Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாபெரும் கனேடிய தலைவர் மதிப்புக்குரிய 'ஜாக் லேட்டன்' அவர்களின் மறைவையிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது அழ்ந்த அனுதாபத்தையும் கவலையும் தெரிவிக்கின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Tuesday, 2011-08-23 22:59:02]

Rudrakumaran_150A.jpg

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், கனேடிய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான மாண்புமிகு 'ஜாக் லேட்டன்' அவர்கள் மறைந்த செய்தி கேட்டு நாங்கள் மிகுந்த துயரமும் அதிர்ச்சியும் அடைகின்றோம். புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் சார்பிலும், இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களின் சார்பிலும் நாங்கள் அவரது துணைவியார் திருமதி 'ஒலிவியா சவ்' அவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் ஏனைய குடும்ப உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மறைந்த 'ஜாக் லேட்டன்'அவர்கள் தமிழ் மக்களின் நல்லதோர் நண்பனாக இருந்து வந்துள்ளார். நீண்ட காலமாக , இலங்கைத் தீவில் நீதியை நிலைநாட்டுவதற்காகவும், தமிழர்கள் அங்கு தன்னாட்சி உரிமை பெற்று சமத்துவத்துடன் வாழவேண்டும் எனும் வகையிலான எமது போராட்டங்களுக்கும் அவர் தன் ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். 2009ஆம் ஆண்டின் முதல் கூற்றில், தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட போதும், அங்கு தமிழ் மக்களைப் பாதுகாக்கவும் அமைதி வேண்டியும், இங்கு மக்கள் தெருக்களில் இறங்கி குரல் எழுப்பியவேளைகளில் 'ஜாக் லேட்டன்' அவர்கள் மட்டுமே எங்களுடன் மேடைகளில் தோன்றி தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் என்பதனை நாங்கள் இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

இதே போன்று, இவ்வாண்டின் ஜூன் மாதத்தில் வன்கூவர் நகரில் நடைபெற்ற புதிய ஜனநாயக் கட்சியின் மகாநாட்டில், இலங்கைத் தீவில் இடம்பெற்ற அநீதிகளை விசாரணை செய்வதன் மூலம் உண்மை, வெளிப்படைத் தன்மை, நீதி என்பவற்றை நிலைநாட்டும் வகையில் விசாரணை செய்வதற்காக அனைத்துலக மட்டத்திலான ஒரு சுதந்திரமான விசாரனைக்கானதோர் செயல் முறையினைக் கொண்டு வரல் வேண்டும் என ஐநா சபையைக் கோரும் பிரேரணையை நிறைவேற்றியதையும் நாங்கள்இத்தருணத்தில் நன்றியுடன் நினனைவு கூறுகின்றோம்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான நீதியினை நிலை நாட்டுவதற்காக 'ஜாக் ஜாக் லேட்டன் ' அவர்கள் நல்ல சந்தர்ப்பத்தில் இந்த பிரேரணையை நிறைவேற்றி-யமைக்காகவும், நீதியினை நிலைநாட்டுவதில் அவருக்கு இருந்த உறுதியினையும், பற்றினையும் நாங்கள் அப்பொழுதே வெகுவாகப் பாராட்டியிருந்தோம்.

அது மட்டுமன்றி, 'ஜாக் லேட்டன்' அவர்கள் இளம் கனேடிய தமிழர் ஒருவரை முதன் முதல் மேலை நாடொன்றில், கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்யப்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்ததன் மூலம் தமிழ் இனத்துக்கே பாரியதோர் சிறப்பையும் பெருமையையும் உலகளாவில் தேடித் தந்துள்ளார் என்பதை தமிழ் இனம் என்றும் பெருமையுடன் நினைவு கூரும். தங்களின் சிறப்பான தலைமையின் கீழ் நாங்கள் இது போன்ற பல செயற்பாடுகளை எதிர்காலத்தில் நிறைவேற்ற எண்ணியிருந்தோம்.

தமிழ் மக்களின் உற்ற நண்பரொருவரை நாங்கள் இழந்துவிட்டோம். மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த மாபெருந் தலைவரை இழந்துவிட்டோம்.

இவ்வுலகில் நல்லதோர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அவர் கண்ட கனவுகள், அவர் தம் சிந்தனைகள் , அவரின் துணிவுடைமை என்பன எம் மனதில் என்றும் நிலைத்து நிற்கும், அவரது துணைவியாருக்கும் குடும்பத்தினருக்கும் நாங்கள் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

விசுவநாதன் ருத்திரகுமாரன்

பிரதமர்,

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

http://www.seithy.com/breifNews.php?newsID=48787&category=TamilNews&language=tamil

http://www.legacy.com/guestbook/guestbook.aspx?n=jack-layton&pid=153251028

இவர் உண்மையில் மறக்க முடியாத தலைவர்.இவர் பாராளமன்றில் கடைசியாக கேட்ட வார்த்தை யுத்தகுற்றசாட்டுக்கு ஆதரவு கொடுக்கும்படி அரசாங்கத்தை கோரியிருந்தார்

கனடாவில் அரச முறையில் மூன்று பிரிவுகள் உள்ளன - தேசிய, மாநில, நகரசபை என அவை பிரிக்கப்பட்டுள்ளன.

தேசிய, மாநில அரசுகள் வலதுசாரி கட்சி(ஆட்சியில் உள்ளது, எம்மை தடை செய்தது) , இடதுசாரி கட்சி ( இறந்த ஜாக் லேட்டைனின் எதிர்க்கட்சி), லிபரல் கட்சி மற்றையது பிரெஞ்சு மாநிலத்தை தனிநாடு கேட்கும் தேசிய கட்சி. அதை விட பசுமைக்கட்சியும் உள்ளது.

கனடா தமிழர்கள் கூடியளவு நம்பிக்கை வைத்திருந்தது லிபரல் கட்சியில். ஆனால் அவர்கள் ஏமாற்றியும் அவர்களுடன் அரசியலில் ஈடுபட்ட எம்மவர்களும் ஏமாற்றியும் இருந்தனர்.

ஆனால், மறைந்த ஜாக் லேட்டனின் கட்சியே என்றும் எமது மக்களுக்காக, உரிமைகளுக்காக என்றும் பகிரங்கமாக குரல் கொடுத்த கட்சி. அதேபோன்று புதிய குடிவரவாளர்கள், வீடில்லாதவர்கள் என வறுமைப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு அரசியல்வாதி.

இவரின் திடீர் மறைவு எமது மக்களுக்கு பெரிய இழப்பே. ஆனால் இவரின் கட்சி தொடர்ந்தும் எமக்காக குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுக்கு நன்றி அரசு&akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.