Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பார்ந்த தமிழீழ மக்களே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த தமிழீழ மக்களே

அருளினியன்

[சற்றே பெரிய சிறுகதை இது தயவு செய்து பொறுமையாக வாசியுங்கள்]

நான் சின்னப்பிள்ளையா முதலாம் ஆண்டு படிக்கேக்க எங்கட ஊருக்கு பக்கத்து ஊரில ஒரு ஐயா இருந்தவர் நெட்டையா ஒற்றை பனை மரம் போல இருக்கும் அவரோட ஒரிஜினல் பெயர் வந்து பரமேஸ்வரன்,ஆனா பரமேஸ்வரன் எண்டு சொன்னா யாருக்கும் தெரியாது.நெட்டை பரமர் எண்டோ அல்லது,நெட்டை ஐயா எண்டா யாழ்ப்பாணத்திற்கே தெரியும்,ஏன் ஐயா எண்டா எங்கட ஊரச் சுத்தி இருக்கிற பெரும்பாலான ஊருக்கு தெரியும்.

மனிசன் பழைய கம்யூனிசக்காரன் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை போட்டு அவர் நடந்து வாரத பார்த்தா அச் சொட்டா MGR மாதிரி இருக்கும்,எம் சி ஆர் போல மனிசனும் சும்மா தகதக எண்டு பொன் நிறத்தில மின்னுவார்,ஆளிண்ட தோற்றமே பாக்கிறவனை மயக்கிடும் எண்டா பேசினா கம்மாக்கோ சிக்காக்கோதான்,அப்பிடி ஒரு பேச்சாளன்,பழைய கம்யூனிசிய மேடைல எல்லாம் பேசிப் பேசிப் பேசுவதை ஒரு கலையாக செய்யக் கூடிய ஒரு "காய்"

அவர் பேசினா இடி இடிக்கும்,மின்னலடிக்கும்,நடந்தா சரவெடி இருந்தா சக்கை வெடி என அவர் பேசினா விஜய் பட ஒப்பினிங் ஸீன் கணக்கா திகிலா இருக்கும் சேகுவாரோ,பிடல் காஸ்ட்ரோ,ரஷிய புரட்சி,சீனப் புரட்சி எண்டு பேசி வந்த மனிசனுக்கு அவர் இருக்கிற இடத்திலேயே போராட்டம்,புரட்சி எண்ட உடன வலு புழுகம்.எமது போராட்டப் பரப்புரை கூட்டங்கள் 'ஐயா' இல்லாம நடந்ததா சரித்திரமே இல்லை.

அந்த சின்ன வயசிலேயே ஐயாவின் பேச்சு எண்டா எனக்கு உசிர்,அவர் பேசும் போது சிரித்தால் நானும் சிரிப்பேன்,அழுதா நானும் அழுவேன்,இங்க நான் 'நான்' எண்டு சொன்னது என்னை மாத்திரம் அல்ல,பேச்சைக் கேட்டுக் கொண்டு இருக்கிற எல்லாரையும் தான்.

மனிசன் ரஷிய புரட்சி பேசினா நாம ரசியாவில இருப்பது போல பீல் பண்ணுவோம்,சீனப் புரட்சி பேசினா சீனாவில் இருப்பது போல பீல் பண்ணுவோம்,அதே நேரம் சிங்களவன் எமக்குச் செய்த கொடுமைகளை பேசினா பேசுற அவருக்கும் உடம்பு நடுங்கும் கேக்குற எங்களிற்கும் உடம்பு நடுங்கும்.எம்மை சுத்தி இருக்கிற கிராமங்களிற்கும் சரி எங்களிற்கும் சரி ஐயா எண்டால் கடவுள்,ஐயா சொல்வது எல்லாம் கடவுள் சொன்ன மாதிரி.அவ்வளவு தூரம் தனது பேச்சால் எங்களை கட்டி வைச்சிருந்த மனிசன்.வாழ்வும் வாக்கும் ஒன்றாக வாழும் உத்தமர் என ஊருக்க அவரைப் பற்றி கதைபடுவினம்.அவரைப் பாக்கேக்க எல்லாம் எனக்கு கை எடுத்துக் கும்புடோணும் போல அல்லது காலில விழுந்து கும்புடோணும் போல இருக்கும்.அவ்வளவு தூரம் அந்த சின்ன வயசிலேயே எனக்கு ஐயா எண்டா மரியாதை.

