Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் டிவிக்கு ஆபத்து?

Featured Replies

சன் டிவியை முடக்க ஜெ. புதிய சட்டம்: பர்னாலாவிடம் கருணாநிதி புகார்

சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் மற்றும் ஹாத்வே கேபிள் நிறுவனத்தை கையகப்படுத்த தமிழக அரசு அதிரடியாக ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை எஸ்.சி.வி எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் (சன் டிவி குழுமத்தைச் சேர்ந்தது) நிறுவனம்தான் பன்முக கேபிள் இணைப்புகளைக் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் 80 சதவீத வீடுகளுக்கு சுமங்கலி கேபிள் விஷன் மூலமாகத் தான் சேட்டிலைட் டிவி இணைப்பு தரப்பட்டுள்ளது.

இந் நிலையில் சட்ட அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டசபையில் ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பன்முக கேபிள் இணைப்புகள் நடத்துவோர் மற்றும் ஆப்டிகல் கேபிள் மூலம் கேபிள் இணைப்புகளைக் கொடுப்பார் குறித்தும், அது தொடர்பான நிறுவனங்கள் மீதும் எண்ணற்ற புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன.

கேபிள் இணைப்புகளை கொடுப்பதில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொதுமக்களை மிரட்டும் வகையிலும் இவர்கள் செயல்படுவதாக பொதுமக்கள் புகார்கள் கொடுத்து வருகின்றனர்.

தங்களுக்குப் பிடிக்காத தொலைக்காட்சிகள் சரியாக தெரியாத வகையில் இவர்கள் இணைப்பு கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

எனவே அந்த கேபிள் டிவி இணைப்பின் நிர்வாகத்தை கையகப்படுத்தவும், அதன் உரிமையை மாற்றவும், அதன் நிர்வாகத்தை அரசே மேற்கொள்ளவும் வகை செய்யும் விதத்தில் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

(சன் டிவியின்) சுமங்கலி கேபிள் விஷன், ஹாத்வே ஆகிய நிறுவனங்களுக்கும் இந்த சட்ட மசேதா பொருந்தும். இருப்பினும், சிறிய அளவில் கேபிள் இணைப்பு நடத்தும் தெருவோர கேபிள் நிறுவனங்கள் இந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அவை பிழைப்புக்காக இந்தத் தொழிலை மேற்கொண்டு வருவதால் அவர்களை இந்த சட்டத்திலிருந்து விலக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் உள்ள சுமங்கலி கேபிள் விஷன் அலுவலங்களும், சொத்துக்களும், சென்னையில் உள்ள ஹாத்வே அலுவகமும் அரசால் கையகப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களின் கருவிகள், ஆப்டிகல் பைபர் நெட்வோர்க் உள்ளிட்டவற்றை அரசு எடுத்துக் கொள்ளும்.

நிறுவனத்தின் பெயர் உரிமையும் அரசின் கட்டுப்பாட்டில் வரும். இதை எதிர்த்து வழக்கு தொடரவோ, சொத்துக்களை ஒப்படைக்க மாட்டோம் என்று மறுக்கவோ முடியாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

கையகப்படுத்தப்படும் இந்த நிறுவனங்களுக்கு ஒரு தொகை நஷ்ட ஈடாக வழங்கப்படும். இதன் பின்னர் இந்த நிறுவனங்களை ஒரு பொறுப்பாளரை நியமித்து அரசே நடத்தும்.

அரசின் கட்டுப்பாட்டில் வரும் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்துவிடலாம். இவர்களில் சிறந்த ஊழியர்களுக்கு மட்டுமே மீண்டும் பணி வழங்கப்படும். வயது, தகுதி, நேர்மை ஆகியவற்றை கணக்கில் கொண்டு மட்டுமே மீண்டும் அவர்களுக்கு பணி தரப்படும்.

