Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக பொருளாதார வீழ்ச்சியும் புலம்பெயர் தமிழர்களும்

Featured Replies

மேலை நாடுகளின் பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது..

புலம் பெயர் தமிழர் பொற்கால வீழ்ச்சியை சரியாகக் கவனித்து திட்டங்களை வகுக்கவில்லை..

உலகத்தின் சிறந்த பொருளாதாரம் உள்ள நாடுகளை AAA என்ற மூன்று ஏ தரத்தில் அடக்குவார்கள். 1917ல் இருந்து இந்த அதி உயர்ந்த நிலையை விட்டு அமெரிக்கா கீழே இறங்கியது கிடையாது. ஆனால் இந்த வாரம் முதல் தடவையாக அமெரிக்க கடன் பெறுமதி இறக்கம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை AA+ என்ற நிலைக்கு இறக்கியுள்ளது.

இந்த இறக்கம் பொருளாதாரத்தின் பின்னடைவு, அதில் இருந்து மீண்டுவிடலாம் என்ற வாதங்கள் காலவதியாகிப் போன வாதங்களாகும். அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டுகால பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது என்பதுதான்.

பொற்காலத்தின் வீழ்ச்சி என்றால் என்ன…?

இதை விளங்கிக் கொள்ள ஸ்பானிய நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம்.. அந்த நாடு குடியேற்ற நாடுகளை அமைத்தபோது உழைக்காமலே தங்கம் கொட்டும் நாடாக மாறியது. ஒரு நூற்றாண்டு காலம் அந்த நாட்டு மக்கள் ஆடம்பர வாழ்வில் திளைத்து, சுகித்து மகிழ்ந்தார்கள். ஆனால் இந்தப் பொற்காலம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை திட்டமிட மறந்தார்கள். பெரும் பொருளாதார சுழிக்குள் சிக்குப்பட்டு ஸ்பானிய பேரரசே அழிந்தது.

தமிழிலும் இதற்கு நல்ல உதாரணம் உண்டு. இந்தியாவில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் சோழர்களின் ஆட்சி பொற்காலமாக இருந்தது. கங்கையில் புலிக்கொடி ஏற்றி, கடாரம் வென்று, தஞ்சைப் பெரிய கோயில் அமைத்து பொற்காலம் கண்டனர் சோழர்கள். பொற்காலத்தில் வீழ்ச்சி வந்தால் மாற்றுத்திட்டம் என்னவென்று தெரியாத சோழர்கள் இறுதியில் அழிவடைந்தார்கள். 77 வருடங்களாக ஆட்சி செய்த இலங்கையைக் கூட சிங்களவரிடம் பறிகொடுக்குமளவுக்கு வீழ்ந்தார்கள், அழிந்தார்கள்.

இதுபோன்ற வீழ்ச்சியே இன்று அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் டபிள் டிப் என்னும் இரட்டைப் பாதாளத்தில் விழப்போவதை சரியாக மட்டுக்கட்டாமல் கொள்கைகளை வகுத்து இன்று பொருளாதாரத்தை குறுக வைத்துள்ளார்கள் மேலைநாடுகளின் தலைவர்கள். மீதம் பிடிக்க, வர்த்தகத்தில் குறுக்கம் ஏற்பட பொருளாதார விஷச்சுழர்ச்சி உட்பக்கமாக சுழன்று பாதளத்திற்குள் சிக்குண்டுள்ளது.

அமெரிக்காவின் பெறுமதி மிக்க பத்திரங்களை சீனா வாங்கி முதலீடு செய்திருந்தது, இப்போது அமெரிக்காவின் கடன் பெறுமதி இறக்கம் சீனாவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் முன்னணியில் நின்ற நாடொன்றின் பெறுமதி இறக்கம் முழு உலகையும் பாதிக்கும். உலகப் பொருளாதாரம் இதுவரை இல்லாத பாரதூரமான நெருக்கடிக்குள் சிக்குப்பட்டுவிட்டதாக டென்மார்க் நோர்டியா வங்கியின் பொருளியல் நிபுணர் ஜொனி போ ஜாக்கப்சன் சற்று முன் தெரிவித்தார்.