என்னை எங்க கண்டாலும் வலு அன்பா 'வருங்கால சுதந்திர தமிழீழத்தின் தூண்கள் என சொல்லி பாசமா தலை வருடிப் பேசுவார்,அந்தப் பெரிய மனிசன் என்னோட பேசுது எண்டு எனக்கு குண்டில தட்டின புழுகம்.அம்மா,அப்பா,கூட ஒழுங்கா சொல்லத்தெரியாத அந்த சின்ன வயசிலேயே ஐயாவின் பேச்சு தொடர்ந்து கேட்டுக் கேட்டு எனக்கு

*தமிழீழம்

*சுதந்திரம்

*போராட்டம்

*தமிழர் தாயகம்

*நாட்டுப்பற்றாளர்

*மாமனிதர்

*துரோகி

*சிங்கள பேரினவாதம்

*சிங்கள நாய்கள்

*போராளிகள்

*மாவீரர்

*விதைக்கப்பட்டனர்

*உடல் மண்ணுக்கு உயிர் தமிழிற்கு

*தற்காலிக பின்னடைவு

*தந்திரோபாய பின்வாங்கல்

என எல்லா டிப்பிக்கல் தமிழ் வசனங்களும் பாடம் எனக்கு.டீச்சர் ஸ்கூல்ல 'றைம்ஸ்' சொல்லச் சொன்னாலே 'ஈழத்தில் கடைசித் தமிழன் இருக்கும் வரை போராடுவோம்' எண்டு சொல்லுவேன் கேக்கிற மனிசி என்ன ஒரு மாதிரிப்பார்க்கும்.எல்லாம் ஐயாண்ட பேச்சால வந்தது,எனக்கு அந்தக் காலமே ரோல் மாடல்,இன்ஸ்பிரேசன்,லொட்டு,லொசுக்கு எல்லாமே ஐயா,ஐயா,ஐயாதான்.

ஒருநாள் மம்மல் நேரம் நான் இப்படிதான் கோயிலுக்கு போவம் எண்டு வெளிக்கிட்டு ஒரு நாலு எட்டு வைக்கல,எங்கேயோ பக்கத்தில ஐயாண்ட குரல்

"அன்பான தமிழீழ மக்களே"

அப்படியே மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல ஐயாவின் பேச்சு நடந்த வாசிக சாலைக் கொட்டிலுக்கு என்னை அறியாமல் சென்று விட்டேன். அண்டைக்கு ஐயா பேசின தலைப்பு

"போராட்டத்திற்கு இளம் சந்ததியினர் சேர வேண்டிய அவசியமும்,கடப்பாடும்"

ஐயா இப்படிதான் பேசினதா நினைவு

'எனது பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய தமிழீழ மக்களே,உங்களிற்கு மகிழ்ச்சியுடன் வணக்கம் சொல்ல முடியாத நிலையில் நான் உள்ளேன்,அடிமையாய் இருப்பவனிற்கு என்ன மகிழ்ச்சி? என்ன வணக்கம்?,ஒரு மனிசனிற்கு அடிப்படையாக தேவையானது என்ன?

[கூட் டத்தைப் பார்த்துக் கேட்கிறார்]

[கூட்டத்தில் இருந்து உணவு,உடை,உறையுள் என பல குரல்கள் கேட்கிறது]

அவர்களைப் பார்த்து ஐயா கேட்கிறார்..