பணியை விட்டு விலகும் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை பின்னர் வழங்கப்படும். எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது பின்னர் நிர்ணயிக்கப்படும். இழப்பீடு கோருவோர் 30 நாட்களுக்குள் கமிஷ்னர் ஆப் அப்பாயின்மெண்ட்ஸை அணுகி மனு செய்யலாம்.

இவ்வாறு அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா, முழுக்க முழுக்க சன் டிவியை குறி வைத்தே கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

பர்னாலாவிடம் கருணாநிதி புகார்:

தமிழக அரசின் இந்த அதிரடி சட்ட மசோதா சன் டிவி வட்டாரத்திலும், கருணாநிதி குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் சன் டிவியை முடக்குவதற்கு அதிமுக அரசு முயலுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

இதையடுத்து தமிழக ஆளுர் சுர்ஜித் சிங் பர்னாலாவை, திமுக தலைவர் கருணாநிதி இன்று சந்தித்தார். அவருடன் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் தம்பியும், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சருமான தயாநிதி மாறனும் உடன் சென்றார்.

அப்போது கேபிள் டிவி நிறுவனங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கான புதிய சட்டத்திற்கு கருணாநிதி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

கேபிள் டிவி தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் கையில் உள்ளது என்றும், இதில் மாநில அரசு தலையிட உரிமையில்லை என்றும் கூறிய கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள மசோதா சட்ட விரோதமானது. இதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

இதை தொடர்ந்து இன்று பிற்பகலில் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து ந்தித்து சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

சன் டிவி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பூமாலை என்ற பெயரில் வீடியோ நிகழ்ச்சிகளை தயாரித்து வந்தது. பின்னர் அது சன் டிவியாக உருமாறியது. அதன் பின்னர் எஸ்.சி.வி. என்ற பெயரில் முன்பு திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பி வந்தது. சமீபத்தில் அந்த அலைவரிசை, சன் மியூசிக் என மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாத்வே:

தமிழகத்தில் சிறிய அளவிலும் கேரளத்தில் பெரிய அளவிலும் தனது கேபிள் நெட்வோர்க்கை வைத்திருக்கும் நிறுவனம் ஹாத்வே. இது மும்பையைச் சேர்ந்த ரஹேஜா நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இவர்களுக்கு அதிமுகவுடன் நல்ல நெருக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுமங்கலி நெட்வோர்க்கை மட்டும் முடக்கினால் அப்பட்டமான அரசியலாக வெளியில் தெரியும் என்பதால் ஹாத்வேயையும் சேர்த்து கையகப்படுத்த அதிமுக திட்டமிட்டதாகத் தெரிகிறது

தட்ஸ் தமிழ்

  • தொடங்கியவர்

வழக்கமாக சன் டிவி தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் மற்றய தொலக்காட்சிகளை முடக்குவதாகவும் செய்திகள் வெளிவரும். அது தவிர தமக்கு உரிமை கிடைக்காத திரைப்படங்களை புறக்கணிப்பதாகவும் ஒரு நேர்மையான செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக அல்லாமல் திமுக வின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப செயற்படுவதாகவும் புகார் உண்டு. தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் மிக பெரும் தமிழ் தொலைக்காட்சியாக வளர்ந்துவிட்ட இவர்களுக்கு இப்போது ஜெயலலிதா ரூபத்தில் ஆபத்து வந்திருக்கின்றது. மாநில அரசின் அதிகாரங்களை வைத்து சன் டிவியின் அடிப்படை நிறுவன அமைப்புக்களில் ஒன்றான சுமங்கலி நெட்வேர்கை கையகப்படுத்த புதிய சட்டமொன்றை ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார். ஆனால் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் பதவியோ சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் தம்பி தயாநிதி மாறன் வசமிருக்கின்றது. என்ன தான் நடக்கின்றது என்று பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