ஐரோப்பாவிலும் பல நாடுகள் வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டன. கிரேக்கம், ஐஸ்லாந்து போன்றன ஏற்கெனவே முறிவடைந்த பொருளாதாரத்தில் சேர்ந்துவிட்டன. தெற்கு ஐரோப்பிய நாடுகள் மோசமான பற்றாக்குறைக்குள் சிக்குண்டுவிட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 410 பில்லியாட் யூரோ பாதுகாப்பு பொதி இந்த வீழ்ச்சியை தடுக்க முடியாது என்ற குரல்கள் கேட்கின்றன.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி நம்மை பாதிக்காது என்று இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிகப்பெரிய முதலீடுகளை அமெரிக்கா செய்துள்ளது. இந்தியாவில் இதன் தாக்கங்கள் விரைவில் தெரியவரும். பிரணாப் முகர்ஜி போல தகுதி குறைந்த அமைச்சர்களின் குரல்கள் செல்லாக்காசு குரல்கள் என்பதை வரும் இந்தியத் தேர்தல் உணர்த்தும்.

அமெரிக்கப் பொருளாதாரம் யூதர்களின் கைகளில்தான் இருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட தாக்கம் நேற்று இஸ்ரேலில் பிரதிபலித்தது. சுமார் 7.7 மில்லியன் மக்களைக் கொண்ட அந்த நாட்டில் சுமார் 2.5 லட்சம் மக்கள் பலத்த ஆர்பாட்டங்களை நடாத்தினார்கள், விலைக்குறைப்பு, பொருளாதார மீட்சிக்காக. இதே தாக்கம் ஜப்பானில் பட்டு, அங்கிருந்து தென்னாசியாவுக்குள் தெறிப்படையும்.

இந்த டபிள் டிப்பில் இருந்து மீள்வதற்காக எகிப்து, ரூனீசியா, லிபியா, ஏமன் போன்ற நாடுகள் சூறையாடப்பட்டுவிட்டன. மக்கள் ஜனநாயகப் போராட்டம் என்ற போர்வையில் இது உலகில் பல நாடுகளின் செல்வங்களை சூறையாட ஆரம்பித்துள்ளது. கொஸ்னி முபாரக், கடாபி போன்றவர்களின் பல பில்லியாட் சொத்துக்களை உவிந்து குடித்துவிட்டது. இந்தத் தலைவர்களை உருவேற்றி பொது மக்கள் பணத்தை சூறையாட வைத்து, அவை முதிர்வடைய கதையை முடித்து, பணத்தை பறித்துவிட்டார்கள். இந்த நாடுகளின் செல்வங்களை பொருளாதார வெற்றிடம் உவிந்துவிட்டது. இதன் குடல் நீண்டு செல்கிறது பெரும் பசியோடு. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றன வகுத்த பொருளாதாரக் கொள்கை தோல்வியடைந்துள்ளதால் வந்த வினையே இது.

இந்த நேரம் நாம் ஓர் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். உலகத்தில் ஒரு சில நாடுகள் மட்டுமே உண்மையான நாடுகளாகும். ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பல பீஸ்ரன்ற் உதவியில் இயங்கும் ஒட்டுண்ணி நாடுகளேயாகும். மேலை நாடுகளின் பணம் இல்லாவிட்டால் இவை நாடுகளாக இருக்க முடியாது. அமெரிக்காவின் இந்த வீழ்ச்சி ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் பெரும் வறுமையை ஏற்படுத்தும். இப்போது பட்டினியில் மரணித்துக் கொண்டிருக்கும் 12 மில்லியன் ஆபிரிக்க மக்களின் நிலை இதற்கு ஓர் உதாரணம்.

இந்த பொருளாதார வீழ்ச்சி புலம் பெயர் தமிழ் மக்களையும் பாதிக்கும். தூரப் பார்வையற்ற நகர்வுகளை அவர்கள் மேற்கொண்டால் பெரும் பொறிக்குள் சிக்க நேரிடும். தீக்கோழி நிலத்திற்குள் தலையை புதைத்து வைத்துக் கொண்டு உலகம் தெரியாது வாழ்வது போல அவர்களுடைய வாழ்வை நம் ஊடகங்கள் கனவில் வைத்து, மானையும் மயிலையும் ஆட வைக்கின்றன. சிறீலங்கா முதலீடுகள், இந்திய முதலீடுகள் போன்றவற்றிலும் கூர்மையான கவனம் செலுத்த வேண்டும். முபாரக், கடாபி சொத்துக்களை கபளீகாரம் செய்தது போல புலம் பெயர் தமிழர் முதலீடுகளை இலங்கை இந்திய நாடுகள் உவியக்கூடிய நிலை இருக்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும். ஐயாயிரம் ரூபாவை ஒருவருக்கு கொடுத்தாலே யார் அனுப்பியது என்று சிறீலங்கா உளவுப்பிரிவு கேட்கிறது.

