Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தோல்வியை தாங்க முடியாதவர்களின் சதியே மர்மமனிதர்கள் – கோத்தாபயவின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 00:07 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

gota%2023.jpgவிடுதலைப் புலிகளின் தோல்வியை தாங்க முடியாத சக்திகளே கிறீஸ் மனிதனின் பின்னணியில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச்செலயர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

முஸ்லிம் சமய மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று மாலை நடத்திய கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அவர்,

“விடுதலை புலிகள் இயக்கத்தை தோற்கடித்த சிறிலங்கா இராணுவத்தால் எதையும் சாதிக்க முடியும்.

எனினும் கிறீஸ் மனிதன் விடயத்தில் சிறிலங்கா இராணுவம் பொறுமையாக செயற்படுகின்றது. அதை பொதுமக்கள் இலாபமாக பயன்படுத்த கூடாது.

"பொதுமக்கள் இராணுவ முகாம்களை சுற்றிவளைப்பதை அனுமதிக்க முடியாது.

இதுவரை இரண்டு தடவைகள் பொதுமக்களால் இராணுவ முகாம்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் உள்ளனர்.

'கிறீஸ் மனிதன்' விவகாரத்தில் சிறிலங்கா படையினருக்கோ காவல்துறையினருக்கோ எந்த தொடர்புமில்லை.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காகவோ, மூதூர் பிரதேசத்தில் துட்டகைமுனுவின் வாளை எடுப்பதற்காகவோ, பன்றி இறைச்சி சாப்பிடாதவர்களின் இரத்தத்தை கொண்டு சிறிலங்கா அதிபருக்கு பூஜை செய்வதற்காகவோ கிறீஸ் மனிதனை அரசாங்கம் உலா விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற கதைகள் முற்றிலும் கட்டுக்கதைகளே.

அவசரகாலச்சட்டத்தை நீக்குபவரும் நடைமுறைப்படுத்துபவரும் சிறிலங்கா அதிபரே.

இந்தியா அல்லது அமெரிக்கா அல்லது வேறெந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் அடிபணிந்து அவசரகாலச்சட்டத்தை நீக்க வேண்டிய தேவை அவருக்குக் கிடையாது.

பன்றி இறைச்சி சாப்பிடாதவர்களின் இரத்தத்தை கொண்டு சிறிலங்கா அதிபருக்குப் பூஜை செய்ய வேண்டுமென்றால் என்னுடைய இரத்தத்தின் மூலமே பூஜை செய்ய முடியும். நான் மாமிசம் சாப்பிடாதவன்.

கிறீஸ் மனிதன் என்று யாரையாவது பொதுமக்கள் பிடித்தால் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதை விடுத்து விட்டு சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. அது பாரிய குற்றம். இவ்வாறு செய்பவர்கள் அதிகபட்சம் தண்டிக்கப்படுவார்கள்.

கிறீஸ் மனிதன் விவகாரத்தினால் ஒரு காவல்துறை அதிகாரியும் இரு அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலை புலிகளின் தோல்வியை தாங்க முடியாத சில இயக்கங்கள் இதன் பின்னணியில் உள்ளன.

சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் இந்த விடயத்தில் மிக நேர்மையாக செயற்படுகின்றன.

கிண்ணியா பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் குவிக்கப்பட்டமைக்கு அங்குள்ள மக்களே பிரதான காரணம். அவர்களின் செயற்பாடுகளினாலேயே அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் ஏற்பட்ட பதற்றம் தொடர்பாக ஆராயச் சென்ற கிழக்குப் படைகளின் தளபதி பொதுமக்களினால் சுற்றிவளைக்கப்பட்டார். இது பாரிய தவறு.

இதற்கு பின்னால் இருந்த குற்றவாளிகளை காண்பித்தால் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்ய முடியும்“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110824104535

கதை,வசனம், இயக்கம் சூப்பர்.காமடியனாக பேசும்[நடிக்கும்] நீயும் சூப்பர்.

மூலக்கதை திரையின் பின்னான கதை கட்டுக்கதை அனைத்தும் கோத்தாபாய ராஜபக்சா. 

[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 00:07 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

விடுதலைப் புலிகளின் தோல்வியை தாங்க முடியாத சக்திகளே கிறீஸ் மனிதனின் பின்னணியில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச்செலயர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

இதற்கு பின்னால் இருந்த குற்றவாளிகளை காண்பித்தால் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்ய முடியும்“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinapp...?20110824104535

பச்சை ரத்தம் குடிக்கிற பாவி, அப்பாவிகளை பிடித்து பிணை வைக்கிறான் தன்ரை எதிரிகளை பிடிக்க. இனி பிடிபட்டவர்களை பார்க்க போகிற தாய், பிள்ளை மனைவி எல்லோருக்கும் புதிய பிரச்சனை. அதில் இந்த சுத்த சைவ கோபத்தபய தான் எப்படி வடிவு, வடிவில்லை கூட பார்த்து தேர்ந்து எடுக்கிற என்ற கதைகளை Headlines Todayக்கு வெட்கமில்லாமல் கூறியவன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அடக்கிய இராணுவத்தால் ஒரு சில கிறீஸ் மனிதர்களை அடக்க முடியாமல் உள்ளதா? இல்லாவிட்டால் அவர்களை அடக்க இந்தியாவும் மேற்கு நாடுகளும் தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

பன்றி இறைச்சி சாப்பிடாதவர்களின் இரத்தத்தை கொண்டு சிறிலங்கா அதிபருக்குப் பூஜை செய்ய வேண்டுமென்றால் என்னுடைய இரத்தத்தின் மூலமே பூஜை செய்ய முடியும். நான் மாமிசம் சாப்பிடாதவன்.

தமிழரின் மாமிசம் தின்றவன். அது போதாதா...

இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கும் ஒரு குட்டு வைத்துள்ளான்.

Gotabhaya_Rajapaksa.img_assist_custom.jpg

சிங்களக் காட்டுமிராண்டிகள் எப்படி பொய்யான மகாவம்சத்தை எழுதியிருப்பார்கள் என்பதற்கு சிங்களக் காட்டுமிராண்டிகளின் கூத்துக்களே ஆதாரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அடக்கிய இராணுவத்தால் ஒரு சில கிறீஸ் மனிதர்களை அடக்க முடியாமல் உள்ளதா? இல்லாவிட்டால் அவர்களை அடக்க இந்தியாவும் மேற்கு நாடுகளும் தேவையா?

:lol: :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.