எனக்கு உடை இருக்கிறது,உறையுள் இருக்கிறது வேளா வேளைக்கு உணவு கிடைக்கிறது ஆனால் நான் திருப்தியாக இருக்கிறேனா?,இல்லை,இல்லை,எமக்கு எல்லாவற்றையும் விட இன் னொன்று மிக மிக அவசியமானது,

அது............................?[சபையைப் பார்க்கிறார்]

[அவரின் குறிப்பறிந்த சபையில் இருந்த இளம் சந்ததியினர் தமிழீழம்,தமிழீழம் என கூக்குரலிட்டனர்]..

ஆம் எமக்கு அடிப்படைத் தேவை தமிழீழம் ஒன்றே..

சரி தமிழீழம் வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்,சுதந்திரம் என்பது என்ன கடைச் சரக்கா?,அது எமது அடிப்படை உரிமை,எங்கு எங்கு எல்லாம் நாம் எமது உயிர்களை தியாகம் செய்ய தயாராக உள்ளோமோ அங்கங்கே தான் சுதந்திரம் மலரும்.உயிர் என்னடா உயிர் அது ஒரு மசிர் ஐந்து சதத்திற்கு பெறுமதி இல்லாத ஒரு சாமான்,இன்று இருக்கும் உயிர் நாளை இருக்கும் என்பது என்ன நிட்சயம்?,சுதந்திரம் தான் லட்சியம்.நான் எனது வீட்டின் கட்டிலில் தூங்குவதை விட மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒரு கல் லறையாக துயில விரும்புகிறேன்.

எனது பாசத்திற்குரிய இளம் சந்ததியே நீங்கள் எங்கே துயில விரும்புகிறீர்கள்?

உணர்ச்சி வசப்பட்ட அண்ணமார்,அக்காமார் எல்லாம் கல்லறை,கல்லறை என கூவினர்

ஏ சிங்கள பேரினவாத தேசமே,உனக்கு ஒன்று கூற விரும்புகிறேன்,எமது பிள்ளைகள் இனியும் பொறுத்து இருப்பார்கள் என நீ எண்ணாதே?,எமது இளம் பெண்கள் இனியும் பூமாலை தொடுத்துக் கொண்டு இருப்பார்கள் என எண்ணாதே,இங்கே எமது தமிழர் தாயகப் பிரதேசத்தில் உள்ள எமது கடைசிப் பிள்ளை உயிருடன் இருக்கும் வரைக்கும் நாம் போராடுவோம்.

[போராடுவோம் போராடுவோம் என குரல்கள் ஒலிக்கின்றன]

உங்களில் எத்தனை பேர் போராட்டத்தில் இணைய இந்தக் கணமே தயாராக உள்ளீர்கள்?

[ஏறக்குறைய அனைவரும் கையை உயர்த்துகின்றனர்]

போராட்டத்தின் தேவை கருதி தற்கொலை போராளியாக மாற எத்தனை பேர் தயாராக உள்ளீர்கள்?

[இதற்கும் ஏறக்குறைய அனைவரும் கையை உயர்த்துகின்றனர்]

உணர்ச்சிவசப்பட்ட சில அண்ணமார் மேடை ஏறி தமது கையை பிளேட்டால் வெட்டி வெளி வந்த இரத்தத்தை ஐயாவின் நெற்றியில் வீரத்திலகமாக இடுகின்றனர்.ஒரு அண்ணா சற்று ஆழமாக தனது கையை வெட்டியதில் இரத்தம் பீறிட்டு ஓடி மேடையிலும் சில துளிகள் விழுகின்றன.