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மேலை நாடுகளின் பொற்காலத்தை பயன்படுத்தி வாழ்ந்த புலம் பெயர் தமிழர் தற்போது அதன் பொற்காலத்தின் வீழ்ச்சிக்குள் தாமும் சிக்குப்படுவோம் என்பதை அறிந்து நடக்கவோ, அவர்களுக்கு வழிகாட்ட அறிவுள்ள தலைவர்களோ இருக்கவில்லை. ஆகவே இந்த விவகாரத்தை இனியாவது உன்னிப்பாக அவதானிப்பது நல்லது.

http://www.alaikal.com/news/?p=78330#more-78330

----------------------------------------------

யூரோ தாக்குப்பிடிக்குமா? : http://www.yarl.com/forum3/index.php?showtopic=89883

'யூரோ'வை கைவிடுகிறது ஜெர்மனி : http://www.yarl.com/forum3/index.php?showtopic=87897

ஆகஸ்ட் 2 - அமெரிக்கா தனது கடனில் சறுக்குமா? : http://www.yarl.com/forum3/index.php?showtopic=89581

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பொயர் தமிழர்கள் தற்போது செய்யக்கூடிய பாதுகாப்பான முதலீடு, தங்க்தில் முதலீடுசெய்வதே. அதாவது இருபத்துநான்கு காரட் தங்கத் தகடுகளை வாங்கிச் சேமிப்பதே. ஐரோப்பிய நாடுகளில்சிலவற்றில் நிதித்துறைச் சட்டங்களில் இருபத்துநான்கு காரட் தங்கத்தை வாங்கும்போது ஏனைய பொருட்களை வாங்கும்போது கொடுக்கவேண்டிய விற்பனைவரி அரசக்குச் செலுத்தத்தேவையில்லை. ஆனால் அவற்றை ஆபரணமாக வாங்கினால் வரி செலுத்தவேண்டும். தங்கம் வாங்குவது மிகவும் இலகுவானதுமாகும். இதில் மோசடிசெய்யலாம் என்பதற்கான பேச்சுக்கே இடமில்லை. ஆனால் ஆபரணங்கள் அப்படியில்லை இருபத்து இரண்டு காரட் என உங்களுக்கு நகைக்கடைக்காரர் அதற்குக் குறைந்த மதிப்புடைய தங்கத்தினை உங்கள் தலையில் கட்டியடிக்க வாய்ப்பிருக்கின்றது. வீருப்பமெனில் தாங்கள் புலம்பெயர் தேசத்தவர்களது கடைகளில் ஏதாவதோன்றில் தங்க ஆபரணங்களை வாங்கி தகுதிகாண் பகுப்பளர்களிடம் சோதித்துப்பார்க்கவும். மேலும் நுகைளக் செய்யும்போது சிறுசிறு துண்டுகளாக செய்தே ஆனேகமான நகைகளை ஒட்டுவார்கள் அதைப் பொடிவிளக்கணம் எனச்சொல்வார்கள் அதுஇருபத்துஇரண்டு காரட் சங்கம்கிடையாது அப்படியாகில் அது ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்மாட்டாது. வெள்ளியும் தங்கமும் கலந்த ஒரு கலவையாகும். அதைவிட சேதாரம் செய்கூலி இவையாவும் இருபத்துநான்கு காரட் தங்கத் தகடுகளை வாங்கும் போது இருப்பதில்லை.

  • தொடங்கியவர்

  • ஐரோப்பிய தலைவர்கள் அவசர மகாநாடு
  • அரச கடன் பத்திரங்ககளை வாங்க இணக்கம்
  • சந்தைகளை அமைதிப்படுத்த முயற்சி

எஸ் அண்ட் பி (S&P) என்ற நிறுவனம் கடந்த வெள்ளி இரவு அமெரிக்கா நாட்டின் கடனை திருப்பி தரக்கூடிய வல்லமையை குறைத்தது. முதல் முறையாக AAAA என்ற அதிகூடிய அளவில் இருந்து ஒருபடி குறைத்தது, AA+ . இதனால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ளன.