எஸ்.சி.வி. விவகாரம்: அரசுக்கு சன் டிவி கண்டனம்

சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் ஹாத்வே எம்.எஸ்.ஓ (பன்மு¬க கேபிள் ஆபரேட்டர்கள்) ஆகியவற்றை கையகப்படுத்த அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட மசோதா, தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் ஆபரேட்டர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது கண்டனத்துக்குரியது என்று சன் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சன் டிவி நிறுவனம் சார்பில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகம் ¬முழுவதும் 500க்கும் மேற்பட்ட எம்.எஸ்.ஓக்கள் உள்ளன. இதில் எஸ்.சி.வி மற்றும் ஹாத்வே ஆகிய இரு எம்.எஸ்.ஓக்களை மட்டும் கையகப்படுத்த அரசு ¬முடிவு செய்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் பழிவாங்கும் போக்கையே இது காட்டுகிறது. தமிழகத்தில் இயங்கி வரும் எம்.எஸ்.ஓக்களில் பெரும்பாலானவை அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. திருப்பூர் அதிமுக எம்.எல்.ஏ. சிவசாமியும் ஒரு எம்.எஸ்.ஓ.வை நடத்தி வருகிறார்.

ஆனால் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு இரண்டு எம்.எஸ்.ஓ.க்களை மட்டும் அரசு கையகப்படுத்துதவதன் பின்னணி நோக்கம் என்ன என்பதை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உணர வேண்டும்.

ஜெயலலிதா அரசின் இந்த சட்டம் அமல்படுத்தப்படுமானால், நாளை உங்களது (கேபிள் டிவி ஆபரேட்டர்களின்) எம்.எஸ்.ஓ.க்களும் பறிமுதல் செய்யப்படும் அபாயம் உள்ளது. குடியரசுத் தலைவர் தமிழக அரசின் இந்த சட்ட மசோதாவை நிராகரிக்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு கேபிள் டிவிக்களை ¬முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது .அந்த சட்டத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். அதே நிலை தான் தற்போதைய சட்ட மசோதாவுக்கும் ஏற்படும்.

கேபிள் டிவி நிறுவனங்களின் செயல்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. எனவே தமிழக அரசு இதில் தலையிட ¬முடியாது. தேர்தல் வரும் சமயத்தில் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தை ¬முறியடிக்கும் நோக்குடனேயே இந்த சட்ட மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக அரசின் நடவடிக்கைக்கு தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் காயல் இளவரசு கருத்து தெரிவிக்கையில், அரசின் இந்த சட்ட மசோதா, எம்.எஸ்.ஓக்கள் நடத்தி வரும் பல முறைகேடுகளுக்கு முடிவு கட்டும்.

மேலும், இந்த சட்டத்திலிருந்து சிறு அளவிலான, தெருவோர கேபிள் டிவி நிறுவனங்களுக்கு விலக்கு அளித்துள்ளதையும் பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

thats tamil

முதல்வர் ஜெயலலிதாவின் நல்தோர் முயற்சி முடிந்தால் சண்ரிவியை ழூடினாலும் நல்லம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விது சண்தொலைக்காட்சியை மூடமுதல் ஜெயா தொலைகாட்சியை என்ன செய்யிறது....

இவர்களின் அரசியல் எங்கே எப்படி போகுமென்று தெரியல்ல.... எப்ப தான் கலைஞரிட்டையிருந்தும் நடிகையிட்டை இருந்தும் தமிழ்நாட்டுக்கு விடுதலையோ தெரியல்ல....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே மூடிவிட்டால் நல்லது எங்கட பெண்டுகளின்ர தொல்லையை இனியும் தாங்கேலாது

சண் ரிவிக்காரரை வியாபார ரீதியாக தோற்கடிக்கமுடியாது எண்டு அம்மாக்கு நல்லாத் தெரியும் என்னதான் சனம் சொன்னாலும் சண்ணிலை வாற தொடர்களைப் பாக்காமல் இருக்கமுடியாதுள்ளது நல்ல நல்ல நிறுவனங்களும் கூட நமது தயாரிப்பான டெலிராமாக்களை சண்ணிலை போடத்தான் முயற்சிக்கிறார்கள் பொழுதுபோக்கு அம்சங்களில் கூட அரசியல் சாயத்தை கலப்பது மிகவும் கீழ் தரமானது தேர்தல் நெருங்கிற நேரத்திலை அம்மாவுக்கு தேவையில்லாத வேலை பெண்களின் வோட்டே இல்லாமல் போகப்போறா..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களின் வோட்டே இல்லாமல் போகப்போறா..............

