Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் தாயக பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டும் - இரா. சம்பந்தன்

Featured Replies

தமிழர்களின் தாயக பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டும் - இரா. சம்பந்தன்

தமிழர்களின் தாயக பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

உள்ளூராட்சி சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவிகளையும், நிதியை எவ்விதம் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக அவர்களோடு ஆலோசித்து செயற்படவுள்ளோம்.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக அரசுக்கு பேச்சுவார்தைகளின் போது பல விடயங்களை எடுத்துக் கூறினோம். ஆனால் அரசு அதனை இதய சுத்தியுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நிலை தொடர்பாக இலங்கை அரசு இன்னமும் உணரவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து எதிர்வரும் காலங்களில் முக்கியமான முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன்,எஸ்.ஸ்ரீதரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராசா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

http://tamilmirror.l...0-17-10-27.html

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

....பிரகடனம் செய்யுங்கள் வந்துகுவியும்.

தமிழருடைய பூமியை முதலில தமிருடைய கைகளில் ஒப்படையுங்கோ.அதுக்குப்பிறகு என்ன செய்யிறது எப்படி செய்யிறது எண்டு யோசிக்கலாம்.இந்தியாவின்ர சொல்லக் கேட்டு நடந்தீங்களெண்டா அடுத்த தேர்தல் உங்களுக்கு கட்டுப்பணம் கூட திருப்பிக்கிடைப்பது கஸ்டம்.அத்தோட இன்றைய சூழ்நிலையில உங்களுக்கு இருக்கிற பேரம் பேசும் சக்தி புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் தான் என்னதை மறவாதேயுங்கோ.ஈழத்தமிழரின் உரிமைப் பிரச்சனையை உங்களுடைய கௌரவ பிரச்சனையாக்கி அம்பாறை மாவட்டத்தில விட்ட தவறுகள் மாதிரி இனி செய்யாதேங்கோ.நீங்கள் எடுக்கிற முடிவுகள் பிழை என்றால் அந்த முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்கி புலம்பெயர் வாழ் உறவுகளிடம் இருப்பதை மறவாதேங்கோ மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயா.

இந்தியப் பின்னணியின் அவசியத்தை தமிழர்கள் உண்ர்ந்திருக்கிறார்கள். அதனை கூட்டமைப்பு கைவிடாது. கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய எந்தத் தமிழ் அமைப்புகளும் தாயகத்தில் இல்லாதவரை கூட்டமைப்பு தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெறும்.

இந்தியப் பின்னணியின் அவசியத்தை தமிழர்கள் உண்ர்ந்திருக்கிறார்கள். அதனை கூட்டமைப்பு கைவிடாது. கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய எந்தத் தமிழ் அமைப்புகளும் தாயகத்தில் இல்லாதவரை கூட்டமைப்பு தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெறும்.

இந்திய பின்னனியின் அவசியம் இல்லை. தமிழக ஆதரவு,எழுச்சி இருந்தால் போதும்.

வடஇந்தியனை இனியும் நம்ப ஈழத்தமிழன் தயாராக இல்லை... வடஇந்தியனின் நீதி தூக்கு கயிறில் நிற்கும் தமிழக உறவுகளின் நீதீயில் தெரிகிறது. தமிழக தமிழனே வட இந்தியனை எதிர்க்கும் காலம் விரைவில் வரும்

  • தொடங்கியவர்

சம்பந்தன் அவர்களின் இந்தக்கோரிக்கை நல்ல முயற்சி ஒன்றாகவே தெரிகின்றது. ஆனால் இதற்கு சிங்களம் என்ன சொல்லும் என்பதும், புலம்பெயர் முதலீட்டலர்களை 'பயங்கரவாதிகள்' என்ற முத்திரை குத்தாதா? வரிகள் விடயத்தில் என்ன கொள்கை? எவ்வளவு ஊழல் தரவேண்டும்? என பல கேள்விகள் உள்ளன.

அத்துடன் இது டெல்லி ஊடாக வந்ததா? என்ற ஆதங்கமும் உண்டு.

இந்திய பின்னனியின் அவசியம் இல்லை. தமிழக ஆதரவு,எழுச்சி இருந்தால் போதும்.

வடஇந்தியனை இனியும் நம்ப ஈழத்தமிழன் தயாராக இல்லை... வடஇந்தியனின் நீதி தூக்கு கயிறில் நிற்கும் தமிழக உறவுகளின் நீதீயில் தெரிகிறது. தமிழக தமிழனே வட இந்தியனை எதிர்க்கும் காலம் விரைவில் வரும்

வடஇந்தியனை இனியும் நம்ப ஈழத்தமிழன் தயாராக இல்லை.

சம்பந்தன் எங்கு போனாலும், தன்னை நடுநிலைவாதியாக காட்ட, புலிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள் என்று திரும்பத்திரும்ப புலிகள் மீது சேறு வீசுவதை விட்டுவிட்டு, சிங்கள அரச பயங்கரவாதிகளால் ஜனநாயகம் என்ற பெயரில் நடாத்தப்படும் மிலேச்ச மனிதப் படுகொலைகளை பேசினால் நல்லா இருக்கும்.

சிங்கள பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களை சர்வதேசத்துக்கு கொண்டுசெல்லவேண்டிய நேரமிது. சர்வதேச நாடுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து சிங்கள பயங்கரவாதிகளின் நயவஞ்சக நாடகங்களையும், போலி ஜனநாயக வேடங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.

சம்பந்தன் ஐயா இப்பிடி கேணைத்தனமா அறிக்கை விடுறத அடியோட நிறுத்திடுங்க!

புலம்பெயர்தமிழன் எதுக்கு யாழுக்கு உதவணும்?

இததான் முன்னர் ..மஹிந்த, கே.பி..கோத்தா..டக்ளஸ்.......கேட்டாய்ங்க.......

இப்போ நீங்களா......

ஒன்றுபட்ட இலங்கை என்று காண்பிப்பதற்காக , சிங்களவன் நடத்திய தேர்தலில் ,வெற்றிபெற்றவர்கள்

எவராயினும் அந்த பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டியது , ஒரு அரசின் ஜனநாயக கடமை!

அவர்கள அதை செய்யலைனா...

சர்வதேச சமூகத்தின் முன்னால் தமிழர்பிரதேசத்துக்கு ஏற்படும் புறக்கணிப்பை கொண்டு செல்லவேண்டியது உங்க கடமை!

அளவெட்டில நடந்ததை அமெரிக்காவுக்கு சொல்ல தெரியுது, இத சொல்ல தெரியாதா?

ஊரில உள்ளவனை எல்லாம் வெட்டி புதைச்சு பிடிக்கும்போது மட்டும் .........

வடபகுதி ஒன்றுபட்ட இலங்கையாம்...

உள்ளுராட்சி அபிவிருத்திக்கு துட்டு வேணும்னு நிலை வந்தா... அது புலம்பெயர் தாயகமாம்!

நல்லாருக்கிதே கத!

அப்பிடியே மஹிந்தவை சந்திக்கும்போது கேளுங்க...புலம்பெயர்தமிழர்கள் உதவ தயாரானால்.......

இலங்கை இராணுவம் தமிழர்பகுதில இருந்து வெறியேற தயாரான்னு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.