2008 - 2009 ஆண்டுகள் போல மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை உருவாகலாம். இது எவ்வளவு காலம் நீடிக்கும் எவ்வளவு தூரம் வேலையில்லா திண்டாட்டத்தை தரும் என்பதை எதிர்வு கூறமுடியாமல் உள்ளது.

இதை பதியும் பொழுது ஜப்பான், அவுஸ்திரேலியா சந்தைகள் இரண்டு வீதம் வரை குறைந்துள்ளன.

  • தொடங்கியவர்

அமெரிக்க யூதர்களிடம் ஏமார்ந்த சீன மூடர்கள்..

ஐரோப்பாவில் பொருளியல் தெரிந்தவர்களை சந்தித்து பேசினீர்களானால் அவர்கள் இன்றைய பொருளாதார நெருக்கடி குறித்து அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை என்பது தெரியவரும். அமெரிக்க யூதர்கள் சீன மூடர்களை எப்படி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைத்தான் இங்கு பலர் கேலியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் பொருளாதாரம் யூதர்களின் கைகளில்தான் இருக்கிறது. மிக நுட்பமாக எதிர்கால பொருளாதாரத்தை கணக்கிட்டு சீனா உட்பட பல ஆசிய ஆபிரிக்க, மத்திய கிழக்கு மூடர்களை அவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக உலகின் முதலாவது பொருளாதாரத்தை சீனாவும், இந்தியாவும் நெருங்கிக் கொண்டிருப்பதாக தலைப்பாகை கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தலைப்பாகை உள்நாட்டில் சீன கம்யூனிஸ்டுக்களுக்கு ஒரு மதிப்பைக் கொடுத்தது. சட்டைக் கொலரை நிமிர்த்திக் கொண்டார்கள்.

அவர்களின் முதுகைத் தடவி அமெரிக்க கடன்பத்திரங்களை மெல்ல மெல்ல வாங்கச் செய்தார்கள். AAA நிலையில் இருந்த பெறுமதி மிக்க ஆவணங்களை வேண்டினால் சீன பொருளாதாரம் மேன்மையடையும். அமெரிக்காவின் கடன் பத்திரங்களே நம் கையில் இருப்பதால் விரைவில் அமெரிக்காவையே முந்திவிடலாம் என்றும் சீனர்கள் மனப்பால் குடித்தார்கள்.

ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு என்பதுபோல சீனர்களின் பெரும் பணம் சிக்குப்படும்வரை காத்திருந்தார்கள் அமெரிக்க யூதர்கள். தமது பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஈராக், ஆப்கான் போர்களை நடாத்துவதாக போக்குக் காட்டி, மறுபுறம் சீனர்களுக்கும், இந்தியர்களுக்கும் தலைப்பாகை கட்டியபடியே பொறிக்கிடங்கிற்குள் இறக்கிக் கொண்டிருந்தார்கள் அமெரிக்க யூதர்கள்.

காலம் அப்படியே நகர…

சென்ற வாரம் யாரும் எதிர்பாராமல் தமது கடன் பத்திரங்களின் பெறுமதி நிலையை AA+ நிலைக்கு அமெரிக்கா வீழ்த்தியது. அந்த வீழ்ச்சி சீனாவிற்கு பில்லியன் கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. கடைசி அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை சுமந்தது சீன மூடர்கள்தான் என்பது அடுத்தநாள்தான் தெரிய வந்தது. சீனா கடும் சீற்றமடைந்தாலும், சீனர்களின் பழைய கறள் கட்டிய கம்யூனிச மூளை திருடன் கையில் தேள் கொட்டியது போல அமைதி காத்தது.

மறுபுறம் சில மாதங்களுக்கு முன் பிரான்ஸ் தலைமையில் உலகின் அலையன்ஸ் மாறுவதாக அமெரிக்கா ஒரு நாடகத்தை ஆரம்பித்தது. வடக்கு ஆபிரிக்க நாடுகளில் ஜனநாயகப் போராட்டங்கள் ஆரம்பித்தன. கொஸ்னி முபாரக் பதவி இழந்தார், கடாபியின் சொத்துக்கள் உறைய வைக்கப்பட்டன, ரூனீசியா முடிந்தது, சிரியாவிற்குள் போராட்டம் புகுந்தது, ஏமன் வீழ்ந்தது.

