Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகத்தில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது – முன்னாள் புலிகள்

Featured Replies

சமூகத்தில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதிலும், சமூகத்துடன் மீள இணைவதிலும் நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுவதாக முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

படையினரின் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர். 2009ம் ஆண்டு யுத்த நிறைவின் போது 11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்திருந்தனர். இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இருபது ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் கடமையாற்றிய நபர் ஒருவர், மருத்துவ தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கப் பரீட்சைக்கு தோற்றாத காரணத்தினால் தமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை எனவும், அரசாங்கத்தின் எந்தவொரு பரீட்சையையும் எதிர்நோக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும், இதனால் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மைப் போன்றே விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் கடமையாற்றிய பதினைந்து மருத்துவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சி அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட போதிலும் தமக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடிவதில்லை என மற்றுமொரு முன்னாள் போராளி குறிப்பிட்டுள்ளார். தங்களுக்காக ஒதுக்கப்பட்ட சில தொழில் வாய்ப்புக்களை அரசியல்வாதிகள் தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் வழங்வி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும், இதனால் தங்களது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் முன்னாள் புலி உறுப்பினர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.

பிரதேசத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றால் இராணுவத்தினரும் காவல்துறையினரும் முதலில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களையே சந்தேகிப்பதாகக் குறிப்பிடுகின்றனர். இதனால் தாமும் குடும்பத்தினரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நன்றி : பி.பி.சீ.

www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சமூகத்திலுள்ள சுயநலப் பேர்வழிகள் பலரால் உறவு முறையான போராளிகளைக்கூட தீண்டத் தகாதவர்களாக பார்க்கப்படுவது உண்மை தான்.

ஆனால் மறுபுறத்தில் இன்னும் பலர் போராளிகளின் மறுவாழ்வுக்கு பேருதவிகள் செய்து வருவதும் உண்மை. பெருமளவு புலம்பெயர் மக்களும் பலவிதங்களில் உறவு முறையற்ற போராளிகளின் மறுவாழ்வுக்கு நேரடியாக பேருதவிகள் செய்து வருவதும் உண்மை.ஒருசில போராளிகள் சுயமுயற்சி எடுக்க விருப்பமின்றி உதவியை மட்டும் எதிர்பார்த்து இருப்பதும் உண்மை - இதற்கு அவர்கள் பல்வேறு அச்சங்களை காரணமாக கூறுகின்றனர்.

நன்றி நிழலி இனைப்பிற்கு, எனக்கு தெரிந்த ஒருவர் Medics ல் இருந்து இப்ப Colombo ல் மருந்து எடுத்து யாழில் உள்ள மருத்துக் கடைகளுக்கு விநியேகிக்கின்றார், இவர்களும் இப்படி எதவது முயற்ச்சியில இறங்கலாம்,

  • 2 months later...

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதிலும், சமூகத்துடன் மீள இணைவதிலும் நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுவதாக முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

படையினரின் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர். 2009ம் ஆண்டு யுத்த நிறைவின் போது 11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்திருந்தனர். இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் சமூகத்திலுள்ள சுயநலப் பேர்வழிகள் பலரால் உறவு முறையான போராளிகளைக்கூட தீண்டத் தகாதவர்களாக பார்க்கப்படுவது உண்மை தான்.

ஆனால் மறுபுறத்தில் இன்னும் பலர் போராளிகளின் மறுவாழ்வுக்கு பேருதவிகள் செய்து வருவதும் உண்மை. பெருமளவு புலம்பெயர் மக்களும் பலவிதங்களில் உறவு முறையற்ற போராளிகளின் மறுவாழ்வுக்கு நேரடியாக பேருதவிகள் செய்து வருவதும் உண்மை.ஒருசில போராளிகள் சுயமுயற்சி எடுக்க விருப்பமின்றி உதவியை மட்டும் எதிர்பார்த்து இருப்பதும் உண்மை - இதற்கு அவர்கள் பல்வேறு அச்சங்களை காரணமாக கூறுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.