அந்த இரத்தத்தை பார்த்தவாறு ஐயா சொன்னார்,'இந்த இரத்தம் எவ்வளவு பரிசுத்தமானதோ,அதை விட பரிசுத்தமானது நான் தமிழீழம் மீது வைத்திருக்கும் காதல் [கரவொலி வானைப் பிளக்கிறது],எவ்வளவு காலம் தான் நாம் சிங்கள நாய்களிற்கு அடிமையாக இருப்பது,எவ்வளவு காலம் தான் நாம் சிங்கள பேரினவாதத்திற்கு அடி பணிந்து இருப்பது.எனதருமை இளம் சந்ததியே நீங்கள் அனைவரும் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது,எனது சொந்தப் பிள்ளைகளாக நான் கருதும் எனது அன்பு இளையோர்களே,உங்களது அண்ணன் நான் கூறுகிறேன் இன்றே இந்த நிமிடமே போராட்டத்தில் இணைந்து,எமது தமிழர்களின் வீரத்தை,எமது போராடும் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்துவோம்,இன்றே வாருங்கள் களத்திற்கு

[துணைக்கு காசி ஆனந்தனின் பாடலை இழுக்கிறார்]

"பத்துத் தரம் பாடை வராது,பதுங்கி இருக்கும் புலியே தமிழா!செத்து மடிதல் ஒருமுறை தான் சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா"

உங்களில் எத்தனை தம்பிமார் போராட்டத்தில் இந்த நிமிடமே இணைய தயாராக உள்ளீர்கள்?

[பலத்த கரஓசங்களிற்கு மத்தியில் ஏறத்தாள அனைவருமே கையை உயர்த்தினர் ]

போராட்டத்தின் தேவை கருதி தற்கொலைப் படையணியாக மாற எத்தனை பேர் தயாராக உள்ளீர்கள்?

[மீண்டும் பலத்த கரஓசங்களிற்கு மத்தியில் ஏறத்தாள அனைவருமே கையை உயர்த்தினர் ]

உங்கள் வீடுகளில் துயில்வதை விடுத்து கல்லறைகளில் துயில எத்தனை பேர் தயாராக உள்ளீர்கள்?..

[வானைப் பிளக்கும் பலத்த கரஓசங்களிற்கு மத்தியில் மீண்டும் ஏறத்தாள அனைவருமே கையை உயர்த்தினர் ]

உங்கள் உறவுகளை,சொந்தங்களை மறந்து,துறந்து இந்தக் கணமே போராட்டத்தில் இணைய நான் பெறாத பிள்ளைகளாகிய நீங்கள் எத்தனை பேர் தயாராக உள்ளீர்கள்?

[மீண்டும் ஏறத்தாள அனைவருமே கையை உயர்த்தினர் ]

கையை உயர்த்தினால் மட்டும் போதுமா,எனது பிள்ளைகளே இன்றே போராட்டத்தில் இணையுங்கள்,.எனது பிள்ளைகளே இந்தக் கணமே சபதம் எடுத்துக்கொள்ளுங்கள்,ஈழத்தில் கடைசித் தமிழன் உள்ளவரை,போராடுவோம் போராடுவோம்,போராடுவோம்...நாம் அடிக்கத் தொடங்கினால் சிங்களவன் எம்மிடம் தனிநாடு கேட்பான்[பஞ்ச் வைத்து பேச்சை முடிக்கிறார்]

[கையை உயர்த்திய பெரும்பாலன அண்ணமார்,அக்காமர் அருகில் இருந்த பஸ்சிற்கு செல்கின்றனர்,பஸ் அவர்களை சுமந்தபடி அருகிலுள்ள பயிற்சி முகாமிற்கு செல்கிறது],இதற்கிடையில் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு அந்த அண்ணமார்,அக்காமார்களின் தாய்,தகப்பன் குழறியபடி வந்து அந்த பஸ்ஸ மறித்து தமது சொந்த பெத்த பிள்ளைகளின் காலில் விழுந்து போகாதே,போகாதே என குளறி அழுகின்றனர்.ஆனால் பஸ் பெரும்பாலா னவர்களை சுமந்த படி செல்கிறது]