ஏன் இந்த சர்வாதிகாரிகள் வீழ்த்தப்பட்டார்கள்..?

அத்தனை சர்வாதிகாரிகளுக்கும் பக்க பலமாக இருந்தது அமெரிக்க யூதர்களின் மூளைகள் மட்டுமே. சர்வாதிகாரிகளையும், குடும்ப ஆட்சிகளை நடாத்தும் தலைவர்களையும் உற்சாகப்படுத்தி சொந்த நாடுகளின் செல்வங்களை சூறையாடும்படி தூண்டி விட்டார்கள். நாட்டின் செல்வங்களை சுரண்டி மேலைநாடுகளில் பாதுகாப்பாக வைக்கும்படி ஆலோசனை கூறினார்கள்.

ஏல்லா சர்வாதிகார மூடர்களும் தமது நாடுகளையே மேலை நாட்டு வங்கிகளில் அடகு வைத்தார்கள். கொஸ்னி முபாரக் வைத்த பணம் கொஞ்ச நஞ்சமல்ல அத்தனை செல்வங்களும் உறைய வைக்கப்பட்டன. கடாபி முதலிட்ட பணம் எண்ண முடியாத தொகை, அத்தனையும் உறைய வைக்கப்பட்டன. சர்வாதிகாரிகளின் நாடுகளில் ஜனநாயக போராட்டத்தை தூண்டி விட்டது எதற்காக என்பது மெல்ல மெல்ல அம்பலமாகியது. பிரான்ஸ் தலைமையில் ஐரோப்பா இந்த சர்வாதிகாரிகளின் செல்வங்களை உறைய வைத்தது. கேணல் கடாபிக்கு ஓர் இன்ரசிற்றி ரயில் வண்டியையே பரிசாகக் கொடுத்த இத்தாலி அவருடைய செல்வங்களை ஏப்பம் விட்டது.

அதுபோல கருணாநிதி குடும்பம் உட்பட எண்ணற்ற இந்திய முட்டாள்கள் சுவிஸ் வங்கியில் சிக்குப்பட்டார்கள். மௌனமாக இருந்து, இரகசியம் காத்த சுவிஸ் வங்கி கண்களை திறந்துள்ளது. இப்போது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்த இந்தியர்களின் பெயர் பட்டியல் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகிறது. விக்கிலீக்ஸ் என்பதே இந்த நாடகத்தின் ஓரங்கம் என்பதையும் ஆசிய ஆபிரிக்க மூடத் தலைவர்கள் அறிந்து துடிதுடிக்கிறார்கள்.

இது மட்டுமா..

ஏற்கெனவே பயங்கரவாத பட்டியலிடப்பட்ட அத்தனை போராட்டக் குழுக்களின் பணங்களும் சூறையாடப்பட்டுவிட்டன. பின் சர்வாதிகாரிகளின் பணம் சூறையாடப்பட்டது. அடுத்த கட்டமாக சீன கம்யூனிச சர்வாதிகாரிகள் முட்டாள்களாகிவிட்டார்கள். இன்னும் பலர் முட்டாள்களான செய்திகளை இப்போதே சுட்டிக்காட்டினால் பலரால் தாங்க முடியாது.

கதை இத்துடன் முடியவில்லை..

அமெரிக்க யூதர்கள் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான திட்டங்களையும் தீட்டியிருப்பார்கள்…

அடிக்கடி ஒரு உப கதை சொல்வார்கள்…

அமெரிக்கர்கள் சந்திரனுக்கு அனுப்பிய ராக்கெட்டும், ரஸ்யர்கள் அனுப்பிய ராக்கட்டும் சந்திரனில் இருந்து யூத மொழியில் பேசிக்கொண்டது என்பார்கள்.

உலகை ஆட்சி செய்வது அமெரிக்காவோ, ரஸ்யாவோ அல்ல யூதர்களின் மூளையே..

மேலைநாடுகளின் பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாலும் மற்றய நாடுகளை கற்காலத்திற்குள் தள்ளிவிடுவதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.

மேலை நாடுகள் தமது பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொண்டு உலகப் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது பொய்யல்ல உண்மையே..

இதுபோல மேலும் பல மூடர்களின் கதைகள் உள்ளன..

http://www.alaikal.com/news/?p=78533

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.