அட நீங்க வேற கொஞ்ச ஆண்களின்ர வாக்கு களை அதிகமாக பெறப்போற நான் நினைக்கிறன் கலைஞர் கூடி அவாக்கு தான் வாக்கு போடுவார்..இனியாது சாப்பாடு நேரத்துக்கு போகட்டுமன்...

நிதர்சன் நீர் ஒன்று தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிப்பளிதென்பதை தீர்மானிப்பதே அம்மணிகள் தானுங்க. ஜெயலலிதா பலமுறை சண் ரிவியை முடக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டார். மறுபடி ஆட்சிக்கு வந்ததும் சரத்குமார் நடத்திய கோடிஸ்வரன் நிகழ்ச்சியை முடக்க படப்பிடிப்புத்தளம் அமைந்திருந்த நேரு ஸ்ரெடியத்தில் அவற்றை இடித்துத் தள்ளினார். கோடிஸ்வரன் நிகழ்ச்சி நின்று போனது. அதன் பின்னும் சண் ரிவியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வந்து அதனை முடக்கலாம் என்று பார்க்கின்றார். ஆனால் மத்திய அரசில் இது சார்ந்த அமைச்சுப் பொறுப்பை தயாநிதி மாறன் வைத்திருப்பதால் இதில் யார் ஜெயிக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சன் ரீவியை மட்டுமல்ல, ஜெயா ரீவியையும் மூடவேண்டும். கிராமத்தில் இருந்து அவர் சன்ரீவியையும், அம்மணி ஒரு ரூபாச் சம்பளத்தில் ஜெயா ரீவியையும் நடத்ததுவினம். நல்ல கதை!!

  • தொடங்கியவர்

கேபிள் டிவி சட்டம்: கருணாநிதி மீது டி.ராஜேந்தர் கடும் தாக்கு

சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) மற்றும் ஹாத்வே கேபிள் இணைப்பு நிறுவனங்களை அரசே கையகப்படுத்தும் முடிவுக்கு திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட எம்.எஸ்.ஓக்கள் எனப்படும் பன்முக கேபிள் சேவை நிறுவனங்கள் இருந்தாலும் இவற்றில் முக்கியமான இரண்டு நிறுவனங்களான சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் ஹாத்வே ஆகியவை தான்.

நம் வீடுகளுக்கு இணைப்பு தரும் கேபிள் டிவிக்காரர்கள் சுமங்கலி கேபிள் விஷன் அல்லது ஹாத்வேயிடம் இருந்து தான் டிவி அலைவரிசைகளை டவுன்லோட் செய்து தருகின்றனர். மிகச் சில கேபிள் டிவிக்காரர்களே சொந்தமாக டிஷ் வைத்து எல்லா டிவிக்களின் அலைவரிசையையும் டௌன்லோட் செய்து வீடுகளுக்குத் தருகின்றனர்.

இதில் சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தில் 80 சதவீத வீடுகளுக்கு கேபிள் டிவி இணைப்புகளை வழங்கியுள்ளது. ஹாத்வே சுமார் 10 சதவீதமும் மற்றவை எல்லாம் இணைந்தே மீதி 10 சதவீத வீடுகளுக்கும் கேபிள் டிவி இணைப்பைத் தந்துள்ளன.

இந் நிலையில் சன் டிவியை முடக்கும் நோக்கத்தில் எஸ்சிவி மற்றும் பெயருக்கு ஹாத்வே கேபிள் நிறுவனம் இரண்டையும் கையகப்படுத்த அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் கருணாநிதி ஆளுனரை அவசரமாகச் சந்தித்து தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், திரையுலகினர் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இயக்குனர் பாரதிராஜா கருத்து தெரிவிக்கையில், பூனைக்கு யார் மணி கட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது தமிழக அரசு மணியைக் கட்டி நடவடிக்கையை ஆரம்பித்து வைத்துள்ளது.

