கு தேசம்- சுயாட்சி அல்லது சம உரிமை.

ஜனதா தள் (எஸ்)- தமிழீழம்.

கன்னட ரக்சன வேதிகா + கன்னட சங்கங்கள் - தமிழீழம்.

தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்)- சம உரிமை.

மூமுக - தமிழீழம்

கொங்குவெள்ளாளார் சாதி கட்சிகள் + - தமிழீழம்

ஜனதாகட்சி (சப்புறமணிசாமி) - அரசியல் தீர்வே தேவையில்லை சிங்களவர்களோடு சேர்ந்து வாழவெண்டும்.. :rolleyes:

இதிமுக(டி.ராஜந்தர்) - தமிழீழம்

தெலுங்கானா ராஸ்டிய சமிதி( சந்திர சேகர ராவு) - சுயாட்சி அல்லது தமிழீழம்

சிவசேனா( பால் தாக்கரே) - தமிழீழம்

என்.டி.பி - தமிழீழம்.

பிஜி ஜனதா தள் (நவீன் பட்நாயக்) - சம உரிமை

தேசிய மாநாட்டு கட்சி(காசுமீர் உமர் அப்த்துல்லா) - சுயாட்சி அல்லது தமிழீழம்

டிஸ்கி:

தேசிய கட்சிகள் மற்றும் லோக்கல் கட்சிகள் கலந்து கட்டி எழுதி இருப்பதால் கொஞ்சம் கன்பூசாக இருக்கம்.. சிலது விடுபட்டும் இருக்கலாம்.. ரைட்டு :rolleyes: :rolleyes:

நான் நினைக்கின்றேன் இந்தியாவில்தான் அதிகமான ஜாதிகளும், மொழிகளும், கட்சிகளும், உள்ளது இது அதிக சனத்தொகையின் காரணமாக இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் இந்தியாவில்தான் அதிகமான ஜாதிகளும், மொழிகளும், கட்சிகளும், உள்ளது இது அதிக சனத்தொகையின் காரணமாக இருக்கலாம்!

ஆம் தோழர் தமிழரசு 500 + பார்மண்ட் சீட்டுக்கு மேல் உள்ள டெல்லியில் வெறும் 40 சீட்டை வைத்து கொ ண்டு தமிழ்நாடு வெட்டவோ புடுங்கவோ முடியாது..இத்தனை கட்சிகளையும் அணுகி விளக்கபடுத்தவேண்டும். அப்பதான் ஏதாவது நடக்கும்.

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தனித்து நின்று எவனுடைய தயவுமில்லாமல் இருக்க கூடிய கட்சிகள் இவைகள்... ஈழ ஆதரவு கட்சிகள்..

3 அல்லது 4 எம்பி சீட்டு தேறகூடும் என நான் அனுமானிக்கும் ஈழ ஆதரவு கட்சிகள் ..

மதிமுக -5

நாம் தமிழர் -6

:) :)

புரட்சியின் ஆசை. நிறைவேற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :D

டிஸ்கி; இதுக்கு கருத்து தெரிவித்து, துரோகிப் பட்டம் வாங்க நான் தயாரில்லை :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியின் ஆசை. நிறைவேற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :D

டிஸ்கி; இதுக்கு கருத்து தெரிவித்து, துரோகிப் பட்டம் வாங்க நான் தயாரில்லை :lol: .

அட அதிலென்ன தோழர் துரோகி பட்டம் நான் இங்கிட்டு உள்ள நிலமைய சொல்கிறேன்..

டிஸ்கி:

இது ஈழம் கிடையாது அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.