சின்னப் பெடியனான எனக்கு இதைப்பார்க்க அழுகை அழுகையாய் வருது,சின்னப் பெடிப்பயலா இருக்கிற என்னை போராடத்தில சேர்த்துக் கொள்ள மாட்டினம் எண்டு நினைக்க விக்கி விக்கி அழோணும் போல இருக்கு,என்ன கொஞ்சம் வேளைக்கு பெத்து இருக்கலாம் எண்டு அப்பா,அம்மா மேல கோவம்,கோவமா வருது.ஆன ஒண்டும் செய்ய முடியாமலும் இருக்கு,கவலையா அழுதபடி வீட்டை போய்க்கொண்டிருக்கேக்க,வழியில ஐயா ஓட்டமும்,நடையுமா எங்கேயோ போய்க்கொண்டு இருந்தார்.என்னைக் கண்டவுடன் பாசமா தலை வருடி

"வருங்கால தமிழீழத்தின் தூண்கள்" எண்டு சொல்ல,எனக்கு மீண்டும் ஒருக்கா குண்டீல தட்டின புழுகம்.முந்தியே சொன்னனான் தானே ஐயா எண்டா எனக்கு உசிர் எண்டு,இந்த வேகாத வெயிலுக்க மனிசன் குடை கூட இல்லாம போனா உடம்பிற்கு என்னாகும் எண்ட கவலேல,ஐயாவ பார்த்துக் கேட்டேன்,

ஐயா! இந்த வெயிலுக்க எங்க போறியள்?

அதடா மோனே,என்ற லண்டனில இருக்கிற பெடியள் இரண்டு பெருமாச் சேர்ந்து எண்ட கடைசிப் பெட்டை மனோன்மணிய லண்டனுக்கு எடுக்கிறோம் எண்டவயள்,அதைப் பற்றி விரிவா கடதாசி போடுறோம் எண்டு சொன்னவயள் அதுதான் ஒரு எட்டு தபால்க்கந்தோருக்கு போய்ப் பார்த்துட்டு வாரன் மோனே,

குறிப்பு ஒன்று-

2004 சமாதான ஒப்பந்த கால மட்டில ஒருநாள் ஐயாண்ட பேச்சுக் கேட்டு போராட்டத்திற்குப் போய் செத்துப் போன பக்கத்து வீட்டு கவிதா அக்காண்ட 12 வது துவசம் நடந்த ஒருநாள் நான் ஐயாவை கன நாளிற்குப் பிறகு வீட்டடியில பாத்தன்.வெள்ளை வேட்டி,சட்டை போடும் மனிசன் அண்டைக்கு ஜீன்ஸ் ஷர்ட் போட்டு வலு கலாதியாய் இருந்தார்.என்னைப் பார்த்து அதே பாசமாக கதைத்தார்,முந்தி எண்டா தமிழீழத்தின் எதிர்கால தூண்களே எண்டுறவர்,நான் வளந்திட்டேன் எண்டு தமிழீழ தூண்களே என்றார் .

அவரைக் கண்டவுடன செத்துப் போன கவிதா அக்காண்ட தாய் மனிசி கட்டேல போறவன்,நாசமா போறவன்,மக்கரிச்சவன்,கோதாரி விழுவான்,பேக்குப் பிறந்தவன்,வீங்கிச் சாவான்,வெடிச்சுச் சாவான்,அந்த மோன்,இந்த மோன்,அவனே இவனே எண்டு ஓயாம தூசணம் கொட்டிச்சு.ஆனா நம்ம ஐயா எதுவுமே நடக்காதது போல,அரசியலில இதெல் லாம் சகசம் அப்பு எண்ட ரேஞ்சில நடந்து வந்தார்.

எனக்கு ஐயா எப்பவும் ஹீரோ தானே.அவரை கன காலத்திற்கு பிறகு கண்ட சந்தோசத்தில நான் பேச்சும் வராம

ஐயா எங்க ஐயா இவ்வளவு காலமும் இருந்தீங்கள்?

