Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்பக புற்று நோயை தடுக்கும் அப்பிள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by சோபிதா on 19/08/2011 in புதினங்கள் | 0 Comment

apple-140x140.jpg“நாளும் ஒரு அப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது.

கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய அய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார்.

அப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய அப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின.

அப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போனது. மேலும் இந்தக்கட்டிகள் தீங்கற்றவையாகவும் மாறிப்போயின.

மனிதர்களிலும் விலங்குகளிலும் மார்பகப்புற்றுநோய்க்கு காரணமான adenocarcinoma எனப்படும் ஆபத்தான கட்டிகள் மரணத்தை விளைவிக்கக்கூடியவை. பேராசிரியர் லியு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 81 சதவீதமாக இருந்தது.

24 வாரங்களுக்கு நாளொன்றுக்கு ஓர் ஆப்பிள் பழத்தின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 57 சதவீதமாக குறைந்தது.

நாளொன்றுக்கு மூன்று ஆப்பிள் பழங்களின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 50 சதவீதமாகவும், நாளொன்றுக்கு ஆறு அப்பிள் பழங்களின் சாறு கொடுக்கப்பட்ட விலங்குகளுக்கு இந்த பாதிப்பு 23 சதவீதமாகவும் குறைந்து போயிருந்தது.

அப்பிள்பழங்களில் காணப்படும் phytochemicals எனப்படும் வேதிப்பொருள்கள் மார்பகப் புற்றுநோய் செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் NFkB என்ற பாதையை தடைசெய்துவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அன்றாட உணவில் பழங்களையும் காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் பால்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டுப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே பொருள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இருந்தாலும் அந்தக் கட்டுரைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் லியு வின் புதிய ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.

பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை அப்பிள் பழத்தில் அதிகமாக உள்ள phenolics or flavonoids எனப்படும் phytochemicals பெற்றிருக்கின்றன என்பதை படம் தெளிவாக்குகிறது.

http://www.eelampress.com/2011/08/33643/

  • கருத்துக்கள உறவுகள்

நாளும் ஒரு அப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பேராசிரியர் லியு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 81 சதவீதமாக இருந்தது.

24 வாரங்களுக்கு நாளொன்றுக்கு ஓர் ஆப்பிள் பழத்தின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 57 சதவீதமாக குறைந்தது.

நாளொன்றுக்கு மூன்று ஆப்பிள் பழங்களின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 50 சதவீதமாகவும், நாளொன்றுக்கு ஆறு அப்பிள் பழங்களின் சாறு கொடுக்கப்பட்ட விலங்குகளுக்கு இந்த பாதிப்பு 23 சதவீதமாகவும் குறைந்து போயிருந்தது.

நன்றி தமிழ் அரசு பதிவிற்கு, பின்ன எங்கட பெரியவள் சும்மாவ சொன்னாள் "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று", அது செக்ஸ்க்கும் தான்.....

நாளும் ஒரு அப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான் - என்னுடைய மகன் அப்பிள் சப்பிடும் போது அடிக்கடி சொல்லும் வசனம்

  • 1 month later...

சுமார் 30 மேற்பட்ட விற்றமின்கள், மினரல், நார்ச்சத்து உட்பட பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளும் கொண்ட அற்புதமான பழமாக ஆப்பிள் விளங்குவதாக ஜேர்மனிய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஜேர்மனில் உள்ள ஜினாஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆப்பளின் அதிச சக்தி பற்றிய தமது ஆய்வுகளை இன்று வெளியிட்டுள்ளனர்.

  1. ஓர் ஆப்பிள் பழத்தில் விற்றமின்களான சீ, கே, ஈ, பீ1, பீ2, பீ6 என்பன காணப்படுகின்றன.
  2. மனித நரம்பு மண்டலம் சிறப்பாக செயற்படுவதற்கான கேலியம், யோட், சிங் போன்ற மூலகங்கள் ஆப்பிளில் உண்டு.
  3. அத்தோடு புற்றுநோயை உருவாக்கும் கிருமிகளுக்கு எதிராகவும் செயற்படும் ஆற்றல் கொண்டதாக இது இருக்கிறது.
  4. மேலும் இரத்தத்தில் உள்ள கொலஸ்ரோலை குறைக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
  5. அல்ஸிமேயர், பாக்கிங்சன் போன்ற கொடிய நோய்களையும் தடுக்கும் ஆற்றல் ஆப்பிளில் உள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.

ஆப்பிள்களில் எல்லாமே சிறந்தவை என்று கூற முடியாது பொஸ்கூப், கோக்ஸ்ஒறேஞ், குறோஸ்ரீன் என்னும் இனங்கள் விற்றமின்களால் நிறைந்த ஆப்பிள்களாகும். மற்றய பழங்களை பல மடங்கு முந்திச் சென்று சாதனை படைத்துள்ளது ஆப்பிள்.

http://www.alaikal.com/news/?p=83084

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.