எங்களது தமிழ்த் திரை உள்ளிட்ட பல கேபிள் சேனல்கள் காணாமல் போனதற்கும், மக்களிடையே அவை மறைக்கப்பட்டதற்கும் எஸ்.சி.வியும், ஹாத்வே நிறுவனமும்தான் ¬முக்கியக் காரணம்.

தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட எஸ்.சி.வி. நிறுவனத்துக்கு மிக அதிக அளவில் வருமானம் கிடைத்து வந்தது. கேபிள் டிவி பார்ப்போர், திரையுலகினருக்கு நன்மை பயக்கும் விதமான இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன் என்றார் பாரதிராஜா.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் அழகப்பன் (இவர் திமுகவைச் சேர்ந்தவர்) கூறுகையில், இந்த சட்டத்தால் பல புதிய சேனல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் புதிய திரைப்படங்களை வாங்குவதற்கு பல சேனல்கள் கிடைக்கும். நல்ல போட்டி இருக்கும், எங்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு இந்தச் சட்டம் பெரிய அளவில் உதவியாக இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். இந்த சட்டத்தை நான் வரவேற்கிறேன் என்றார்.

இயக்குனர் விஜய டி.ராஜேந்தர் விரலை சொடுக்கி, சொடுக்கி, தலையை கோதியபடி, மண்டையை அங்கிட்டும் இங்கிட்டுமாக ஆட்டியபடி கூறியதாவது:

மழை, வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கக் கோரி ஆளுனரை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் இல்லை, நேரில் போக முடியவில்லை. ஆனால் தனது குடும்பத்திற்கு பெரும் வருவாயை ஈட்டிக் கொடுக்கும் எஸ்.சி.வி. நிறுவனத்திற்குப் பிரச்சினை என்றவுடன் பேரனுடன் ஓடோடிச் சென்று ஆளுநரை சந்திக்கிறார். இது கேவலமாக இல்லையா? தமிழக அரசின் இந்த சட்டம் மிகவும் அருமையான ஒன்று என்றார்.

இயக்குனர் கேயார் கூறுகையில், அரசின் இந்தத் திட்டத்தால் டென் ஸ்போர்ட்ஸ், நேஷனல் ஜியோகிராபி, ஈ.எஸ்.பி.என் உள்ளிட்ட பல கட்டணச் சேனல்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பார்க்க முடியும். தற்போது எஸ்.சி.வி. நிறுவனம் இந்த சானல்களை வழங்குவதில்லை. ஆனால் ஹாத்வே நிறுவனம் இவற்றை வழங்கி வருகிறது என்றார்.

தமிழகத்தின் பெரும் பகுதி மக்களுக்கு எஸ்.சி.வி. தான் கேபிள் சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. இதன் காரணமாக, புதிதாக வெளியாகும் திரைப்படங்களை பெரும்பாலும் சன் டிவிதான் வாங்கி வருகிறது.

பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாக சன் டிவிக்கே தங்களது படங்களை விற்க தயாரிப்பாளர்களும், நடிகர்கள் முன் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதது.

Thats Tamil

ஜெயலலிதா சன் டிவியை சென்னை அலுவலகத்தை இழுத்து மூடினால் கூட அடுத்த நிமிடமே வேறு ஒரு "Souce" மூலமாக தடையின்றி நிகழ்ச்சிகளை நடத்த சன் டிவி ஏற்பாடு செய்துள்ளது.....

இங்கு நடு நிலை பற்றி சிலர் பேசுகிறார்கள்.... உங்களது டி.டி.என். டிவியும் நடு நிலையாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புமா?