அதடா மோனே நான் லண்டனில குடியேறி 10 வரிசமடா தம்பி எண்டவர்,தனது இரண்டு ஆம்பிளப் பிள்ளைகளும் லண்டனில பெரிய உத்தியோகத்தில இருக்கிறதாயும்,கடைசிப்பெட்டை மனோன்மணிக்கு டாக்குத்தர் மாப்பிள பார்த்து கட்டி வச்சதையும் சொன்னார்.பேரப்பிள்ளையள் எல்லாம் படிப்பில வலு சுட்டியள் எண்டும்,மூத்த பெடியண்ட மூத்த பெட்டை ஒக்ஸ்பேர்ட்டில "ஸ்டேம் செல்லில" பி எச் டி வாங்கி இருக்கு எண்டு வலு புழுகமா சொன்னார்.

சுதந்திரம்,தமிழீழம் எண்டு ஒண்டையும் சொல்லக் காணோம்[கூட்டம் இல்லைத் தானே],எனக்கு ஐயாவின் போக்கு கவலையாய் இருந்தது,ஐயா நீங்கள் சொல்லித்தான் எனக்கு தமிழீழம் எண்ட சொல்லே தெரியும்,நீங்கள் சொல்லி போராட்டத்திற்கு போய் செத்து போன அண்ணாமார்,அக்காமார் எத்தின பேர்,நீங்கள் என்னடா எண்டா லண்டன் எண்டுறியள்,ஒக்ஸ்பேர்ட் எண்டுறியள்,ஸ்டேம் செல் எண்டுறியள் எண்டு கவலையாய் அழுவாரைப் போல கேட்ட என்னை குழந்தையை பார்ப்பதுபோலப் பார்த்து தலையைக் குனிந்து சொன்னார்

தமிழீழமும் மசிரும்...

குறிப்பு இரண்டு-

ஐயாட கடைசிப் பெடியன இந்தியாவில மீட் பண்ணினான்,தமிழ் நாட்டின் வருங்கால முதலமைச்சரை சந்திக்க லண்டனில இருந்து வந்ததா சொன்னார்,ஆர் எண்டு கேட்டா சீமான் எண்டார்,அவரோட கதைக்கேக்க சில விசயங்களை சொன்னார்,ஈழத்தில கடைசித் தமிழன் இருக்கும் வரை போராட வேண்டும் எண்டு முள்ளிவாய்க்காலுக்க எங்கட சனமும்,எங்கட போராட்டமும் ஒடுங்கேக்கையும் லண்டனில இருந்து கொண்டு தீர்மானம் போட்டதா சொன்னார்.உசிர் ஒரு மசிர் எண்டும் தமிழனின் வீரம் தான் முக்கியம் எண்டும் சொன்னார்.

ஈழத்தின் அகதி முகாமில சிக்கி சின்னாபின்னமாகி,ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல்,பட்டினியாலும்,பஞ்சத்தாலும் தினம் தினம் அணு அணுவாக சாகும் எமது உறவுகளிற்கு ஏதாவது உதவி செய்யலாமே எண்டு கேட்டன்

அது எப்படி தம்பி எண்டார்?

என்ன அண்ண பேய்க்கதை பேசிறியள்,எங்கட போராட்ட அமைப்பை உலகத்திலயே இரண்டாவது பண பலம் பொருந்திய அமைப்பா வைச்சு இருந்தது நீங்கள் புலம்பெயர் உறவுகள் தானே அவங்களிட காசு வாங்கி முகாமில நாயா கஷ்டப்படும் எங்கட சனத்திற்கு கொடுக்கலாம் தானே எண்டன்.

அது கண்டியோ சுத்த வேஸ்ட் எண்டார்.

ஏன் அண்ண

அந்தக் காசுக்கு அடுத்த கட்டப் போருக்கான ஷெல் வாங்கலாம் இல்லோ எண்டார்.

அப்ப முகாமில உள்ள சனம்?

தம்பி போர் எண்டா சனம் சாகிறதும் கஷ்டப்பற்றதும் சகசம் கண்டியோ.இது எல்லாம் போராட்டத்தின் ஒரு அம்சம் உனக்கு உலகம் தெரியாது அப்பன்,நீ ஒரு குழந்தை,நீ பாவம் தம்பி

சரி நீங்கள் சொல்லிறது போல அண்ண ஈழத்தில கடைசித்தமிழனும் செத்துப் போய் சுதந்திரம் பெற்று என்ன புடுங்கப் போறீங்கள் ?

உனக்கு உலகம் தெரியாதுடா தம்பி,ஈழத்தில நீங்க அடிபட்டு செத்துப் போய் சுதந்திரம் வாங்கின நாங்கள் லீவில வந்து போகலாம் இல்லோ,உசிர் என்னடா உசிர் அது ஒரு மசிர்,மானம் தான் கண்டியோ முக்கியமானது

குறிப்பு மூன்று

நானும் ஒருநாள் ப்ரீயா இருக்கேக்க ஐயா போல பேசிப் பார்த்தேன்

அன்பார்ந்த தமிழீழ மக்களே,எமது புலம் பெயர் நாடுகளில் உள்ள,தமிழீழ ஆதரவாளர்களிற்காக ஆவது நாங்கள் ஈழத்தில் போராட வேண்டும்,அவர்கள் எமது போராட்டங்களை யூடியூப்பில் பார்த்து ரசிக்கவும்,எமது வீரம் என தமது அயலவர்களானஐரோப்பியர்களிற்கும்,ஆபிரிக்கர்களிற்கும்,அமரிகர்களிற்கும் சொல்லிக் காட்டவும்,அவர்கள் லீவில் இன்பச் சுற்றுலா வந்து போகவும்,நாம் உடனடியாக போராட வேண்டும்,தமிழர் வரலாறு முக்கியம்.முகாமில் மக்கள் அனாதையாக செத்துப் போனால் என்ன,புலம் பெயர் நாடுகளில் தான் தமிழர் என்று சொல்ல நம்மவர்கள் உள்ளனரே.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் உசிர் என்னடா உசிர் அது ஒரு மசிர் மானம் தான் முக்கியம்,அதிலும் புலம் பெயர் உறவுகளின் மானம் மிக மிக முக்கியம்.

http://aruliniyan.bl...og-post_12.html

இப்படி பலர் யாழில் கூட இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த தமிழீழ மக்களே

அருளினியன்

நான் சின்னப்பிள்ளையா முதலாம் ஆண்டு படிக்கேக்க எங்கட ஊருக்கு பக்கத்து ஊரில ஒரு ஐயா இருந்தவர் நெட்டையா ஒற்றை பனை மரம் போல இருக்கும் அவரோட ஒரிஜினல் பெயர் வந்து பரமேஸ்வரன்,ஆனா பரமேஸ்வரன் எண்டு சொன்னா யாருக்கும் தெரியாது.நெட்டை பரமர் எண்டோ அல்லது,நெட்டை ஐயா எண்டா யாழ்ப்பாணத்திற்கே தெரியும்,ஏன் ஐயா எண்டா எங்கட ஊரச் சுத்தி இருக்கிற பெரும்பாலான ஊருக்கு தெரியும்.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் உசிர் என்னடா உசிர் அது ஒரு மசிர் மானம் தான் முக்கியம்,அதிலும் புலம் பெயர் உறவுகளின் மானம் மிக மிக முக்கியம்.

http://aruliniyan.bl...og-post_12.html

பெரியவளா ஆனப் பிறகு முதலாம் ஆண்டு படிக்க முடியுமா?

முதலாம் ஆண்டு படிக்கும் போதே வந்த (ஒழுங்கா பிடிச்சு ..)இவரது உணச்சியை இது வரை ஆய்வு செய்து கொண்டிருக்கிறவர், இப்ப வாற உணர்ச்சியை பற்றி இன்னும் ஆய்வு செய்து பருத்தி விதை வெடிச்சு பஞ்சாகும் போது எழுதுவார் எப்படி என்று,

இப்படி எழுதினா தான் இப்ப இவர்களின் பெயர்கள் அடிபடும், வியாபாரமாகும்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.