  • தொடங்கியவர்

கருணாநிதி மீது விஜயகாந்த் தாக்கு

அடுத்தவர்களின் சொத்துக்களை அப்புறப்படுத்துதற்கு ஆளாய்ப் பறக்கிறார்கள். பேரன் சொத்துக்கு பிரச்சினை என்றவுடன் ஓடோடி யார் யாரையோ பார்க்கிறார்கள், பதட்டப்படுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார் தேசிய ¬முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் விஜயகாந்த், காரைக்குடியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமு¬க தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்.

விஜயகாந்த் பேசுகையில், நான் சிரமப்பட்டு, உழைத்து சம்பாதித்த பணத்தில் கல்யாண மண்டபம் கட்டினேன். அதை இடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அது தொடர்பான உத்தரவு கூட எனக்கு இன்னும் வரவில்லை. கல்யாண மண்டபத்தை இடிப்பது குறித்து நான் கவலைப்படவில்லை.

ஆனால், இன்று சிலர், தனது பேரன் சொத்துக்குப் பிரச்சினை என்றவுடன் பதை பதைத்து, பதட்டமடைந்து, ஓடோடி யார் யாரையோப் பார்க்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அந்த மக்களுக்காக, அவர்களது பிரச்சினைகளுக்காக சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.

ஆனால் அந்தக் கடமையிலிருந்து சிலர் தவறி விடுகிறார்கள். கடமையை மறந்து அடிக்கடி ஓடிப் போய் விடுகிறார்கள். இது ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஆட்சியில் இருந்தால் மட்டும் தான் சபையில் இருப்போம். இல்லையேல் சபைக்கே செல்ல மாட்டோம் என்பது எந்த ஊர் நியாயம்?

இன்னும் சிலர் இருக்கிறார்கள். தங்களது தேவைக்கு மட்டும் சாதியைப் பயன்படுத்துகிறார்கள். சாதிப் பிரச்சினையைத் தூண்டி விடுகின்றனர். மக்கள் இவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும். ஜாதி மதங்களுக்கு அடி பணிந்து விடாதீர்கள் என்று மக்களின் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்.

இன்று உள்ள சில கட்சிகளைப் பார்த்து கேட்கிறேன், ஏன் சவாலே விடுகிறேன். எங்களைப் போல நீங்களும் தனித்து நின்று தேர்தலை சந்திக்கத் தயாரா? அந்தத் தைரியம் உங்களுக்கு உண்டா? தைரியம் இருந்தால் நின்று பாருங்கள், பார்ப்போம்.

மக்களே கடந்த காலங்களை நினைத்துப் பாருங்கள். அதை நினைத்து, கடந்த கால ஆட்சிகளை மனதில் வைத்து இந்த ¬முறை ஓட்டுப் போடுங்கள். லஞ்ச லாவண்யமற்ற அரசு உருவாக வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.

தட்ஸ் தமிழ்

பாவம் விஜயகாந்த்.... சினிமாவில் கட்டைப் பஞ்சாயத்து செய்து சம்பாதித்த காசையெல்லாம் கொட்டி கட்டிய திருமண மண்டபத்தை காப்பாற்ற படாத பாடு படுகிறார்....

  • தொடங்கியவர்

கடும் எதிர்ப்புக்கு இடையே கேபிள் டிவி மசோதா நிறைவேற்றம்

சென்னை, ஜன. 28: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை அரசே ஏற்கும் மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.

கேபிள் டிவி துறை மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது. எனவே, இதில் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. எல்லா கேபிள் டிவி நிறுவனங்களையும் அரசு ஏற்றால் வரவேற்கிறோம். சில குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் எடுப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கூறின.

ஆளும் கட்சி தரப்பில் இதை முதல்வர் ஜெயலலிதா, சட்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் மறுத்தனர். விரும்பிய சேனல்களை குறைந்த கட்டணத்தில் பொது மக்கள் பார்ப்பதற்கு வகை செய்வதற்காக இச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்றனர்.

முதல் கட்டமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் மட்டும் இச் சட்டம் அமல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக எல்லா பகுதிகளிலும் அமலுக்கு வரும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

Dinamani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.